Subbiahpatturajan Google Pay, PhonePe, மற்றும் Paytm ஆகியவற்றின் உதவி மையத்தை தொடர்பு கொள்ள, பின்வரும் வழிகளையும் தொலைபேசி எண்களையும் எப்படி பயன்படுத்தலாம். இவை இந்தியாவில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் அதிகாரப்பூர்வ தொடர்பு முறைகளாகும்: 1. Google Payதொலைபேசி எண்: 1800-419-0157 (கட்டணமில்லா எண், 24/7 கிடைக்கும்). தொடர்பு கொள்ளும் முறை: Google Pay ஆப்-ஐ திறந்து, "Help & Feedback" என்ற பகுதிக்குச் செல்லவும். அங்கு சாட் ஆதரவு (8 AM - 12 AM IST) அல்லது மின்னஞ்சல் வழியாக உதவி பெறலாம்.மேலே குறிப்பிட்ட தொலைபேசி எண்ணை அழைத்து, பிரச்சினையை விளக்கி தீர்வு கேட்கலாம். குறிப்பு: பயன்பாட்டில் உள்ள "Help" பகுதியில் பிரச்சினையை பதிவு செய்தால், விரைவாக பதில் கிடைக்கும். 2. PhonePeதொலைபேசி எண்: 080-6872-7374 (வாடிக்கையாளர் ஆதரவு) அல்லது 022-6872-7374 (மாற்று எண்).தொடர்பு கொள்ளும் முறை: PhonePe ஆப்-ஐ திறந்து, முகப்புப் பக்கத்தில் உள்ள "?" (கேள்விக்குறி) ஐகானை கிளிக் செய்யவும்."Contact Us" என்ற பகுதியில் உங்கள் பிரச்சினையை தேர்ந்தெடுத்து, சாட் அல்லது மின்னஞ்சல்...
Subbiahpatturajan
காற்றில்லாதபோது விசிறிதேவை . தென்றல் வீசத்தொடங்கியதும் விசிறியை வைத்துவிடுகிறோம். அதேபோல் இறைவனிடம் பக்தி ஏற்படும்வரை தான் பூஜை,யாகம், போன்றவை தேவை. பக்தி ஏற்பட்டுவிட்டால் இவைகள் தேவையில்லை
சுவாமி விவேகானந்தரின்வீர மொழிகள்
…..
4. நீங்கள் கடவுளின் குழந்தைகள். அழியாத பேரின்பத்தின் பங்குதாரர்கள். புனிதமும் பூரணத்துவமும் பெற்றவர்கள். மண்ணுலகின் தெய்வங்களே, நீங்களா பாவிகள்! அப்படி மனிதனை அழைப்பது தான் பாவம். அது மனித இயல்பின் மீதே சுமத்தப்படும் பழிச்சொல்லாகும். ஓ சிங்கங்களே எழுந்து வாருங்கள். நீங்கள் செம்மறி ஆடுகள் என்ற மயக்கத்தை உதறித்தள்ளுங்கள். நீங்கள் அமரத்துவம் பெற்ற ஆன்மாக்கள் சுதந்திர ஆன்மாக்கள் அழியாத திருவருளைப் பெற்றவர்கள்.
5.போராட்டங்களையும் தவறுகளையும் பொருட்படுத்தாதே. பசு ஒன்று பொய் பேசியதாக நான் எந்தக் காலத்திலும் கேள்விப்பட்டதில்லை. ஆனால் அது பசுவே தவிர ஒருபோதும் மனிதனாகிவிடாது. எனவே இந்தக் தோல்விகளையும் இத்தகைய ஒழுக்கக் கேடுகளையும் ஒரு போதும் பொருட்படுத்தாதே. ஓராயிரம் முறை நீ உனது இலட்சியத்தைக் கைக்கொள். ஆயிரம் முறை நீ தோல்வியுற்றாலும் மீண்டும் ஒரு முறை கைக்கொள்ள முயற்சி செய்.
6.பலவீனத்திற்கான பரிகாரம், ஓயாது பலவீனத்தைக் குறித்துச் சிந்திப்பதல்ல மாறாக வலிமையைக் குறித்துச் சிந்திப்பதுதான். மக்களுக்கு ஏற்கனவே அவர்களுக்குள் இருந்து வரும் வலிமையைப்பற்றிப் போதிப்பாயாக.
..
இந்தியாவின் ஆன்மீகக் கருத்துக்கள் மேலை நாடுகளில் ஆழமாக ஊடுருவும்படி நாம் வேலை செய்ய வேண்டிய தருணம் இதுதான். அதனால் சென்னை இளைஞர்களே! இதை நினைவில் கொள்ளுமாறு
நான் உங்களுக்கு தனிப்பட்ட முறையில் கேட்டுக் கொள்கிறேன்.
நாம் வெளியே சென்றாக வேண்டும், உலகை ஆன்மீகத்தாலும் தத்துவத்தாலும் வென்றாக வேண்டும்.
-
ஆன்மீகச் சிந்தனைகளால் உலகை வெல்ல வேண்டும் என்று நான் கூறியதன் உண்மையான பொருளை மறந்துவிடக் கூடாது. உயிருணர்வு அளிக்கக் கூடிய கோட்பாடுகளையே நான் ஆன்மீகச் சிந்தனைகள் என்று குறிப்பிட்டேன். அவற்றை வெளியுலகில் பரப்ப வேண்டுமே தவிர, நாம் நெஞ்சோடு நெஞ்சாக இறுகப் பிடித்துக் கொண்டிருக்கின்ற மூட நம்பிக்கைகளை அல்ல.
-
சாணக்கியரின் அர்த்தசாஸ்திரம்
ஒரு நாளும் ஒன்றையும் படிக்காமலும், ஒரு வரியாவது, ஒரு சொல்லையாவது கற்காமலும், நல்ல காரியங்களில் ஈடுபடாமலும் வெளியில் செல்ல வேண்டாம்.
கவிஞர் கண்ணதாசனின் தத்துவங்கள்
.
துன்பங்கள் வந்தே தீருமென்றும், அவை இறைவனின் சோதனைள் என்றும், அவற்றுக்காக கலங்குவதும் கண்ணீர் சிந்துவதும் முட்டாள்தனமென்றும் உன்னை உணர வைத்து, துன்பத்திலும் ஒரு நிம்மதியைக் கொடுக்கவே அவர்கள் புராணங்களை எழுதி வைத்தார்கள்.
இந்தக் கதைகளை ‘முட்டாள்தனமானவை’ என்று சொல்லும் அறிவாளிகள் உண்டு.
ஆனால்,முட்டாள்தனமான இந்தக் கதைகளின் தத்துவங்கள், அந்த அறிவாளிகளின் வாழ்க்கையையும் விட்டதில்லை.
திரிகடுகம்
மூப்பு வந்தபோது துறவறத்தை மேற்கொள்ளாதவனும், கற்புடைய மனைவியைக் குறித்த காலத்தில் சேராதவனும், வாய்மொழி வெற்றியை விரும்பி பேசுகின்ற தவசிகளும், கல்வித் தெப்பத்தைக் கைவிட்டவர்கள் ஆவர்.
கதை
..
வேகத்தை விட விவேகம் வேண்டும்!
...
ஜென் துறவி ஒருவர் பெரிய மடாலயத்தில் சீடர்கள் சிலருக்கு கல்வி போதித்து வந்தார். அவர் எப்போதும் தன்னிடம் சீடனாக சேர்ப்பவர்களை பரிசோதித்து தான் சேர்ப்பார். அது போல் ஒரு நாள் மூன்று பேர் வந்து, அந்த துறவியை சந்தித்து அவரது சீடர்களாக ஆசைபடுகிறோம் என்று கூறினார்கள். அந்த துறவியும் அவர்களை மறுநாள் வந்து பார்க்குமாறு கூறினார்.
அவர்களும் "சரி!" என்று சொல்லி சென்று விட்டனர். பின் துறவி தன் சீடன் ஒருவனிடம் "மறுநாள் அவர்கள் வரும் போது எனது காதில் ஓணான் புகுந்து இறந்துவிட்டாதாக சொல்" என்று சொன்னார். அந்த மூவரும் மறுநாள் வந்தபோது, துறவியின் சீடனும் அவர்களிடம் துறவி சொன்ன மாதிரியே சொன்னான்.
அதற்கு முதலாமவன், "துறவியின் ஜாதகப்படி சனித்திசை என்பதால் இப்படி நடந்திருக்கலாம்!" என்று வருத்தத்துடன் சொல்லிச் சென்றான். இரண்டாமவன், "துறவி போன ஜன்மத்தில் செய்த பாவத்தால், இவ்வாறு ஆகியிருக்கும்!" என்று கவலையுடன் சென்றான். ஆனால் மூன்றாமவன், அந்த சீடனின் முகத்தை உற்று பார்த்து, துறவி நிச்சயம் இறக்கவில்லை என்று அடித்துக் கூறினான். அதுவரை மடாலயத்திற்குள் இருந்த துறவி வெளியே வந்து "எப்படி சரியாக சொன்னாய்?" என்று கேட்டார்.
"குருவே! உங்கள் இறப்பினால் வரக்கூடிடய வருத்தம் உங்கள் சீடனின் முகத்தில் சிறிது கூட தென்படவில்லை. அதிலும் ஒருவரின் காதுக்குள் ஓணான் நுழைவது என்பது சாத்தியமே இல்லை. ஆகவே தான் நான் உறுதியுடன் சொன்னேன்" என்று கூறினான். அவனது விவேகத்தைக் கண்டு திகைத்துக் போன துறவி, அன்று முதல் அவனை தனது சீடனாக ஏற்றுக்கொண்டார்.
ஆகவே ஒருவனிடம் வேகம் இருக்கலாம். ஆனால் அதே நேரம் விவேகம் நிச்சயம் வேண்டும் என்பதை இந்த கதை நன்கு கூறியுள்ளது.
வேதம்
ரிக்வேதம் ஐதரேய உபநிஷதம்
உடல், உயிர் (மனம்+பிராணன்), ஆன்மா ஆகியவற்றின் தொகுதியே மனிதன். தான் செய்த நல்வினை மற்றும் தீவினைப் பயன்களுக்கு ஏற்ப உடல்களை மாற்றியபடி செல்கின்ற உயிரின் பயணமே வாழ்க்கை. உயிர், பழைய உடலை விடுவது மரணம்; புதிய உடலை ஏற்றுக்கொள்வது பிறப்பு.
உடல் தாயிடமிருந்து கிடைக்கிறது. உயிர் தந்தையின் வழியாகத் தாயின் கருப்பைக்குள் புகுகிறது. இந்த உடல்+உயிர்ச்சேர்க்கையில் இறைவன் ஆன்மாவாகப் புகுந்து அதனை இயங்கச் செய்கிறார். உயிரின் இந்தப் பயணத்தைப் பற்றிய சில கருத்துக்களை இங்கே காண்கிறோம்.
மனு தர்ம சாஸ்திரம்
மனத்தாலும்,வாக்காலும், உடலாலும், கற்பு நெறி பிறழாத பெண், கணவன் அடைந்த உத்தம லோகத்தை அடைகிறாள். இவள் கற்பரசி என்று சாதுக்களால் போற்றப் படுகிறாள்.
கருத்துகள்