நினைத்தபடி, நினைத்தவற்றைச் சாப்பிடுவதுதான் மொத்த ஜீரண நிகழ்வுகளும் தடம்புரளக் காரணங்கள்.*

Visit My Links

YouTube Channel Website
முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Latest Posts

"என் இனிய பொன் நிலாவே காப்புரிமை விவகாரம்: ஹைகோர்ட் அதிர்ச்சி தீர்ப்பு!"

Subbiahpatturajan "என் இனிய பொன் நிலாவே". ஹைகோர்ட்டின் முக்கியமான  தீர்ப்பு என்ன சொல்கிறது? தமிழ் சினிமாவின் இசைஞானி என போற்றப்படும் இளையராஜா... இசையமைத்த, பலரது மனதில் இன்னும் ஒலிக்கின்ற பாடல்களில் ஒன்று  "என் இனிய பொன் நிலாவே". ஆனால், சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம் (Madras High Court) இந்த பாடலின் காப்புரிமை தொடர்பாக ஒரு முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது. 🔍 இந்த வழக்கின் பின்னணி என்ன? “என் இனிய பொன் நிலாவே” பாடல் 1981ஆம் ஆண்டு வெளியான Moodupani திரைப்படத்தில் இடம்பெற்றது. இப்படத்தை தயாரித்தது "Sujatha Cine Arts". பாடலின் வரிகள் வாலி எழுதியது; இசை இளையராஜா. இந்த பாடலுக்கான மூல உரிமை (Copyright Ownership) யாருக்கென்கிற கேள்வியில், இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் இடையே பல ஆண்டுகளாக கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. ⚖️ ஹைகோர்ட் என்ன தீர்ப்பு கூறியது? 2024ஆம் ஆண்டு, சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் கூறப்பட்டது: > "திரைப்படங்களுக்காக உருவாக்கப்படும் பாடல்களின் முழுமையான காப்புரிமை, திரைப்பட தயாரிப்பாளருக்கே சொந்தமா...

நினைத்தபடி, நினைத்தவற்றைச் சாப்பிடுவதுதான் மொத்த ஜீரண நிகழ்வுகளும் தடம்புரளக் காரணங்கள்.*

Subbiahpatturajan

✍ *இயற்கை வாழ்வியல் முறை*
*ஜீரணத்தை சீராக்கும் வழிமுறைகள்!*

நினைத்தபடி நினைத்தவன் கை சாப்பிடுவது

*சிலருக்கு நெஞ்சு எலும்புக்குக் கீழே ஒருவித எரிச்சலுடன்கூடிய வலி, மாரை அடைப்பது போன்ற உணர்வு வரும். காரணம், நாம் சாப்பிட்ட உருளைக்கிழங்கு போண்டா, சாம்பாருடன் கூடிய பொங்கல் என ஏதோ ஒன்று செரிமானம் ஆகாததால் வந்த நெஞ்செரிச்சலாக இருக்கலாம். ஜீரணம் என்பது, உமிழ்நீரில் ஆரம்பித்து மலக்குடல் வரை நடக்கிற செயல்பாடு. இலையில் பிடித்த பதார்த்தத்தைப் பார்த்ததும், உமிழ்நீர் சுரப்பதில் ஆரம்பிக்கும் ஜீரணம் சரியாக நடைபெற, பல சுரப்புகள், நுண்ணுயிரிகள் என ஏராளமான விஷயங்கள் சரியாக நடைபெற வேண்டும். நினைத்தபோது, நினைத்தபடி, நினைத்தவற்றைச் சாப்பிடுவதுதான் மொத்த ஜீரண நிகழ்வுகளும் தடம்புரளக் காரணங்கள்.* *செரிமானக் கோளாறுகள் பல்வேறு நோய்களுக்கு வழிவகுப்பவை என்பதை கவனத்தில் கொள்வோம்.*
*இனி, ஜீரணத்தை சீராக்க சில வழிமுறைகள்...*🦨🦨🦨🦨🦨🦨
*ஆரோக்கியமான உடலுக்கு இரு நேர சிற்றுண்டியும், ஒரு வேளை பேருண்டியும் போதுமானது. இரு சிற்றுண்டிகளில் ஒரு வேளை (இரவு அல்லது காலை) பழ உணவும் இயற்கையில் விளைந்த சமைக்காத உணவும் இருப்பது சிறப்பு.*

🦨🦨🦨🦨🦨🦨
*காலை உணவைத் தவிர்க்கக் கூடாது. இரவெல்லாம் வெற்றுக் குடலுடன் இருந்த உடலுக்கு காலையில் உடல் பித்தத்தைக் குறைக்கும்படியான குளிர்ச்சியான உணவு அவசியம். அவல் பொங்கல் அல்லது உப்புமா, கைக்குத்தல் புழுங்கல் அரிசிக் கஞ்சி, சிறு குழந்தைகளாக இருந்தால் நவதானிய / சிறு தானிய / பயறு நிறைந்த கஞ்சி நல்லவை. வளரும் குழந்தைக்கு ஒரு வாழைப்பழத்துடன் இட்லி அல்லது தானியக் கஞ்சி கொடுக்கலாம். இளைஞர்கள் பழத்துண்டுகளுடன் அவல் பொங்கல் அல்லது வெண்பொங்கல் சாப்பிடலாம். பெரியவர்கள் சிவப்பரிசி அவலுடன், பப்பாளித் துண்டுகள், இளம் பழுப்பில் உள்ள கொய்யா இவற்றுடன் புழுங்கல் அரிசி உணவு அல்லது கேழ்வரகு உணவு சாப்பிடலாம். ஜீரணத்தை சீராக்கும்.*
🦨🦨🦨🦨🦨🦨
*மதிய உணவில் நிறையக் காய்கறிகள், கீரைக் கூட்டு / கடைசல் இவற்றுடன் அரிசி உணவை அளவாகச் சாப்பிட வேண்டும்.*
🦨🦨🦨🦨🦨🦨
*அதிகக் காரத்தைத் தவிர்க்கவும். காய்ந்த மிளகாய் பயன்படுத்தவேண்டிய உணவுகளில், அதற்குப் பதிலாக மிளகைப் பயன்படுத்த வேண்டும்.*
🦨🦨🦨🦨🦨🦨
*ஜீரணத்தை எளிதாக்க, எண்ணெயில் பொரித்த உணவைத் தவிர்ப்பது நல்லது.*
🦨🦨🦨🦨🦨🦨
*சரியான நேரத்துக்கு உணவைச் சாப்பிட்டுவிட வேண்டும்.*
*அவசியமின்றி வலி நிவாரணி மருந்துகளை எடுத்துக்கொள்ளக் கூடாது.*
🦨🦨🦨🦨🦨🦨
*எப்போதும் டென்ஷனுடன் இருப்பவர்களுக்கு ஜீரணக் கோளாறு வந்துவிடும். மனதை லகுவாக வைத்திருக்கவும்.*
🦨🦨🦨🦨🦨🦨
*புகை, மது இரண்டும் கேன்ஸரை வயிற்றுப்புண் வழியாக அழைத்து வருபவை. இரண்டையும் தவிர்க்கவும்.*
🦨🦨🦨🦨🦨🦨
*காலை உணவில் இட்லிக்கு பிரண்டைத் துவையல் நல்லது.*
🦨🦨🦨🦨🦨🦨
*துவரம்பருப்பு சாம்பாருக்கு பதிலாக பாசிப்பருப்பு சாம்பார் செய்து சாப்பிடலாம்.*
🦨🦨🦨🦨🦨🦨
*வெள்ளைக் கொண்டைக்கடலைக்குப் பதில், சிறு சிவப்புக் கொண்டைக்கடலை பயன்படுத்தலாம்அதுவும்கூட குறைந்த அளவில், மிளகு சீரகம் சேர்த்துப் பயன்படுத்த வேண்டும்.*
🦨🦨🦨🦨🦨🦨
*காலை 11 மணிக்கு நீர் மோர் இரண்டு டம்ளர் அருந்தலாம்.*
🦨🦨🦨🦨🦨🦨
*மதிய உணவில் காரமில்லாத, பாசிப் பயறு சேர்த்த கீரைக் குழம்பு, தேங்காய்ப் பால் குழம்பு (சொதி), மிளகு-சீரக ரசம், மணத்தக்காளி கீரை என சாப்பிடவும். சாப்பிட்டு முடித்ததும் இரண்டு குவளை சீரகத் தண்ணீர் அருந்துவது ஜீரணத்தை எளிதாக்கும்.*
🦨🦨🦨🦨🦨🦨
*இரவில் வாழைப்பழம், ஆவியில் வேகவைத்த அல்லது சமைக்காத இயற்கை உணவு சாப்பிடவும்.*
🦨🦨🦨🦨🦨🦨
*கொத்தவரை, காராமணி, முட்டைக்கோஸ், உருளைக்கிழங்கு ஆகிய காய்கறிகளைத் தவிர்க்கவும். அதிக அளவிலான மாம்பழமும் பலாப்பழமும்கூட வாயுவை உண்டாக்கும்.*
🦨🦨🦨🦨🦨🦨
*சுக்கு, மிளகு, திப்பிலி, சீரகம், பெருஞ்சீரகம், ஏலம், பெருங்காயம், கறிவேப்பிலை சம பங்கு, உப்பு பாதிப் பங்கு சேர்த்து லேசாக வறுத்து பொடியாக்கி, சூடான உணவில் முதலில் பருப்புப் பொடிபோல் போட்டு சாப்பிட்டால் அஜீரணம் ஏற்படாது. சாப்பிட்டதும் வயிற்று உப்புசம் வருபவர்களுக்கு இந்த அன்னப்பொடியை ஒரு டீஸ்பூன் அளவுக்கு எடுத்து, மோருடன் சாப்பிடக் கொடுக்க வேண்டும். உடனடியாக வாயு விலகி, வயிற்று உப்புசம் நீங்கும்.*
🦨🦨🦨🦨🦨🦨
*சித்த மருத்துவரிடம் கிடைக்கும் ஜீரண சஞ்சீவி, சீரக விவாதி மருந்துகள் அஜீரணத்தை அகற்ற* *உதவுபவை.*
 *தினமும் நடைப்பயிற்சி மூச்சுப்பயிற்சி செய்ய வேண்டியது அவசியம்.*
*அடுப்பங்கரையில் கொஞ்சம் அக்கறை காட்டினால் அஜீரணத்தை வெல்லலாம்*
🦨🦨🦨🦨🦨🦨
🌷🌷🌷🌷🌷🌷
*உடல் ஆரோக்கியமாக  இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்🌷 ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்*
🦚🦚🦚🦚🦚🦚
*_நன்றி_*
_*வணக்கம்*_
 

கருத்துகள்

Popular post

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

தலைவர் பிரபாகரன்- மதிவதனி அவர்களின் காதல் கதை 💕

Subbiahpatturajan தலைவர் பிரபாகரன்- மதிவதனி அவர்களின் காதல் கதை 💕 பிரபாகரன் வீட்டைவிட்டு வெளியில் வந்து தமிழீழ சுதந்திரத்திற்கான போராட்டத்தை தொடங்கிய பிறகு, 1983ஆம் ஆண்டு கருப்பு ஜூலை இனப்படுகொலை சிங்கள அரசினால் திட்டமிட்டு நிறைவேற்றப்பட்டது. தென் இலங்கையில் இருந்து பெரும்பாலான மக்கள் வடக்கில் குடியேறினர். மேலும் யாழ்ப்பாண பல்கலையில் படித்த தமிழ் மாணவர்களையும் வெளியேற்றும் முயற்சிகளில் இறங்கியது அரசு . அந்த நிலையில் 9/1/1984 அன்று 5 மாணவர்கள் மற்றும் 4 மாணவிகள் காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கினர். மக்கள் ஆதரவு மாணவர்களின் உண்ணாவிரதத்திற்கு பெருகியது. ஆனால் இலங்கை அரசு இந்த உண்ணாவிரதத்தை கண்டு கொள்ளவில்லை. 15ம் தேதி உண்ணாவிரதம் ஆரம்பித்த ஆறாம் நாள் மாலை மாணவர்களை பரிசோதித்த மருத்துவர் ஒரு மாணவி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறார் என்று அறிவித்தார். அன்று இரவு விடுதலைப் புலிகள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் மாணவர்களை உண்ணாவிரதப் பந்தலில் இருந்து கடத்திச் சென்றனர். புலிகள் அமைப்பினர் இந்த மாணவர்கள் சாவதை நாங்கள் அனுமதிக்க இயலாது என்று மக்களிடம் துண்டறிக்கை மூலம் தகவல் தெரிவித்தனர். உண்...

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் க...

நம் மொபைல் போனில் சேமித்து வைக்க வேண்டிய முக்கியமான மற்றும் அவசியமான தொடர்பு எண்கள்!!

Subbiahpatturajan நம் மொபைல் போனில் சேமித்து வைத்திருக்க வேண்டிய முக்கியமான மற்றும் அவசியமான தொடர்பு எண்கள்!! அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்.... ஒரு வாகனத்தின் பதிவு எண்ணைக் கொண்டு, அதன் உரிமையாளர் பெயரை உடனே தெரிந்துகொள்ளலாம். 0 921 235 7123 என்ற எண்ணுக்கு "vahan<space>பதிவு எண்" என்று அனுப்ப வேண்டும். எடுத்துக்காட்டு: vahan tn74a0000 அடுத்த விநாடியே வாகன உரிமையாளரின் பெயர், வாகனத்தின் வகை, வரி செலுத்திய விபரம், தகுதிச் சான்று முடிவடையும் தேதி ஆகிய விபரங்கள் தாங்கிய SMS வந்துவிடும். விபத்து நிகழ்த்திவிட்டு நிற்காமல் செல்லும் வாகனங்களை உடனடியாக கண்டுபிடிக்க இந்த சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தமிழ்நாடு registration number விபரங்கள் பின்வருமாறு: TN01 - சென்னை (மத்திய) TN02 - சென்னை (வடமேற்கு) TN03 - சென்னை (வட கிழக்கு) TN04 - சென்னை (கிழக்கு) TN05 - சென்னை (வடக்கு) TN06 - சென்னை (தென்கிழக்கு) TN09 - சென்னை (மேற்கு) TN10 - சென்னை (தென்மேற்கு) TN11 - தாம்பரம் TN11Z - சோழிங்கநல்லூர் TN16 - திண்டிவனம் TN18 - REDHILLS TN18Z - அம்பத்தூர் TN19 - செங்கல்பட்...

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற...

திருமணம் ஆன கணவன் மனைவிக்கு நினைவில் வைக்க வேண்டிய விஷயங்கள்..!!

Subbiahpatturajan கணவன் மனைவி புரிதலுடன் வாழ திருமணம் ஆன கணவன் மனைவிகளுக்கு நினைவில் வைக்க  வேண்டிய விஷயம் ஒன்றே ஒன்று ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி அன்பும் பரிசும் தாம்பத்யத்துக்கு உறுதி ஆம் இன்று காதலிலும் திருமண பந்தத்திலும் தொடக்கத்தில் இருக்கும் அன்பும் பரிசு பரிமாற்றமும் நாளாக நாளாக குறைந்து மறைந்து இல்லாமலே போய்விடுகிறது அங்கு தான் தம்பதிகளுக்குள் பிரிவும் தொடங்கி விடுகிறது தாம்பத்யம் என்று சொன்னவுடன் பலருக்கு அச்சமும் அருவறுப்பும் முகத்தில் பிரதிபலிக்கும் அது தேவையே இல்லை தாம்பத்யம் என்பது எளிமையான அன்புப் பகிர்தல் என்று எல்லா ஆண்களும் பெண்களும் புரிந்து கொள்ள வேண்டியது மிக அவசியம்  இரண்டு அறை கொண்ட வீட்டில் கூட்டு குடும்பமாக நான்கு தம்பதிகள் வாழ்ந்த காலத்தில் கூட அன்யோன்யமாக இருந்த கணவன் மனைவி உறவு இப்போது தனி குடும்பமாக மூன்று தனி தனி அறைகள் உள்ள வீட்டில் வாழும் போது விலகி போயிருக்கிறது என்றால் இவர்கள் தாம்பத்யம் சிறக்கவில்லை என்றே அர்த்தம் திருமணம் என்ற பந்தத்தில் உரிமை கிடைத்த ஒரே காரணத்தினாலே உடல் உரிமை பெற்று கணவன் மனைவி இணைந்திருப்பது மட்டுமே தாம்பத்யம் அல்ல பாரத...

வயதான காலத்தில் ஏன் என்று கேட்க நாதி அற்று முதியோர் இல்லத்திலோ கட்டிய வசதியான வீட்டிலோ அனாதையாக....

Subbiahpatturajan தமிழகத்தில் தனிமை ஆகப் போகும் உறவு முறைகள் அண்ணன், தம்பி, அக்கா,தங்கை, சின்ன அண்ணன், பெரிய அண்ணன், சின்ன அக்கா, பெரிய அக்கா, சித்தப்பா, பெரியப்பா, அத்தை, மாமா, மச்சான்,மச்சினி, அண்ணி, கொழுந்தனார், நாத்தனார், தாய்மாமன், சித்தப்பா பையன், சித்தப்பா பொண்ணு பெரியப்பா பையன், பெரியப்பா பொண்ணு, அத்தை பையன், அத்தை பொண்ணு, மாமன் பொண்ணு, மாமன் பையன்.. இது போன்ற வார்த்தைகள் எல்லாம் 2050க்கு பிறகு  யாருடைய காதிலும் பாசத்தோடு விழாது. யாரும் கூப்பிடவும் மாட்டார்கள் ! அகராதியில் இருந்தே கூட கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து விடும். காரணம் என்ன ! #ஒண்ணேஒண்ணு, #கண்ணேகண்ணு என்று ஒரே ஒரு குழந்தை மட்டும் போதும் என்று முடிவெடுக்க ஆரம்பித்ததுதான் ! அப்படி இருக்கும் போது இந்த உறவுகள் எல்லாம் எப்படி வரும்? பெண்கள் வயதுக்கு வந்ததும் சீர் வரிசை செய்யவோ, பந்தல் போடவோ, முதல் புடவை எடுத்துத் தரவோ எந்த தாய்மாமனும் இருக்கப்போவது இல்லை ! திருமணத்தின் போது அரசாணைக்கால் நட எந்த அண்ணனும் இருக்கப்போவது இல்லை ! மாப்பிள்ளைக்கு மோதிரம் போட எந்த தம்பியும் இருக்கப் போவது இல்லை, குழந்தைக்கு மொட்டை போட யார் மடியில் ...

வெட்டுக் கிளியை கட்டுப்படுத்த உழவர்களின் சிறந்த நண்பன் இந்த ரெட்டைவால் குருவி

Subbiahpatturajan வெட்டுக்கிளிக்கும் கரிச்சான் குருவிக்கும் இருக்கும் தொடர்பு பத்தி பார்ப்போம்!! வெட்டுக்கிளி பற்றி பேசும் போது இவனை பற்றி பேசாமல் இருக்க முடியாது... ஆமாம் இவனின் பிரதான உணவே வெட்டுக்கிளி தான்...  இவர்கள் ஒரு மணி நேரத்திற்கு சுமார் 150 பூச்சிகளை வேட்டையாடி உண்பவர்கள்.   ஒரு நாளைக்கு எவ்வளவு பூச்சிகளை உண்ணுகிறார்கள் என நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.  வயிறு நிறம்பியபிறகு சாப்பிடும் பூச்சிகளை ஒன்றிரண்டாக அரைத்து வெளியில் கக்கிவிடுகிறார்கள். அப்படி கக்கிய பூச்சிகள் மண்ணிற்கு சிறந்த உரமாக செயல்படுகிறது. இவனை போன்றவர்களின் எண்ணிக்கை குறைய குறைய வெட்டுக்கிளிகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கும்... அவன் தான் கரிச்சான் குருவி... இவனுக்கு மாட்டுக்காரன், ரெட்டைவால் குருவி, வால் நீண்ட கருங்குருவி என்றெல்லாமும் பெயர்கள் உண்டு. கரிச்சான் குருவிகள் கிராமப்புறங்களில்  ஆடு மாடுகளை மேய்க்க ஓட்டிச் செல்லும் போது அவற்றின் மீது உட்கார்ந்து சவாரி செய்யும். அப்போது ஆடு மாடுகளின் கால்கள் செடிகளில் உட்கார்ந்து இருக்கும் வெட்டுக்கிளி, வண்ணாத்திப் பூச்சி இவற்றைக் ...

உலகில் மனிதனை முட்டாளாக்கி அடிமையாக வைத்திருக்கும் ஒரே மொழி..

Subbiahpatturajan உலகில் மனிதனை முட்டாளாக்கி அடிமையாக வைத்திருக்கும் மொழி  முதலிடத்தில் இருப்பது--ஹிந்தி மொழி! பொய்யான கட்டுக்கதைகளின் வழியே உருவாக்கப்பட்ட மொழி... உதாரணம்-- ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உலகம் முழுவதும் விவசாயத்தை கொண்டு சென்று  மண்ணையும் மக்களையும் பண்படுத்திய "பத்துக் கலை" இராவணனை  அரக்கன் என்று கற்பித்து கொடும்பாவி எறிக்க வைத்த மொழி... இராவணனின் சிறப்புகள்---   இராவணன் இயற்றிய நூல்கள் இந்திய மொழியான இந்தியில் தமிழ் சொற்கள் மிக மிக அதிகம் எந்த வார்த்தையானாலும் இவர்கள் வார்த்தையின் கடைசி வரியில் கட் செய்து விடுவார்கள்.உதாரணமாக... அனுபவம் என்று தமிழில் சொன்னால் இந்தியில் அனுபவ் சர்ச்சை -சர்ச்சா கதை-கதா சிரம்-சீர் மேகம்-மேகா இவைப் போன்ற நிறைய உண்டு தேவதை_தேவ்தா.... இராவணனால் இயற்றப்பட்ட நூல்கள் என அறியப்பட்டுள்ள நூல்கள் விபரம் 1. உடற்கூறு நூல் 2. மலை வாகடம் 3. மாதர் மருத்துவம் 4. இராவணன் – 12000 5. நாடி, எண்வகை பரிசோதனை நூல் 6. இராவணன் வைத்திய சிந்தாமணி 7. இராவணன் மருந்துகள் - 12000 8. இராவணன் நோய் நிதானம் - 72 000 9. இராவணன் – கியாழங்கள் – 7000 1...

இந்திய ராணுவ பணியான அக்னிவீர் ஆட்சேர்ப்பு முகாம் தமிழ்நாட்டில் நடைபெறுகிறது நவம்பர் 15

Subbiahpatturajan வேலூர் மாவட்டத்தில் இந்திய ராணுவ பணியான அக்னிவீர் ஆட்சேர்ப்பு முகாம் நடைபெறுகிறது  இந்திய ராணுவத்தில் அக்னிவீர் உள்ளிட்ட பணிகளுக்கான  ஆட்சேர்ப்பு முகாம் வேலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலைகளின் விபரங்கள் :   அக்னி வீரர் (ஆண்); அக்னி வீரர் (பெண் ராணுவ காவலர்); சிப்பாய் தொழில்நுட்ப செவிலியர் உதவியாளர்/ கால்நடை செவிலியர் உதவியாளர்;  இளநிலை சேவை அதிகாரி (மத போதகர்) உள்ளிட்ட பணிகளுக்கு இந்த ஆட்சேர்க்கை முகாம் நடத்தப்படுகிறது. முகாம் நடைபெறும் நாள் : நவம்பர் 15ம் தேதி முதல் 29ம் தேதி வரை முகாம் நடைபெறும். தமிழகம், ஆந்திர பிரதேசம் மற்றும் தெலங்கானாவில் இருந்து ஏற்கனவே பதிவு செய்த விண்ணப்பதாரர்கள் இந்த முகாமில் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பதிவு ஆவணங்கள் கட்டாயம் எடுத்துவரவேண்டும்:   www.joinindianarmy.nic.in  என்ற இணையதளத்தில் வேலூர் ஆட்சேர்ப்பு  முகாம் குறித்த அறிவிப்பு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில், குறிப்பிடப்பட்டு...