Subbiahpatturajan Google Pay, PhonePe, மற்றும் Paytm ஆகியவற்றின் உதவி மையத்தை தொடர்பு கொள்ள, பின்வரும் வழிகளையும் தொலைபேசி எண்களையும் எப்படி பயன்படுத்தலாம். இவை இந்தியாவில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் அதிகாரப்பூர்வ தொடர்பு முறைகளாகும்: 1. Google Payதொலைபேசி எண்: 1800-419-0157 (கட்டணமில்லா எண், 24/7 கிடைக்கும்). தொடர்பு கொள்ளும் முறை: Google Pay ஆப்-ஐ திறந்து, "Help & Feedback" என்ற பகுதிக்குச் செல்லவும். அங்கு சாட் ஆதரவு (8 AM - 12 AM IST) அல்லது மின்னஞ்சல் வழியாக உதவி பெறலாம்.மேலே குறிப்பிட்ட தொலைபேசி எண்ணை அழைத்து, பிரச்சினையை விளக்கி தீர்வு கேட்கலாம். குறிப்பு: பயன்பாட்டில் உள்ள "Help" பகுதியில் பிரச்சினையை பதிவு செய்தால், விரைவாக பதில் கிடைக்கும். 2. PhonePeதொலைபேசி எண்: 080-6872-7374 (வாடிக்கையாளர் ஆதரவு) அல்லது 022-6872-7374 (மாற்று எண்).தொடர்பு கொள்ளும் முறை: PhonePe ஆப்-ஐ திறந்து, முகப்புப் பக்கத்தில் உள்ள "?" (கேள்விக்குறி) ஐகானை கிளிக் செய்யவும்."Contact Us" என்ற பகுதியில் உங்கள் பிரச்சினையை தேர்ந்தெடுத்து, சாட் அல்லது மின்னஞ்சல்...
Subbiahpatturajan
தெரியாது.! தெரியாது..!! தெரியாது...!!!
கல்லணையை கட்டிய கரிகாலனை தெரியாது,
மிக பெரிய போர் வீரன்
இராஜேந்திர சோழன் தெரியாது,
கல்வி கண் திறந்த காமராஜரை தெரியாது,
தமிழ்நாடு என்று பெயர் வைப்பதக்காக உயிர் நீத்த சங்கரலிங்கனாரை தெரியாது,
கப்பலோட்டிய தமிழன் வஉசி என்ற தமிழனை தெரியாது,
ஆங்கிலேயரை எதிர்த்து தன் முறைப்பெண் வடிவு அவர்களுடன் வெள்ளையனின் வெடிமருந்து கிடங்கில் தீ பந்தத்துடன் இறங்கிய சுந்தரலிங்கத்தை தெரியாது
வீர மறத்தி வேலு நாச்சியாரை தெரியாது
தன் குலதெய்வ கோவிலை காக்க தூக்கு கயிறு ஏறிய
மருதுபாண்டிய சகோதரர்களை தெரியாது
முதல் தற்கொலை படை தாக்குதல் நடத்திய வீரப்பெண் குயிலியை தெரியாது
ஜெய்ஹிந்த் என்ற வார்த்தை முதன் முதலில் கூறிய செண்பகராமனை தெரியாது
ஜெர்மனியில் இருந்து வெடிகுண்டுகளை கப்பலில் கடத்தி வந்த நீலகண்டபிரமச்சாரியை தெரியாது
ஆங்கிலேய கலெக்டரை நேருக்கு நேர் நின்று சுட்டுக் கொன்ற வாஞ்சியை தெரியாது
முதல் சுதந்திர போராட்ட வீரன் அனந்த பத்மநாபன் தெரியாது
கொடிகாத்த குமரனை தெரியாது
இவர்கள் அனைவரும் தமிழகத்தை சேர்ந்தவர்களே. !
இவர்களை போல இன்னும் பல லட்சக்கணக்கான பெயர்கள் உள்ளன.
இவர்கள் யாரையும் இன்றைய இளைஞர்களுக்கு தெரிய விடாமல் வைத்து,
எதுவுமே செய்யாமல் இருப்பது 🍷மது மாது சூது என இன்றைய தலைமுறையினரின் வாழ்க்கையை சிரழித்து தனக்கான தலைவனை தேர்ந்தேடுப்பதிலும் முறைகேடுகள் செய்து ஓட்டுக்கு பணம் கொடுத்தால் போதும்...என்னை அல்ல என் நிலம் என் உரிமைகள் என்று அத்தனையையும்
ஒரு அரசியல்வாதியின் காலடியில் மண்டியிட்டு கிடக்கும் கூட்டமா நாம் இப்படி வாழ்ந்து மறைந்த வீர மறவர் இனத்தில் பிறந்தோமா என்று சந்தேகமாக இருக்கிறது... இப்பேர்பட்ட வீர மற்றவர்களைப் பற்றி இன்றைய
தலைமுறையிடம் கேட்டால் இவர்களிடம் இருந்து வரும் ஒரே வார்த்தை தெரியாது...!!!
கருத்துகள்