Subbiahpatturajan Google Pay, PhonePe, மற்றும் Paytm ஆகியவற்றின் உதவி மையத்தை தொடர்பு கொள்ள, பின்வரும் வழிகளையும் தொலைபேசி எண்களையும் எப்படி பயன்படுத்தலாம். இவை இந்தியாவில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் அதிகாரப்பூர்வ தொடர்பு முறைகளாகும்: 1. Google Payதொலைபேசி எண்: 1800-419-0157 (கட்டணமில்லா எண், 24/7 கிடைக்கும்). தொடர்பு கொள்ளும் முறை: Google Pay ஆப்-ஐ திறந்து, "Help & Feedback" என்ற பகுதிக்குச் செல்லவும். அங்கு சாட் ஆதரவு (8 AM - 12 AM IST) அல்லது மின்னஞ்சல் வழியாக உதவி பெறலாம்.மேலே குறிப்பிட்ட தொலைபேசி எண்ணை அழைத்து, பிரச்சினையை விளக்கி தீர்வு கேட்கலாம். குறிப்பு: பயன்பாட்டில் உள்ள "Help" பகுதியில் பிரச்சினையை பதிவு செய்தால், விரைவாக பதில் கிடைக்கும். 2. PhonePeதொலைபேசி எண்: 080-6872-7374 (வாடிக்கையாளர் ஆதரவு) அல்லது 022-6872-7374 (மாற்று எண்).தொடர்பு கொள்ளும் முறை: PhonePe ஆப்-ஐ திறந்து, முகப்புப் பக்கத்தில் உள்ள "?" (கேள்விக்குறி) ஐகானை கிளிக் செய்யவும்."Contact Us" என்ற பகுதியில் உங்கள் பிரச்சினையை தேர்ந்தெடுத்து, சாட் அல்லது மின்னஞ்சல்...
Subbiahpatturajan
மனைவியின் " ம்ம்" என்பதற்கு "சரி" என்றும்..!
மனைவியின் " ம்ம்" என்பதற்கு "சரி" என்றும்..! "ம்ம்ம்ம்கும்" என்பதற்கு என்ன அர்த்தம்...
கொலை செய்வதற்கு நிகரான ஒன்று...!
நேரத்திற்கு தகுந்தார்போல பேசுவது....!!
உழவு செய்ய தெரிந்திருந்த விவசாயிக்கு ...!
ஊழல் செய்ய தெரிந்திருந்தால்...!
இன்று அவனும் மதிக்கப்பட்டு இருப்பான்....!!
அட்டப் பூச்சியை விட...
அதிவேகமாக மனிதனின் இரத்தத்தை உறிவதில்
திறமை வாய்ந்தது...!
பணம்...!!
திருவிழா கொண்டாட்டங்கள் முடிந்தபின் தான் துவங்குகிறது ...!
பலூன் விற்பவர் வீட்டில் திருவிழா...!!
தெருநாய்களிடமிருந்து தப்பிப்பதற்கு எளிய வழி அவைகளை கண்டுகொள்ளாமல் போவதுதான் ....!!!
தினமும் காலண்டரில் எந்த ராசிக்கு மகிழ்ச்சி என்று எழுதப்பட்டு இருக்கிறதாே ...!
அந்த ராசிதான் நம்ம ராசி என்று எண்ணிக் கொண்டால்.....!
வாழ்நாள் முழுவதும் சந்தோஷம்தான்...!!
செருப்பும் நம் வாழ்க்கையும் ஒன்றுதான் ஏனென்றால் ஒன்று தொலைந்தால் மற்றொன்றிற்கு மதிப்பில்லை ....!
அது போலத்தான் நம் வாழ்க்கையும். கணவனோ மனைவியோ உடன் இல்லையென்றால் இருப்பவருக்கு மதிப்பில்லை...!!
ஏணியாக இருப்பது தப்பில்ல ...
ஆனால் ஏணியாகவே இருப்பது தான் தப்பு...!!
இன்றைய நியூஸ் பேப்பர் ...
நாளைய வேஸ்ட் பேப்பர்...
அவ்வளவுதான் விஷயம் ...
இதுக்கு தான் இங்க இம்புட்டு ஆட்டம்...!!
அம்மாவிற்க்கு நல்ல மருமகளாக இரு என்று மனைவியிடம் சொல்லும் ஆண்கள்...!
தன் அம்மாவிடம் உன் மருமகளுக்கு நல்ல மாமியாராக இரு என்று பல கணவன்கள் சொல்வதில்லை...!!
மனைவியின் " ம்ம்" என்பதற்கு "சரி" என்றும்..!
"ம்ம்ம்ம்கும்" என்பதற்கு "பண்ணித் தான் பாரேன்" என்றும் அர்த்தம்...!!
வீட்டு மருத்துவம்.
கசகசாவை மாதுளம் பழச்சாற்றில் ஊற வைத்து அரைத்து சாப்பிட்டால் தூக்கமின்மை பிரச்சனை தீரும்.
மாவிலைக் கொழுந்துடன் ,துவரம் பருப்பு , உப்பு சேர்த்து வேகவைத்து சாப்பிட்டு வர சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்
பொது தகவல்.
ரஷ்ய நாட்டில் அழுக்கான காரில் செல்வது குற்றம்.
கருத்துகள்