Subbiahpatturajan கவலைகளின் தொழிற்சாலையே ஒருவருடைய மனது தான். '' கவலைக்கு இடம் தராதீர்கள்..'' "இருப்பதைக் கொண்டு நிறைவாக வாழக் கற்றுக் கொள்" "போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து" "பொறுத்தார், பூமியாள்வார்" இப்படிப் பல பழமொழிகள்,நம் ஒவ்வொரு சூழ்நிலைக்கும் பொருந்துமாறு நம் முன்னோர்கள் சொல்லிச் சென்று இருக்கிறார்கள். இருந்தாலும் நம் மனம் ஏதோ ஒரு நினைவில் சிக்கிக் கொண்டு அதைப் பற்றியே கவலை கொள்கிறது.அதில் இருந்து மீள்வது இல்லை. ஒவ்வொரு மனிதனுக்கும், ஒவ்வொரு விதமான கவலைகள் இருக்கிறது. ஏன் கவலை வருகிறது? நாம் நினைத்தது அல்லது எதிர்ப்பார்த்தது நடைபெறவில்லை என்றால், கவலை நம்மை ஆட்கொள்ளும். இந்த உலகில் கவலை இல்லாமல் மனிதர்கள் எங்கேயும் இருக்க முடியாது.. இருப்பவர், இல்லாதவர் என்ற பாகுபாடு இல்லாமல் எல்லோரும் ஏதோ ஒரு வகையில் கவலைப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறார்கள். கவலைப்படும் போது அதைப்பற்றியே நினைத்துக் கொண்டே இருப்பார்கள்.. மனிதர்களின் இயல்பு நிம்மதி இல்லாமல் தவிப்பார்கள்..என்ன செய்வது என்று தெரியாமல் படபடப்புடன் எப்போதும் காணப்படுவார்.. இந்த...
We will create a better society by sharing good information.