Subbiahpatturajan Google Pay, PhonePe, மற்றும் Paytm ஆகியவற்றின் உதவி மையத்தை தொடர்பு கொள்ள, பின்வரும் வழிகளையும் தொலைபேசி எண்களையும் எப்படி பயன்படுத்தலாம். இவை இந்தியாவில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் அதிகாரப்பூர்வ தொடர்பு முறைகளாகும்: 1. Google Payதொலைபேசி எண்: 1800-419-0157 (கட்டணமில்லா எண், 24/7 கிடைக்கும்). தொடர்பு கொள்ளும் முறை: Google Pay ஆப்-ஐ திறந்து, "Help & Feedback" என்ற பகுதிக்குச் செல்லவும். அங்கு சாட் ஆதரவு (8 AM - 12 AM IST) அல்லது மின்னஞ்சல் வழியாக உதவி பெறலாம்.மேலே குறிப்பிட்ட தொலைபேசி எண்ணை அழைத்து, பிரச்சினையை விளக்கி தீர்வு கேட்கலாம். குறிப்பு: பயன்பாட்டில் உள்ள "Help" பகுதியில் பிரச்சினையை பதிவு செய்தால், விரைவாக பதில் கிடைக்கும். 2. PhonePeதொலைபேசி எண்: 080-6872-7374 (வாடிக்கையாளர் ஆதரவு) அல்லது 022-6872-7374 (மாற்று எண்).தொடர்பு கொள்ளும் முறை: PhonePe ஆப்-ஐ திறந்து, முகப்புப் பக்கத்தில் உள்ள "?" (கேள்விக்குறி) ஐகானை கிளிக் செய்யவும்."Contact Us" என்ற பகுதியில் உங்கள் பிரச்சினையை தேர்ந்தெடுத்து, சாட் அல்லது மின்னஞ்சல்...
Subbiahpatturajan
குழந்தைகள் பொய் சொல்லாமல் இருக்க என்ன செய்யலாம்..*
*#குழந்தைகள்_பெற்றோரிடம்_பொய்_சொல்ல_தூண்டுவது_எது..?
*உளவியல் காரணங்கள்..*
*குழந்தைகள் பொய் சொல்வது பெற்றோர்களுக்கு கவலை மற்றும் மன உலைச்சலை தரும்.
*அனைத்து பெற்றோர்களும் தங்களது குழந்தை நல்ல குழந்தையாக வளர வேண்டும் ஆசை இருக்கும். குழந்தைகள் செய்யும் சில விஷயங்கள் பெற்றோர்களுக்கு கவலை மற்றும் மன உலைச்சலை தரும். அதில் ஒன்று பொய் சொல்வது. குழந்தைகள் பொய் சொல்லாமல் இருக்க என்னென்ன செய்யலாம் என்பது பற்றி காண்போம்.*
*குழந்தைகளுக்கு கற்பனை உணர்வு இருப்பது சிறந்தது தான். ஆனால் நாம் இருக்கும் சூழ்நிலைக்கு எது ஏற்றது. நமக்கு எது சாத்தியம், எது சாத்தியம் இல்லை என்ற உண்மைகளை புரிய வைக்க வேண்டியது அவசியம்.*
*பெற்றோர்கள் தங்களை அறியாமலேயே குழந்தைகளை பொய் சொல்ல பழக்கப்படுத்துகிறார்கள்.
வீட்டில் இருந்து கொண்டே யாராவது கேட்டால் அப்பா இல்லை என்று சொல் என்று நீங்களே குழந்தைகளுக்கு பொய் சொல்ல பழக்கப்படுத்தாதீர்கள்.*
*குழந்தைகள் முன் நீங்கள் யாரிடமும் பொய் சொல்ல வேண்டாம். அதை பார்த்து அவர்கள் கற்றுக்கொள்வார்கள்.*
*குழந்தைகள் பொய் சொன்னால், அதை மீண்டும் செய்யாமல் தடுக்க பெற்றோர்கள் அடிப்பது சூடு வைப்பது போன்ற பெரிய தண்டணைகளை கொடுக்காதீர்கள். இது அவர்களது மனதில் பெரிய பயத்தை உண்டாக்கிவிடும். பின்னர் அவர்கள் பொய்யை நன்றாக சொல்ல கற்றுக்கொள்வார்கள்.*
*குழந்தைகளுக்கு பொய் சொல்வதால் உண்டாகும் தீமைகளை சொல்லி அவர்களை பயப்படுத்த வேண்டாம். உண்மை சொல்வதால் விளையும் நன்மைகள் பற்றி கூறலாம். நீதிகதைகள் போன்றவற்றை கூறுங்கள்.*
*குழந்தைகளிடம் இதை செய்யாதே, அதை செய்யாதே என தொட்டதிற்கு எல்லாம் தடை விதிக்க வேண்டாம். அவர்களுக்கு கொஞ்சம் சுதந்திரம் கொடுங்கள். அதிக தடைகளை விதிப்பதும், உத்தரவுகளை போடுவதும் அதை மீற வேண்டிய சூழ்நிலை வந்தால், குழந்தைகளை பொய் சொல்ல வைக்கும்.*
*குழந்தைகளுக்கு உண்மை சொல்வதால் உண்டாகும் நன்மைகள் பற்றிய திருக்குறள்கள் மற்றும் பழமொழிகளை சொல்லி கொடுங்கள். அவர்கள் நல்வழியில் செல்ல இவை பயனுள்ளதாக இருக்கும்.*
*குழந்தைகள் ஒரு தவறு செய்தது உங்களுக்கு தெரிந்தால், அதை நேரடியாக சொல்லி புரிய வையுங்கள். அவர்களது வாயில் இருந்தே உண்மையை வர வைக்க வேண்டும் என்று சாமர்த்தியமான கேள்விகளை கேட்டு அடுக்கு அடுக்காக பொய் சொல்ல வைக்காதீர்கள்.*
*உங்கள் குழந்தை ஏதேனும் தவறு செய்துவிட்டு உங்களிடம் உண்மையை கூறினால், செய்த தவறுக்காக அவருக்கு தண்டனை கொடுக்காதீர்கள். உண்மை சொன்னதற்காக பாராட்டுங்கள். அடுத்த முறை இது போன்ற தவறை செய்யக்கூடாது என்று மட்டும் கூறுங்கள், அதுவே போதுமானது.*
*பொறுமையைவிட மேலான தவமுமில்லை.திருப்தியை விட மேலான இன்பமுமில்லை.இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை.மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை…!*
*தோல்விகள் சூழ்ந்தாலும். இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை. இந்த விடியல் உங்கள் வாழ்விலும் விடியட்டும்…!*
*முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்…!*
கருத்துகள்