Subbiahpatturajan Google Pay, PhonePe, மற்றும் Paytm ஆகியவற்றின் உதவி மையத்தை தொடர்பு கொள்ள, பின்வரும் வழிகளையும் தொலைபேசி எண்களையும் எப்படி பயன்படுத்தலாம். இவை இந்தியாவில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் அதிகாரப்பூர்வ தொடர்பு முறைகளாகும்: 1. Google Payதொலைபேசி எண்: 1800-419-0157 (கட்டணமில்லா எண், 24/7 கிடைக்கும்). தொடர்பு கொள்ளும் முறை: Google Pay ஆப்-ஐ திறந்து, "Help & Feedback" என்ற பகுதிக்குச் செல்லவும். அங்கு சாட் ஆதரவு (8 AM - 12 AM IST) அல்லது மின்னஞ்சல் வழியாக உதவி பெறலாம்.மேலே குறிப்பிட்ட தொலைபேசி எண்ணை அழைத்து, பிரச்சினையை விளக்கி தீர்வு கேட்கலாம். குறிப்பு: பயன்பாட்டில் உள்ள "Help" பகுதியில் பிரச்சினையை பதிவு செய்தால், விரைவாக பதில் கிடைக்கும். 2. PhonePeதொலைபேசி எண்: 080-6872-7374 (வாடிக்கையாளர் ஆதரவு) அல்லது 022-6872-7374 (மாற்று எண்).தொடர்பு கொள்ளும் முறை: PhonePe ஆப்-ஐ திறந்து, முகப்புப் பக்கத்தில் உள்ள "?" (கேள்விக்குறி) ஐகானை கிளிக் செய்யவும்."Contact Us" என்ற பகுதியில் உங்கள் பிரச்சினையை தேர்ந்தெடுத்து, சாட் அல்லது மின்னஞ்சல்...
Subbiahpatturajanநல்ல ஜாதகத்தை கொண்டவர்களும், வாழ்க்கையில் ஒரு சில கட்டங்களில்,
நல்ல ஜாதகத்தை கொண்டவர்களும், வாழ்க்கையில் ஒரு சில கட்டங்களில்,
கஷ்டப் படுவதற்கு என்ன காரணம்,
என்ற உண்மையை நீங்கள் தெரிந்து கொண்டால், நிச்சயமாக வியப்பில் மூழ்கி விடுவீர்கள்!
இது கூடவா,
ஒரு காரணம் என்ற அளவிற்கு உங்களையே ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும்,
அந்த காரணம் என்ன?
தினம்தோறும் நம்முடைய வாழ்க்கையில் நாம் செய்யக்கூடிய தவறு என்ன?
என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
*எவர் ஒருவர் தங்களுடைய சொந்த பந்தங்களை மதிக்காமல் #அலட்சியமாக மரியாதை குறைவாக நடத்துகிறார்களோ,*
அவர்களுக்கு #நவகிரகத்தின் ஆசீர்வாதமும், அனுக்கிரஹமும் *கட்டாயம் கிடைக்கவே கிடைக்காது.*
இப்படி சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? நம்ப மாட்டீங்கன்னு தெரியும்.
*சாட்சியோடு சொன்னா நம்புவீங்களானு பாப்போம்?*
#எந்த கிரகத்துக்குரிய சொந்த பந்தம் எது என்பதையும் பார்த்துவிடலாம்.#
*உங்களுடைய #அப்பாவை நீங்கள் மரியாதையாக நடத்தவில்லை என்றால்,*
அப்பாவிற்கு கொடுக்க வேண்டிய ஸ்தானத்தை அவருக்கு நீங்கள் கொடுக்கவில்லை என்றால்,
உங்களுக்கு திருமணம் தள்ளிப்போகும்.
வேலைவாய்ப்பில் பிரச்சனை ஏற்படும். சொந்த தொழில் முன்னேற்றம் ஏற்படாது.
ஏனென்றால், #அப்பா ஸ்தானத்தை குறிப்பது #சூரியன்.*
*உங்களுடைய #அம்மாவை நீங்கள் மதிக்கவில்லை என்றால்,*
அவர்களை மரியாதை குறைவாக நடத்தினால்,
அவர்களை அவமானப்படுத்தி பேசினால்,
கட்டாயம் உங்களின் அழகு குறைய ஆரம்பிக்கும்.
அறிவாற்றல் மங்கிப் போகும்.
குழப்பமான வாழ்க்கை வாழத் தொடங்குவீர்கள்.
மனநிம்மதியே இருக்காது. ஏனென்றால், *#அம்மா ஸ்தானத்தை குறிப்பது #சந்திரபகவான்.*
*நீங்கள் கணவனாக இருந்தால்,*
உங்கள் வீட்டில் இருக்கும் மனைவியை மரியாதையோடு தான் நடத்த வேண்டும்.
மனைவிக்கு மரியாதை இல்லை என்றால்,
உங்கள் வீட்டில் மகாலட்சுமி இல்லை.
வீடு, மனை, வாகனம், சொத்துபத்து சந்தோஷமான வாழ்க்கை, எல்லாவற்றையும் நீங்கள் பெற வேண்டுமென்றால், மனைவிக்கு மரியாதை கொடுக்கவேண்டும்.
மனைவி இடத்தை குறிப்பது #சுக்கிரன்.*
*நீங்கள் மனைவியாக இருந்தால்*
உங்களுடைய கணவருக்கு கட்டாயம் மரியாதை கொடுக்கவேண்டும். உங்கள் கணவர் இடத்தை குறிப்பது குரு.
*உங்கள் வீட்டில் நிம்மதியான சூழ்நிலை நிலவ, சந்தோஷம் நிலைத்திருக்க கட்டாயம் மனைவிமார்கள், கணவனை மதிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.*
*#தாய்மாமன் ஸ்தானத்தை குறிப்பவர் #புதன்* தாய்மாமன் மட்டுமல்ல,
#அத்தை ஸ்தானத்தையும் குறிப்பதும் புதன் பகவான்.
உங்களது குழந்தைகள் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்றால், தாய்மாமன்,
அத்தை போன்ற சொந்த பந்தங்களை #மதிப்போடு நடத்த வேண்டும்.
*#சகோதர சகோதரிகளை இழிவாகப் பேசினால்,* #செவ்வாய் பகவானின் அனுக்கிரகம் கிடைக்காது.
உங்களால் ஆடம்பர பொருட்களை வாங்கி, நிலம் வீடு போன்ற சொத்துக்களை வாங்கி, கட்டாயம் சேர்க்க முடியாத. வாழ்க்கையில் முன்னேற்றம் தடைபடும்.
#(இது உங்களுடைய சகோதர சகோதரிகளுக்கும் பொருந்தும்.
கணவனாக இருந்தால், மனைவியின் சகோதரர் சகோதரிகளையும் மதிக்கவேண்டும்.
மனைவியாக இருந்தால் கணவரின் சகோதர சகோதரியையும் மதிக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
*அடுத்ததாக பாட்டிமார்களும்_தாத்தாக்களும்.*
இவர்கள் இல்லை என்றால் நம்முடைய வாழ்க்கையில் நல்லது கெட்டது சொல்வதற்கு ஆளே கிடையாது.
அதாவது, #ராகு_கேதுவிற்கு உரியவர்கள் இவர்கள்.
ஆகவே, இவர்களை மிகவும் மரியாதையோடு நடத்த வேண்டும்.
முதியவர்களை கஷ்டப்படுத்தினால், நாமும் வாழ்க்கையில் கஷ்டப்பட வேண்டியதுதான்.
*இப்போதாவது நம்புவீர்களா கஷ்டம் எங்கிருந்து ஆரம்பிக்கிறது என்று!*
ஆக மொத்தம் உறவினர்களுக்குள் ஆயிரம் பிரச்சினைகள் இருந்தாலும்
சண்டை போட்டாலும் ஓருவருக்கொருவர்
பார்க்காமல் பேசாமல் இருப்பதை
தவிர்த்து அவர்களுடன் #அன்புடன்
பழகி அவர்களையும் #சந்தோஷப்படுத்தி
அதன்மூலம் நாமும் #சந்தோஷமாய்_வாழ்வோம்.
நவகிரகங்களும் சந்தோஷப்பட்டு நம் தோஷங்களை களைந்து நமக்கு சந்தோஷத்தைக் கொடுப்பார்கள்..
ஆக 12 கட்டங்களும் 9 கிரஹங்களும் நம்மை சுற்றி நம் வீட்டில்தான் இருக் கின்றார்கள் என புரிந்து நடந்தால் வாழ்க்கை நன்றாகவே இருக்கும் நிச்சயமாய்..!
கருத்துகள்