பாகிஸ்தானில் பொருளாதார வீழ்ச்சி இரண்டு மூன்றாக உடையும் அபாயத்தில்...?

Visit My Links

YouTube Channel Website
முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Latest Posts

"என் இனிய பொன் நிலாவே காப்புரிமை விவகாரம்: ஹைகோர்ட் அதிர்ச்சி தீர்ப்பு!"

Subbiahpatturajan "என் இனிய பொன் நிலாவே". ஹைகோர்ட்டின் முக்கியமான  தீர்ப்பு என்ன சொல்கிறது? தமிழ் சினிமாவின் இசைஞானி என போற்றப்படும் இளையராஜா... இசையமைத்த, பலரது மனதில் இன்னும் ஒலிக்கின்ற பாடல்களில் ஒன்று  "என் இனிய பொன் நிலாவே". ஆனால், சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம் (Madras High Court) இந்த பாடலின் காப்புரிமை தொடர்பாக ஒரு முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது. 🔍 இந்த வழக்கின் பின்னணி என்ன? “என் இனிய பொன் நிலாவே” பாடல் 1981ஆம் ஆண்டு வெளியான Moodupani திரைப்படத்தில் இடம்பெற்றது. இப்படத்தை தயாரித்தது "Sujatha Cine Arts". பாடலின் வரிகள் வாலி எழுதியது; இசை இளையராஜா. இந்த பாடலுக்கான மூல உரிமை (Copyright Ownership) யாருக்கென்கிற கேள்வியில், இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் இடையே பல ஆண்டுகளாக கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. ⚖️ ஹைகோர்ட் என்ன தீர்ப்பு கூறியது? 2024ஆம் ஆண்டு, சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் கூறப்பட்டது: > "திரைப்படங்களுக்காக உருவாக்கப்படும் பாடல்களின் முழுமையான காப்புரிமை, திரைப்பட தயாரிப்பாளருக்கே சொந்தமா...

பாகிஸ்தானில் பொருளாதார வீழ்ச்சி இரண்டு மூன்றாக உடையும் அபாயத்தில்...?

Subbiahpatturajan

பாகிஸ்தானில் பொருளாதார வீழ்ச்சி இரண்டு மூன்றாக உடையும் அபாயத்தில்...?

பாகிஸ்தானில் பொருளாதார வீழ்ச்சி இரண்டு மூன்றாக உடையும் அபாயத்தில்...?



உலக அரங்கில் ஒரு கப்பல் முழுக்க நீர்புகுந்து மூழ்கும் தருவாயில் இருக்கின்றது இனி அது அப்படியே மூழ்குமா இல்லை இதர கப்பலின் உதவியால் அதன் ஆயுள் நீட்டிக்கபடுமா என்பதுதான் இப்போது எழும் கேள்வி

அந்த கப்பலின் பெயர் பாகிஸ்தான்


இந்தியா எனும் வளமான நாட்டில் இருந்து அந்நாடு பிரிக்கபட்டதே இந்தியா எக்காலமும் பலம்பெற்றுவிட கூடாது என்பதன்றி வேறல்ல‌

ஆப்கானியரின் மொகலாயர் இந்தியாவினை ஆண்ட காலங்களில் அது உலகின் முதல் இட நாடாக இருந்ததை வியாபாரியாக வந்த வெள்ளையன் கவனித்தான் அவன் ஆளும்பொழுதும் இந்திய செல்வத்தின் வளம் அவனுக்கு புரிந்தது

இந்நாட்டை அப்படியே விட்டு செல்லாமல் இதற்கு தலையடி கொடுத்து இந்நாடு தன் காலடியில் விழுந்து கிடக்க வழிதேடித்தான் பாகிஸ்தானை உருவாக்கி கிழக்கே வங்கத்தை உடைத்து அதையும் கொடுத்து சிட்டகாங் என துறைமுகத்தையும் கொடுத்தான்

ஒருவகையில் கராச்சி சிட்டகாங் என இருபெரும் துறைமுகங்களுடன் பெரும் எதிர்காலம் பாகிஸ்தானுக்கு இருந்தது


ஆனால் ஒருவித முரட்டு எதிர்ப்பில் பிரிந்த நாடு என்பதால் இஸ்லாமியருக்கு தனிநாடு வேண்டும் என்ற நோக்கில் பிரிந்தார்களே தவிர நாட்டை முன்னேற்றும் திட்டமோ கடப்பாடோ அவர்களுக்கு இல்லை

அவர்களின் மிகபெரிய முதல் அதிர்ஷ்டம் நேரு, அவர் மட்டும் பாகிஸ்தானை எதிரியாக கருதியிருந்தால் தொடக்கத்திலே அந்நாடு எத்தியோப்பியா அல்லது ஆப்கன் நிலைக்கு சென்றிருக்கும்

ஆனால் அணிசேரா கொள்கை என குழப்பினார், சீனா சோவியத் யூனியன் எனும் நாடுகளை எதிர்க்க இந்தியா சரியான நாடு என அமெரிக்கா கணித்தபொழுது நேரு சீனா, சோவியத் யூனியன் பக்கம் இருந்து ஒரு குழப்பமான கொள்கை சொல்லி அமெரிக்காவினை கடுப்பேற்றினார்
வேறுவழி இல்லா அமெரிக்கா பாகிஸ்தானை கையில் எடுத்து வளர்த்தது

பாகிஸ்தானின அடுத்த அதிர்ஷ்டம் அரபுநாடுகளின் எண்ணெய் வளம், இந்திய எதிர்ப்பில் அமெரிக்க உதவியுடன் பலமான ராணுவத்தை கொண்டிருந்த அந்த இஸ்லாமிய நாட்டினை அரபுநாடுகள் தாங்கின‌

அடுத்து இந்தியாவினை எதிர்க்க சீனா கொடுத்த ஆசி


இந்த வழிகளில்தான் பாகிஸ்தான் பொருளாதாரமே இருந்தது, ஆப்கன் போன்ற நாடுகளுக்கு பாகிஸ்தான் ஊடாக வழி செல்வதால் ஏக கொண்டாட்டம்

பாகிஸ்தானின் முதல் அடி கிழக்கு பாகிஸ்தானை இழந்தது எனினும் இந்திய எதிர்ப்பு எனும் ஒரு காரணத்தை கொண்டு பல நாடகங்களை நடத்தி வசூலில் பின்னிகொண்டிருந்தது

அதே நேரம் காங்கிரஸுக்கும் பாகிஸ்தானுக்கும் ஒரு ரகசிய உறவு இருந்தது என்பதும் தியரி, இந்தியா நினைத்திருந்தால் பாகிஸ்தானை என்றோ முடக்கியிருக்கலாம் ஆனால் ஒரு ரகசிய இழை அவர்களுக்குள் இருந்தது என்பதும் இந்த இழையினை பின்னி கையில் வைத்திருந்தது வல்லரசான சக்தி ஒன்று என்பதும் உலக அரசியலில் கசிந்த செய்திகள்

இப்படியெல்லாம் இந்தியாவுடன் திரைமறைவில் உதவி பெற்று திரைக்கு முன்னால் ஒரு நாடகமாடி ஏதோ செய்து கொண்டிருந்தது பாகிஸ்தான் ஆனால் மனதில் எக்காலமும் இந்தியாமேல் தீரா வஞ்சம் உண்டு

மோடி அரசு வந்ததும் அது செய்த முதல் வேலை பாகிஸ்தானின் பொருளாதாரத்துக்கு ஸ்கெட்ச் போட்டது


முதலில் அணிசேரா கொள்கையினை தூக்கி எறிந்து அமெரிக்க அணியில் சேர்ந்தது, 1950 முதலே இதற்கான வாய்பினை எதிர்பார்த்த அமெரிக்கா ஓடிவந்து சேர்ந்து கொண்டது, இந்தியாவினை மீறி அவர்களால் பாகிஸ்தான் பக்கம் செல்லமுடியவில்லை

அதுவும் சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் முறுகல் முற்றும் நேரம் சீன கூட்டாளியான பாகிஸ்தானை விட சீன எதிரியான இந்தியாவே அவர்களுக்கு விருப்பம்

மோடியின் அடுத்த அடி அரேபியாவில் விழுந்தது


அது மிகபெரிய ஆச்சரியம், ஒரு இந்துதேசம் அதுவும் இஸ்லாமியருக்கு எதிரி என கருதபட்ட மோடியின் தேசம் அரபுலகில் அந்த ஆச்சரியத்தை செய்தது

வளைகுடாவில் ஒரு அணியினை உருவாக்கி பாகிஸ்தானை தனிமைபடுத்தியது இந்தியா, மிக நிதானமாக இஸ்ரேலுடன் உறவுபாராட்டி அரேபியாவில் துருக்கி அணி துருக்கி இல்லா அணி என ஒன்றை உருவாக்கி பாகிஸ்தானை துருக்கி அணிக்கு தள்ளியது

பாகிஸ்தானின் மிகபெரிய ஆபத்து சீனா, அமெரிக்கா போல் சீனா விட்டுகொடுக்கும் நாடு அல்ல என தெரியாமல் சிக்கி கொண்டார்கள்


சீனா தன் ஒன் பெல்ட் ஒன் ரோடு உள்ளிட்ட பல திட்டங்களில் பாகிஸ்தான் சீனாவுக்கு இடமளித்தது, வஞ்சக சீனா பாகிஸ்தான் நிலத்தில் தன் திட்டத்தை தன் பணத்தில் நிறைவேற்ற பாகிஸ்தானுக்கு கடன் கொடுத்து வட்டியும் கேட்டு கொடுமைபடுத்தியது

நிச்சயம் நிலம் எங்களுடையது பணம் உங்களுடையது பலன் இருவருக்கும் என கேட்க வேண்டிய பாகிஸ்தான் ஏமாந்தது

நிலம் எனக்கு, பணம் எனக்கு, வட்டியும் எனக்கு என வரிந்து கட்டுகின்றது சீனா


சீனாவின் இந்த மிகபெரும் நெருக்கடியில் பாகிஸ்தான் சிக்கி இருக்கின்றது, இனி அந்நாடு தன் துறைமுகம் அல்லது சில பரப்புகளை சீனாவிடம் விற்க வேண்டும் அல்லது தற்கொலை செய்ய வேண்டும்

தற்கொலை என்றால் வேறொன்றுமில்லை இந்திய அணியிடம் சரணடைவது


ஆம், இந்தியா சீன வாயில் சிக்கிய ஒவ்வொருவரையும் தன் பணத்தால் மீட்டெடுக்கின்றது, நேபாளத்தில் இந்தியா தன் பணத்தை செலவழித்து சீன கடன்களை அடைத்து நேபாளத்தை மீட்டது

இலங்கையிலும் அதையே செய்து இப்பொழுது சீனாவின் கடனை அடைக்க உதவி இலங்கையினை தன் பக்கம் எடுக்கின்றது


மியன்மாரிலும் அதையே செய்கின்றது இந்தியா

உண்மையில் இந்தியாவால் இப்பொழுது பாகிஸ்தானுக்கு உதவி காக்க முடியும், ஆனால் எந்த நம்பிக்கையில் உதவுவது?


அமெரிக்காவினை மீறி பாகிஸ்தானுக்கு உதவும் சக்தி கொண்ட ஒரே நாடு சீனா இப்பொழுது அவர்கள்தான் பாகிஸ்தானை விழுங்க தயாராய் நிற்கின்றார்கள்

இனி பாகிஸ்தான் அமெரிக்கா பக்கம் சாயவேண்டும் அல்லது சீனாவிடம் சிக்க வேண்டும்

அமெரிக்கா பக்கம் சாய்ந்தால் அங்கிருக்கும் இந்தியாவோடு அவர்கள் சரணடைய வேண்டும் கூடவே ஆப்கனையும் கைகழுவ வேண்டும் இதெல்லாம் இல்லாமல் பாகிஸ்தான் இல்லை

இந்திய எதிர்ப்பை கைவிடுதல் என்பது தற்கொலைக்கு சமம் ஆனால்  வேறு வழியில்லை

சீன கடன்களை கொடுக்க பணமில்லை, பாகிஸ்தானின் பொருளாதாரமும் அதால பாதாளத்தில் கிடக்கின்றது


இரு தேசங்களும் ஒன்றாகத்தான் பிரிந்தன, ஆனால் இந்தியா தன் பொருளாதாரத்தை வளர்த்து எங்கோ சென்றுவிட்டது

தீவிரவாதத்தை மட்டும் வளர்த்த பாகிஸ்தான் இன்று நாசமாய் கிடக்கின்றது

இந்தியாவினை வளரவிடாமல் செய்ய அதன் அருகில் வெள்ளையனால் அமர்த்தபட்ட ஒரு அடியாள் பாகிஸ்தான், அந்த அடியாள் திருந்தினால் வெள்ளையன் கனவு பலிக்காது என நேரு அவர்கள்மேல் வாஞ்சையுடன் இருந்தார்

இந்திரா தீவிரம் காட்டினாலும் சீக்கிய காலிஸ்தான் பின்னால் இருந்து எழுந்த சதி அம்பு அவரை வீழ்த்திற்று

அதன் பின் காங்கிரஸில் என்னவெல்லாமோ நடந்து பாகிஸ்தான் தாக்கு பிடித்தது

இந்திய அரசு 70 ஆண்டு முன்பு செய்யவேண்டிய காரியங்களை இப்பொழுது செய்தது, ராஜீவ்காந்தி  இந்திராவுக்கு செய்தி சதி போலவே சீக்கியர் மூலம் குறிவைக்கபட்டது

ஆனால் மோடி லாவகமாக தப்பி இப்பொழுது பாகிஸ்தானை முழுக்க சரித்திருகின்றார், 

விரைவில் வரலாறு காணா நெருக்கடியில் பாகிஸ்தான் சிக்கும் அந்நாடு சில துண்டுகளாக உடையவும் வாய்ப்பு அதிகம்


வெள்ளையன் உருவாக்கிய காங்கிரஸ் பாகிஸ்தானை உடையாமல் காத்ததையும், சுத்தமான இந்தியரின் ஆட்சியில் அந்த ஆபத்து நீங்கி உடைவதையும் காலம் காட்டி கொண்டிருக்கின்றது



கருத்துகள்

Popular post

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

தலைவர் பிரபாகரன்- மதிவதனி அவர்களின் காதல் கதை 💕

Subbiahpatturajan தலைவர் பிரபாகரன்- மதிவதனி அவர்களின் காதல் கதை 💕 பிரபாகரன் வீட்டைவிட்டு வெளியில் வந்து தமிழீழ சுதந்திரத்திற்கான போராட்டத்தை தொடங்கிய பிறகு, 1983ஆம் ஆண்டு கருப்பு ஜூலை இனப்படுகொலை சிங்கள அரசினால் திட்டமிட்டு நிறைவேற்றப்பட்டது. தென் இலங்கையில் இருந்து பெரும்பாலான மக்கள் வடக்கில் குடியேறினர். மேலும் யாழ்ப்பாண பல்கலையில் படித்த தமிழ் மாணவர்களையும் வெளியேற்றும் முயற்சிகளில் இறங்கியது அரசு . அந்த நிலையில் 9/1/1984 அன்று 5 மாணவர்கள் மற்றும் 4 மாணவிகள் காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கினர். மக்கள் ஆதரவு மாணவர்களின் உண்ணாவிரதத்திற்கு பெருகியது. ஆனால் இலங்கை அரசு இந்த உண்ணாவிரதத்தை கண்டு கொள்ளவில்லை. 15ம் தேதி உண்ணாவிரதம் ஆரம்பித்த ஆறாம் நாள் மாலை மாணவர்களை பரிசோதித்த மருத்துவர் ஒரு மாணவி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறார் என்று அறிவித்தார். அன்று இரவு விடுதலைப் புலிகள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் மாணவர்களை உண்ணாவிரதப் பந்தலில் இருந்து கடத்திச் சென்றனர். புலிகள் அமைப்பினர் இந்த மாணவர்கள் சாவதை நாங்கள் அனுமதிக்க இயலாது என்று மக்களிடம் துண்டறிக்கை மூலம் தகவல் தெரிவித்தனர். உண்...

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற...

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் க...

நம் மொபைல் போனில் சேமித்து வைக்க வேண்டிய முக்கியமான மற்றும் அவசியமான தொடர்பு எண்கள்!!

Subbiahpatturajan நம் மொபைல் போனில் சேமித்து வைத்திருக்க வேண்டிய முக்கியமான மற்றும் அவசியமான தொடர்பு எண்கள்!! அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்.... ஒரு வாகனத்தின் பதிவு எண்ணைக் கொண்டு, அதன் உரிமையாளர் பெயரை உடனே தெரிந்துகொள்ளலாம். 0 921 235 7123 என்ற எண்ணுக்கு "vahan<space>பதிவு எண்" என்று அனுப்ப வேண்டும். எடுத்துக்காட்டு: vahan tn74a0000 அடுத்த விநாடியே வாகன உரிமையாளரின் பெயர், வாகனத்தின் வகை, வரி செலுத்திய விபரம், தகுதிச் சான்று முடிவடையும் தேதி ஆகிய விபரங்கள் தாங்கிய SMS வந்துவிடும். விபத்து நிகழ்த்திவிட்டு நிற்காமல் செல்லும் வாகனங்களை உடனடியாக கண்டுபிடிக்க இந்த சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தமிழ்நாடு registration number விபரங்கள் பின்வருமாறு: TN01 - சென்னை (மத்திய) TN02 - சென்னை (வடமேற்கு) TN03 - சென்னை (வட கிழக்கு) TN04 - சென்னை (கிழக்கு) TN05 - சென்னை (வடக்கு) TN06 - சென்னை (தென்கிழக்கு) TN09 - சென்னை (மேற்கு) TN10 - சென்னை (தென்மேற்கு) TN11 - தாம்பரம் TN11Z - சோழிங்கநல்லூர் TN16 - திண்டிவனம் TN18 - REDHILLS TN18Z - அம்பத்தூர் TN19 - செங்கல்பட்...

திருமணம் ஆன கணவன் மனைவிக்கு நினைவில் வைக்க வேண்டிய விஷயங்கள்..!!

Subbiahpatturajan கணவன் மனைவி புரிதலுடன் வாழ திருமணம் ஆன கணவன் மனைவிகளுக்கு நினைவில் வைக்க  வேண்டிய விஷயம் ஒன்றே ஒன்று ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி அன்பும் பரிசும் தாம்பத்யத்துக்கு உறுதி ஆம் இன்று காதலிலும் திருமண பந்தத்திலும் தொடக்கத்தில் இருக்கும் அன்பும் பரிசு பரிமாற்றமும் நாளாக நாளாக குறைந்து மறைந்து இல்லாமலே போய்விடுகிறது அங்கு தான் தம்பதிகளுக்குள் பிரிவும் தொடங்கி விடுகிறது தாம்பத்யம் என்று சொன்னவுடன் பலருக்கு அச்சமும் அருவறுப்பும் முகத்தில் பிரதிபலிக்கும் அது தேவையே இல்லை தாம்பத்யம் என்பது எளிமையான அன்புப் பகிர்தல் என்று எல்லா ஆண்களும் பெண்களும் புரிந்து கொள்ள வேண்டியது மிக அவசியம்  இரண்டு அறை கொண்ட வீட்டில் கூட்டு குடும்பமாக நான்கு தம்பதிகள் வாழ்ந்த காலத்தில் கூட அன்யோன்யமாக இருந்த கணவன் மனைவி உறவு இப்போது தனி குடும்பமாக மூன்று தனி தனி அறைகள் உள்ள வீட்டில் வாழும் போது விலகி போயிருக்கிறது என்றால் இவர்கள் தாம்பத்யம் சிறக்கவில்லை என்றே அர்த்தம் திருமணம் என்ற பந்தத்தில் உரிமை கிடைத்த ஒரே காரணத்தினாலே உடல் உரிமை பெற்று கணவன் மனைவி இணைந்திருப்பது மட்டுமே தாம்பத்யம் அல்ல பாரத...

வந்த ரயில் திருட்டு ரயில் இல்லை... வந்தவன் தான் திருடன் யார் அவன்...?

Subbiahpatturajan மறந்து போவது மக்களின் இயல்பு அடிக்கடி அதை நினைவு படுத்துவது  நமது கடமையும் கூட.!! 1968களில் #கருணாநிதி வாழ்வில்  நடந்த உண்மை சம்பவம்... இன்றைய தலைமுறையினரில் பெரும்பான்மையினருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. யார் இந்த கருணாநிதி. ? ? அப்போது முதன் முறையாக முதல்வர் பதவியில் கருணாநிதி அமர்ந்த நேரம்... பல தலைமுறைக்கும் தான்தான் முதல்வராக இருக்க வேண்டும் என அடித்தளம் அமைத்துக் கொண்டிருந்த நேரம் அது. அதே காலகட்டத்தில் தான்  ‘#ஜவகரிஸ்ட்’என்ற பத்திரிக்கையும்  வெளி வந்து கொண்டிருந்தது!  அதன் ஆசிரியர் வேறு யாருமல்ல..  கருணாநிதி மேடையேறி பேச உழைத்துக்கொண்டிருந்த "என்.கே.டி. #சுப்பிரமணியம்" என்பவர் தான். அவர் நடத்திய ஜவகரிஸ்ட் பத்திரிக்கையில், (ஜனவரி5, 1968) சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றில், ராசாத்தி என்கிற தர்மாம்பாளுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.  மருத்துவமனையின் பதிவேட்டில் அந்த பெண் குழந்தைக்கு தகப்பனார் மு.கருணாநிதி என்று குறிப்பிடப் பட்டிருக்கிறது. யார் இந்த கருணாநிதி?என்ற ஒரு  பெட்டி செய்தியை வெளியிட்டிருந்தார். அந்த செய்தி முதல்வ...

Try this to live fully in New Year 2025...

Subbiahpatturajan  புது வருடம் 2021ல் *நமது வருமானம் குறைவாக இருந்தாலும்*,நிறைவாக வாழ பழகலாமே !இதை செய்து பாருங்கள். நமது உடல் ஆரோக்கியத்திற்கு  மிக சிறந்த உணவை நம்மால் உண்ணமுடியும்.   உதாரணமாக-- 1.  ரெடிமேடாக விற்கும் நெல்லிக்காய் வத்தல். (தினமும்ஒன்று) 2.  விஷம் கலந்துள்ள சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் / நாட்டு சர்க்கரை. 3.  பிரிட்ஜில் வைக்காத பொருள்கள். 4.  ஒரு கேரட்டுடனும் , (அல்லது) சிறிது தேங்காயுடனும் ஒரு பேரீச்சம் பழத்தை சிறுக சிறுக கடித்து ஒன்றாக சுவைப்பது. (இது --- கண்ணுக்கும், இரத்தம் அதிக மாவதற்கும், அறிவிற்கும், ஞாபக சக்திக்கும்  நல்லது.) 5.     80 சதம் கெமிக்கல்கள் உள்ள பாக்கெட் பாலை தவிர்ப்பது நல்லது. 6.   தண்ணீராகவே இருந்தாலும் நாட்டு பாலை வாங்க முயற்சிக்கலாமே. 7.   முடிந்தவரை பழுப்பு நிறத்தில் உள்ள கல் உப்பை மட்டுமே பயன்படுத்தலாமே. 8.   சாதத்தை வடித்து சாப்பிடலாமே. 9.   வடித்த கஞ்சியை பழய சாதம் தயாரிக்க பயன்படுத்தலாமே. 10.   இரண்டு லிட்டர் தண்ணீர் குடிக்கும் பாத்திரத்தை...

வெட்டுக் கிளியை கட்டுப்படுத்த உழவர்களின் சிறந்த நண்பன் இந்த ரெட்டைவால் குருவி

Subbiahpatturajan வெட்டுக்கிளிக்கும் கரிச்சான் குருவிக்கும் இருக்கும் தொடர்பு பத்தி பார்ப்போம்!! வெட்டுக்கிளி பற்றி பேசும் போது இவனை பற்றி பேசாமல் இருக்க முடியாது... ஆமாம் இவனின் பிரதான உணவே வெட்டுக்கிளி தான்...  இவர்கள் ஒரு மணி நேரத்திற்கு சுமார் 150 பூச்சிகளை வேட்டையாடி உண்பவர்கள்.   ஒரு நாளைக்கு எவ்வளவு பூச்சிகளை உண்ணுகிறார்கள் என நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.  வயிறு நிறம்பியபிறகு சாப்பிடும் பூச்சிகளை ஒன்றிரண்டாக அரைத்து வெளியில் கக்கிவிடுகிறார்கள். அப்படி கக்கிய பூச்சிகள் மண்ணிற்கு சிறந்த உரமாக செயல்படுகிறது. இவனை போன்றவர்களின் எண்ணிக்கை குறைய குறைய வெட்டுக்கிளிகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கும்... அவன் தான் கரிச்சான் குருவி... இவனுக்கு மாட்டுக்காரன், ரெட்டைவால் குருவி, வால் நீண்ட கருங்குருவி என்றெல்லாமும் பெயர்கள் உண்டு. கரிச்சான் குருவிகள் கிராமப்புறங்களில்  ஆடு மாடுகளை மேய்க்க ஓட்டிச் செல்லும் போது அவற்றின் மீது உட்கார்ந்து சவாரி செய்யும். அப்போது ஆடு மாடுகளின் கால்கள் செடிகளில் உட்கார்ந்து இருக்கும் வெட்டுக்கிளி, வண்ணாத்திப் பூச்சி இவற்றைக் ...

இந்திய ராணுவ பணியான அக்னிவீர் ஆட்சேர்ப்பு முகாம் தமிழ்நாட்டில் நடைபெறுகிறது நவம்பர் 15

Subbiahpatturajan வேலூர் மாவட்டத்தில் இந்திய ராணுவ பணியான அக்னிவீர் ஆட்சேர்ப்பு முகாம் நடைபெறுகிறது  இந்திய ராணுவத்தில் அக்னிவீர் உள்ளிட்ட பணிகளுக்கான  ஆட்சேர்ப்பு முகாம் வேலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலைகளின் விபரங்கள் :   அக்னி வீரர் (ஆண்); அக்னி வீரர் (பெண் ராணுவ காவலர்); சிப்பாய் தொழில்நுட்ப செவிலியர் உதவியாளர்/ கால்நடை செவிலியர் உதவியாளர்;  இளநிலை சேவை அதிகாரி (மத போதகர்) உள்ளிட்ட பணிகளுக்கு இந்த ஆட்சேர்க்கை முகாம் நடத்தப்படுகிறது. முகாம் நடைபெறும் நாள் : நவம்பர் 15ம் தேதி முதல் 29ம் தேதி வரை முகாம் நடைபெறும். தமிழகம், ஆந்திர பிரதேசம் மற்றும் தெலங்கானாவில் இருந்து ஏற்கனவே பதிவு செய்த விண்ணப்பதாரர்கள் இந்த முகாமில் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பதிவு ஆவணங்கள் கட்டாயம் எடுத்துவரவேண்டும்:   www.joinindianarmy.nic.in  என்ற இணையதளத்தில் வேலூர் ஆட்சேர்ப்பு  முகாம் குறித்த அறிவிப்பு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில், குறிப்பிடப்பட்டு...