Subbiahpatturajan Google Pay, PhonePe, மற்றும் Paytm ஆகியவற்றின் உதவி மையத்தை தொடர்பு கொள்ள, பின்வரும் வழிகளையும் தொலைபேசி எண்களையும் எப்படி பயன்படுத்தலாம். இவை இந்தியாவில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் அதிகாரப்பூர்வ தொடர்பு முறைகளாகும்: 1. Google Payதொலைபேசி எண்: 1800-419-0157 (கட்டணமில்லா எண், 24/7 கிடைக்கும்). தொடர்பு கொள்ளும் முறை: Google Pay ஆப்-ஐ திறந்து, "Help & Feedback" என்ற பகுதிக்குச் செல்லவும். அங்கு சாட் ஆதரவு (8 AM - 12 AM IST) அல்லது மின்னஞ்சல் வழியாக உதவி பெறலாம்.மேலே குறிப்பிட்ட தொலைபேசி எண்ணை அழைத்து, பிரச்சினையை விளக்கி தீர்வு கேட்கலாம். குறிப்பு: பயன்பாட்டில் உள்ள "Help" பகுதியில் பிரச்சினையை பதிவு செய்தால், விரைவாக பதில் கிடைக்கும். 2. PhonePeதொலைபேசி எண்: 080-6872-7374 (வாடிக்கையாளர் ஆதரவு) அல்லது 022-6872-7374 (மாற்று எண்).தொடர்பு கொள்ளும் முறை: PhonePe ஆப்-ஐ திறந்து, முகப்புப் பக்கத்தில் உள்ள "?" (கேள்விக்குறி) ஐகானை கிளிக் செய்யவும்."Contact Us" என்ற பகுதியில் உங்கள் பிரச்சினையை தேர்ந்தெடுத்து, சாட் அல்லது மின்னஞ்சல்...
Subbiahpatturajan
இந்திய விமானப்படைப் பிரிவுகள் அக்னிபாத் திட்டத்தின் கீழ் 01/2023-க்கு அக்னி வீரர் வாயு AGNIVEERVAYU பிரிவில் ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருமணமாகாத ஆண்கள் மற்றும் பெண்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பணியின் முழு விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் முறையை இதில்தெரிந்துகொள்ளுங்கள்
இந்திய விமானப்படை Agniveer வேலைவாய்ப்பு விவரங்கள்:
Job name: Agniveer விமானப்படை வீரர்கள்
Age: 27 ஜீன் 2022 மற்றும் 27 டிசம்பர் 2005 ஆண்டுகளுக்கு இடையே பிறந்திருக்க வேண்டும். அதிகபட்சம் 21 வயது இருக்க வேண்டும்.
Salary: முதல் வருடம் மாதம் ரூ.30,000 முதல் தொடங்கும். நான்கு ஆண்டுகள் முடிவில் வட்டி இல்லாமல் ரூ.10.04 லட்சம் வரை சம்பளமாகக் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு விவரங்களுக்கு அறிவிப்பைப் பார்க்கவும்.
Qualification :
கணிதம், இயற்பியல் மற்றும் ஆங்கிலத்துடன் இடைநிலை/10+2/சமமான தேர்வில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி
அரசால் அங்கீகரிக்கப்பட்ட பாலிடெக்னிக் நிறுவனத்தில் பொறியியல் (மெக்கானிக்கல்/ எலக்ட்ரிக்கல்/ எலக்ட்ரானிக்ஸ்/ ஆட்டோமொபைல்/ கம்ப்யூட்டர் சயின்ஸ்/ இன்ஸ்ட்ரூமென்டேஷன் டெக்னாலஜி/ இன்பர்மேஷன் டெக்னாலஜி) 3 வருட டிப்ளமோ படிப்பில் 50 சதவீதமதிப்பெண்களுடன் தேர்ச்சிஅல்லது
தொழிற்கல்வி அல்லாத பாடத்துடன் 2 வருடத் தொழிற்கல்விப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
ஆன்லைன் எழுத்து முறை தேர்வு நடத்தப்படும் அதில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு Document Verification, eligibility test, physical fitness test, medical examination போன்றவை நடத்தப்பட்டு வீரர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :
இந்திய விமானப்படையில் சேர ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைனின் மட்டும் தான் விண்ணப்பிக்க வேண்டும் என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : https://agnipathvayu.cdac.in/avreg/controller/showSignIn
குறிப்பு :
அக்னிபாத் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் வீரர்கள் நான்கு ஆண்டுகள் மட்டும் தான் இந்திய விமானப்படையில் பணியாற்ற முடியும்.
இந்த ஆட்சேர்க்கை முகாம் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த நபர்கள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர் அவர்களுக்கு அவர்களுடைய இமெயிலில் விபரக்குறிப்பு அனுப்பி வைக்கப்படும்.இதில் முக்கிய அம்சம் என்னவென்றால் எந்த இடைத் தரகர்களிடம் யாரும் தொடர்பு கொள்ள தேவையில்லை.
கருத்துகள்