Subbiahpatturajan Google Pay, PhonePe, மற்றும் Paytm ஆகியவற்றின் உதவி மையத்தை தொடர்பு கொள்ள, பின்வரும் வழிகளையும் தொலைபேசி எண்களையும் எப்படி பயன்படுத்தலாம். இவை இந்தியாவில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் அதிகாரப்பூர்வ தொடர்பு முறைகளாகும்: 1. Google Payதொலைபேசி எண்: 1800-419-0157 (கட்டணமில்லா எண், 24/7 கிடைக்கும்). தொடர்பு கொள்ளும் முறை: Google Pay ஆப்-ஐ திறந்து, "Help & Feedback" என்ற பகுதிக்குச் செல்லவும். அங்கு சாட் ஆதரவு (8 AM - 12 AM IST) அல்லது மின்னஞ்சல் வழியாக உதவி பெறலாம்.மேலே குறிப்பிட்ட தொலைபேசி எண்ணை அழைத்து, பிரச்சினையை விளக்கி தீர்வு கேட்கலாம். குறிப்பு: பயன்பாட்டில் உள்ள "Help" பகுதியில் பிரச்சினையை பதிவு செய்தால், விரைவாக பதில் கிடைக்கும். 2. PhonePeதொலைபேசி எண்: 080-6872-7374 (வாடிக்கையாளர் ஆதரவு) அல்லது 022-6872-7374 (மாற்று எண்).தொடர்பு கொள்ளும் முறை: PhonePe ஆப்-ஐ திறந்து, முகப்புப் பக்கத்தில் உள்ள "?" (கேள்விக்குறி) ஐகானை கிளிக் செய்யவும்."Contact Us" என்ற பகுதியில் உங்கள் பிரச்சினையை தேர்ந்தெடுத்து, சாட் அல்லது மின்னஞ்சல்...
Subbiahpatturajan
மனிதர்களில் பலவிதம் இருக்கிறார்கள் ஆனால் இதில் சில பேர் சில வித்தியாசமான பழக்க வழக்கங்களை கொண்டிருக்கிறார்கள். அவற்றுள் சில தேவையில்லாத பழக்கவழக்கங்களை நாம் மாற்றிக் கொள்ள முடியும் என்று நம்புகிறேன்.
1. முகத்திற்கு பக்கத்தில் போய் பேசுவது...
சிலபேர் நம்மைப் பற்றி மற்றவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று zoom face விளம்பர தோணியில் முந்திக் கொண்டு பேசுவது சிலருடைய உடம்பை அடிக்கடி மேலும் கீழும் பார்த்துக் கொண்டே பேசும் பழக்கம் இருந்தால் உங்களை நீங்கள் திருத்திக் கொள்ளலாம்.
2. தொட்டுத் தொட்டு பேசுவது...
நாம் அவர்களுடன் உரையாடும் போதோ இல்லையென்றால் அவர்களுக்கு அறிவுரை கூறும் போது அவர்களை தொட்டு தொட்டு பேசும் பழக்கம் தோள் மீது கை வைத்து பேசும் பழக்கம் இந்த பழக்கம் எல்லோருக்கும் பிடிக்குமா என்று தெரியாது ஆனால் நாம் நம்மை மாற்றிக் கொள்ளலாம்.
3. அடிக்கடி கை கட்டிக்கொண்டு நிற்கும் பழக்கம்...
நாம் எப்பொழுது பார்த்தாலும் சில நேரங்களில் பேருந்து நிலையங்களில் ரயில் நிலையங்களில் டிக்கெட் கவுண்டர்களில் நேரம் கடந்து கொண்டிருந்தால் அடிக்கடி கை கட்டிக்கொண்டு நிற்கும் பழக்கம் சில பேருக்கு உண்டு இது போன்ற பழக்கங்களால் அப்படி நீங்கள் நிற்கும் பொழுது சிலர் நினைக்கலாம் . உங்களுக்கு அனுபவம் குறைவுதான் எனும் பிம்பத்தை உருவாக்கும் மற்றவர்களுடன் உங்களுக்கு பேசும் வாய்ப்பு குறைவாகவே கிடைக்கும். இந்தப் பழக்கம் இருந்தால் திருத்திக் கொள்ளலாம்.
4. சிலரை உற்றுப் பார்ப்பது...
மற்றவர்களை நாம் பார்க்கும் விதம் பார்த்தும் பாராதது போல் இருக்க வேண்டும். ஆனால் அதை விடுத்து Camera mode போல மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்று நோட்டம் விடுவது மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் சாப்பிடுகிறார்கள் என்று கேமரா கண்களைக் கொண்டு பார்க்கக்கூடாது.
5. கை கால் தலையை அடிக்கடி ஆட்டும் பழக்கம்
மற்றவர்களுடன் நாம் உரையாடும் போதும் மற்றவர்கள் பேசும்போது அவர்களுக்கு நாம் சொல்லும் விஷயங்கள் புரியுமாறு அடிக்கடி கை கால் தலையை போல் ஆட்டுவது
இந்த பழக்கம் இருந்தால் நீங்கள் உங்களை நீங்கள் திருத்திக் கொள்ள வேண்டியது அவசியம்...
சில பழக்கவழக்கங்களை உடனேயே மாற்றவேண்டும் என்ற அவசியம் இல்லை... கொஞ்சம் கொஞ்சமாக உங்களை நீங்கள் கவனித்தாலே போதுமானது...
இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்.
கருத்துகள்