Subbiahpatturajan Google Pay, PhonePe, மற்றும் Paytm ஆகியவற்றின் உதவி மையத்தை தொடர்பு கொள்ள, பின்வரும் வழிகளையும் தொலைபேசி எண்களையும் எப்படி பயன்படுத்தலாம். இவை இந்தியாவில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் அதிகாரப்பூர்வ தொடர்பு முறைகளாகும்: 1. Google Payதொலைபேசி எண்: 1800-419-0157 (கட்டணமில்லா எண், 24/7 கிடைக்கும்). தொடர்பு கொள்ளும் முறை: Google Pay ஆப்-ஐ திறந்து, "Help & Feedback" என்ற பகுதிக்குச் செல்லவும். அங்கு சாட் ஆதரவு (8 AM - 12 AM IST) அல்லது மின்னஞ்சல் வழியாக உதவி பெறலாம்.மேலே குறிப்பிட்ட தொலைபேசி எண்ணை அழைத்து, பிரச்சினையை விளக்கி தீர்வு கேட்கலாம். குறிப்பு: பயன்பாட்டில் உள்ள "Help" பகுதியில் பிரச்சினையை பதிவு செய்தால், விரைவாக பதில் கிடைக்கும். 2. PhonePeதொலைபேசி எண்: 080-6872-7374 (வாடிக்கையாளர் ஆதரவு) அல்லது 022-6872-7374 (மாற்று எண்).தொடர்பு கொள்ளும் முறை: PhonePe ஆப்-ஐ திறந்து, முகப்புப் பக்கத்தில் உள்ள "?" (கேள்விக்குறி) ஐகானை கிளிக் செய்யவும்."Contact Us" என்ற பகுதியில் உங்கள் பிரச்சினையை தேர்ந்தெடுத்து, சாட் அல்லது மின்னஞ்சல்...
Subbiahpatturajan
கணவன் மனைவி புரிதலுடன் வாழ
திருமணம் ஆன கணவன் மனைவிகளுக்கு நினைவில் வைக்க வேண்டிய விஷயம் ஒன்றே ஒன்று
ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி அன்பும் பரிசும் தாம்பத்யத்துக்கு உறுதி ஆம் இன்று காதலிலும் திருமண பந்தத்திலும் தொடக்கத்தில் இருக்கும் அன்பும் பரிசு பரிமாற்றமும் நாளாக நாளாக குறைந்து மறைந்து இல்லாமலே போய்விடுகிறது அங்கு தான் தம்பதிகளுக்குள் பிரிவும் தொடங்கி விடுகிறது
தாம்பத்யம் என்று சொன்னவுடன் பலருக்கு அச்சமும் அருவறுப்பும் முகத்தில் பிரதிபலிக்கும் அது தேவையே இல்லை தாம்பத்யம் என்பது எளிமையான அன்புப் பகிர்தல் என்று எல்லா ஆண்களும் பெண்களும் புரிந்து கொள்ள வேண்டியது மிக அவசியம்
இரண்டு அறை கொண்ட வீட்டில் கூட்டு குடும்பமாக நான்கு தம்பதிகள் வாழ்ந்த காலத்தில் கூட அன்யோன்யமாக இருந்த கணவன் மனைவி உறவு இப்போது தனி குடும்பமாக மூன்று தனி தனி அறைகள் உள்ள வீட்டில் வாழும் போது விலகி போயிருக்கிறது என்றால் இவர்கள் தாம்பத்யம் சிறக்கவில்லை என்றே அர்த்தம்
திருமணம் என்ற பந்தத்தில் உரிமை கிடைத்த ஒரே காரணத்தினாலே உடல் உரிமை பெற்று கணவன் மனைவி இணைந்திருப்பது மட்டுமே தாம்பத்யம் அல்ல பாரதி பாடி சென்றது போல் எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே என்று அகமும் புறமும் மகிழ்ந்து இன்புற்றிருக்கும் வாழ்க்கையே சிறந்த தாம்பத்யம் அது fastfoodஉலக மனிதர்களாகிய நம்மில் 100 க்கு 90 சதவீதம் பேருக்கு வாய்ப்பதில்லை என்பது கசப்பான உண்மை
ஆனால் இந்த நிலை மாறி இனிமையான குடும்ப உறவுகளுக்குள் கூடி வாழ மகிழ்ந்து களிகூற தாம்பத்யம் சிறக்க உடலும் மனமும் தெளிவாக தெம்பாக அரும் ரகசியங்கள் நம் பாரம்பரிய ஆன்மீகத்திலும் மருத்துவத்திலும் குவிந்து இருக்கிறது அவற்றில் சிலவற்றை இந்த கட்டுரையில் பார்ப்போம்
தாம்பத்திய உறவு சிறக்க உணவு மற்றும் உணர்வு ரீதியாக பின்பற்ற வேண்டிய சின்ன சின்ன விஷயங்கள்
எப்போதுமே வீடும் அறைகளும் முழு சுத்தமாய் நறுமணம் கமழும் நிலையில் இருக்கவேண்டும்
வீட்டினுள் இனிமையான இசை நிரம்பியிருக்க சீரியல் போன்ற தொல்லைக்காட்சி நிகழ்ச்சிகள் காணாது தவிர்த்திருக்க வேண்டும்
தினமும் ஒரு வேளையாவது மனது ஒருமைப்பாட்டுடன் பூஜை செய்ய வேண்டும்
எம்மதமாயினும் அந்தந்த மத வழிபாடுகள் முறையாக தினமும் செய்து விளக்கு என்பது எல்லா மதத்திலும் பொது தானே தினம் தினம் ஆமணக்கு எண்ணையில் விளக்கு ஏற்றி வழிபட்டால் அந்த வீட்டு தம்பதிகளுக்குள் தாம்பத்தியம் சிறக்கும்
கீரைகள் முருங்கை கீரை முருங்கக்காய் அதிக அளவில் உணவில் எடுத்துக் கொள்ளலாம் உலர் திராட்சைக் பேரிச்சை பழங்கள் அடிக்கடி உணவில் சேர்த்து வரும் தம்பதிகளுக்கு உடல் பலம் பெரும் நரம்பு தளர்ச்சி போன்ற பிரச்னைகள் சரியாகும்
வாழைப்பூ முருங்கைப்பூ துவரம்பருப்பு சேர்த்துக் கூட்டு வைத்து நெய் சேர்த்துச் சாதத்துடன் 21 நாள்கள் சாப்பிட்டு வந்தால் உடல் பலம் ஏற்பட்டு தாம்பத்யம் சிறக்க உதவும்.
ஆண்கள் வெங்காயத்தை அதிகமாக சேர்த்து கொண்டால் அது இரத்தத்தின் அடர்த்தியை குறைக்கிறது,இரத்த அளவு அதிகமாகி ஓட்டம் பெருகுகிறது.இது நீண்ட நேர ஆணுறுப்பின் எழுச்சிக்கு காரணமாகிறது சின்ன வெங்காயம் பெரிய வெங்காயம் வெள்ளை வெங்காயங்களை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள் இதனால் அதிக நேரம் உடலுறவில் ஈடுபடலாம்.
கிராம்பு உடல் உஷ்ணத்தை அதிகரிக்கிறது உடல் உறுப்புகளுக்கு தேவையான இரத்த ஓட்டத்தை அதிகரித்து ஆணுறுப்பின் விறைப்புத்தன்மையை பெற உதவுகிறது
விந்து ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிப்பது கொண்ட கொண்டை[வேர் ] கடலை திருமணமான ஒவ்வொரு ஆணும் மாலை நேரங்களில் சுண்டல் சாப்பிட மறக்காதீர்கள்
தயிர் சாதம் சாப்பிடுவது தாம்பத்ய உறவில் வெகுவாக நன்மை பயக்கும்.தயிரில் ஜிங்க் என்கிற துத்தநாக சத்து அதிகம் உள்ளது அசைவ உணவுகளில் உள்ள அதே அளவு துத்தநாக சத்து தயிரிலும் கிடைக்கும் தயிர் புளிப்பு இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்
முந்திரிபருப்பிலும் ஜிங்க் அதிக அளவில் உள்ளது. ஜிங்க் சத்தின் அளவிற்கும் தாம்பத்தியத்தில் ஆண்களின் ஆணுறுப்பு விறைப்புத்தன்மைக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது
கத்திரிக்காய் ஆண்பெண் இருவருக்குமே தாம்பத்தியத்தில் நீண்ட நேரம் ஈடுபடும் சக்தியையும் வலிமையையும் கொடுக்கிறது
இரவு உணவுக்கு பிறகு சிறிது வெற்றிலை போடுவது கூட தாம்பத்திய உறவில் பலன் தரும்
தம்பதியர் அடிப்படையில் சத்தான உணவுகள் எடுத்துக் கொள்ள வேண்டும் உடல் எடையைக் கூட்டும் உணவுகளை எப்போதும் தவிர்த்தே இருக்க வேண்டும்
ஜீரணக் குறைபாடுகள் உண்டாக்கும் உணவுகள் நோய்த்தொற்றை ஏற்படுத்தும் வீதியோர உணவுகள் எண்ணெயில் பொரித்த உணவுகள் போன்றவற்றை முற்றிலும் தவிர்த்துவிடவேண்டும் இதனால் உடலில் வரும் தொந்தரவுகள் தாம்பத்ய வாழ்க்கைக்கு பெரிதும் சிரமம் தரும்
தினமும் உண்டு வரலாம் இதில் உள்ள புரதம் டெஸ்டோஸ்டீரோன் உற்பத்தியை அதிகரிக்க செய்து ஆண்களுக்கு மன இறுக்கம் மன அழுத்தம் போன்ற தொந்தரவுகள் வராமல் தடுக்கிறது
வாழைப்பழத்தை வைத்து மில்க் ஷேக் தயாரித்து தினமும் குடித்து வந்தால் அது உடல் நலத்திற்கு மிகவும் பயன் தரும் அதோடு தாம்தய உறவின் போது தம்பதிகளுக்கு உடல் சக்தியையும் அதிகம் கொடுக்கும்
உடல் ரீதியான தெம்பிற்கு மேற்சொன்னவற்றை பின்பற்றலாம் ஆனால் உண்மையான தாம்பத்யம் என்னவென்று உணர நேற்றையும் இன்றையும் அலசி நாளை பற்றிய ஒரு முடிவெடுத்து வாழ்வில் அமுல்படுத்த வேண்டியருக்கிறது.அது தான் தாம்பத்திய வாழ்வு சிறக்க உண்மையான நிலையான ரகசியம்.
ஒரு முப்பது வருடம் முன்பு வரை தாம்பத்யம் என்பது குழந்தை பெற்றுக் கொள்வதற்கான ஒரே காரணத்திற்காகவே பலருக்கும் இருந்தது. ஆனால் இந்த காலத்தில் பதின் பருவத்திலேயே தாம்பத்தியம் பற்றி அதிகம் பேசும் அளவுக்கு ஊடக வெளிச்சம் அதிகம் ஆகிவிட்டது.
இன்றைய தலைமுறையில் அநேக ஆண்களும் பெண்களும் தாம்பத்யம் என்பது தெரிந்துகொள்ள வேண்டிய வயதிற்கு முன்னரே அதை தேடி அதன் மேல் ஒரு ஆர்வத்தை உருவாக்கி கொள்ள தொடங்கிவிட்டார்கள். அந்த அளவுக்கதிகமான ஆர்வமும், அதனை வெளிப்படுத்துவதற்கான சூழல் அமையாத நிலையும் தான் பலரை தவறான பாதைக்குள் அழைத்து செல்கிறது.
தாம்பத்யம் என்பது அன்பின் பரிமாற்றம் என்று எல்லோரும் உணர தொடங்கி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து, தட்டி கொடுத்து,ஊக்கப்படுத்தி,உற்சாகப்படுத்தி, குறைகளை மறந்து,நிறைகளை வியந்து பாராட்டி சிரிப்பும் மகிழ்வுமாய் உரையாடி உலகம் மறந்து கரையும் போது தான் அது உண்மையான அர்த்தம் பெறுகிறது.
ஆணாக இருப்பினும் பெண்ணாக இருப்பினும் அழகு என்பது புறத்தில் இல்லை அகத்தில் உள்ளது என்பதை தெளிவாக புரிய வைக்க வேண்டும். இதனால் பெண்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். இதனை ஏற்றுக்கொள்ளும் ஆண்கள் தான் வீட்டின் அதிபதியாக இருக்கின்றனர்இல்லையென்றால் நிலைமை தலைகீழ் தான்.. தாம்பத்திய நேரத்தை தவிர்த்து கிடைக்கும் சமயத்தில் சின்ன சின்ன கொஞ்சல்கள் அதிகம் பெண்களால் எதிர்பார்க்கபடுகிறது.
பெண்களை ஆச்சரியமூட்டும் வகையில் சமயலறையில் இருக்கும் போது பதுங்கி சென்று கட்டியணைத்து முத்தம் கொடுப்பதுஉதவியாக இருப்பது உனக்காக நான் இருக்கிறேன் என்று கதையளப்பது., அவ்வப்போது அன்பான முத்தத்துடன் ஐ லவ் யூ சொல்லுவது போன்ற செயல்களை செய்வது என்று பல சின்ன விஷயமும் தம்பதிகளுக்குள் ஒற்றுமையை ஏற்படுத்தும். இதனை செய்ய தவறினால் சில கசப்பான விஷயம் நடைபெறும்.
இன்றுள்ள பெரும்பாலான ஆண்கள் தாம்பத்தியத்தில் அவசர புத்தியை காண்பித்துவிட்டு., கட்டில் போரை கால்மணி நேரத்தில் முடித்துவிட்டு., இரவு முழுவதும் குறட்டை விட்டு தூங்குவதை வழக்கமாக வைக்க துவங்கியுள்ளனர். பெண்களை பொறுத்த வரையில் இன்பத்திற்கான உணர்ச்சி தூண்டப்படுதல் நேரம் எடுத்தாலும்., தூண்டப்பட்டு விட்டால் ஆழ்ந்து அனுபவிக்கவே அதிகளவில் விரும்புவார்கள். அவர்களின் மனநிலையை செயல்பட்டால் தாம்பத்திய வாழ்க்கையும் இல்லற வாழ்க்கையும் சிறப்பாக அமையும்
எந்த ஒரு விசயத்திற்கும் துணையை காதலுடன் அணுகினால் மட்டுமே வெற்றி கிடைக்கும். காமத்திற்கு காதலின் வெளிப்பாடு அதிகம் இருக்கவேண்டும். சின்னச்சின்ன பரிசுகள், தொடுகைகள் என அன்றைய உறவிற்கான தேவையை அன்பால் வெளிப்படுத்த வேண்டும். துணையின் தேவையை உணர்ந்து உங்களின் பதிலை அன்பால் வெளிப்படுத்துங்கள்.
தூய அன்பும் காதலும் தாம்பத்ய உறவின் உச்சக்கட்டத்திற்கு அவசியம்.
உடல் ரீதியான சேர்க்கைக்கு முன்னதாகவே மனரீதியாக இணைந்து வெளிப்படுத்தும் அன்பும் உணர்வுகளின் மூலம் மட்டுமே மடை திறந்த வெள்ளம் போல உச்சக்கட்ட உணர்வை அடைய முடியும்.
காதலோ காமமோ ஒருவருக்கொருவர் தேவைகளை வெளிப்படுத்த தயங்கக் கூடாது. துணை கொஞ்சம் கூச்ச சுபாவத்தோடு இருந்தால் என்ன வேண்டும் என்பதை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் எங்கு தொட்டால் என்னமாதிரியான உணர்வு ஏற்படுகிறது என்பதை நீங்களும் உங்களின் துணைக்கு தெரிவிக்கலாம்உங்கள் துணையிடமும் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்
காதலின் உணர்வுகளை வெளிப்படுத்துவதில் தொடுகை முக்கியம் தொடத் தொடத்தான் உறவு மலரும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று தொடங்குவதை விட மென்மையான ஸ்பரிசம் சின்னச் சின்னச் விளையாட்டு என தொடங்கலாம் அதில் சிலிர்க்கும் துணையின் மூலம் உறவை தொடர்வதில் தடையேதும் இருக்காது.
காமம் உணர்வுப்பூர்வமான விளையாட்டு. இதில் அவசரத்திற்கு இடமில்லை.
ரிலாக்ஸ்சாக வெளிப்படுத்தினால் மட்டுமே கூடுதல் சுகமும், உச்சக்கட்ட உணர்வும் கிடைக்கும். டென்சனோ, அவசரமோ காட்டினால் மகிழ்ச்சிக்கு பதிலாக அவதிதான் கிடைக்கும்.
காதலோ, காமமோ உங்கள் தேவையை துணைக்கு எப்படி புரியவைக்கிறீர்கள் என்பதில்தான் இருக்கிறது. எனவே காதோடு மெதுவாக பேசி உங்களின் தேவையை உணர்த்துங்கள்கணவனோ, மனைவியோ உங்களின் தேவையை யார் வேண்டுமானலும் உணர்த்தலாம்.
எந்த ஒரு வேலைக்குமே சக்தி ரொம்ப முக்கியம். அதுவும் இது வாழ்க்கை விளையாட்டு. இதில் எப்படி, எங்கே சக்தியை வெளிப்படுத்தவேண்டும் என்று தெரிந்து கொள்ளவேண்டும். துணைக்கு வலிக்காமல், காயப்படுத்தாமல், விவேகமான முறையில் சக்தியை வெளிப்படுத்தினால் நிச்சயம் வெற்றிதான்.
தம்பதியர் ஒருவருக்கொருவர் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கவேண்டும்.
ஆகவே திருமணம் ஆன கணவன் மனைவிகளுக்கு நினைவில் வைக்க வேண்டிய விஷயம் ஒன்றே ஒன்று தான் உனக்காய் உன்னோடே உன் சுக துக்கம் பகிர்ந்து உன்னுடன் எந்தநொடியும் பிரியாமல் வாழ்வேன் என்று மனதிற்குள் உறுதி கொண்டு வாழ தொடங்கினால் எந்நாளும் தாம்பத்யம் சிறக்கும் பொன்னாலே
மிகினும் குறையினும் நோய்செய்யும்
அளவோடு பயன்படுத்தி நலமோடு வாழ்வோம்
உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்🌷 ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்
கருத்துகள்