Subbiahpatturajan Google Pay, PhonePe, மற்றும் Paytm ஆகியவற்றின் உதவி மையத்தை தொடர்பு கொள்ள, பின்வரும் வழிகளையும் தொலைபேசி எண்களையும் எப்படி பயன்படுத்தலாம். இவை இந்தியாவில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் அதிகாரப்பூர்வ தொடர்பு முறைகளாகும்: 1. Google Payதொலைபேசி எண்: 1800-419-0157 (கட்டணமில்லா எண், 24/7 கிடைக்கும்). தொடர்பு கொள்ளும் முறை: Google Pay ஆப்-ஐ திறந்து, "Help & Feedback" என்ற பகுதிக்குச் செல்லவும். அங்கு சாட் ஆதரவு (8 AM - 12 AM IST) அல்லது மின்னஞ்சல் வழியாக உதவி பெறலாம்.மேலே குறிப்பிட்ட தொலைபேசி எண்ணை அழைத்து, பிரச்சினையை விளக்கி தீர்வு கேட்கலாம். குறிப்பு: பயன்பாட்டில் உள்ள "Help" பகுதியில் பிரச்சினையை பதிவு செய்தால், விரைவாக பதில் கிடைக்கும். 2. PhonePeதொலைபேசி எண்: 080-6872-7374 (வாடிக்கையாளர் ஆதரவு) அல்லது 022-6872-7374 (மாற்று எண்).தொடர்பு கொள்ளும் முறை: PhonePe ஆப்-ஐ திறந்து, முகப்புப் பக்கத்தில் உள்ள "?" (கேள்விக்குறி) ஐகானை கிளிக் செய்யவும்."Contact Us" என்ற பகுதியில் உங்கள் பிரச்சினையை தேர்ந்தெடுத்து, சாட் அல்லது மின்னஞ்சல்...
Subbiahpatturajan
புண்ணாக்கு திண்ணும் மாட்டுக் கூட அறிவு உண்டு. பாலும் நெய்யும் கலந்து சோறு தின்னும் மனுசனுக்கு வேண்டாமா?
இந்திய ஆட்சிப் பணி (IAS) அதிகாரிகளை பணியமர்த்துவதில் இனி மாநில அரசுகளுக்கு எந்த உரிமையும் கிடையாதாம்!
மாநில அரசுகளின் ஒப்புதல் பெறாமலேயே இந்திய ஆட்சிப் பணி (IAS) அதிகாரிகளை மத்திய அரசாங்கமே பணி அமர்த்துமாம்!
தமிழ்நாட்டில் இனி தமிழே தெரியாத இந்திய ஆட்சிப் பணி (IAS) அதிகாரிகள் மாவட்ட ஆட்சித் தலைவாரா இருப்பாங்க!
தமிழ்நாட்டில் இனி தமிழே தெரியாத இந்திய ஆட்சிப் பணி (IAS) அதிகாரிகள் பல்வேறு துறைகளின் செயலர்களாக இருப்பாங்க!
இந்தி பேசாத மக்கள் வாழும் தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்களின் ஆட்சி நிர்வாகம் இதனால் பெரிய அளவில் பாதிக்கப்படும்!
தமிழ் தெரியாத இந்திய ஆட்சிப் பணி (IAS) அதிகாரிகள் தமிழ்நாட்டில் பணியமர்த்தப்பட்டால் மக்களும் பாதிக்கபபடுவார்கள்!
மத்திய அரசின் கொத்தடிமைகளாக் இந்திய ஆட்சிப் பணி (IAS) அதிகாரிகள் ஆக்கப்படுவார்கள்!
மத்திய அரசு இடும் கட்டளைகளை மாநில அரசுகளின், மாநில மக்களின் ஒப்புதல் இல்லாமலேயே இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் நிறைவேற்றுவார்கள்!
தனது கன்றின் குரலைக் கேட்டால் தான் கன்றைத் தேடி மாடு ஓடி வரும். குரலும் மொழியும் வெறும் ஒலி மட்டுமல்ல. ஆட்சி நிர்வாகத்தில் உயர்நிலையில் இருப்பவர்கள் நமது மாநிலத்தில் நமது மொழி தெரிந்தவர்கள் இருந்தால் மட்டுமே நம்முடைய மக்களின் சிக்கல்களைக் கேட்டறிந்து புரிந்துகொண்டு செயல்பட முடியும்!
ஏற்கனவே உருவாக்கி வைக்கப்பட்டுள்ள ஆட்சி நிர்வாக முறைச் சட்டங்கள் மாநிலங்களின் உரிமைகளையும் மக்களின் நலன்களையும் கருத்தில் கொண்டு ஆராய்ந்து அறிந்து இயற்றப்பட்டவை.
இந்தி பேசாத மாநிலங்களின் ஆட்சியாளர்களையும் மக்களையும் அடக்கி ஒடுக்குவதற்காக ஆட்சி நிர்வாகச் சட்டங்களை மாற்றுவது இந்திய ஒன்றியத்தை உடைக்கவே வழி செய்யும்!
கருத்துகள்