Subbiahpatturajan Google Pay, PhonePe, மற்றும் Paytm ஆகியவற்றின் உதவி மையத்தை தொடர்பு கொள்ள, பின்வரும் வழிகளையும் தொலைபேசி எண்களையும் எப்படி பயன்படுத்தலாம். இவை இந்தியாவில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் அதிகாரப்பூர்வ தொடர்பு முறைகளாகும்: 1. Google Payதொலைபேசி எண்: 1800-419-0157 (கட்டணமில்லா எண், 24/7 கிடைக்கும்). தொடர்பு கொள்ளும் முறை: Google Pay ஆப்-ஐ திறந்து, "Help & Feedback" என்ற பகுதிக்குச் செல்லவும். அங்கு சாட் ஆதரவு (8 AM - 12 AM IST) அல்லது மின்னஞ்சல் வழியாக உதவி பெறலாம்.மேலே குறிப்பிட்ட தொலைபேசி எண்ணை அழைத்து, பிரச்சினையை விளக்கி தீர்வு கேட்கலாம். குறிப்பு: பயன்பாட்டில் உள்ள "Help" பகுதியில் பிரச்சினையை பதிவு செய்தால், விரைவாக பதில் கிடைக்கும். 2. PhonePeதொலைபேசி எண்: 080-6872-7374 (வாடிக்கையாளர் ஆதரவு) அல்லது 022-6872-7374 (மாற்று எண்).தொடர்பு கொள்ளும் முறை: PhonePe ஆப்-ஐ திறந்து, முகப்புப் பக்கத்தில் உள்ள "?" (கேள்விக்குறி) ஐகானை கிளிக் செய்யவும்."Contact Us" என்ற பகுதியில் உங்கள் பிரச்சினையை தேர்ந்தெடுத்து, சாட் அல்லது மின்னஞ்சல்...
Subbiahpatturajan
விளையாட்டு வீரர்களுக்கு இந்திய துணை ராணுவப் படையில் வேலைவாய்ப்பு.
துணை ராணுவப்படை களில் ஒன்றான மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படையில் (CISF)காலியாக உள்ள 249 பணியிடங்களுக்கு தகுதியான விளையாட்டு வீரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன இது பற்றி விவரங்கள் பின்வருமாறு ...
1. பணியின் பெயர்: head constable sports quota 2022
காலியிடங்கள்: 249(காலியிடங்கள் ஏற்பட்டுள்ள விளையாட்டு பிரிவுகள் விளையாட்டு தகுதி ஆகியன அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.
சம்பளம்: 25,000 முதல் 81,000வரை
வயது வரம்பு:. 01/08/2021 தேதியின்படி 18 முதல் 23 வயதுககுள் இருக்க வேண்டும்
SC/ST-5 வருடங்கள்,OBC-03 வருடங்கள் வயதுவரம்பில் சலுகைகள் தரப்படும்.
கல்வித்தகுதி: குறைந்தபட்சம் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மேலும் அட்டவணையில் உள்ளபடி காலியிடங்கள் ஏற்பட்டுள்ள விளையாட்டு பிரிவுகள் ஏதாவது ஒன்றில் மாநில தேசிய சர்வதேச போட்டிகளில் பங்கு பெற்று விளையாடி இருக்க வேண்டும்.
முக்கிய அறிவிப்பு:
தற்போதும் விளையாட்டு வீரராக இருக்க வேண்டும்.01/01/2019முதல்31/03/2022 வரையிலான விளையாட்டு தகுதிகள் மட்டும் கணக்கில் கொள்ளப்படும்.
உடற்தகுதி: ஆண்கள் குறைந்தபட்சம் 167 செ மீட்டர் உயரம் இருக்க வேண்டும். மார்பளவு 81 சென்டிமீட்டர் முதல் 86 சென்டிமீட்டர் அகலம் இருக்க வேண்டும்.
பெண்கள் குறைந்தபட்சம் 153 சென்டிமீட்டர் உயரம் இருக்க வேண்டும். ST பிரிவைச் சேர்ந்தவர்கள்
ஆண்கள் 160 செ.மீ. உயரம் இருந்தாலும் விண்ணப்பிக்கலாம்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: விண்ணப்பதாரரின் விளையாட்டு தகுதி உடற்தகுதி மருத்துவ தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர் இதுபற்றிய விவரம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
www.cisfrectt.in என்ற இணையதளத்தில் விண்ணப்ப படிவம் கொடுக்கப்பட்டுள்ளது.
விண்ணப்ப கட்டணம்:
ரூபாய் 100 கட்டணத்தை DD/IPO-வாக எடுத்து அனுப்பவும். கட்டணம் செலுத்த வேண்டிய முகவரி இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.SC/ST பிரிவினர்கள் பெண்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டாம்.
விண்ணப்பிக்கும் முறை:
கருத்துகள்