முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஆட்டுக்கல் மழைமானி என்றால் என்ன.?

Subbiahpatturajan அன்றைய காலகட்டத்தில் எப்படி நிலத்தடி நீர்மட்டம் கணக்கிட பட்டது..? பனை மரம் தான்... ஆகவே பனைமரம் காய்ந்து போனால்...... நீங்களே புரிந்து கொள்ளுங்கள்.......  பனை மரத்தில் எவ்வளவு அறிவியல் ......  மறைக்கபடும் வரலாறு  உங்களுக்கும் தெரிய வாய்ப்பில்லை.!  தெரிந்து கொள்ளுங்கள் பழந்தமிழரின் ஆட்டுக்கல் மழைமானி என்றால் என்ன.? ஆட்டுக்கல் என்பது வெறுமனே மாவு அரைப்பதற்கு மட்டுமல்ல ,அந்தக் காலத்தில் அதுதான் மழைமானி. வீட்டு முற்றத்தில்தான் பெரும்பாலும் ஆட்டுக்கல் இருக்கும். முதல்நாள் இரவில் மழை பெய்திருந்தால் அதன் குழிக்குள் நீர்நிறைந்திருக்கும். அந்நீரை விரலால் அளந்து பார்த்து அது ஓருழவுக்கு ஏற்ற மழையா அல்லது ஈருழவுக்கு ஏற்ற மழையா என்பதை அறிந்துக்கொள்வர். மழைப்பொழிவின் பழைய கணக்கு முறை “செவி” அல்லது “பதினு” எனப்படும். இது 10 மி.மீ அல்லது 1 செ.மீட்டருக்கு சமமானது. மழையின் அளவுக்கும் நிலத்தின் ஈரப்பதத்துக்கும் தொடர்பு உண்டு. இதனை ‘பதினை’ என்றனர். அறிவியல் கணக்குபடி 18 மி.மீ வரை மழை பெய்தால்தான் அதை முறையாக மண் உறிஞ்சிடும். ஆக எத்தனை “பதினு” மழை பெய்திருக்கிறது எனத் தெரிந்துக்கொண்டு முத

உணவு உண்போர் அனைவரும் கேட்க வேண்டிய கேள்விகள் இதோ..⁉️

Subbiahpatturajan விவசாயிகள் மட்டுமின்றி,  உணவு உண்போர் அனைவரும் கேட்க வேண்டிய கேள்விகள் இதோ..⁉️ 1️⃣ எதற்காக அதானி குழுமம் 9.5 லட்சம் டன் உணவு தானிய சேமிப்பு கிடங்குகளை தயாராக வைத்துள்ளது..? இப்படி ஒரு சட்டம் இயற்ற வேண்டும் என்பது மோடிக்கு அவரது அறிவுரையா..?? 2️⃣ அத்தியாவசிய உணவுப்பொருள்கள் பட்டியலை மாற்றியது ஏன்..? 3️⃣ கார்ப்பரேட் நிறுவனங்களுடன் ஒரு சிறு விவசாயி எப்படி ஒப்பந்தம் போட முடியும்..?? அவன் சொன்ன இடத்தில்தானே கையெழுத்துப் போடவேண்டும். 4️⃣ மாநில அரசுகள் இதில் தலையிட முடியாது என்றால் யாருக்கு லாபம் ..?? 5️⃣ விற்பனைத் தொகையில் இப்படித் தவணை முறையில் தந்தால் எந்த விவசாயியால் பிழைக்கமுடியும்..?? 6️⃣ PDS system  என்னாவது ..?? 7️⃣ Food Corporation of India வின் நிலை என்ன..?? அவர்கள் நாடெங்கிலும் ஏற்படுத்தி உள்ள வசதிகள் யார் கையில் ஒப்படைக்கப்படும் என்பதை ஊகிப்பதில் சந்தேகம் உள்ளதா ..?? 8️⃣ கார்ப்பரேட் நிறுவனங்களால் மாநில இளநிலை அதிகாரிகளை கைக்குள் போட்டுக்கொள்வது அவ்வளவு கடினமா ..?? 9️⃣ ஒரு நாட்டில் உழவனுக்கு அநீதி இழைக்கப்பட்டால் நீதி மன்றம் செல்லமுடியாது என்பது உண்மையில் ஒரு சட்ட

பாத்ரூம் கதவை சும்மா சாத்தி வைங்க, தாழ் போடவேண்டாம்...!?

Subbiahpatturajan 60/65 வயதிற்கு மேற்பட்ட  இருபால் அன்பர்களுக்கும் சில முக்கியமான டிப்ஸ்:- 1.பாத்ரும் செல்லும் பொழுது(வீட்டில்) கதவை சும்மா சாத்தி வைங்க, தாழ் போடவேண்டாம். 2.வீட்டை தண்ணீர் கொண்டு தரையை துடைக்கும்பொழுது நடக்கவேண்டாம். 3.ஸ்டூல்,நாற்காலி,பெஞ்ச் போன்றவற்றின் ‌.மீது ஏறி பொருட்களை எடுப்பது,சுத்தம் செய்வது, துணிகளை காயப்போடுவது, போன்ற வேலைகளை தவிர்க்கவும். 4.கார் இருந்தால் தனியாக ஓட்டவே கூடாது.கூட யாராவது கண்டிப்பாக இருக்க வேண்டும். 5.மாத்திரை மருந்துகளை வேளா வேளைக்கு தவறாமல் எடுத்துக் கொள்ளவும்.. 6.உங்களை எந்தவிஷயம் சந்தோஷப்படுத்துமோ அதை யாருக்காகவும், காம்ப்ரமைஸ் செய்ய வேண்டாம். 7.வங்கிக்கு பணம் எடுக்கச்சென்றால் தனியாகச்செல்ல வேண்டாம்.துணையுடன்செல்லவும். 8.வீட்டில் தனியாக இருக்கும் பொழுது அறிமுகமில்லாதோர் யாராவது வந்தால் கூடியவரை அச்சூழலை தவிர்க்கவும்.அல்லது மிகவும் எச்சரிக்கையுடன் கையாளவும். 9.கூடியவரை படுக்கையறை, குளியலறை, கழிப்பறை  ஆகியவற்றில் காலிங் பட்டன் அவசியம். அசாதாரண சூழலில் அழைப்பதற்கு உதவும். 10.சைக்கிள் முதல் கார் வரை அனைத்

இந்தியாவின் பிற மொழிச் சமுகங்களால் தமிழர்கள் ஏமாற்றப்படுகின்றனர்.

Subbiahpatturajan தமிழக இடஒதுக்கீட்டின் அவலநிலை..?! Tamils ​​are cheated by other language communities of India பிராமணர்கள் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளனர் என்றும் அவர்களுக்கு ஒரு நாள் ஊதியமே வெறும் 2000/ரூபாய் தான் கிடைக்கிறது அதனால் தான் நாங்கள் இந்த இட ஒதுக்கீடுகள் செய்து கொடுக்கிறோம் என்று நீதிபதி சொல்கிறார்கள்.இது போதாது என்று இவர்களுக்கு வருமான வரி விலக்கு 800000 வரை செய்து கொள்ள முடியுமாம் இன்னும் பல இந்த தீர்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன. நீதி அரசர்களுக்கு நியாயமான 3 கேள்விகள்  1.முதல் கேள்வி இப்போது உள்ள சமுகத்தில் இவர்கள் பின் தங்கிய சாதியினரா? 2. இவர்கள் ஒரு நாளைக்கு 2000 ரூபாய் மட்டும் தான் சம்பாதிக்கின்றார்களா? மற்றவை இந்த கணக்கில் எழுத… சக மனிதர் ஒரு நாளைக்கு 500 ரூபாய் சம்பாதிக்க முடியாத சமூக மக்கள் இந்த இந்தியாவில் இருக்கும்போது இவர்களுக்கு மட்டும் ஏன் இந்த சலுகை. 3. இந்தியாவில் எல்லோருக்கும் ஆன ஐந்து லட்சம் ரூபாய் வருமானவரி விலக்கு இருக்கும்போது இவர்களுக்கு மட்டும் எட்டு லட்ச ரூபாய் வருமான வரி விளக்கு அளித்திருப்பது வெட்கக்கேடான செயல் சமூகத்தில் பின்தங்கிய நிலையில் இரு

இதே நிலை எனக்கும் ஒரு நாள் வரும்.....!!!?

Subbiahpatturajan இதே நிலை எனக்கும் ஒரு நாள் வரும்.....!!!? இதுதான் வாழ்க்கை! தனது குடும்பம் என்ற ஒரு பத்து பேர், தனது நண்பனும் பகைவனும் என்ற பத்து பேர், தனது தொழிலில் ஒரு பத்து பேர், தனது வீதியில் ஒரு பத்து பேர், தனது மதத்தில், ஜாதியில் ஒரு  நூறு பேர்..! இந்த 140 பேரின் நடுவில் தன்னை உயர்த்திக் காட்டிக் கொள்வதும், பாசமாக, நட்பாக, அன்பாக, வீரனாக, நல்லவனாக காட்டிக் கொள்வதுமே மனித வாழ்வின் குறிக்கோள் என்று இந்த சமுதாயம் மனிதர்களுக்கு போதிக்கிறது. எல்லாவற்றையும் அவர்களோடு ஒப்பிட்டுப் பார்த்து அதைவிட ஒரு படியேனும் அதிகமாக இருக்க வேண்டும். அப்போதுதான் மதிப்பு என்று போலியான வாழ்க்கைவாழ கட்டாயப் படுத்துகிறது. அவன் அப்படி, இவன் இப்படி என்று பிறரை விமர்சனம் செய்யச் சொல்கிறது. பொருளாதார ரீதியாக தன்னிறைவு அடைந்ததும் பிறரை ஏளனமாக, கேவலமாக நினைக்கச் சொல்கிறது. இந்த 140 பேரின் நடுவில் ஏற்படும் அவமானமும், கோபமும், கௌரவமும் மட்டுமே ஒருவனைப் பாதிக்கின்றன. இதற்காக தன்னுடைய அத்தனை ஆசாபாசங்களையும் அடக்கி வைத்து, மனித ஜடமாக வாழும் பலருக்கு இந்த பூமிப்பந்து எழுநூறு கோடி மக்களால் ஆனத

தொலைந்து போனவை நம் நாட்கள் மட்டுமல்ல.,நம் சுகங்களும்தான்..,

Subbiahpatturajan தொலைந்து போனவை நம் நாட்கள் மட்டுமல்ல.,நம் சுகங்களும்தான்.., அந்த காலம் . ஊசி போடாத *Doctor* .. சில்லறை கேட்காத *Conductor* .. சிரிக்கும் *police* ... முறைக்கும் *காதலி* .. உப்பு தொட்ட *மாங்கா* .. மொட்டமாடி *தூக்கம்* .. திருப்தியான ஏப்பம்... Notebookன் *கடைசிப்பக்கம்* ... தூங்க *தோள் கொடுத்த* சக பயணி .... பார்த்த நொடியில் உரிமை எடுத்துகொள்ளும் பால்ய *நண்பன்* .. இப்பவும் டேய் என அழைக்கும் *தோழி* .. இரவு 2 மணிக்கு கதவை திறந்துவிடும் *அம்மா* ... கோபம் மறந்த *அப்பா* .. சட்டையை ஆட்டய போடும் *தம்பி* .. அக்கறை காட்டும் *அண்ணன்* .. அதட்டும் *அக்கா* ... மாட்டி விடாத *தங்கை* .. சமையல் பழகும் *மனைவி* ... சேலைக்கு fleets எடுத்துவிடும் *கணவன்* .. வழிவிடும் *ஆட்டோ* காரர்... *High beam* போடாத லாரி ஓட்டுனர்.. அரை மூடி *தேங்கா* .. 12மணி *குல்பி* .. sunday *சாலை* ... மரத்தடி *அரட்டை* ... தூங்க விடாத *குறட்டை* ... புது நோட் *வாசம்* .. மார்கழி *மாசம்* .. ஜன்னல் *இருக்கை* .. கோவில் *தெப்பகுளம்* .. Exhibition *அப்பளம்* .. முறைப்பெண்ணின் *சீராட்டு* ... எதிர

கற்றபின்... *விற்க அதற்குத் தக*

Subbiahpatturajan 💐💐💐💐💐💐💐💐💐 கற்றபின்... *விற்க அதற்குத் தக* என்று மாற்றி விட்டோமே... சினார்தமிழன் *செக்குமாடு*  சில வாரங்களுக்கு முன்பு நண்பருடைய மகள் திருமணத்திற்காக கடலூர் அருகில் உள்ள கிராமத்திற்கு சென்றிருந்தேன்...  காலை திருமணம் முடிந்ததும் கிராமத்தைச் சுற்றி வரலாம் என்று கிளம்பினேன்,..  ஊர் ஓரமாக செக்குமாடு ஒன்று சுற்றிக் கொண்டிருப்பதை கவனித்து ஆச்சரியமாக அதன் அருகில் சென்றேன்...  நமது பகுதியில் எந்திரம் வைத்து செய்வதைப் பார்த்த நமக்கு செக்குமாடு வைத்து எண்ணெய் ஆட்டுவதை பார்க்கும் பொழுது மகிழ்ச்சியாகவும், வித்தியாசமானதாகவும் இருந்தது.…. யாருடைய மேற்பார்வையும் இன்றி மாடு தானாக சுற்றிக் கொண்டிருந்தது...  அருகில் யாரும் இல்லை.. பக்கத்தில் ஒரு குடிசை இருந்தது.. அங்கே சென்று பார்த்தால் பெரியவர் ஒருவர் பழைய கூழ் குடித்துக் கொண்டிருந்தார்.... சினார்தமிழன்  அவரிடம் ஐயா செக்குமாடு உங்களுடையதா? என்று கேட்டேன்..  ஆமாம் தம்பி என்றார்... வியாபாரம் நன்றாக போகிறதா? என்று கேட்டேன்..…. இப்போது பரவாயில்லை தம்பி என்றார்...  இப்படித்தான் முதலில் எண்ணெய் ஆட்டி பயன்படு

இதுக்கு மேல உயிரோடு இருந்தால் ஊருக்கு வந்து....

Subbiahpatturajan அவ்வளவு எளிதல்ல வெளிநாட்டில் வேலை செய்பவன் நாடு திரும்புவது…!!😢 போறோம் ரெண்டு வருஷம் சம்பாதிச்சு கடனை அடைச்சிட்டு திரும்ப சொந்த நாட்டுக்கே வறோம் அப்படீன்னு வெளிநாட்டு வாழ்க்கை ஆரம்பிக்கும்.. வயசு 22 தம்பி படிக்கிறான்,அக்காவுக்கு கல்யாணம் பண்ணனும் எப்படியும் ஒரு 3 அல்லது 4 வருஷம் சம்பாதித்தே ஆகனும் வயசு 24 அக்கா கல்யாணத்துக்கு வாங்கின கடன அடைக்கனும்,அடுத்து தங்கச்சி கல்யாணம் இருக்கு,தம்பி படிப்பு முடிய ரெண்டு வருஷம் இருக்கு அதனால இன்னும் ஒரு 3 வருஷம் வயசு 26 தம்பி படிப்பு முடிஞ்சி ஒரு வேலைக்கு போகனும் ஒரு தொழிலுக்கு என்னமும் பண்ணிக் கொடுக்கணும் அதனால இன்னும் ஒரு 2 வருஷம் – வயசு 28 அப்பா அம்மா எனக்கு பொண்ணு பார்க்கறாங்க கல்யாணம் பண்ணனும் அதுக்கு பணம் சேர்க்கனும் அதுக்கு ஒரு 1 வருடம் – வயசு 30 கல்யாணத்துக்கு வாங்கின கடன் பட்ட கடன் எல்லாத்தையும் முடிச்சி ஊரு போகனும் அதுக்கு ஒரு 2 வருஷம் – வயசு 32 தனக்குன்னு சின்னதா ஒரு குடும்பம் பிள்ளைய ஸ்கூல் சேர்க்கனும், அதுக்கு கொஞ்சம் பணம் சேர்த்து வைக்கனும் அதுக்கு 2 வருஷம் – வயசு 34 ஒரு வீட்ட கட்டி முடிச்சிடனும் இத்தனை வருஷம் இருந்

“இந்தக் காலத்துப் பசங்க நாகரீகம் இல்லாதவங்க...” எனும் குற்றச்சாட்டுகள்....

Subbiahpatturajan “இந்தக் காலத்துப் பசங்க நாகரீகம் இல்லாதவங்க...” எனும் குற்றச்சாட்டுகள்.... இந்தத் தடைகளைத் தாண்டுங்கள்! நதியைக் கவனித்திருக்கிறீர்களா? சமதளத்தில் மென்மையாக ஓடிக் கொண்டிருக்கும். பாறைகளின் இடையே ஓடும் போது சலசலவென தாவி ஓடும். அருவியில் வருகையில் உடைந்து வீழும். ஆனால் விழுந்த இடத்திலேயே காலொடிந்து கிடப்பதில்லை. ஆக்ரோஷம் கூட்டி இன்னும் அதிக வேகமாய் ஓடும்! தடைகள் இல்லாத பயணமே கிடையாது. தடைகளைத் தாண்டி ஓட வேண்டும். ஐயையோ தடை வந்துவிட்டதே என உடைந்து போய் உட்கார்ந்தால் வெற்றி கிடைக்காது! தடைகள் வரும்போது, வேகம் குறையலாம், அல்லது தாமதம் நேரலாம். ஆனால் முறியடித்து முன்னேறுவதில் தான் சாதனைகள் அடங்கியிருக்கின்றன! இன்றைய இளைஞர்களின் முன்னே நிற்கும் முக்கியமான சிக்கல்களாக இவற்றைச் சொல்லலாம். போதை! இன்று, நேற்றல்ல, எப்போதுமே ஒரு இளைஞனின் வெற்றியை வெட்டிப் போட போதைப் பழக்கம் மட்டுமே போதும். நிகோடினை நுரையீரலுக்கு நேரடியாய் இறக்கி வைக்கும் புகை அதில் முக்கியமான ஒன்று! பள்ளிக்கூடப் படி தாண்டும் முன்பே பலருக்கும் புகை பழகிவிடுகிறது! உலகில் எங்கே என்ன தடை செய்யப்பட்டாலும் அது ந

"நீங்கள் பார்க்க Smartடாக, Cuteடாக இருக்கீங்க"

Subbiahpatturajan *Self Discipline* 1. தொடர்ச்சியாக இரண்டு முறை யாரையும் Phoneல் அழைக்காதீர்கள். அவர்கள் முக்கிய வேலையாக இருக்கலாம், அல்லது பேச முடியாத சூழ்நிலையில் இருக்கலாம். 2. திருப்பித் தருகிறேன் என்று உங்களிடம் பணம் கடனாக கேட்பவரிடம் மனப்பூர்வமாக கேட்டுக்கொடுங்கள். இது திரும்ப வருமா, வராதா என. இது உங்கள் Character ரை அவர் உணரச் செய்யும். இதே போல், இரவல் கொடுக்கும் பேனா, புத்தகம், Lunch box, குடை போன்றவைக்கும். 3. Hotelல் சாப்பிடலாம் என நண்பர் உட்பட யார் அழைத்தாலும், Menu cardல் costly யாக உள்ள எதையும் Order செய்யாதீர்கள். அழைத்தவரையே உங்கள் விருப்பப்படி Order சொல்லுங்கள் என வேண்டலாம். 4. தர்மசங்கடமான இது போன்ற கேள்விகளை தவிர்க்கலாம். "இன்னும் கல்யாணம் ஆகலயா?" "குழந்தைகள் இல்லையா?" "இன்னும் சொந்தவீடு வாங்கவில்லையா?" "ஏன் இன்னும் Car வாங்கவில்லை?" இது நமது பிரச்சினை இல்லைதானே!" 5. தானியங்கி கதவை திறக்க நேர்ந்தால் பின்னால் வருபவர் ஆணோ, பெண்ணோ, சிறியவரோ, பெரியவரோ அவர்கள் வரும்வரை மூடாமல் பிடித்திருப்பது அவர்களை சமூகத்தில் பொறுப்புள்ளவர்களா

உங்க பொழுதுபோக்கு என்ன அதாவது ஆங்கிலத்தில் ஹாபிஸ்...

Subbiahpatturajan பொழுதுபோக்கு என்றால் என்ன? அதாவது ஆங்கிலத்தில் ஹாபி.... பொழுதுபோக்கும், பொழுதை ஆக்கும்! எப்படா ஸ்கூல் மணி அடிக்கும் ஓடியாடி விளையாடலாம் என மணி மேல் விழிவைத்துக் காத்துக் கிடந்த பால்ய காலம் ஞாபகம் இருக்கிறதா? அதன் பின் படிப்பு வேலை என வாழ்க்கையின் அடுத்தடுத்த கட்டங்களுக்கு தாவியபோது நழுவிப் போன ஒரு விஷயம் தான் பொழுது போக்கு. ஆங்கிலத்தில் சொன்னால் ஹாபி! பொழுது போக்கு என்றால் இயல்பாகவே ஒரு சின்ன உற்சாகம் மனதுக்குள் ஓட வேண்டும். சிலரோ, “அதுக்கெல்லாம் ஏதுங்க நேரம்... வேலையைப் பாக்கவே டைம் இல்லை” என சலித்துக் கொள்வார்கள். ஒருவேளை நீங்களே கூட அப்படி புலம்பும் பார்ட்டியாய் இருக்கலாம். ஹாபி என்றாலே ஏதோ மிச்ச மீதி இருக்கும் நேரத்தைச் செலவிடும் வெட்டி விஷயம் என்று தான் பலரும் நினைக்கிறார்கள். அப்படியல்ல. அதுவும் நமது வாழ்வின் ஒரு பாகமே. நமது அலுவலக வேலை நமது பொருளாதாரத் தேவைக்கான ஓட்டம். பொழுது போக்கு, நாம் இழந்த விருப்பங்களுக்கான ஓட்டம்.! “இதுல என்னய்யா இருக்கு..” என சலிப்படைபவர்கள் ஒரு தனி ரகம். அவர்கள் வாழ்க்கையில் எல்லாவற்றையுமே பொருளாதார ஸ்கேல் கொண்டு அளப்பவர்கள். வா

வீரப்பனும் - விலகாத மர்மங்களும்....

Subbiahpatturajan வீரப்பனும் - விலகாத மர்மங்களும்:        மனிதன் பொய் சொல்லுவான், ஏமாற்றுவான், பழிவாங்குவான், நேர்மையற்ற செயலை செய்வான், யானைகளை பிடித்து சர்க்கசிற்கு விற்பான், யானையைக் கொடுமைப்படுத்தி பணம் காண்பான். மனிதனைப்போல கொடுமைக்காரர்கள் யாரும் இல்லை. இதைக் கூறியவர் வேறு யாருமல்ல, யானைகளைக்கொன்று தந்தங்களைக் கடத்துகிறார் என்று குற்றம்சாட்டப்பட்ட கூசு முனிசாமி என்ற வீரப்பன் தான். மேட்டூர், சத்தியமங்கலம் மலைகளையும், காடுகளையும் கட்டிக்காத்த காவல்காரன், விலங்குகளுடனும், பறவைகளுடனும், பாம்புகளுடனும் காட்டிற்குள்ளேயே சேர்ந்து வாழ்ந்து மேற்குத் தொடர்ச்சி மலையை தனது ராஜாங்கமாக்கி, எந்த சந்தர்ப்பத்திலும் அசராத வீரம் கொண்டு, தமிழ்நாடு,கர்நாடகா, என இரண்டு மாநில காவல்துறைக்கும், மத்திய ரிசர்வ் படைக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கி 34 வருடங்களுக்கு மேல் சத்தியமங்கலம் காட்டை ஆண்டு வந்த "காட்டுச்சிங்கம்"...! இன்று வரை பெரும் சவலாக இருந்து வரும் "காவேரி பிரச்சனையைக்" கூட ஒற்றை ஆளாய் இருந்து சமாளித்து , "வந்து பார்" என்றவர்..! யானை தந்தங்களை கடத்தியதாகவும், சந்த

“யோவ் வெளிநாடு போறது இருக்கட்டும் நான் முதல்ல கக்கா போகணும்.

Subbiahpatturajan “யோவ் வெளிநாடு போறது இருக்கட்டும் நான் முதல்ல கக்கா போகணும். அடேங்கப்பா.. என்னம்மா அனுபவித்து எழுதியிருக்கார் இந்த பதிவாளர். பிரமாதம். சிரித்து சிரித்து வயிறே புண்ணாகிவிட்டது..! ___ நம்மைப் போலவே கார்ப்பரேட் விளம்பரத்தால் கடுப்பான யாரோ ஒருவர் தான் இதை எழுதியிருக்க வேண்டும். சிரிச்சு சிரிச்சு வாயே வலிக்குது.. உள்ளங்கையிலிருந்து உள்ளாடைகள் வரை கிருமிகள் மனிதர்களை வேட்டையாடிக் கொண்டிருப்பதை போன்ற விளம்பரங்கள் நிஜம்தானா? காலையில் எழுந்து பல்துலக்க போனால் விளம்பரத்திலிருந்து வெள்ளைக்கோட்டு அணிந்து குறுந்தாடி வைத்த செட் அப் மருத்துவர் “உங்கள் பல்லிடுக்கில் பதுங்கி இருக்கும் கிருமிகளை உங்கள் பற்பசை கொல்லுமா? எங்கள் பற்பசை உபயோகித்தால் பனிரெண்டு மணிநேரம் கிருமிகளிடமிருந்து உங்கள் பல்லுக்கும் வாய்க்கும் பாதுகாப்பு” என்று பாடம் நடத்துகிறார். விட்டால் வீடுவீடாக வந்து காலங்காத்தாலே பல் துலக்கி விட்டு ஹோம்டெலிவரி என்று சர்வீஸ் சார்ஜும் போட்டு பில்லை தலையில் கட்டுவார்கள் போல இருக்கு. ரெண்டுக்கு போகலாம் என்று கக்கூசுக்கு போனால் உட்காராதீங்க உட்காராதீங்க என்று அங்கே ஒரு மாஜி

என் மகன் கான்வென்ட் ஸ்கூல்ல படிக்கிறான்.....இதோட அர்த்தம் தெரியுமா.........???!!!

சினார்தமிழன்  Subbiahpatturajan என் மகன் கான்வென்ட் ஸ்கூல்ல படிக்கிறான்.....இதோட அர்த்தம் தெரியுமா.........???!!! கான்வென்ட் என்ற வார்த்தையை நினைத்து பெருமை படாதீர்கள்... ! உண்மையை புரிந்து கொள்ளுங்கள்..! 'கான்வென்ட்'முதலில் இந்த வார்த்தை எங்கிருந்து வந்தது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் எனவே விளக்கு ஏற்றுவோம்..! பிரிட்டனில் ஒரு ஆண் மற்றும் பெண்ணுடன் திருமண உறவில்லாமல் ′′ உறவில் வாழலாம் ′′ என்ற சட்டம் இருந்தது.. அந்த முறைப்படி குழந்தைகள் பிறந்தனர், அதனால் பிறந்த அந்த குழந்தைகள் ஒரு தேவாலயத்தில் விடப்பட்டனர்...! இந்த குழந்தைகளை என்ன செய்வது என்று இங்கிலாந்து அரசாங்கத்திற்கு தீவிர பிரச்சனை வந்தது.! பின்னர் அரசாங்கம் கான்வென்ட் என்ற மையத்தை திறந்து விட்டது. அது அனாதை குழந்தைகள் மற்றும் இழிபிறவிகளின் வாழுமிடம்..! அனாதைகள் மற்றும் கைவிடப்பட்ட குழந்தைகள் தங்கள் உறவுகளை உணரச் செய்ய, அவர்கள் அனாதைகளில் ஒரு தந்தை, ஒரு தாய், ஒரு சகோதரியை நியமித்தார்கள்..! ஏனெனில் அந்த குழந்தைகளுக்கு ஒரு நியாயமான தந்தை அல்லது தாய் இல்லை. எனவே கான்வென்ட் இழி குழந்தைகளுக்காக இந்த ஏற்பாட்டு முறை செ

அரசு ஊழியர்கள் மாணவ மாணவிகள் கவனத்திற்கு...

Subbiahpatturajan அரசு ஊழியர்கள் மாணவ மாணவிகள் கவனத்திற்கு... *important modified govt G.o. s* தமிழக அரசு ஊழியர்களின் முக்கிய அரசாணைகள் (1)- பெண் அரசு ஊழியர்களை அலுவலக நேரத்திற்கு முன்னும், பின்னும் அவசியமிருந்தாலொழிய நிறுத்தி வைத்து வேலை வாங்கக்கூடாது (RG. 1984.P.278) (2)- கலப்பு திருமணம் செய்து கொள்பவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு பெற்றோரின் விருப்பப்படி எவரேனும் ஒருவரின் ஜாதி அடிப்படையில் ஜாதி சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம். (அரசாணை எண். 477/ சமூக நலத்துறை, நாள் - 27.6.1975 ) (3)- அரசு ஊழியர்களின் மனைவி, கணவர், மக்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பெயரில் அவர்களுடைய சொந்த வருமானத்தை கொண்டு (அரசு ஊழியரின் வருமானம் இன்றி) சொத்து வாங்க அனுமதி தேவையில்லை. பணிப்பதிவேட்டில் குறிக்கப்பட்ட வேண்டியதுமில்லை. (அரசாணை எண். 3158/பொதுப்பணியாளர்கள் /துறை. நாள்- 27.9.1974 ) (4)- அரசு பணியாளர்கள் நடத்தை விதிகள்படி அரசு ஊழியர்கள் அசையாச் சொத்து, அசையும் சொத்து ஆகியவற்றை கடனாக மற்றும் பரிசுப் பொருட்களாக வாங்கும்போது மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்த ஆணைகள் (பதுத ஆணை எண். 45679/A2/1996, ந