Subbiahpatturajan "என் இனிய பொன் நிலாவே". ஹைகோர்ட்டின் முக்கியமான தீர்ப்பு என்ன சொல்கிறது? தமிழ் சினிமாவின் இசைஞானி என போற்றப்படும் இளையராஜா... இசையமைத்த, பலரது மனதில் இன்னும் ஒலிக்கின்ற பாடல்களில் ஒன்று "என் இனிய பொன் நிலாவே". ஆனால், சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம் (Madras High Court) இந்த பாடலின் காப்புரிமை தொடர்பாக ஒரு முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது. 🔍 இந்த வழக்கின் பின்னணி என்ன? “என் இனிய பொன் நிலாவே” பாடல் 1981ஆம் ஆண்டு வெளியான Moodupani திரைப்படத்தில் இடம்பெற்றது. இப்படத்தை தயாரித்தது "Sujatha Cine Arts". பாடலின் வரிகள் வாலி எழுதியது; இசை இளையராஜா. இந்த பாடலுக்கான மூல உரிமை (Copyright Ownership) யாருக்கென்கிற கேள்வியில், இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் இடையே பல ஆண்டுகளாக கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. ⚖️ ஹைகோர்ட் என்ன தீர்ப்பு கூறியது? 2024ஆம் ஆண்டு, சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் கூறப்பட்டது: > "திரைப்படங்களுக்காக உருவாக்கப்படும் பாடல்களின் முழுமையான காப்புரிமை, திரைப்பட தயாரிப்பாளருக்கே சொந்தமா...
Subbiahpatturajan
ஆடி காரில் போவது வசதியான வாழ்க்கை இல்லை……
ஆஸ்பத்திரி போகாமல் வாழ்வதே வசதியான வாழ்க்கை !!!
சில நேரங்களில் குள்ள நரி புத்தி கொஞ்சமாவது வேண்டும்,
குழி பறிக்க அல்ல, குழியில் விழாமல் இருக்க !!!
உழைக்கும் வயதில் உறங்க நினைத்தால், உறங்கும் வயதில்
உழைக்க வேண்டியிருக்கும்……….
உயரப் போகும்போது உதவும் உறவை விட, விழும்போது
தாங்கும் உறவே சிறந்தது!!!
மனிதனுக்கு பிரச்சினை இல்லை என்றால்,
கடவுளுக்கு அர்ச்சனை இல்லை !!!
மனிதன் ஸ்மார்ட் போன் வாங்கும் அளவுக்கு பணக்காரனாகவும்,
கீரை வியாபாரியிடம் பேரம் பேசும் அளவுக்கு ஏழையாகவும்
இருக்கிறார்கள்…….
பொறுமை ஒரு பொழுதும் தோற்றதில்லை,
பொறாமை ஒரு போதும் ஜெயிப்பதில்லை……….
பென்சிலுக்கு பின்னால் இருக்கும் ரப்பர் மாதிரி
பல பிரச்சினைகளுக்கும், தீர்வு அதிலேயே இருக்கும்போது
அதை விட்டு, நாம் எல்லா இடத்திலேயும் தேடிக்கொண்டிருக்கிறோம்….
விக்கலுக்கு பயந்தால் வயிறு நிறையாது,
சிக்கலுக்கு பயந்தால், வாழ்க்கை நிறையாது !!!
முதியோர் இல்லத்திற்கு பணம்கொடு, பொருள் கொடு,
உடை கொடு, உணவு கொடு, உன் பெற்றோரை மட்டும்
கொடுக்காதே !!!
உள்ளம் கண்டு பழகு, உருவம் கண்டு பழகாதே!!!
பண்பு கொண்டு பழகு, பருவம் கொண்டு பழகாதே!!!
அகம் கொணடு பழகு, முகம் கொண்டு பழகாதே !!!
ஒரு கார் இருந்தால் ஆடம்பரமாக வாழலாம், ஒரு மிதி வண்டி
இருந்தால் ஆரோக்கியமாக வாழலாம்!!!
16 வயதுக்கு கீழ் உள்ள பிள்ளை வேலைக்கு சென்றால்
அப்பா சரியில்லை என்றுஅர்த்தம்…….
60 வயதுக்கு மேல் அப்பா வேலைக்கு சென்றால்
பிள்ளை சரியில்லை என்று அர்த்தம்…….
கோபத்தை உப்பு போல் பயன் படுத்த வேண்டும்
குறைந்தால், மரியாதை போய்விடும்,
கூடினால்,மதிப்பு இல்லாமல் போய் விடும்!!!
ஆடம்பரம் எனபது ஆடும் பம்பரம் போல,
எப்பொது வேண்டுமானாலும் சரிந்து விடலாம்!!!
🙏🙏🙏🙏🙏
கருத்துகள்