Subbiahpatturajan Google Pay, PhonePe, மற்றும் Paytm ஆகியவற்றின் உதவி மையத்தை தொடர்பு கொள்ள, பின்வரும் வழிகளையும் தொலைபேசி எண்களையும் எப்படி பயன்படுத்தலாம். இவை இந்தியாவில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் அதிகாரப்பூர்வ தொடர்பு முறைகளாகும்: 1. Google Payதொலைபேசி எண்: 1800-419-0157 (கட்டணமில்லா எண், 24/7 கிடைக்கும்). தொடர்பு கொள்ளும் முறை: Google Pay ஆப்-ஐ திறந்து, "Help & Feedback" என்ற பகுதிக்குச் செல்லவும். அங்கு சாட் ஆதரவு (8 AM - 12 AM IST) அல்லது மின்னஞ்சல் வழியாக உதவி பெறலாம்.மேலே குறிப்பிட்ட தொலைபேசி எண்ணை அழைத்து, பிரச்சினையை விளக்கி தீர்வு கேட்கலாம். குறிப்பு: பயன்பாட்டில் உள்ள "Help" பகுதியில் பிரச்சினையை பதிவு செய்தால், விரைவாக பதில் கிடைக்கும். 2. PhonePeதொலைபேசி எண்: 080-6872-7374 (வாடிக்கையாளர் ஆதரவு) அல்லது 022-6872-7374 (மாற்று எண்).தொடர்பு கொள்ளும் முறை: PhonePe ஆப்-ஐ திறந்து, முகப்புப் பக்கத்தில் உள்ள "?" (கேள்விக்குறி) ஐகானை கிளிக் செய்யவும்."Contact Us" என்ற பகுதியில் உங்கள் பிரச்சினையை தேர்ந்தெடுத்து, சாட் அல்லது மின்னஞ்சல்...
Subbiahpatturajan
இரண்டாம் வகுப்பு ஆசிரியை வாய்ப்பாடு ஒன்றை கரும்பலகையில் எழுதினார்.
இந்த வாய்ப்பாடு எழுத ஆரம்பித்தது முதல்....,
வகுப்பறை முழுவதும் சிரிப்பொலி தொடர்ந்தது.
காரணம்,
முதல் வரியில் வாய்ப்பாடு பிழையாக எழுதப்பட்டிருந்தது
1×9=7, ❌
2×9=18, ✔️
3×9=27, ✔️
4×9=36, ✔️
5×9=45, ✔️
6×9=54 ✔️
7×9=63 ✔️
8×9=72 ✔️
9×9=81 ✔️
10×9=90 ✔️
*மாணவர்களைச் சிரிக்கத் தூண்டியது.*
சமன்பாட்டை எழுதி முடித்து மாணவர்களை பார்த்த ஆசிரியை....., சிறிது நேரம் அமைதியாக இருந்து விட்டு பேசத் துவங்கினார்...
நான் 9வது வாய்ப்பாட்டை பிழையாக எழுதியிருக்கின்றேன்.
இதன் மூலம் உங்களுக்கொரு உண்மையை புரியவைக்கப் போகிறேன்.
இந்த உலகம் உங்களை எப்படி விமர்சிக்கும் என்பதை நீங்கள் இதன் மூலம் புரிந்து கொள்வீர்கள்.
நான் இங்கு 9 முறைகள் மிகச் சரியாக எழுதியிருக்கின்றேன்.
அதற்காக நீங்கள் யாரும் என்னைப் பாராட்டவில்லை.
ஆனால், நான் பிழையாக எழுதிய ஒரே ஒரு விஷயத்தைக் மட்டும் கவனித்து....... அனைவரும் சிரித்து கேலி செய்கிறீர்கள்.
நீங்கள் இலட்சம் தடவைகள் விஷயங்களைச் சரியாக செய்த போதிலும்......, இந்த உலகம் உங்களை ஒரு போதும் பாராட்டப் போவதில்லை.
ஆனால் நீங்கள் செய்த ஒரு பிழையைத் தான் உலகம் கவனிக்கும். அதையே மிகக் கீழ்த்தரமாக விமர்சிக்கும்...
இவைகளைக் கண்டு ஒரு போதும் தளர்ந்து விடாதீர்கள்.
இறைவன் நமக்காக அளித்திருக்கும் இந்த அரிய மனிதப் பிறப்பை
கொண்டாடுங்கள்.
உங்கள் வாழ்க்கையைக் கொண்டாடுங்கள்.
இந்த உடல் நம்முடன் இருக்கும்வரை நம்மால் முடிந்தவரை சிறப்பாக வாழ்ந்து விட்டுச் செல்ல வேண்டும்.
காலத்தைப் போல் மிகப்பெரிய பொக்கிஷம் எதுவும் இல்லை.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் மிகப்பெரிய பொக்கிஷம் அதை தயவு செய்து வீணாக்காதீர்கள்.
உங்கள் வாழ்வின் ஒவ்வொரு வினாடியையும் வாழ்ந்து விடுங்கள்...
எதை எதையோ வீணாக்கக் கூடாது என்று நினைக்கும் நாம்
அரிய பொக்கிஷமான ...
மீண்டும் பெற முடியாத...
நமது வாழ்க்கையை சில நேரங்களில் தேவையில்லாதவற்றை சிந்தித்து வீணாக்கிக் கொண்டிருக்கிறோம்....
உங்களுக்கு மகிழ்ச்சியை (பிறரை கஷ்டப்படுத்தாமல்) தராத எந்த ஒரு விஷயத்திற்கு உங்கள் நேரத்தை செலவழித்தாலும் அந்த நேரத்தில் நீங்கள் வாழ்க்கையை வாழ்ந்ததற்கான அர்த்தமில்லை...
உங்கள் வாழ்வின்
ஒவ்வொரு நொடியையும் வந்துவிடுங்கள் ..
முடிந்தவரை பிறருடன் நல்ல வார்த்தைகளையும் வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்..
காரணமின்றி மகிழ்ச்சியாக இருக்க கற்றுக் கொள்ளுங்கள்.
வாழ்க்கை வசந்தமாகும்.
உங்கள் கவலைகளும் கஷ்டங்களும் நிரந்தரமல்ல.
அதிசயங்கள் இன்றே கூட நிகழலாம்.
நம்பிக்கையுடன் இருங்கள் .நல்லதே நடக்கும். 😊
உங்களைப் பார்த்து சிரித்தவர்கள், உங்களை விமர்சித்தவர்கள் முன்னால் ....., உயர்ந்து நிற்கும் முயற்சியில் உறுதியாக நில்லுங்கள்.
கருத்துகள்