Subbiahpatturajan "என் இனிய பொன் நிலாவே". ஹைகோர்ட்டின் முக்கியமான தீர்ப்பு என்ன சொல்கிறது? தமிழ் சினிமாவின் இசைஞானி என போற்றப்படும் இளையராஜா... இசையமைத்த, பலரது மனதில் இன்னும் ஒலிக்கின்ற பாடல்களில் ஒன்று "என் இனிய பொன் நிலாவே". ஆனால், சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம் (Madras High Court) இந்த பாடலின் காப்புரிமை தொடர்பாக ஒரு முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது. 🔍 இந்த வழக்கின் பின்னணி என்ன? “என் இனிய பொன் நிலாவே” பாடல் 1981ஆம் ஆண்டு வெளியான Moodupani திரைப்படத்தில் இடம்பெற்றது. இப்படத்தை தயாரித்தது "Sujatha Cine Arts". பாடலின் வரிகள் வாலி எழுதியது; இசை இளையராஜா. இந்த பாடலுக்கான மூல உரிமை (Copyright Ownership) யாருக்கென்கிற கேள்வியில், இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் இடையே பல ஆண்டுகளாக கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. ⚖️ ஹைகோர்ட் என்ன தீர்ப்பு கூறியது? 2024ஆம் ஆண்டு, சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் கூறப்பட்டது: > "திரைப்படங்களுக்காக உருவாக்கப்படும் பாடல்களின் முழுமையான காப்புரிமை, திரைப்பட தயாரிப்பாளருக்கே சொந்தமா...
Subbiahpatturajan
சொல்ல மறந்த கதையும் சொல்லாமல் விட்ட செய்தியும்
சிவாஜி கணேசனின் அழியா படங்கள் போல "காந்தாரா" நிலைபெற்றுவிட்டது, அதே நேரம் வந்த மணிசாரின் பொன்னியார் படம் சிவாஜி கணேசன் கண்ட தனி கட்சி போல அடையாளமே இல்லாமல் போய்விட்டது
காந்தாரா படத்தை நாம் இப்பொழுதுதான் பார்க்க தொடங்கியிருக்கின்றோம்
இந்த காந்தாரா போல
இந்தியாவில் ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு கதையும் சம்பவமும் உண்டு, அது காலம் காலமாக மக்களிடம் தொடர்ந்து வருவதும் உண்டு
அவ்வகையில் தென்னகத்தில் சுடலைமாடனும், இசக்கி அம்மையும் ஆயிரமாயிரம் கதைகளோடு நின்றுகொண்டிருக்கின்றார்கள், உரிய காலத்தில் அவைகளும் இப்படி காவியமாகலாம்
ஆனால் இப்பொழுது அந்த படத்தை நினைத்து பார்க்கும் பொழுது தலையில் அடித்து கொள்ளத்தான் வேண்டியிருக்கின்றது
பல்லாண்டுக்கு முன் "சின்னத்தாயி" என்றொரு படம் வந்தது, அது சுடலைமாட சாமி கோவிலில் சாமியாடும் குடும்பம் பற்றியது
ஆனால் காந்தாரா போல மக்களை காக்கும் கதை அல்லாமல் சுடலைமாட சாமி காதலையும் அந்த காதலால் பிறந்த குழந்தையினையும் சாமியாக திருப்பிவிடபட்டார்
சொல்லாமல் விட்ட செய்தி
எவ்வளவோ சரித்திரமும், நம்பமுடியா அதிசயங்களும் பல்லாயிரம் ஆண்டுகளாக அவர் அந்த மண்ணை காக்கும் தெய்வீகமும் இருக்கும் நிலையிலும் காதலை காக்கும் சாமியாக அவர் நிறுத்தபட்டதெல்லாம் தமிழ் சினிமாவில்தான் சாத்தியம்
அதுதான் தமிழ் சினிமா அங்கு எல்லாமே அப்படித்தான்
காந்தாரா படத்தின் செய்தி சுடலை சாமியினையும் எட்டியிருக்கலாம், அவர் உருட்டும் கண்களோடு கையில் அரிவாளோடு அந்த இயக்குநரை ஆவேசமாக தேட தொடங்கியிருக்கலாம்
கருத்துகள்