Subbiahpatturajan Google Pay, PhonePe, மற்றும் Paytm ஆகியவற்றின் உதவி மையத்தை தொடர்பு கொள்ள, பின்வரும் வழிகளையும் தொலைபேசி எண்களையும் எப்படி பயன்படுத்தலாம். இவை இந்தியாவில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் அதிகாரப்பூர்வ தொடர்பு முறைகளாகும்: 1. Google Payதொலைபேசி எண்: 1800-419-0157 (கட்டணமில்லா எண், 24/7 கிடைக்கும்). தொடர்பு கொள்ளும் முறை: Google Pay ஆப்-ஐ திறந்து, "Help & Feedback" என்ற பகுதிக்குச் செல்லவும். அங்கு சாட் ஆதரவு (8 AM - 12 AM IST) அல்லது மின்னஞ்சல் வழியாக உதவி பெறலாம்.மேலே குறிப்பிட்ட தொலைபேசி எண்ணை அழைத்து, பிரச்சினையை விளக்கி தீர்வு கேட்கலாம். குறிப்பு: பயன்பாட்டில் உள்ள "Help" பகுதியில் பிரச்சினையை பதிவு செய்தால், விரைவாக பதில் கிடைக்கும். 2. PhonePeதொலைபேசி எண்: 080-6872-7374 (வாடிக்கையாளர் ஆதரவு) அல்லது 022-6872-7374 (மாற்று எண்).தொடர்பு கொள்ளும் முறை: PhonePe ஆப்-ஐ திறந்து, முகப்புப் பக்கத்தில் உள்ள "?" (கேள்விக்குறி) ஐகானை கிளிக் செய்யவும்."Contact Us" என்ற பகுதியில் உங்கள் பிரச்சினையை தேர்ந்தெடுத்து, சாட் அல்லது மின்னஞ்சல்...
Subbiahpatturajan
க்ரிப்டோ..
க்ரிப்டோ..
ஜெரால்ட் காட்டன் என்கிற பெயரினை எத்தனைபேர்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்?
இந்த ஜெரால்ட் காட்டன் என்பவர் கனடாவின் மிகப்பெரிய கிரிப்டோ கரன்ஸி எக்ஸேஞ்சான QadrigaCX என்கிற நிறுவனத்தின் சீஃப் எக்ஸிக்யூட்டிவ். வெறும் முப்பதே வயதில் பல பில்லியன் டாலர்கள் பெருமானமுள்ள நிறுவனத்தை நடத்திக் கொண்டிருந்த ஜெரால்ட் காட்டன், 2018-ஆம் வருடம் இந்தியாவிற்கு அவரது மனைவியுடன் வந்தார்.
ஹனிமூனுக்காகவும், அனாதை இல்லம் ஒன்றினைத் திறப்பதற்காகவும் அவர் இந்தியா வந்ததாகக் காரணம் சொல்லப்பட்டது என்றாலும் நிச்சயமான வேறு காரணங்களும் இருந்திருக்க வேண்டும். ஏனென்றால் இந்தியா வந்த ஒரே வாரத்திற்குள் ஜெரால்ட் காட்டன் மர்மமான முறையில் இறந்துவிட்டார். அவர் இறந்ததற்கு உடல்நிலைக் கோளாறு சொல்லப்பட்டாலும், அதன் பின்னனியில் இந்திய அரசியல்வாதிகள் மற்றும் நிழலுலகினரின் பங்கு இருந்திருக்க வேண்டும் என்றே நான் நினைக்கிறேன்.
இறக்கையில் ஜெரால்டின் வசம் ஏறக்குறைய $215 மில்லியன் டாலர்கள் (ஏறக்குறைய 15,19,50,00,000 ரூபாய்கள்!) இருந்தது. அதற்கான பாஸ்வேர்ட் அவரிடம் மட்டுமே இருந்தது என்பதுதான் முக்கியம். அவரால் "மட்டுமே" அந்த அக்கவுண்ட்டைத் திறந்து அந்தப் பணத்தை எடுக்க முடியும். இந்தியாவில் யாரேனும் அவரை மிரட்டி அந்தப் பாஸ்வேர்டைத் தரச் சொல்லியிருக்கலாம் அல்லது அந்தப் பணம் ஏதாவது ஒரு இந்தியப் பெருந்தலைக்குச் சொந்தமாக இருக்கலாம்....இதெல்லாம் எனது யூகங்கள்தான். அதேசமயம் உண்மையாக இருக்கவும் வாய்ப்பிருக்கிறது.
இனி யாராலும் அந்தப் பணத்தை எடுக்கவே முடியாது. ஏனென்றால் க்ரிப்டோ ஒரு எலக்ட்ரானிக் கரன்ஸி. அதனை அத்தனை எளிதில் உடைத்துத் திறந்துவிட முடியாது. சத்தமில்லாமல் இந்தச் சம்பவத்தை ஊற்றி மூடி மறைத்துவிட்டார்கள்.
க்ரிப்டோ கரன்ஸிகள் மூலமாகத்தான் இதுவரையில் பணத்தை இந்தியாவிலிருந்து அனுப்பிக் கொண்டிருந்தார்கள். பல பில்லியன் டாலரகளை இதில் முதலீடு செய்து வைத்திருக்கிறார்கள்.
ஹவாலா பாதையை இந்திய அரசு பெரும்பாலும் அடைத்து வைத்துவிட்டது. முழுமையாக அடைப்பது கடினம் என்றாலும் பெரும்பாலும் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டது. எனவே எல்லா சட்டவிரோத பணப் பிரயோகங்கள் க்ரிப்டோ கரன்ஸி மூலமாகத்தான் நடந்து கொண்டிருக்கிறது. வேளாண் சட்ட மசோதாவிற்கான பணம் இதன் மூலமாகத்தான் பாய்ந்து கொண்டிருந்தது. இனிமேல் எல்லாக் கலவரங்களுக்கும் இதன் வழியேதான் பணம் வந்திருக்கும். மோடி அதன் தலையில் ஒரு பெரிய கல்லைத் தூக்கிப் போட்டிருக்கிறார்.
பிரதமர் மோடி எடுத்தேன், கவிழ்த்தேன் ஆசாமியில்லை. இதன் அத்தனை சாதக, பாதகங்களையும் நன்றாக ஆலோசித்தபிறகே இந்த முடிவிற்கு வந்திருப்பார். ஆரம்பத்தில் சிறிது பாதிப்புகள் இருந்தாலும், எதிர்காலத்திற்கு இது மிகவும் நல்லது. அதேசமயம், க்ரிப்டோ கரன்ஸியை முழுமையாகத் தடுப்பது முடியாது என்பதனையும் ஜோடித்துப் புதிதாக ஆர்.பி.ஐ. க்ரிப்டோ கரன்ஸியை அறிமுகம் செய்ய இருக்கிறார்கள். அதாகப்பட்டது இனி க்ரிப்டோ பண வர்த்தனை இந்திய மத்திய வங்கி வழியாக மட்டுமே நடக்கும்.
சட்டவிரோத பணப்பரிவர்த்தனையை மிக எளிதாக கண்டுபிடித்துவிடுவார்கள்.
உலக நாடுகள் எல்லாம் இன்றுவரையில் க்ரிப்டோ கரன்ஸியை எப்படி ஹேண்டில் பண்ணுவது என்று திகைத்து நிற்கையில் இந்தியா அதற்கு வழிகாட்டியிருக்கிறது. ஆனானப்பட்ட அமெரிக்காவிலேயே இன்னும் எந்த உருப்படியான சட்டமும் இதற்கெதிராக இல்லை. அவர்களின் காரணம் வேறுவிதமானது. எல்லாவிதமான சட்டவிரோத பணமும் க்ரிப்டோ கரன்ஸி வழியாகவே அமெரிக்காவிற்கு வந்து குவிந்து கொண்டிருந்ததால் இதுவரையில் கண்டும் காணாமலும் இருக்கிறார்கள். இனி அவர்களும் ஏதேனும் நடவடிக்கைகள் எடுத்தாகவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
தமிழ்நாட்டின் இரண்டு அழிவு, கொள்ளை, தீமைக் கழகங்களின் பெருந்தலைகள் நிச்சயமாக க்ரிப்டோ கரன்ஸியில் "ஏகப்பட்ட" முதலீடுகள் செய்திருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. அதிலும் திருடர்கள் மட்டுமே இருக்கும் தி.மு.க. இதனால் பெரும்பாதிப்பிற்கு உள்ளாகும் என நினைக்கையில் என் உள்ளம் உவகையால் துள்ளுகிறது உடன் பிறப்பே....ஏற்கனவே சீன முதலீட்டில் பல பில்லியன் நஷ்டம். க்ரிப்டோவில் எத்தனை பில்லியனோ? ஆண்டவனுக்குத்தான் தெரியும்.
வலிக்கிற இடத்தில் சரியாக ஊமைக்குத்தாகக் குத்துவது என்பது இதுதான்....
கருத்துகள்