Subbiahpatturajan Google Pay, PhonePe, மற்றும் Paytm ஆகியவற்றின் உதவி மையத்தை தொடர்பு கொள்ள, பின்வரும் வழிகளையும் தொலைபேசி எண்களையும் எப்படி பயன்படுத்தலாம். இவை இந்தியாவில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் அதிகாரப்பூர்வ தொடர்பு முறைகளாகும்: 1. Google Payதொலைபேசி எண்: 1800-419-0157 (கட்டணமில்லா எண், 24/7 கிடைக்கும்). தொடர்பு கொள்ளும் முறை: Google Pay ஆப்-ஐ திறந்து, "Help & Feedback" என்ற பகுதிக்குச் செல்லவும். அங்கு சாட் ஆதரவு (8 AM - 12 AM IST) அல்லது மின்னஞ்சல் வழியாக உதவி பெறலாம்.மேலே குறிப்பிட்ட தொலைபேசி எண்ணை அழைத்து, பிரச்சினையை விளக்கி தீர்வு கேட்கலாம். குறிப்பு: பயன்பாட்டில் உள்ள "Help" பகுதியில் பிரச்சினையை பதிவு செய்தால், விரைவாக பதில் கிடைக்கும். 2. PhonePeதொலைபேசி எண்: 080-6872-7374 (வாடிக்கையாளர் ஆதரவு) அல்லது 022-6872-7374 (மாற்று எண்).தொடர்பு கொள்ளும் முறை: PhonePe ஆப்-ஐ திறந்து, முகப்புப் பக்கத்தில் உள்ள "?" (கேள்விக்குறி) ஐகானை கிளிக் செய்யவும்."Contact Us" என்ற பகுதியில் உங்கள் பிரச்சினையை தேர்ந்தெடுத்து, சாட் அல்லது மின்னஞ்சல்...
Subbiahpatturajan
நான் என் இளங்கலை மருத்துவபடிப்பை ரஷ்யாவில் பயின்றேன்.முதுகலை மகப்பேறு மருத்துவத்தை தமிழ்நாட்டில் ஸ்டான்லி மருத்துவக்கல்லூரியில் முடித்தேன்.
கல்லூரி வாழ்க்கையில்
இளங்கலை படிக்க நான் ரஷ்யா சென்றபோது எனக்கான அனுபவங்கள் நம் நாட்டிற்கு நேர் எதிராக இருந்தது.நான் சென்றபோது விடுதியில் என் அறை தோழிகளாக கென்ய நாட்டை சேர்ந்த இரு மாணவிகள் இருந்தனர்(கதீஜா மற்றும் லும்பிரியாது).அதுவே ஒரு சிறப்பான அனுபவம் தான்.அப்போது தான் தெரிந்தது நான் மொழிப்பாடம் பயின்ற அந்த கல்லூரியில் இந்திய பெண்களே யாரும் இல்லை,இந்தியாவில் இருந்து அங்கு படிக்கும் ஒரே பெண்ணாக நான் இருக்கிறேன் என்பது.பிறகு சில மாதங்கள் கழித்து வேறு இந்திய பெண்கள் வந்தனர்.பிறகு தமிழ் பெண்களும்(மாணவிகள்) ஒருசிலர் வந்து இணைந்தனர்.அதன்பிறகு மருத்துவக்கல்லூரிக்கு மாற்றப்பட்டேன்.
ரஷ்ய காவல்துறை
மொழிப்பாடம் பயின்ற காலத்தில்(MADI Institute) ஒருநாள் அவசரமாக கல்லூரிக்கு சென்ற நேரத்தில் என்னுடைய passport மற்றும் student ID card எடுத்துச்செல்ல மறந்துபோனேன்.இது இல்லாமல் சாலையில் நாங்க பயணிக்க கூடாது.ஆனால் அவசரத்தில் கல்லூரிக்கு சென்ற போது இதை எடுக்காமல் சென்றேன்.வழியில் காவல்துறை மடக்கியது.ரஷ்ய ஆண்களை பார்த்து இருப்பீர்கள் நீங்கள்.எல்லாரும் உயரமா உடல்வாகுவோடு குஸ்தி வாத்தியார் போல இருப்பார்கள்.அதிலும் காவல்துறை என்றால் கேட்கவே வேணாம்.விசாரணைக்கு வா என என்னை காவல்நிலையம் அழைத்து சென்றார்கள்.மனசுக்குள் பக் பக் என அடிக்குது.தனியொரு பெண்ணாக அங்குள்ள காவலர்களிடம் மாட்டி காவல்நிலையமும் செல்கிறேன்.என் வயசு 18.எனது நிலையை யாரிடம் பகிர்வது?தொலைபேசி இல்லையே.
சிதம்பரம் பத்மினியின் காவல்நிலைய பாலியல் வன்புணர்வும்,அதற்காக தோழர்களோடு இணைந்து என் அம்மா போராட்டம் நடத்தியதும் என் கண் முன் நின்றது.ஒருவித அச்சத்தோடு தான் காவல் நிலையம் சென்றேன்.police jeapல வச்சு ஏத்திக்கொண்டு போனாங்க என்னை.ஒரு 8 மணிநேரம் அங்கு உட்கார வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டேன்.எனக்கு தேநீர் மற்றும் choclates,biscuits வழங்கப்பட்டது.இதுல மயக்கமருந்து எதுவும் தடவி கொடுப்பானுங்களோ என்ற பயத்தில் முதலில் அதை தொடதயங்கிய நான் பிறகு அவர்களும் அதை உண்ணுவது பார்த்து நானும் எடுத்து சாப்பிட்டேன்.8மணிநேர விசாரணைக்கு பிறகு அதே காவல் வாகனத்தில் விடுதிக்கு வந்து விடப்பட்டேன்.விடுதிக்கு வந்தபோது என் விடுதி அறைக்குள் உள்ளே வந்து என் passport மற்றும் student card பார்த்துவிட்டு சென்றனர்.நன்றிகூறி வாழ்த்தி சென்றனர் என்னை.
இந்தியாவில் சாத்தியமா?
நினைத்துப்பாருங்கள் இவை எல்லாம் இந்தியாவில் சாத்தியமா என்று.தமிழக காவல்நிலையத்திற்குள் நம்மால் இப்படி சென்று வர முடியுமா?18வயது இளம் பெண்,துணைக்கு யாரும் இல்லாமல்,ஆண் காவலாளிகள் சூழ 8மணிநேரம் இருக்க முடியுமா இங்கு?மேலை நாடுகளில் மட்டும் இது சாத்தியம் ஆவது ஏன்?
தங்கும் அறையில்
அதேபோல் விடுதிகளிலும் ஆண்களுக்கு தனி விடுதி,பெண்களுக்கு தனி விடுதி இல்லை.ஆண் மற்றும் பெண் மாணவ மாணவிகள் ஒரே விடுதியில் தான் தங்கினோம்.ஏழு ஆண்டுகள் இப்படி வாழ்ந்து இருக்கேன் ரஷ்யாவில்.ஒரு நாள் கூட ஐயோ பயமா இருக்கே இவன் தொட்டுடுவானோ அவன் தொட்டுடுவானோ என பயந்ததே இல்லை.பெண்கள் பெரிதும் போற்றப்பட்டோம் ரஷ்யாவில்.
பெண்களிடம் மரியாதை
பேருந்து,மெட்ரோ,டிராம் எதில் பயணம் செய்தாலும் ஆண்கள் அமர்ந்து பெண்கள் நிற்பதுபோல் ஒரு காட்சியை காணமுடியாது.ஒரு ஆண் அமர்ந்து இருக்கும்வேளையில் ஒரு பெண் அந்த பேருந்திற்குள் ஏரியமாத்திரத்தில் அந்த ஆண் தாமாக எழுந்து பெண்ணனிற்கு இருக்கையை கொடுப்பார்.
இந்தியாவில் பெண்கள்
அங்கு இரவு 12மணிக்கும் சாலையில் பயணிக்க முடியும் ஒரு பெண்ணால்.இங்கு ஏன் அப்படி பயணப்பட முடியல?காரணம் பெண்களை ஒரு போகப்பொருளாவே இங்கு நாம் பார்க்கிறோம்.கலாச்சாரம் என்றபெயரில் பெண்களை அடக்கியே வைக்கிறோம்.
இழுத்துபோர்த்திக்கொண்டு ஆடை அணிந்துவந்தால் நிர்பயாக்கள் இங்கு உருவாகமாட்டார்கள் என நினைக்கிறோம்.இழுத்துபோர்த்தப்பட்ட ஆடைக்குள் பெண் என்கிற பொக்கிசம் இருப்பதாக நினைக்கிறோம்.பொக்கிஷமா நினைக்க நினைக்க தான் அதை தீண்ட இங்கே வெறி கிளம்புகிறது.
மேலைநாடுகளில் வன்புணர்வுகள் இல்லாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் அங்கே பெண்கள் பெண்களாகவே பார்க்கப்படுகின்றனர்.
ஆகவே தமிழ்நாட்டிலும் பெண்கள் பெண்களாகவே பார்க்கப்படவேண்டும்.ஆடைகளில் மறைத்துவைக்கப்படுவது அல்ல பெண்மை.
மருத்துவர்.அனுரத்னா
கருத்துகள்