Subbiahpatturajan Google Pay, PhonePe, மற்றும் Paytm ஆகியவற்றின் உதவி மையத்தை தொடர்பு கொள்ள, பின்வரும் வழிகளையும் தொலைபேசி எண்களையும் எப்படி பயன்படுத்தலாம். இவை இந்தியாவில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் அதிகாரப்பூர்வ தொடர்பு முறைகளாகும்: 1. Google Payதொலைபேசி எண்: 1800-419-0157 (கட்டணமில்லா எண், 24/7 கிடைக்கும்). தொடர்பு கொள்ளும் முறை: Google Pay ஆப்-ஐ திறந்து, "Help & Feedback" என்ற பகுதிக்குச் செல்லவும். அங்கு சாட் ஆதரவு (8 AM - 12 AM IST) அல்லது மின்னஞ்சல் வழியாக உதவி பெறலாம்.மேலே குறிப்பிட்ட தொலைபேசி எண்ணை அழைத்து, பிரச்சினையை விளக்கி தீர்வு கேட்கலாம். குறிப்பு: பயன்பாட்டில் உள்ள "Help" பகுதியில் பிரச்சினையை பதிவு செய்தால், விரைவாக பதில் கிடைக்கும். 2. PhonePeதொலைபேசி எண்: 080-6872-7374 (வாடிக்கையாளர் ஆதரவு) அல்லது 022-6872-7374 (மாற்று எண்).தொடர்பு கொள்ளும் முறை: PhonePe ஆப்-ஐ திறந்து, முகப்புப் பக்கத்தில் உள்ள "?" (கேள்விக்குறி) ஐகானை கிளிக் செய்யவும்."Contact Us" என்ற பகுதியில் உங்கள் பிரச்சினையை தேர்ந்தெடுத்து, சாட் அல்லது மின்னஞ்சல்...
Subbiahpatturajan
*பக்கத்து மாநிலமான கேரளாவில் இதே சூழலில் உள்ள தளங்கள் எல்லாம் மென்மேலும் சுற்றுலா பயணிகளை கவரும் வண்ணம் மேம்படுத்தப் படுகிறது.*
ஆனால் இங்கே ??
சிறு வயதில் பள்ளி மூலமாகவோ, குடும்பத்துடனோ பிக்னிக்காக சென்று
பார்த்து வந்த ஒரு நாள் முழுவதும் சுற்றி மகிழ்ந்த மணிமுத்தாறு அணை பூங்கா *பராமரிப்பின்றி அழிக்கப்பட்டு விட்டது.*
பாபநாசம் காரையாறு அணையில் படகு சவாரி செய்து "சின்ன சின்ன ஆசை" பாடி, நீராடி மகிழ்ந்த அனுபவத்தை திரும்ப பெற *தடைகள் விதிக்கப் பட்டுள்ளது.*
*பாபநாசம் அகத்தியர் அருவியில் இலவசமாக வருடம் முமுவதும் குளித்து* மகிழும் வாய்ப்பை கொரானா பெயரில் தடை செய்து,
*இப்பொழுது நபருக்கு 30 ரூபாய் + வாகனக் கட்டணம் செலுத்தியே ஆக வேண்டிய அநியாய சூழல்.*
பாபநாசம் தலையணை நிலமை அதை விட மோசம்.
என்னை போன்ற பலர் நீச்சல் பயிற்சி செய்த பெரிய நீச்சல் குளம் போன்றும்,
ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கானோர் சிறிய அருவியில் நீராடி மகிழும் வாய்ப்பைத் தந்த நீண்ட கரைப் பகுதியை கொண்ட தலையணையும் *மூடப்பட்டு விட்டது.*
அங்கு பாதுகாப்பாக குளிக்கும் வசதிகளை செய்து கொடுப்பதை விடுத்து அந்த பகுதியையே மூடியது,
வருடத்திற்கு ஒரு முறை அகத்தியரை தரிசிக்க பாபநாசம் வழியாக மலையேறி சென்ற பக்தர்களின் புனிதப் பயணமும், இயற்கையின் அழகை, பெருமையை மக்கள் உணரும் அரிய வாய்ப்புகளும் வேண்டும் என்றே முடக்கப் பட்டது.*
ஆனால் அதே இடத்திற்கு திருவனந்தபுரம் வழியாக கேரள வனத்துறையினரே பயணிகளை அழைத்து செல்லும் வசதிகள் விரிவு படுத்தப் பட்டுள்ளது.
*தமிழகத்தில் மட்டும் தமிழர்கள் பல நூற்றாண்டுகளாக அனுபவித்த உரிமைகள் பிடுங்கப் படுவது
கண்டணத்திற்கு உரிய செயல்
சொந்த மாநில மக்களின் சுற்றுலா தலங்களில் அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்
கருத்துகள்