Subbiahpatturajan Google Pay, PhonePe, மற்றும் Paytm ஆகியவற்றின் உதவி மையத்தை தொடர்பு கொள்ள, பின்வரும் வழிகளையும் தொலைபேசி எண்களையும் எப்படி பயன்படுத்தலாம். இவை இந்தியாவில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் அதிகாரப்பூர்வ தொடர்பு முறைகளாகும்: 1. Google Payதொலைபேசி எண்: 1800-419-0157 (கட்டணமில்லா எண், 24/7 கிடைக்கும்). தொடர்பு கொள்ளும் முறை: Google Pay ஆப்-ஐ திறந்து, "Help & Feedback" என்ற பகுதிக்குச் செல்லவும். அங்கு சாட் ஆதரவு (8 AM - 12 AM IST) அல்லது மின்னஞ்சல் வழியாக உதவி பெறலாம்.மேலே குறிப்பிட்ட தொலைபேசி எண்ணை அழைத்து, பிரச்சினையை விளக்கி தீர்வு கேட்கலாம். குறிப்பு: பயன்பாட்டில் உள்ள "Help" பகுதியில் பிரச்சினையை பதிவு செய்தால், விரைவாக பதில் கிடைக்கும். 2. PhonePeதொலைபேசி எண்: 080-6872-7374 (வாடிக்கையாளர் ஆதரவு) அல்லது 022-6872-7374 (மாற்று எண்).தொடர்பு கொள்ளும் முறை: PhonePe ஆப்-ஐ திறந்து, முகப்புப் பக்கத்தில் உள்ள "?" (கேள்விக்குறி) ஐகானை கிளிக் செய்யவும்."Contact Us" என்ற பகுதியில் உங்கள் பிரச்சினையை தேர்ந்தெடுத்து, சாட் அல்லது மின்னஞ்சல்...
Subbiahpatturajan
நேற்று நான் எனது சொந்த ஊரான திருநெல்வேலியில் இருந்து தாதர் விரைவு வண்டியின் (11022) மூலம் பயணம் செய்தேன்.
இரவு உணவிற்கு எதுவும் கிடைக்காததால் ரயிலில் இருந்த IRCTC பேன்ட்ரியில் அசைவ உணவை ஆர்டர் செய்தேன்.
நான் வாங்கிய உணவு சுவையாகவும் சாப்பிடும் அளவுக்கு இருந்தது, எனவே நான் உணவை முழுமையாக ரசித்தேன்.
சரி இப்போது தான் சுவாரஸ்யமான பகுதி வருகிறது,
பேன்ட்ரி பையன் பணம் கேட்டு வந்தபோது, சிக்கன் ரைஸ்க்கு 150 ஆச்சு சார் என்று ரூபாய் கொடுக்கச் சொன்னார்.
அசைவ சாப்பாடு விலை ரூ.130 என்பது எனக்கு முன்பே தெரியும், மேலும் ரூ.20 கூடுதலாக தரச் சொன்னார்.நான் அவனிடம் விலை விபரத்தை கூறினேன்.
சரி நான் சாப்பிட்டு சாப்பாட்டிற்கு பில் அடித்து கொண்டு வா என்றேன்
அவன் பிடிவாதமாக மிஷின் சரியாக வேலை செய்யவில்லை எனக் கூறி என்னிடம் மழுப்பலான பதில் சொல்ல முதலில் மறுத்த சாப்பாட்டுக்கான பில் தொகையை என்னிடம் வழங்குமாறு பணிவுடன் கேட்டேன்.
பில் கொடுத்தால் மட்டுமே பணம் தருவேன் அல்லது மேலாளரை தொடர்பு கொள்கிறேன் என்று கறாராக சொல்லிவிட்டேன்
அவன் பேன்ரிக்கார் சென்றார், அவரும் அல்லது பேட்ரிக்கார் மேலாளரும் திரும்பி வரவில்லை. ஆம், நேற்று ரயிலில் இலவச அசைவ உணவை சாப்பிட்டேன்.
ஆம் அவர்கள் திரும்பி வரவே இல்லை,ஏன் ஏனென்றால் அவர்கள் என்னிடம் 130 ரூபாய்க்கு பில் என்னிடம் கொடுத்திருந்தால், என்னுடன் இருக்கும் சக பயணிகளுக்கும் அதே தொகைக்கு கொடுக்க வேண்டியது வரும் அப்போது அவர்களின் மோசடி முறியடிக்கப்பட்டிருக்கும், மேலும் அவர்கள் தண்டனையை அனுபவிக்க வேண்டியிருக்கும். எனவே அவர்கள் சுதாரித்துக் கொண்டு ஒரு பில் தானே போனால் போகட்டும் என்று அவர்கள் நினைத்தார்கள்.
என்ன காரணம்:
ஏன் என்னிடம் அவர்கள் பில் தொகை பேப்பரில் அச்சிட்டு தரவில்லை என்றால்
2020 ஆம் ஆண்டில், ரயில்வே அமைச்சர் ஸ்ரீ பியூஷ் கோயலின் கீழ் இந்திய ரயில்வே
"பில் கொடுக்கவில்லை, என்றால் பணம் கொடுக்க வேண்டாம்"
என்ற கடுமையான கொள்கையை ஏற்றுக்கொண்டது. ஒரு விற்பனையாளர் ரயில் நிலையம் அல்லது ரயிலில் எங்களுக்கு பில் செலுத்த மறுத்தால், நீங்கள் அவருக்கு பணம் செலுத்த வேண்டியதில்லை.
இந்தக் கொள்கையானது, ஒரு விற்பனையாளர் தனது தயாரிப்புகளுக்கு வாடிக்கையாளர்களிடம் அதிக விலையை வசூலிக்கும் போது அதிக விலை நிர்ணயம் செய்வதற்கான வாய்ப்பை நீக்கும்.
ஆகவே நண்பர்களே உங்கள் உரிமைகள் உங்களுக்கு கிடைக்கும் வரை கொஞ்சம் உஷாராக தான் இருக்க வேண்டும்.
கருத்துகள்