Subbiahpatturajan Google Pay, PhonePe, மற்றும் Paytm ஆகியவற்றின் உதவி மையத்தை தொடர்பு கொள்ள, பின்வரும் வழிகளையும் தொலைபேசி எண்களையும் எப்படி பயன்படுத்தலாம். இவை இந்தியாவில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் அதிகாரப்பூர்வ தொடர்பு முறைகளாகும்: 1. Google Payதொலைபேசி எண்: 1800-419-0157 (கட்டணமில்லா எண், 24/7 கிடைக்கும்). தொடர்பு கொள்ளும் முறை: Google Pay ஆப்-ஐ திறந்து, "Help & Feedback" என்ற பகுதிக்குச் செல்லவும். அங்கு சாட் ஆதரவு (8 AM - 12 AM IST) அல்லது மின்னஞ்சல் வழியாக உதவி பெறலாம்.மேலே குறிப்பிட்ட தொலைபேசி எண்ணை அழைத்து, பிரச்சினையை விளக்கி தீர்வு கேட்கலாம். குறிப்பு: பயன்பாட்டில் உள்ள "Help" பகுதியில் பிரச்சினையை பதிவு செய்தால், விரைவாக பதில் கிடைக்கும். 2. PhonePeதொலைபேசி எண்: 080-6872-7374 (வாடிக்கையாளர் ஆதரவு) அல்லது 022-6872-7374 (மாற்று எண்).தொடர்பு கொள்ளும் முறை: PhonePe ஆப்-ஐ திறந்து, முகப்புப் பக்கத்தில் உள்ள "?" (கேள்விக்குறி) ஐகானை கிளிக் செய்யவும்."Contact Us" என்ற பகுதியில் உங்கள் பிரச்சினையை தேர்ந்தெடுத்து, சாட் அல்லது மின்னஞ்சல்...
Subbiahpatturajan
பின்னணிப் பாடகி வாணி ஜெயராம் வேலூர் நாகம்மை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படித்தார்.
அந்தப் பள்ளியில் சமீபத்தில் நடந்த தன்னம்பிக்கை நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக பழைய மாணவியான வாணி ஜெயராமை அழைத்திருந்தார்கள்.
சத்துவாச்சாரி லைன்ஸ் கிளப் பிரமுகர்மான மணிமேகலை இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்
வாணி ஜெயராம் அவர்கள் சொன்ன தகவல் சில...
இந்தப் பள்ளியில் நான் நான்காம் வகுப்பு வரை 1949 முதல் 1953 வரை படித்தேன். என்னுடைய உண்மையான பெயர் கலைவாணி அதிலும் நான் தமிழ் மீடியத்தில்தான் படித்தேன். அதன் பிறகு என்னுடைய அம்மா எங்களுக்கு சங்கீதம் கற்றுக் கொடுப்பதற்காக சென்னைக்கு அழைத்து சென்று விட்டார் அங்கு சென்று இன்னும் சில குருமார்களிடம் நான் சங்கீதம் கற்றுக் கொண்டேன் .
நான் வேலூரில் படித்தது ரொம்ப சின்ன வயதில் என்பதால் தோழிகள் பெயர் சரியாக ஞாபகம் இல்லை.
மேரி பொன்னையா, வதனா என்று இரண்டு டீச்சர் பெயர் மட்டும் ஞாபகம் இருக்கிறது என்றவர்...
கல்லூரி நாட்களில்
சென்னையில் தன்னுடன் படித்த சில விஐபி தோழர்களை பற்றியும் குறிப்பிட்டுள்ளார் நான் ராணி மேரி கல்லூரியில் பிஏ படிக்கும்போது பேச்சுப்போட்டிகள் கலந்து கொண்டு பரிசு வாங்கினேன் அப்போது என்னுடன் பேச்சு போட்டியில் கலந்து கொண்ட துரைமுருகன், சாத்தையா என்று அழைக்கப்படும் தமிழ் குடிமகன் ஆகிய இரண்டு பேரும் பின்னாளில் மந்திரி ஆனார்கள் மற்றொருவர்
ஜீ .விஸ்வநாதன் தான் உலகப் புகழ்பெற்ற விஐடி யுனிவர்சிட்டியின் நிறுவனர் மற்றும் துணைவேந்தர் இவர்கள் இப்போதும் கூட என்னிடம் அடிக்கடி பேசுவார்கள். துரைமுருகன்
தொலைபேசியில் பேசும்போது மேடம் கலைவாணி என்றுதான் கூப்பிடுவார். இதுபோல ஆங்கில பேச்சுப் போட்டிக்கு வந்த போது நண்பரானவர் முன்னாள் மத்திய அமைச்சர் பா .சிதம்பரம் என்று தன்னுடைய ஃபிளாஷ்பேக்கை மாணவிகளுடன் பகிர்ந்து கொண்டார்.
இந்தியில் பாடிய அனுபவம்
இந்தியில் குட்டி படத்துக்காக முதன் முதலில் பாடிய போலோரே பப்பி பாடலுக்காக வாங்கிய முதல் விருதை பற்றி சொன்னவர் தமிழ்நாட்டு மக்களுக்கு பிடித்த மல்லிகை என் மன்னன் மயங்கும் என்ற பாடலை பாடி காட்டவும் மறக்கவில்லை.
நன்றி .குமுதம் இதழில் இருந்து நான் படித்த சுவாரஸ்யமான தகவல்.
கருத்துகள்