Subbiahpatturajan Google Pay, PhonePe, மற்றும் Paytm ஆகியவற்றின் உதவி மையத்தை தொடர்பு கொள்ள, பின்வரும் வழிகளையும் தொலைபேசி எண்களையும் எப்படி பயன்படுத்தலாம். இவை இந்தியாவில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் அதிகாரப்பூர்வ தொடர்பு முறைகளாகும்: 1. Google Payதொலைபேசி எண்: 1800-419-0157 (கட்டணமில்லா எண், 24/7 கிடைக்கும்). தொடர்பு கொள்ளும் முறை: Google Pay ஆப்-ஐ திறந்து, "Help & Feedback" என்ற பகுதிக்குச் செல்லவும். அங்கு சாட் ஆதரவு (8 AM - 12 AM IST) அல்லது மின்னஞ்சல் வழியாக உதவி பெறலாம்.மேலே குறிப்பிட்ட தொலைபேசி எண்ணை அழைத்து, பிரச்சினையை விளக்கி தீர்வு கேட்கலாம். குறிப்பு: பயன்பாட்டில் உள்ள "Help" பகுதியில் பிரச்சினையை பதிவு செய்தால், விரைவாக பதில் கிடைக்கும். 2. PhonePeதொலைபேசி எண்: 080-6872-7374 (வாடிக்கையாளர் ஆதரவு) அல்லது 022-6872-7374 (மாற்று எண்).தொடர்பு கொள்ளும் முறை: PhonePe ஆப்-ஐ திறந்து, முகப்புப் பக்கத்தில் உள்ள "?" (கேள்விக்குறி) ஐகானை கிளிக் செய்யவும்."Contact Us" என்ற பகுதியில் உங்கள் பிரச்சினையை தேர்ந்தெடுத்து, சாட் அல்லது மின்னஞ்சல்...
Subbiahpatturajan
நாம் தமிழர் தம்பி, தங்கைகளுக்கு ஆதரவு தர வேண்டிய கட்டாயம் வருகிறது.
சீமான் மீதும் நாம் தமிழர் கட்சி மீதும் சில முரண்கள் எல்லோருக்கும் இருக்கலாம்.
ஆனால் இவர்களை எதிர்த்து தொடர்ந்து அவதூறு பரப்புவர்களில் நூற்றுக்கு 99 பேர்
"இவிங்க அவ்வளவு நல்லவிங்க இல்லையே"
எனும் ரகமாகவே இருக்கின்றனர் என்பதற்காகவே சீமான் மற்றும் நாம் தமிழர் தம்பி, தங்கைகளுக்கு ஆதரவு தர வேண்டி வருகிறது.
விலைவாசி உயர்வைக் கண்டித்து அடுத்த மாதம் போராடுவோம் என்று அறிவித்த தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி.
(இன்று வரை அந்த அடுத்த மாதம் வரவேயில்லை என்பது தனிக்கதை).
தமிழ்நாட்டு மக்கள் அவதிப்படும் எந்த பிரச்சனைக்கும் குரல் கொடுக்காத அழகிரி தலைமையிலான காங்கிரஸ் கமிட்டி ...
குமரி மாவட்டத்தின் மலைகளை உடைத்து கேரளாவிற்கு எடுத்துச் சென்று அதானியின் விடியம் துறைமுகக் கட்டுமானத்திற்குப் பயன்படுத்தக் கூடாது என்று போராடும் சீமானுக்கும், நாம் தமிழருக்கும் எதிராகத் திடீரென எதிர்ப்பைத் தெரிவிக்கிறது.
அதாவது "மதவாத பாஜகவின் தொழில் அதிபர்" அதானி கட்டும் துறைமுகத்துக்கு "மதச்சார்பற்ற காங்கிரஸ் கமிட்டியின்" தமிழ் நாடு பிரிவு ஆதரவு தருகிறது.
ஆதாரம் நம்பர் ஒன்று.
சவுக்கு சங்கர்.... காங்கிரஸ் கட்சியைப் பற்றி சீமான் அசிங்கமாகப் பேசிவிட்டார் என்று கூறிப் பேட்டி அளிக்கிறார்.
ஆதாரம் நம்பர் இரண்டு
கூடங்குளத்தில் அணு உலைகள் அமையவிடாமல் தடுத்து அங்கே மல்லிகைப் பூந்தோட்டம் அமைத்துவிட்ட சுப.உதயகுமாரன் சீமானை எதிர்த்து டிவீட் செய்கிறார்.
ஆதாரம் நம்பர் மூன்று.
மீத்தேன் திட்டத்தைத் தடுத்து நிறுத்தி அங்கே வயல்காடுகளை அமைத்துவிட்ட பேராசிரியர் ஜெயராமன், அவருக்கு ஆதரவாகக் களமிறங்கிய 32 பேர் சாரி 32 அமைப்புகள் சீமானுக்கு எதிராகப் புகார் தருகிறது.
ஆக....அதானி, அம்பானிகளுக்கு வியர்த்துவிடக்கூடாது என்பதுதான் மேற்கண்டவர்களின் கவலை.
எனவே, ஆக....ஒன்று நன்றாகப் புரிகிறது.
இந்தப் பதிவை இடும் நேரத்தின் அடிப்படையில் சீமானும், நாம் தமிழர் தம்பி, தங்கைகளும் மிகச் சரியான திசையில், சரியான பாதையில்தான் நடை போடுகின்றனர் என்று.
குமரி மலைகளை உடைப்பதைக் கண்டிக்கும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள, கன்னியாகுமரிக்கு சீமான் வந்தால் அடிப்போம் உதைப்போம் என்றனர் அந்த ஊரின் "காங்கிரஸ் பேரியக்க" கட்சிக்காரர்கள்.
வந்தது மட்டுமல்ல, தக்கலையை அதிர வைத்திருக்கிறார்கள் நாம் தமிழர் கட்சியினர்.
தமிழ், தமிழர் நிலம், தமிழியத்தை இவர்கள் உளப்பூர்வமாக நேசித்துப் போராடும் இறுதி நிமிடம் வரை நாம் தமிழரை ஆதரிப்பது தமிழர்களின் கடமை.
வாழ்க வளமுடன்.
கருத்துகள்