Subbiahpatturajan Google Pay, PhonePe, மற்றும் Paytm ஆகியவற்றின் உதவி மையத்தை தொடர்பு கொள்ள, பின்வரும் வழிகளையும் தொலைபேசி எண்களையும் எப்படி பயன்படுத்தலாம். இவை இந்தியாவில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் அதிகாரப்பூர்வ தொடர்பு முறைகளாகும்: 1. Google Payதொலைபேசி எண்: 1800-419-0157 (கட்டணமில்லா எண், 24/7 கிடைக்கும்). தொடர்பு கொள்ளும் முறை: Google Pay ஆப்-ஐ திறந்து, "Help & Feedback" என்ற பகுதிக்குச் செல்லவும். அங்கு சாட் ஆதரவு (8 AM - 12 AM IST) அல்லது மின்னஞ்சல் வழியாக உதவி பெறலாம்.மேலே குறிப்பிட்ட தொலைபேசி எண்ணை அழைத்து, பிரச்சினையை விளக்கி தீர்வு கேட்கலாம். குறிப்பு: பயன்பாட்டில் உள்ள "Help" பகுதியில் பிரச்சினையை பதிவு செய்தால், விரைவாக பதில் கிடைக்கும். 2. PhonePeதொலைபேசி எண்: 080-6872-7374 (வாடிக்கையாளர் ஆதரவு) அல்லது 022-6872-7374 (மாற்று எண்).தொடர்பு கொள்ளும் முறை: PhonePe ஆப்-ஐ திறந்து, முகப்புப் பக்கத்தில் உள்ள "?" (கேள்விக்குறி) ஐகானை கிளிக் செய்யவும்."Contact Us" என்ற பகுதியில் உங்கள் பிரச்சினையை தேர்ந்தெடுத்து, சாட் அல்லது மின்னஞ்சல்...
Subbiahpatturajanமாட்டின் உரிமையாளர்கள்மற்றும்
மாட்டின் உரிமையாளர்கள்மற்றும்
மாடுபிடி வீரர்களுக்கு சிறு கோரிக்கை
மாட்டின் உரிமையாளர்கள் கவனத்திற்கு
மாட்டின் மணியின் உட்புறம் உங்களது தொலைபேசி எண் முடிந்தால் முகவரி எழுத வேண்டும்....
இழு கயிறுடன் விடுவதை குறைத்துக் கொள்ளுங்கள்...
(இதனால் காளை மரத்தின் வேர்ப்பகுதியில் சிக்கிக்கொள்ள வாய்ப்பு உள்ளது)....
மாடுபிடி வீரர் அல்லது மாட்டின் உரிமையாளருக்கு கழுத்தில் தப்பித்தவறி மாட்டிக் கொண்டால் உயிர் போக வாய்ப்புள்ளது.
முடிந்தால் என் காளையை பிடித்துப்பார் என்பதை கூறுவதை முற்றிலும் தவிர்த்து விடுங்கள்.....
காளையை அவிழ்த்த பிறகு இரு சக்கர வாகனத்தில் காளையை பின் தொடர்வதை நிறுத்துங்கள்....
(இதனால் மாடுபிடி வீரர்களுக்கும் இடையூறு காயங்களும் ஏற்படுகிறது)
மாடுபிடி வீரர்களின் கவனத்திற்கு
காளை பிடிபட்டவுடன் தயவு செய்து கீழே சாய்த்து அதன் அடையாளங்களை அவிழ்க்க வேண்டாம்.....
ஒரு குழுவில் குறைந்த பட்சம் 10 நபர்களாவது இருப்போம் அதனால் காளை பிடிபட்டவுடன் நிறுத்தி வைத்து அவிழ்த்து கொள்ள பழகிக் கொள்ளவும் .....
தண்ணீரில் இறங்கிய காளையை பிடிக்க வேண்டாம் ....
வயல் வரப்பில் தடுமாறி விழுந்த காளைகளை பிடிக்க வேண்டாம்....
காளை பிடிபட்ட பிறகு மணியை வாங்க வரும் உரிமையாளரிடம் ,
காளையை பிடித்து விட்டோம் என்பதற்காக காணிக்கையை நீங்கள் நிர்ணயம் செய்ய வேண்டாம்....
உரிமையாளர் வெகு தொலைவில் இருந்து காளை கொண்டு வந்து இருக்கலாம்,
அவர்களிடம் பணம் இல்லாமல் இருக்கலாம் அவற்றையும் நாம் சிந்திக்க வேண்டும்.....
உரிமையாளர் 1 ரூபாய் காணிக்கை கொடுத்தாலும் ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை வரவேண்டும்.....
நாம் பணத்திற்காக காளைகளை பிடிப்பது இல்லை.....
நம் குழுவின் வீரம் , அடையாளம்.....
நம் ஊரின் பெருமை , புகழ் ......
ஒரு காளையை இரு குழுக்கள் பிடித்தால் விட்டுக்கொடுத்து போக வேண்டும்.....
வருகின்ற காணிக்கையை சம பங்காக பிரித்து எடுத்து கொள்ளவது அழகு....
வீண் விவாதத்தை குறைத்துக் கொள்ள வேண்டும்.....
இரு குழுக்களும் வீரர்கள் தான்.
நண்பர்கள் தான் என்று மனம் ஒத்து செல்லவேண்டும்.....
சில நபர்கள் ஊர்ச்சண்டை , நண்பர்கள் சண்டை , பழைய மஞ்சுவிரட்டு சண்டை , சாதி சண்டை இதை பழிக்குப் பழி வாங்க சரி செய்ய மஞ்சுவிரட்டு களத்தினை பயன்படுத்துகின்றனர் இது வருத்தப்படக் கூடிய விசயம் இதனை தவிர்த்து விடுங்கள் ......
வடமாடு வளர்க்கும் உரிமையாளர்களுக்கு
நீங்கள் உங்கள் காளையை விற்பதாக முடிவு செய்திருந்தால் தயவு செய்து களத்திற்கு கொண்டுவராமல் விற்று விடுங்கள்...
உதாரணத்திற்கு
ஒரு வடத்தில் உங்கள் காளை விளையாட போவது என்றால்...
உங்கள் காளை மற்றும் காளை அடக்கும் அணியினர் விழா கமிட்டி அறிவிக்கப்படுவர்....
நீங்கள் அந்த அணியினரை அழைத்து நாங்கள் உங்களுக்கு 1000 ரூ 2000ரூ பணம் தருகிறோம் காளையை அடக்க வேண்டாம் இந்த காளை விற்பனைக்கு கொடுக்க வேண்டும் என்று சொல்கிறீர்கள் ....
உங்களின் காளை வெற்றி பெருகிறது.....
(அந்த காளை விற்கப்போவது , விற்கப்பட மாட்டாது அது உங்களுக்கு தான் தெரியும் ஆனால் காளை வெற்றி).
அந்த வீரர்கள் நீங்கள் கொடுக்கும் பணத்திற்கும் , விழா கமிட்டி கொடுக்கும் பரிசுக்கும் விளையாடுவது இல்லை.....
அவர்கள் குழுவினரின் பெயர் மற்றும் அவர்களின் வீரம் அவர்களின் ஊரின் பெருமை இதை நிலை நாட்டத்தான் வருகிறார்கள்......
5000 பார்வையாளர்கள் முன்னிலையில் வெற்றி கைக்கு எட்டும் தூரம் இருந்தும் ,
காளையை அடக்காமல் உங்களுக்கு பெருமை அவர்கள் கொடுக்கிறார்கள்......
வாடிவாசல் மாடுபிடி வீரர்கள்
குறிப்பாக ஒரு ஊரில் வாடி மஞ்சுவிரட்டு நடைபெறுகிறது என்றால் ,
அந்த ஊரைச் சுற்றியுள்ள அந்த பகுதியில் உள்ள வீரர்கள் வாடி வாசலை சூழ்ந்து கொண்டு மாறி மாறி நீங்களே காளைகளை அடக்குறீர்கள் ,
வெளி ஊரில் இருந்து வந்த வீரர்களும் , வெளி மாவட்டத்தில் இருந்து வீரர்களுக்கும் காளைகளை அடக்கும் வாய்ப்பு மிக அரிதாக கிடைக்கிறது,
வெளிமாவட்ட வீரர்கள் இரண்டு நாட்கள் தூங்காமல் கண் விழித்து டோக்கன் வாங்கி , பலர் பரிசுகள் எதுவும் பெறாமல் ஏமாற்றத்துடன் வீடு திரும்புகின்றனர்......
சிறந்த மாடுபிடி வீரர் என்று அறிவிக்கும் பொழுது அந்தப்பகுதியில் உள்ள ஒரு வீரராகத்தான் இருப்பார்....
சிறு குறிப்பு
மஞ்சுவிரட்டிற்கு பொதுவாக
வாகனத்தில் கொண்டு செல்லும் காளை 90% தானாக வீடு வருவதில்லை?
நடந்து கொண்டு செல்லும் காளை 95% தானாக வீடு வந்துவிடும் ஏன் எப்படி தெரியுமா?
நடந்து கொண்டு செல்லும் போது
காளை சிறுநீர் கழிக்கும் , மற்றும் பாதையின் மண் வாசத்தினை நுகர்ந்து கொண்டே செல்லும்,
காளை அவிழ்த்த பிறகு இந்த இரண்டு வாசத்தினை வைத்து காளை பின் தொடர்ந்து வீடு வருகிறது....
▪️மற்ற காளைகள் இனப்பெருக்கத்திற்காக பசுவோடு சென்று விடும்......
கருத்துகள்