Subbiahpatturajan Google Pay, PhonePe, மற்றும் Paytm ஆகியவற்றின் உதவி மையத்தை தொடர்பு கொள்ள, பின்வரும் வழிகளையும் தொலைபேசி எண்களையும் எப்படி பயன்படுத்தலாம். இவை இந்தியாவில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் அதிகாரப்பூர்வ தொடர்பு முறைகளாகும்: 1. Google Payதொலைபேசி எண்: 1800-419-0157 (கட்டணமில்லா எண், 24/7 கிடைக்கும்). தொடர்பு கொள்ளும் முறை: Google Pay ஆப்-ஐ திறந்து, "Help & Feedback" என்ற பகுதிக்குச் செல்லவும். அங்கு சாட் ஆதரவு (8 AM - 12 AM IST) அல்லது மின்னஞ்சல் வழியாக உதவி பெறலாம்.மேலே குறிப்பிட்ட தொலைபேசி எண்ணை அழைத்து, பிரச்சினையை விளக்கி தீர்வு கேட்கலாம். குறிப்பு: பயன்பாட்டில் உள்ள "Help" பகுதியில் பிரச்சினையை பதிவு செய்தால், விரைவாக பதில் கிடைக்கும். 2. PhonePeதொலைபேசி எண்: 080-6872-7374 (வாடிக்கையாளர் ஆதரவு) அல்லது 022-6872-7374 (மாற்று எண்).தொடர்பு கொள்ளும் முறை: PhonePe ஆப்-ஐ திறந்து, முகப்புப் பக்கத்தில் உள்ள "?" (கேள்விக்குறி) ஐகானை கிளிக் செய்யவும்."Contact Us" என்ற பகுதியில் உங்கள் பிரச்சினையை தேர்ந்தெடுத்து, சாட் அல்லது மின்னஞ்சல்...
சொந்தமாக வாகனங்கள் வைத்திருப்போர் நெடுந்தூரம் பயணம் செய்யும் வாகன ஓட்டிகள் இதை படித்து பயன் பெறுங்கள்.
Subbiahpatturajan
இந்தியாவில் சாலை விபத்துகள் அடிக்கடி ஏற்படாமல் இருக்க 10 முக்கியமான டிப்ஸ்
கடந்த சில மாதங்களாக தமிழ்நாட்டில் நடைபெறும் விபத்துக்களை பார்க்கும் போது இதில் சிக்குவது அதிக சதவீதத்தில் இருப்பது கார்கள்தான். இதன் பின்புலத்தை ஆராய்ந்த போது கண்ட உண்மைகள்.
விபத்துகள் ஏற்ப்பட காரணங்கள்
விபத்தில் சிக்கும் வாகனங்களில் 80 சதவீதம் சொந்த பயன்பாட்டிற்க்காக வாங்கிய வண்டிகளே.
இதற்க்கு காரணம்.
1. சொந்த வண்டி ஓட்டுபவர்கள் பெரும்பாலும் தினமும் காரை ஓட்டுவது இல்லை. பெரும்பாலும் வாரத்தில் ஒரு நாளோ அல்லது இரண்டு நாட்களோ எடுப்பார்கள். ஆதலால் போதுமான கட்டுப்பாடு கிடைப்பது இல்லை
2. சொந்த கார்களை பெரும்பாலும் அடிக்கடி ஓட்டாததால் அவர்கள் காரின் டயர் மற்றும் பிரேக் போன்றவற்றை முறையாக பராமரிப்பது கிடையாது.
3.தொலைதூரங்களுக்கு செல்லும்போது மிகவும் வேகமாக செல்வதால் அந்த சாலைகள் அவர்களுக்கு பழக்கம் இல்லாததால் அதில் இருக்கும் குழிகள் இருப்பது தெரியாததால் தீடீரென காரைக்கட்டுபடுத்த இயலாமல் எங்கேயாவது போய் மோதி விடுகிறார்கள்.
4. காரை அடிக்கடி
பயன்பாட்டில் வைக்காத காரணத்தால் சில நேரங்களில் பிரேக்கிற்க்கு பதில் ஆக்ஸிலேட்டரை பதட்டத்தில் அழுத்திவிடுவார்கள்.
இதை எப்படி தவிர்க்கலாம்?
1. பொதுவாக அடிக்கடி காரை ஒட்டாதவர்கள் ஆட்டோகியர் காரை உபயோகப்படுத்துவது நல்லது. அதை எந்த சூழ்நிலையிலும் கட்டுப்படுத்துவது எளிது..இதில் மைலேஜ் பார்க்க கூடாது. இது நமது உயிர் மற்றும் சாலைகளில் செல்லும் மற்றவர்களில் உயிர் சம்மந்தப்பட்டது.
2. அடிக்கடி சென்று பழக்கமில்லாத சாலைகளில் ஓட்டும் போது மிதமாக வேகத்தில் செல்வது நல்லது
3. வாகனத்தை தொலைதூர பயணத்திற்க்கு பயன்படுத்தும் போது டயர், மற்றும் பின்னால் சைகை விளக்குகள் சரியாக எரிகிறதா என்று பார்ப்பது மிகவும் முக்கியம்.
ரொம்ப முக்கியம்
4. லாரிகளின் பின்னாலும் அரசு பேருந்தின் பின்னாலும் தொடர்ந்து செல்வது மிகவும் ஆபத்து.ஏனென்றால் பெரும்பாலும் இவைகளில் பிரேக் விளக்குகள் எரிவது இல்லை. ஆதலால் விபத்து ஏற்படும் வாய்ப்பு அதிகம்.
5. நான்குவழிச்சாலைகளில் ஒரு லைனில் இருந்து மற்றொரு லைனிற்க்கு மாரும் போது பின்னால் எதுவும் வாகனம் வருகிறதா என்று பார்த்து மாறவும்.
6. அடிக்கடி பின்னால் வரும் வாகனங்களை கவனிக்கவும் மறக்காமல் சிக்னல்களை ஒளிரவிடுவது அவசியம்
7. நமது சாலைகளில் 100கிமீ மேல் பயணம் செய்வதை தவிர்க்கவும்.
ஏனென்றால் நமது சாலைகள் அந்தவேகத்திற்க்கு மேல் பயணிக்க உகந்தது அல்ல.
8. காரை ஓட்டுபவர் ஒரே மூச்சில் ஓட்டாமல், இடையிடையே சற்று ஓய்வெடுத்து ஒட்டுதல் நலம்.
9. நெடுந்தூரம் பயணம் செய்யும் ஓட்டுனர் உணவை ஒரே தடவையில் சாப்பிடாமல், இரண்டு மூன்று தடவையாக உண்பது நலம்.
10. குறிப்பாக புரோட்டா, முட்டை புரோட்டா போன்ற உணவுகளை, ஓட்டுனர் தவிர்த்தல் நலம்.
பொது நலன் கருதி.......
வெளியீவோர் Cinartamilan.com
கருத்துகள்