முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அவ்வளவு தான்.. மறுபடியும் சொல்றேன்.....

Subbiahpatturajan

இந்தி மட்டும் அல்ல
உலகின் எந்த மொழியும் கற்றுக்கொள்வதில் தவறில்லை !




இந்தியாவில் இந்தி தேசிய மொழியும் அல்ல. அதிகப்படியான மக்கள் பேசும் மொழியும் இல்ல. இந்தியாவில் 22 பிரதான மொழிகள் கொண்ட முப்பது மாநிலங்கள் இருக்கிறது. இதில் இந்தியும் ஒரு மொழி அவ்வளவே.

இந்தியுடன் ஒத்துப்போகும் ஒரு சில மொழிகளையும் சேர்த்து கொண்டு இந்தி அதிகப்படியான மக்களால் பேசப்படும் மொழியாக சித்தரிக்கப்படுகிறது.

சரி.. இந்தியை ஏற்றுக்கொண்டால் தான் என்ன?
என்ன குறைந்துவிட போகிறது ?
இது தானே உங்கள் கேள்வி..!

சொல்றேன்.
முதலில் பலதரப்பட்ட வரிகள் இருந்தது. அதை மாற்றி ஒரே தேசம், ஒரே வரி என்று GST கொண்டு வந்தார்கள். அப்போது அவர்கள் சொன்னது. இனி விலைவாசி குறையும் 
மாநிலங்களின் வருமானம் அதிரிக்கும். அதன் மூலம் மாநிலங்கள் வளர்ச்சி பெறும் என்று தானே.

ஆனால் நடந்தது என்ன?

தமிழகத்துக்கு வழங்கவேண்டிய மாநில GST பணமான 12 ஆயிரம் கோடியை இன்று வரை மத்திய அரசு வழங்கவில்லை. அதுவும் கொரோனா போன்ற பேரிடர் காலத்தில்.

இதனால் என்ன நடக்கும் என்றால். நிதி பற்றாக்குறையால் மாநிலங்களில் ஏற்படுத்த வேண்டிய வளர்ச்சி பணிகள் தடைபடும். அப்படி வளர்ச்சி பணிகள் தடைபட்டால் மெல்ல மெல்ல தமிழகம் பின் தங்கிய மாநிலமாக மாறிவிடும்.

இது தான் ஒரே நாடு ஒரே வரியில் இருக்கும் சூழ்ச்சி.

சரி இதுக்கும் இந்தி எதிர்ப்புக்கும் என்ன 
சம்பந்தம்னு கேக்குறீங்களா.?

இப்போது நாம் தமிழ்,  ஆங்கிலம் என்று இரண்டு மொழி படிக்கிறோம். இரண்டு மொழி படிக்கும்போதே நமக்கு ஆங்கிலம் சரியாக வருவதில்லை. உங்களில் எத்தன பேருக்கு ஆங்கிலம் சரளமாக பேச வரும்?

இப்படி இரண்டாவது மொழிக்கே தடுமாறும் நிலையில் இருக்கும்போது, கூட ஒரு மொழியை கூடுதலாக கொண்டுவந்தால் அந்த முன்றாவது மொழியில் நமது கற்றல் எந்த அளவிற்கு இருக்கும் என்று யோசித்து பாருங்கள்.

மூன்றாவது மொழி தானே. அதை அரைகுறையாகவோ
ஓரளவுக்கிற்கோ கற்றுக்கொள்வதில்
தவறில்லையே. அதானே உங்கள் எண்ணம்.

இப்போதே மத்திய அரசு சம்பந்தப்பட்ட அனைத்திலும் இந்தி கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசுக்கு சம்பந்தமான அனைத்து தேர்வுகளும் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் தான் எழுத வேண்டும் என்று நிர்பந்திக்கப்படுகிறது.

இது எவ்வளவு பெரிய அவலம் என்று புரிகிறதா. நான் மேல சொன்னது போல இந்தியா இந்தி பேசும் மக்களுக்கு மட்டும் சொந்தமானது இல்லை.
இது பல மொழி பேசும் மக்கள் உள்ள கூட்டாச்சி நாடு. அப்படி இருக்க தேர்வுகளை ஒரு குறிப்பிட்ட மொழியில் மட்டும் நடத்துவது மற்ற மொழியினருக்கு செய்யும் அநீதி இல்லையா ?

இந்தி அல்லது ஆங்கிலத்தில் தேர்வு எழுதுவதில் என்ன சிக்கல் இருக்கிறது? அதான் ஆங்கிலம் இருக்கிறது தானே.
இது தானே உங்கள் கேள்வி..?

பெரும் சிக்கல் இருக்கிறது. ஆங்கிலம் இந்தியாவில் உள்ள அனைவருக்கும் இரண்டாவது மொழி தான். அதில் மட்டும் தேர்வு வைத்தால் போட்டி சமமாக இருக்கும். கூடவே இந்தி என்று ஒரு ஆப்ஷன் வரும்போது தான் சிக்கல்.

என்ன சிக்கல் ?

ஆங்கிலம் நமக்கு இரண்டாவது மொழி,
இந்தி நமக்கு மூன்றாவது மொழி. ஆனால் இந்தி வட இந்தியர்களுக்கு தாய்
மொழி.

நான் சொல்ல வருவது புரியுதா..!

நாம் இரண்டாவது மொழியில் தேர்வு எழுதுவதே சிரமம். அப்படி நாம் சிரமப்பட்டு தேர்வு எழுதும் அதே தேர்வை அங்க பலர் அவர்களுடைய தாய்மொழியான இந்தியில் தேர்வு எழுதுவார்கள்.

யோசித்து பாருங்கள்.
அவன் அவனுடைய தாய்மொழியில் தேர்வு எழுதுவான். அவனிடம் நாம் அவன் மொழியிலயே போட்டியிட வேண்டும். அப்படி போட்டியிட்டால் நம்மில் எத்தனை பேர் வெற்றிபெறுவார்கள் ?

இது தான் சூழ்ச்சி. நிச்சயமாக நம்மால் தாய் மொழியில் தேர்வு
எழுதுபவர்களை வெற்றிக்கொள்ளவே முடியாது. அப்போது தானாகவே அவர்களுக்கு தான் வேலை வாய்ப்பு.

இதை நான் ஏதோ யூகித்து சொல்லவில்லை. இப்போதே இது நடந்துகொண்டு தான் இருக்கிறது.

தமிழகத்தில் உள்ள மத்திய அரசு துறைகளில் பெரும்பாலும் இந்திக்காரர்கள் ஆக்கிரம்பித்திருக்கிறார்கள். ரயில்வே, தபால், வங்கி என்ன அனைத்திலும் அவர்கள் தான் அதிகப்படியாக இருக்கிறார்கள்.

இன்னும் புரியும்படி சொல்லவேண்டும் என்றால் கிராமப்புறங்களில் உள்ள வங்கி கிளையின் மானேஜர் இந்தி பேசுபவராக
இருக்கிறார். ஒரு வாடிக்கையாளர் கூட இந்தி பேசுபவர் இல்லாத வங்கி கிளையில் எதன் அடிப்படையில் தமிழே தெரியாத ஒருவரை அதிகாரியாக அமர்த்துகிறார்கள். இதை நீங்கள் எப்போதாவது யோசித்தது உண்டா..?
தமிழர்கள் மட்டும் உள்ள கிளையில் தமிழனை அமர்த்தினால் தானே 
மக்களுக்கு அவரை அனுக எளிதாக இருக்கும் ?

ஒரு மாநிலத்தில் எந்த மொழி பேசுபவர்கள் அதிகமாக இருக்கிறார்களோ
அந்த மொழி நன்றாக தெரிந்தவருக்கு தானே வேலை வாய்ப்பில் முன்னுரிமை தர வேண்டும்? ஆனால் இப்போது அப்படியா நடக்கிறது ??

இந்தியை கடுமையாக எதிர்க்கும்போதே
அவர்களின் ஆக்கிரமிப்பும் ஊடுருவலும்
இவ்வளவு அதிகமாக இருக்கிறது என்றால்
நாம் இந்தியை ஏற்றுக்கொண்டால் 
நிலமை என்னவாகும் என்று யோசித்து பாருங்கள் ?

கல்வி

கல்வி பொருளாதாரம் வேலை வாய்ப்பு 
என்று அனைத்திலும் நாம் பின் தங்கிவிடுவோம்..

இதை செய்ய தான் இந்தியை திணிக்க
இவ்வளவு பாடுபடுகிறார்கள்..

ஒரே நாடு ஒரே வரி என்று சொல்லி நமது பொருளாதாரத்தில் கைவைத்து மாநில வளர்ச்சியை சீர்குலைத்து விட்டார்கள்.

இப்போது ஒரே நாடு ஒரே கல்வி என்று
சொல்லி நமது சந்ததியினரின் அறிவையும் வேலை வாய்ப்பையும் சீர்குலைக்க
திட்டமிடுகிறார்கள்.

அவ்வளவு தான்..
மறுபடியும் சொல்றேன்.

இந்தியை தாய்மொழியாக கொண்டவன் எழுதும் அதே தேர்வை உங்கள் பிள்ளைகள் இரண்டாவது மொழியிலோ அல்லது மூன்றாவது மொழியிலோ எழுதவேண்டும்.

இதை நீங்க ஏற்கிறீர்களா ?
ஏற்றால் மட்டும் இந்தி திணிப்பை
ஆதரியுங்கள்.

நன்றி..!

விஜய், சூர்யா, ஸ்டாலின், கனிமொழியைப் பார்த்து இங்கே யாரும் ஹிந்தி படி , இங்கிலீஷ் படி என்று சொல்லவில்லை.

சூர்யா மகன் ஹிந்தி படித்து லண்டன் போகவில்லை. வருஷம் 12 லட்சம் படிப்புக்கு செலவு பண்ண கையில் காசு இருந்தால் கொத்தவால் சாவடி தேங்காய் கடைக்காரர் கூட தன் பையனை லண்டனில் போய் படிக்க வைக்கலாம்.  
அங்கே இன்னார் தான் படிக்க வேண்டும், இன்னார் படிக்கக் கூடாது போய் குலத்தொழில் தேங்காய் மண்டியைப் பார்.. என்றெல்லாம் யாரும் யாரையும் தடுத்து சொல்வதில்லை.

கல்வி வியாபாரமாகிவிட்டது என்று ரொம்ப பீல் பண்ணுபவர்கள் நீட் இன்ஸ்டிடியூட்டுகளை தடை செய்ய முன்வருவார்களா ? தனியார் பள்ளிகளில் அரசு பள்ளிகளில் வசூலிக்கும் பீஸ் தான் வசூலிக்க வேண்டும் என்று சட்டம் கொண்டு வந்தார்களா ? இல்லையே. அப்படி சட்டம் போடுவது ஒன்றும் கஷ்டமான காரியமில்லையே.

பணக்கார வீட்டுப் பிள்ளைகள் முக்கி கக்கா போவது எப்படி என்பதற்குக் கூட ட்யூஷன் வைத்துக் கொள்வார்கள். ஏழைகளுக்கு பள்ளியில் போய் படிப்பதே பெரும் பாடு. அவனுக்கு தமிழோடு ஆங்கிலம் படிப்பதே பெரும் சிரமமாய் இருக்கிறது. அனைத்து மாநிலங்களிலும் பத்தாம் வகுப்பில் பெயிலான மாணவர்கள் பெரும்பாலும் ஆங்கிலத் தேர்வில் பெயிலாகி படிப்பை அத்தோடு நிறுத்தி விடுகிறார்கள் என்பது புள்ளிவிவரம்.  இத்தோடு இந்தியிலும் பெயிலாகி மாணவர்கள் படிப்பை பாதியில் விடவேண்டுமா?

இந்த புதிய கல்விக் கொள்கை தான் எல்லோருக்கும் வேலை கொடுக்க முடியாது என்கிற சூழல் வரும் இந்தக் காலத்தில், படிப்பவர்களில் முக்கால் வாசிப் பேரை பெயிலாக்கி விட்டால், நீ பெயிலாயிட்டே அதனால் தான் உனக்கு வேலை இல்லை என்று ஈசியா சொல்லலாம் இல்லையா ? அதற்காகத் தான் இந்த 4 பொதுத் தேர்வுகள். ஹிந்தியை எல்லோரும் கட்டாயம் படி என்கிற கட்டாயச் சட்டம்.

கட்டாயமா சட்டமா போடாமல், இனிமேல் அரசுப் பள்ளிகளில் தினமும் 5 மணிக்கு மேல் இந்தி கற்கும் மாணவர்களுக்கு இந்திப் பிரச்சார சபாவிலிருந்து ப்ரீயாக ஹிந்தி சொல்லித்தரப்போகிறோம் என்று சொல்லட்டும். அதில் பரிட்சையெல்லாம் கிடையாது. சும்மா அறிவை வளர்த்துக் கொள்ள என்று சொல்லனும்.

இந்தித் தாகம் உள்ள அரசுப் பள்ளி மாணவர்கள் ஓடோடி வந்து படிக்கிறார்களா என்று பார்ப்போமா ?

ஏன்டா சட்டம் போடறே புண்ணாக்கு என்றால் , சும்மா அவனைப் பார். இவனைப் பார் என்று சொல்லவேண்டியது.

பேசாம போய் புள்ள குட்டிகளுக்கு தமிழும், இங்கிலீஷூம் ஒழுங்கா சொல்லிக் குடுங்கப்பா. . 😃

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற...

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் க...