Subbiahpatturajan Google Pay, PhonePe, மற்றும் Paytm ஆகியவற்றின் உதவி மையத்தை தொடர்பு கொள்ள, பின்வரும் வழிகளையும் தொலைபேசி எண்களையும் எப்படி பயன்படுத்தலாம். இவை இந்தியாவில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் அதிகாரப்பூர்வ தொடர்பு முறைகளாகும்: 1. Google Payதொலைபேசி எண்: 1800-419-0157 (கட்டணமில்லா எண், 24/7 கிடைக்கும்). தொடர்பு கொள்ளும் முறை: Google Pay ஆப்-ஐ திறந்து, "Help & Feedback" என்ற பகுதிக்குச் செல்லவும். அங்கு சாட் ஆதரவு (8 AM - 12 AM IST) அல்லது மின்னஞ்சல் வழியாக உதவி பெறலாம்.மேலே குறிப்பிட்ட தொலைபேசி எண்ணை அழைத்து, பிரச்சினையை விளக்கி தீர்வு கேட்கலாம். குறிப்பு: பயன்பாட்டில் உள்ள "Help" பகுதியில் பிரச்சினையை பதிவு செய்தால், விரைவாக பதில் கிடைக்கும். 2. PhonePeதொலைபேசி எண்: 080-6872-7374 (வாடிக்கையாளர் ஆதரவு) அல்லது 022-6872-7374 (மாற்று எண்).தொடர்பு கொள்ளும் முறை: PhonePe ஆப்-ஐ திறந்து, முகப்புப் பக்கத்தில் உள்ள "?" (கேள்விக்குறி) ஐகானை கிளிக் செய்யவும்."Contact Us" என்ற பகுதியில் உங்கள் பிரச்சினையை தேர்ந்தெடுத்து, சாட் அல்லது மின்னஞ்சல்...
Subbiahpatturajan
இந்தியாவின் அடர்த்தியான காடுகளில் மேற்கு தொடர்ச்சி மலை முதலிடம்.
அடிக்கடி எங்கள் ஊர்காரர்கள், வயதான நண்பர்கள் சொல்லுவார்கள்..
நாங்கள் எல்லாம் பெரும்புயல் பார்த்தது கூட இல்லை.... இது வறண்ட கந்தகபூமி என்பார்கள். கந்தக பூமி என்பது இங்குள்ள முதலாளிகள் செய்தது. இயற்கையல்ல. ஆனால் புயல் வராமல் நம்மை காப்பது மேற்கு தொடர்ச்சி மலை தான். இந்த மேற்கு தொடர்ச்சி மலை...
தென்மாவட்டங்களை காக்கும் பெரிய அரணும் இதுதான். மழை தப்பி செல்வதற்கும் காரணம் இதுதான்.
உலகில் மிகப்பழமையான மலை இதுதான்.
இமயமலை சிவன் தோன்றிய பழைய மலை என விடும் கதைகளை அறிவியல் புறந்தள்ளி இம்மலையை கொண்டாடுகிறது. இந்த மேற்கு தொடர்ச்சி மலையில் ஜெனடிக் மரபணு மரங்கள் அதிகம் கொட்டிக்கிடக்கிறது. அதாவது வயதே கண்டு பிடிக்க முடியாமல்... இருக்கும் மரங்கள் ஒர் பக்கம்.. இன்னொரு பக்கம் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக மரம் அதன் விதை என தொடர்கிறது. இந்த மலை ஒரு பேரதிசயம் என்கிறது யுனஸ்கோ.
செங்கோட்டை குற்றாலம் பக்கம் மூலிகைகள் நிறைந்திருக்கும் இந்த காடு, தேனிப்பக்கம் நெருங்கும் போது தன்னை மாற்றிக்கொள்கிறது. இடையில் நாம் கேள்வியே பட்டிருக்காத பெரும் மலர்கள் உள்ள மரங்களை குவிந்து வைத்திருக்கிறது.
ஆரல்வாய்மொழி மற்றும் தேனி பக்கம் மட்டுமே இந்த மலைத்தொடர் சற்று இடம் விட்டு இருக்கிறது. அதனாலே ஆரல்வாய்மொழி தொடங்கி காற்றாலைகள் அதிகம். தேனி அழகான காற்றுடன் கூடிய மலைப்பகுதியாக மக்களை ஈர்த்து கொண்டிருக்கிறது.
இவ்விரண்டு இடங்கள் தவிர மற்ற இடங்களில் எல்லாம் தொடர்க்கிறது மேற்கு தொடர்ச்சிமலை. 2012 ஆம் ஆண்டே மலையில் இருந்த பழங்குடியினர் கிழே இறக்கப்பட்டுவிட்டார்கள்.
விளைவு
காரணம் அவர்களை கொண்டு மற்றவர்கள் காட்டில் அடித்த கொள்ளை. அவர்கள் ஏதும் அறியாது இருந்தாலும்... அவர்களுக்கு ஆசைகாட்டி அழித்த காட்டு வளங்கள் ஏராளம். ஆகையால் அவர்களை கீழே இறக்கி இருக்கிறது.அரசு இப்போது மேற்கு தொடர்ச்சி மலையில் பழங்குடியினர் இல்லை. அரசால அங்கீகரிக்கப்பட்ட சில மலை வாழ் கிராமங்கள் உண்டு.
சிறப்புகள்
இந்தியாவின் அடர்த்தியான காடுகளில் மேற்கு தொடர்ச்சி மலை முதலிடம். சில அரிய வகை உயிரினங்கள் இங்கே வாழ்கின்றன. உதாரணம் சாம்பல் நிற அணில்கள். உலகில் வேறு எங்கும் இவை இல்லை. தவளைகளில் மட்டும் இருபத்தி ஐந்துக்கும் மேற்பட்ட வகைகள் இருக்கின்றன என்கிறார்கள். தென்மாவட்டங்களில் இருக்கும் எல்லா ஆறுகளின் தாய்மடியும் மேற்கு தொடர்ச்சி மலைதான்.
பரிதாபங்கள்
யானை, புலி, கரடி, நரி செந்நாய் உள்ளிட்ட எல்லா மிருகங்களும் வாழும் இம்மலை இன்று நீரின்று தவிக்கிறது நம்மைபோலவே. ஒரு யானை ஒரு நாளைக்கு 150 கிமீ நடந்தே தீரும், 2500 லிட்டர் தண்ணீர் குடித்தே தீரும் யார் தடுத்தாலும்.... ஆனால் இன்று அது தேடி அலைகிறது... இப்படியே மான், கரடி புலி என எல்லாம் நீரை தேடுகிறது. . அவை எப்போதோ நீர் அருந்திய குளங்களை தேடி வருகிறது. நாமே அவைகளை பிளாட் போட்டல்லவா வைத்திருக்கிறோம். பூமியில் ஓட்டை போட்டல்லவா உறிஞ்சுகிறோம்.
அதனால் கோடைகாலங்களில் விலங்குகள் தண்ணீர் தேடி அலைந்து ஒரு கட்டத்தில் உடல் மெலிந்து விழுந்து செத்துப்போகும் ..
மழை நீரில் ( அருவி ) எல்லாம் விலங்குகள் வாழ்ந்திருக்கின்றன. அவைகள் குளித்து மகிழ்ந்திருக்கின்றன. ஆனால் கொண்டாட்டம் என்ற பெயரில் எல்லாம் நாம் அவைகளின் சுதந்திரத்தை பறித்துவிட்டோம்.
இன்று ஆண்டாண்டு காலமாய் அவைகள் வாழ்ந்த இடத்தை சுற்றுலா தளமாக மாற்றி விட்டோம். நீங்களே கேள்விபட்டிருப்பீர்களே... யாருமே போகாத ஒரு அருவி இருக்காம்... நாங்க போனோம் என சிலர் பெருமை பேசுவதை.. அவையெல்லாம் விலங்குகளிடம் இருந்து புடுங்கி... யாரோ ஒரு பணக்காரர் வாங்கி... நம்மிடமெல்லாம் காசு வாங்கி அதை அனுபவிக்க விடுகிறார்.
போலீசாமியார்கள்
இன்னொரு கொடூரம் சொல்கிறார்கள், பக்தி என்பது போய் இப்போது ஒரு நாகரிகமாக மலை ஏறி சாமி கும்பிடும் போலி பக்தர்கள்.. அதிகரித்துவிட்டார்கள்.
அங்கே காடுகள் அழியத்தொடங்கிவிட்டன ஒரு பக்கம். இன்னொரு பக்கம் பெருமளவு விலங்குகள் பயந்து ஓடிவிட்டன.
திருவில்லிபுத்தூர் அருகே தாணிப்பாறை, அய்யனார் கோவில், உள்ளிட்ட இடங்களில் இருந்த மான்கள் சாம்பல் நிற அணில்கள், சிறு நரிகள் எல்லாம் இன்று காணாமல் போய் அதாவது இடம் பெயந்து போய்விட்டன பெருமளவு. காரணம் மனிதர்களின் ஆட்டம். சரக்கடித்து பாட்டில்களை அங்கயே உடைத்து அதனால் விலங்குகளில் கால்கள் பாதிக்கப்பட்டு அவை அந்த இடத்தைவிட்டு நகர்ந்து சென்றுவிட்டன.
இது போக இவர்களின் பக்தி ஓலங்கள்....
அவைகளை இடம் பெயர செய்திருக்கிறது. கூடுதலாக பக்தர்களின் வசதிக்காக போட்டப்பட ஓவ்வொரு குழாயும் அங்கே இருக்கும் இயற்கை ஊற்றை அடைத்து விடுகிறது... அவைகளை தாகத்தால் சாக வைக்கின்றன. இருபது ஆண்டுகளுக்கு முன்னர் சதுரகிரி செல்ல இவ்வளவு கூட்டம் கிடையாது. சமூகம் நன்றாக்வே இருந்தது. இன்று அது ஒரு பேஷனாகிவிட்டது. விளைவு ஒரு மலையும் விலங்களும் பாதிக்கபடுகின்றன.
மத்திய அரசின் திட்டம்
இது தான் நம்மை வாழ வைக்கும் மேற்கு தொடர்சி மலைக்கு நாம் செய்யும் நன்றி கடன். ஏற்கனவே திருநெல்வேலி, இராஜபாளையம் பக்கம் இருக்கும் தனித்த மலைகள் எல்லாம் சுரண்டப்பட்டு வருகின்றன். கற்கள் உருவாக்க. இதை காலிசெய்ய இன்னும் 5 - 8 ஆண்டுகள் ஆகும். அடுத்து அவர்கள் கவனம் மேற்கு தொடர்ச்சி மலைதான். அதற்கான வேலைகள் தான்... மதுரை - செங்கோட்டை நான்கு வழிச்சாலை. குறைந்தபட்சம் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் மலைகளை ஒட்டி அல்லது வெட்டி போகப்போகிறது இந்த சாலை. அதற்கு தான் சாகர் மாலா வருகிறது. வழக்கம் போல நாம் வேடிக்கை பார்ப்போம்.... வளர்ச்சி வேணும்ல என்று.
இதில் வேடிக்கை என்னன்னா ...
1882 வெள்ளைகாரன் உருவாக்கி வனவிலங்கு சட்டம் என்னவோ அழகாய் தானிருக்கிறது. காடுகளை காக்கும்படியும் இருக்கிறது. ஆனால் நாம் தான் என்று சட்டத்தை மதித்தோம்.. கண் முன்னாலே அழித்துக்கொண்டிருக்கிறோம். என்றேனும் மேற்குதொடர்ச்சி மலையை பார்க்கும் போது நினைவில் கொள்ளுங்கள்... அம்மலையில் இருக்கும் பறவைகள் கொடுத்த மரங்கள் ஏராளம் இந்த தமிழகத்தில், அம்மலை கொடுத்த விதைகள் ஏராளம், அம்மலை கொடுத்த காற்று தான் இன்றும் நம் வெப்பத்தை குறைத்துக்கொண்டிருக்கிறது, அம்மலை கொடுக்கும் கொடை தான் பருவமழையாவது பெய்து வருவது... கூடவே இன்னொன்ற்றையும் நினைவில் கொள்ளுங்கள்... அது அழிக்க தொடங்கிய தலைமுறையும் ... வேடிக்கை பார்க்கும் தலைமுறையும் நீங்கள் தான் என்பதையும்...
மனிதன் சகமனிதனை கொல்வதை விட கொடியது.. இயற்கையை கொல்வது. அதை தொடங்கி இன்று பாதிக்குமேல் கடந்துவிட்டோம். அதற்கு நானும் ஒரு சாட்சி. இதை படிக்கும் நீங்களும் ஒரு சாட்சி.
கருத்துகள்