Subbiahpatturajan Google Pay, PhonePe, மற்றும் Paytm ஆகியவற்றின் உதவி மையத்தை தொடர்பு கொள்ள, பின்வரும் வழிகளையும் தொலைபேசி எண்களையும் எப்படி பயன்படுத்தலாம். இவை இந்தியாவில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் அதிகாரப்பூர்வ தொடர்பு முறைகளாகும்: 1. Google Payதொலைபேசி எண்: 1800-419-0157 (கட்டணமில்லா எண், 24/7 கிடைக்கும்). தொடர்பு கொள்ளும் முறை: Google Pay ஆப்-ஐ திறந்து, "Help & Feedback" என்ற பகுதிக்குச் செல்லவும். அங்கு சாட் ஆதரவு (8 AM - 12 AM IST) அல்லது மின்னஞ்சல் வழியாக உதவி பெறலாம்.மேலே குறிப்பிட்ட தொலைபேசி எண்ணை அழைத்து, பிரச்சினையை விளக்கி தீர்வு கேட்கலாம். குறிப்பு: பயன்பாட்டில் உள்ள "Help" பகுதியில் பிரச்சினையை பதிவு செய்தால், விரைவாக பதில் கிடைக்கும். 2. PhonePeதொலைபேசி எண்: 080-6872-7374 (வாடிக்கையாளர் ஆதரவு) அல்லது 022-6872-7374 (மாற்று எண்).தொடர்பு கொள்ளும் முறை: PhonePe ஆப்-ஐ திறந்து, முகப்புப் பக்கத்தில் உள்ள "?" (கேள்விக்குறி) ஐகானை கிளிக் செய்யவும்."Contact Us" என்ற பகுதியில் உங்கள் பிரச்சினையை தேர்ந்தெடுத்து, சாட் அல்லது மின்னஞ்சல்...
Subbiahpatturajan
#sagayamIAS
#cinartamilan
#சினார்தமிழன் #தமிழர்கள்
*மதுரையில் நான் மாவட்ட ஆட்சியராக இருந்தபோது திங்கள்கிழமை மனுநாளில் மனு வாங்கி முடித்துவிட்டு வெளியில் வந்தேன்.*
*கைலி, அழுக்கு* *சட்டையோடு 45 வயது மதிக்கத்தக்க* *ஆசாமி ஒருவர் என் எதிரே*
*வந்தார். 'ஏன் முன்னாடியே வரக் கூடாதா?* *கிளம்பும்போது வருகிறீர்களே...* *நீங்கள்யார்?’ என்று அவரிடம் கேட்டேன்.*
*'அய்யா... நான் வ.உ.சிதம்பரம்பிள்ளையின் பேரன்.*
*நானும் என் தம்பியும் கட்டடங்களுக்கு பெயின்ட் அடிக்கும் வேலை செய்து வருகிறோம்.*
சமீபத்தில் ஒரு உயரமான கட்டடத்துக்கு பெயின்ட் அடிக்கும்போது என் தம்பி தவறி விழுந்துவிட்டான்.
இப்போது உடம்பு சரியில்லாமல் இருக்கிறான். அவனுக்காக உதவி கேட்டு இங்கே வந்தேன்.
வெளியில் இருக்கும் காவலாளி என்னை உள்ளே விடாமல் துரத்தி
அடித்தார்.
அவரை சமாளித்துவிட்டு வர இவ்வளவு நேரம் ஆகிவிட்டது’ என்று பரிதாபமாகச் சொன்னார்.
நான் அதிர்ந்துபோனேன்.
*'உனக்கு இங்கே நிற்கும் உரிமையை வாங்கிக்கொடுத்ததே என் பாட்டன்தானடா* *என்று முகத்தில் அடித்ததுபோல சொல்ல*
*வேண்டியதுதானே?’* என்று சொல்லி அவரை ஆசுவாசப்படுத்தினேன்.
அதன் பிறகு அவருக்கு 50 ஆயிரம் பணம் கடன் ஏற்பாடு செய்துகொடுத்து உழவர் உணவகம் தொடங்கச் செய்தேன்.
வ.உ.சி-யின் குடும்பமே வக்கீல் குடும்பம்.
வெள்ளைக்காரனுக்கு எதிராக சுதேசி கப்பல்விட்ட கம்பீரமான வ.உ.சி-க்கு ஆங்கிலேய அரசு இரட்டை ஆயுள் தண்டனை விதித்தது.
உடம்பு முழுவதும் சங்கிலியால் பிணைக்கப்பட்டு அவரைச் செக்கிழுக்கச் சொல்லி உத்தரவிட்டது.
*தேசத்துக்காக செக்கிழுத்தவரின் பேரன்கள் பெயின்ட் அடித்துக்கொண்டு இருக்கிறார்கள்.* *சம்பந்தமே இல்லாத யார் யாரோ பலனை* *அனுபவித்துக் கொண்டு இருக்கிறார்கள்.*
- *சகாயம் ஐ.ஏ.எஸ்.* *—*
*(படித்ததில் பிடித்தது)*
கருத்துகள்