நம்மை நாமே பார்த்து பரிதாபப்பட்டுக்கொள்ளலாம்.
![]() |
Add caption |
மத்திய அரசின் செயல்பாடுகள்....?!
நம் கவலையெல்லாம் தேவையற்றது..
டிமானிசேஷன்.. கருப்பு பணம் ஒழியும் என்றார்கள். 99 சதவீத நோட்டுக்கள் திரும்பிவந்துவிட்டன. ஏடிஎம், வங்கி வாசல்கள் முன்பு பலபேர் செத்தார்கள். லட்சோப லட்சம்பேரின் தொழில், வர்த்தகம் குளோஸ்..
ஜிஎஸ்டியால் பாலும் தேனும் ஓடும் என்றார்கள். வசூலிக்கப்பட்டதில் மாநில அரசுகளின் பங்குத் தொகையை கேட்டால் கையை விரிக்கிறார்கள். குழந்தைக்கு கிடைத்த உணவை தாய் பிடுங்கி சாப்பிட்டு ஏப்பம் விடுவதற்கு சமானம் இது..
காஷ்மீரில் சிறப்பு சட்டம் ஒழிப்பு..ஆனால் ஒன்றரை ஆண்டுகளாக அம்மாநிலம் குவாரண்டைனில்.. ரிசல்ட் இதுவரை தெரியவில்லை..அறுபதாண்டு பிரச்சினை ஓராண்டில் தீருமா என்பார்கள்
மும்பைக்கும் அகமதாபாத்துக்கும் இடையே இன்னும் இரண்டு ஆண்டுகளில் புல்லட் ரயில் ஒடுமா என்று தெரியவில்லை. அதுபற்றிய செய்திகளையே காணோம்
உலகமே கொரோனாவால் கதறுகிறது. இந்த நிலையிலும் கூடஒரு நாட்டின் பிரதமர் செயதியாளர்களை சந்திக்க மறுக்கிறார். உலக வரலாற்றில் கொரோனா காலத்தில் இப்படி ஒரு தலைவர் அனேகமாக மோடி மட்டுமே இருக்கமுடியும்
ரேடியோவில் பேசும்போது அவர் வாயிலிருந்து வருவதெல்லாம் தேச பக்தி, யோகா, பொம்மை தயாரிப்பது நாய் வளர்ப்பு.. எவனும் குறைசொல்ல முடியாத அவ்வையாரின் ஆத்திச்சூடி லெவல் இது.
நாட்டின் பொருளாதாரம் நாசம், மொத்த உள்நாட்டு உற்பத்தி படுபாதாளம் என்று விஷயமறிந்தவர்கள் சொன்னால், கொரோனா மட்டும் வராமலிருந்தால் என்று ஆரம்பிப்பார்கள்.
அகில இந்திய அளவில் ராமரை எடுக்கிறார்கள், மாநில அளவில் பிள்ளையார் முருகரை எடுக்கிறார்கள். இதைக்கேட்டால் மும்மொழி கொள்கை என்பார்கள், புதிய கல்விக்கொள்கை என்பார்கள். உடல் முழுக்க எண்ணெய் தடவிக்கொண்டு வரும் அவர்களை நாம் பிடிக்கவே முடியாது.. வழுக்கி வழுக்கி நாம்தான் கோட்டை விடுவோம்
நாடு வளர்ந்ததோ இல்லையோ நாட்டில் நாலைந்து பேர் மட்டும் நன்றாக வளர்ந்துகொண்டிருக் கிறார்கள்.
பிரிட்டிஷ்காரன், பிரெஞ்சுகாரன், போர்த்துகீசியன், டச்சுக்காரன் போன்றவர்கள் வியாபாரம் என நம் நாட்டிற்கு வந்து அரசியலை செய்து நாட்டை அடிமைப்படுத்தினார்கள். அவர்களால் கிடைத்த பலன், சிதறிக்கிடந்தவை ஒன்றாகி இந்தியா என்ற துணைக்கண்டம் கிடைத்தது.
அந்த துணைக்கண்டத்தை யார் ஆள்வது என்ற போட்டிதான் வியாபாரிகள் மத்தியில் இப்போது ஒடிக்கொண்டிருக்கிறது.
அந்த வரலாற்றின் வெர்ஷன் 2.0 தான் இப்போது போகிறது. இவர்களில் ஒருவரை ஒருவரை வீழ்த்தி விரட்டியடித்துவிட்டு கடைசியாக எவன் பிரிட்டிஷ்காரன் போல நெம்பர் ஒன் ரவுடியாக வருவான் என்று இப்போதைக்கு சொல்லமுடியாது
நிறைய அம்புகளை மாறி மாறி சொருகக்கூடிய வில் திரைமறைவில் இருக்கும்போது, அற்ப ஆயுளை கொண்ட அம்புகளை பார்த்து அழுவதால் ஒரு பிரயோஜனமும் இல்லை.
அவர்கள் உலகமே தனி.. அதையெல்லாம் பெரியதாக நினைத்து கவலைப்படுவதைவிட
நம்மை நாமே பார்த்து பரிதாபப்பட்டுக்கொள்ளலாம்.
கருத்துகள்