Subbiahpatturajan Google Pay, PhonePe, மற்றும் Paytm ஆகியவற்றின் உதவி மையத்தை தொடர்பு கொள்ள, பின்வரும் வழிகளையும் தொலைபேசி எண்களையும் எப்படி பயன்படுத்தலாம். இவை இந்தியாவில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் அதிகாரப்பூர்வ தொடர்பு முறைகளாகும்: 1. Google Payதொலைபேசி எண்: 1800-419-0157 (கட்டணமில்லா எண், 24/7 கிடைக்கும்). தொடர்பு கொள்ளும் முறை: Google Pay ஆப்-ஐ திறந்து, "Help & Feedback" என்ற பகுதிக்குச் செல்லவும். அங்கு சாட் ஆதரவு (8 AM - 12 AM IST) அல்லது மின்னஞ்சல் வழியாக உதவி பெறலாம்.மேலே குறிப்பிட்ட தொலைபேசி எண்ணை அழைத்து, பிரச்சினையை விளக்கி தீர்வு கேட்கலாம். குறிப்பு: பயன்பாட்டில் உள்ள "Help" பகுதியில் பிரச்சினையை பதிவு செய்தால், விரைவாக பதில் கிடைக்கும். 2. PhonePeதொலைபேசி எண்: 080-6872-7374 (வாடிக்கையாளர் ஆதரவு) அல்லது 022-6872-7374 (மாற்று எண்).தொடர்பு கொள்ளும் முறை: PhonePe ஆப்-ஐ திறந்து, முகப்புப் பக்கத்தில் உள்ள "?" (கேள்விக்குறி) ஐகானை கிளிக் செய்யவும்."Contact Us" என்ற பகுதியில் உங்கள் பிரச்சினையை தேர்ந்தெடுத்து, சாட் அல்லது மின்னஞ்சல்...
Subbiahpatturajan
பாஜகவின் முக்கிய தேர்தல் வாக்குறுதிகளும் சில கேள்விகளும்...
1. சென்னை மாநகராட்சி மூன்றாகப் பிரிக்கப்படும். (அப்போ தமிழ்நாடு எத்தனையாக பிரிக்கப்படும் ?)
2. விவசாயத்துக்கு தனி பட்ஜெட் போடப்படும். வருஷம் 6ஆயிரம் ரூபாய் விவசாயிகளுக்கு மானியம். அதாவது மாதத்துக்கு 500 ஓவாய் மானியம்.(விவசாயிகளின் போராட்டங்கள், விவசாயச் சட்டங்கள் பற்றி வாயே திறக்கமாட்டோம்.)
3. மீனவருக்கும் இதே போல வருஷம் 6 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படும். (மீனவர்கள் கடலில் ஆழமான பகுதிகளில், கார்ப்பரேட்டுகளின் கப்பல்கள் மீன்களை கொத்தாக அள்ளும் மீன் வளம் நிறைந்த இடங்களில் போய் மீன் பிடிக்கக்கூடாது என்று தடைச் சட்டங்கள், மீறினால் பல லட்சம் அபராதம் என்று கடும் விதிகள் போட்டு மீனவர்கள் வாழ்க்கையை அழித்துவிட்டு மாதம் 500 ரூபாய் மானியத்தில் மெதுவாகச் சாகுங்கள் மீனவர்களே என்று சொல்லாமல் சொல்கிறார்கள்).
3.பழவேற்காடு முதல் கன்னியாகுமரி வரை உள்ள அனைத்து கடேலார மாவட்டங்களிலும் உள்ள முகத்துவாரங்கள் முறையாக தூர்வாரப்படும். (காட்டுப்பள்ளி துறைமுகம் அருகில் அதானிக்கு இலவசமாக அரசு சார்பில் தூர்வாரிக் கொடுத்தது போல).
4. முன்னேறிய, ஆனால் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படும். (69% பிற்பட்டோர் சதவீத ஒதுக்கீட்டை 50 ஆக பிடுங்கிச் சுருக்குவதெல்லாம் சைலன்ட்டாகச் செய்யப்படும்).
5. வெளிமாநிலங்களிலிருந்து அதிக அளவில் வந்து குடியேறி வேலை செய்யும் வட இந்திய தொழிலாளர்களுக்கு குடியிருப்பு கட்டித் தரப்படும். ( 1.50 லட்சம் வட இந்தியத் தொழிலாளர்கள் திருப்பூர் பகுதிகளில் மட்டும் குடியேறியுள்ளார்கள். இவர்களுக்கு குடியிருப்பு கட்டிக் கொடுத்து, வாக்காளர்களாக்கி இலங்கையில் தமிழர் பகுதிகளில் சிங்களர்களை குடியமர்த்துவது போல பாஜக தமிழ்நாட்டை வட இந்தியாவாக்க முயற்சி செய்யப் போகிறார்கள்.)
6. தேசிய கல்விக் கொள்கை தமிழ்நாட்டில் கண்டிப்பாக அமல்படுத்தப்படும். ( அதாவது 3 ஆம் வகுப்பிலிருந்து காலேஜ் வரைக்கும் எல்லாவற்றுக்கும் நுழைவுத் தேர்வு. எதற்கு இத்தனை நுழைவுத் தேர்வுகள் ? மேல்சாதியைத் தவிர கீழ்சாதிக்காரனெல்லாம் அவனவன் அப்பன் தொழிலை செய்யப் போ என்கிற மறைமுக திட்டத்தை அமல்படுத்துவதற்குத் தான். நீட் என்ற தேர்வினால் கழித்துக் கட்டப்பட்ட அரசுப் பள்ளி மாணவர்கள் 60 பேரை சேர்க்க எத்தனை கோர்ட் படியேறி போராடி சீட் பெற்றோம் என்பதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.)
7.ஈரோடு-தாராபுரம்-பழனி அகல ரயில் பாதை முடிக்கப்படும். இன்னும் பல பாதைகளும் போடப்படும். ( எதற்கு ? அம்பானியும், அதானியும் மக்கள் வரிப்பணத்துல போட்ட தண்டவாளத்துலயும், உருவாக்கின ரயில்கள்லயும், கட்டிய ரயில்வே நிலையங்கள்லயும் அவங்க தனியார் ரயில் விட்டு காசு சம்பாதிக்கவா ?)
8. நிலத்தடி நீர்ப்பாதுகாப்புச் சட்டம் கொண்டு வரப்படும். ( அதாவது பெரிய பெரிய கார்ப்பரேட்டு நிறுவனங்கள், பெரும் தொழிற்சாலைகள் கணக்கேயில்லாமல் லட்சக்கணக்கான லிட்டர் நீரை உறிஞ்சி லாபம் கொழிக்க, சாதாரண மக்கள் வீட்டில் பம்ப் செட் போடக்கூடாது, கிணற்றில் நீர் அள்ளக் கூடாது என்று சட்டங்கள் போடுவார்கள். கேன்வாட்டரை சைக்கிளில் போட்டு வீடு வீடாய் டெலிவரி செய்யும் சிறு கம்பெனிகளைப் போட்டு வறுப்பார்கள்).
9. புதிய மின் நிலையங்கள் அமைக்கப்படும். (அமைத்த கையோடு சூடாக கார்ப்பரேட்டுகளிடம் விற்கப்படும். அதே கார்ப்பரேட்டுகளிடம் அதிக காசு கொடுத்து மின்சாரம் வாங்கப்படும். அந்தச் செலவுக் கணக்கு மக்கள் வரிப்பணத்தில் எழுதப்படும். மின்சாரத்துறை நஷ்டத்தில் ஓட்டப்படும்).
10. 50 லட்சம் புதிய வேலை வாய்ப்புக்கள் உருவாக்கப்படும். ( போன 2020 ல் மட்டும் இருந்த சொற்ப வேலையை இழந்தவர்கள் 2 கோடிப் பேர். கேட்டால் கொரோனாவால் என்று அளப்பார்கள்).
11. மதம் மாற்றத் தடைச் சட்டம் கொண்டு வரப்படும். ( மாசம் நாலு ஊர்களில் மதக்கலவரத்துக்கு கியாரண்டி).
12.பசுப் பாதுகாப்பு அமல் படுத்தப்படும். ( மாட்டுக்கறியை விரும்பி உண்ணும் முஸ்லீம்களும், தாழ்த்தப்பட்டவர்களும் ஆர்எஸ்எஸ் சங்கிகளிடம் அடிபட்டு சாக ரெடியாகிக் கொள்ளுங்கள்).
13. இந்து அதிகாரிகளே நிர்வகிக்கும் இந்து அறநிலையத்துறையை கலைக்கப்படும். ( கோயில் சொத்துக்களை அரசிடமிருந்து பிடுங்கி மீண்டும் பார்ப்பனர்களே நிர்வகிக்க வழி செய்யப்படும்.)
14.உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக தமிழ் அறிவிக்கப்படும். ( பள்ளி, கல்லூரிகளில், அரசு அலுவலகங்களில் எல்லாம் தமிழைத் தூக்கிவிட்டு நீதிமன்றத்தில் மட்டும் தமிழை வைப்பார்களாம். நல்ல காதுகுத்து.).
இவற்றை தொகுத்த இந்த டாக்குமெண்ட் தான் பாஜகவின் 'தொலைநோக்குப் பத்ரமாம்' (அதாவது 'தேர்தல் அறிக்கை' என்கிற தூய தமிழ் வார்த்தையை சமஸ்கிருதம் கலந்த தமிழில் பத்ரம்ன்னு சொல்றாங்களாம்).
ஒரு தேர்தல் அறிக்கை என்கிற பெயரில் கூட தமிழை வஞ்சிக்கும் இந்த வெங்காயங்கள் தான் தமிழை வாழ வைப்பார்களாம். இதை விடக் காமெடி என்னவென்றால் , தமிழக பாஜக தேர்தல் வேட்பாளர்கள் யார் யார் என்று அறிவித்து மத்திய பாஜகவிடமிருந்து வெளியிடப்பட்ட அறிக்கை லிஸ்ட் கூட இந்தியிலும், ஆங்கிலத்திலும் மட்டுமே இருந்தது. அதில் கூடத் தமிழ் இல்லை.
இந்த லட்சணத்தில் தமிழகத்தில் தாமரை மலரனுமாம்.
மக்களே, தேர்தலில் இவர்களுக்கு நீங்கள் தக்க பதிலைச் சொல்லுங்கள். ஓட்டு எந்திரத்தில் அவர்கள் செய்யப்போகும் தில்லுமுல்லுகளையும் தாண்டி அவர்களை மரண அடி கொடுத்து வீழ்த்துங்கள்.
வெல்க தமிழ்.
Fwded Msg.
கருத்துகள்