முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

தமிழ்த் தேன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

Tamil Geography Words: River முதல் Hot Spring வரை தமிழ்ப் பெயர்கள்

Subbiahpatturajan செம்மொழிச் சவால் · Language Challenge ஏன் தமிழ் ஒரு செம்மொழி? Read the words below and see for yourself why Tamil is a classical language. இந்திய மொழிகள் அனைத்தையும் ஒரு சவாலுக்கு அழைக்கிறேன்! Can you create and publish a similar list in your language? Each form of nature, such as river, sea, mountain, desert, and snow, has its own word in Tamil. Read the vocabulary and enjoy its subtlety. உங்கள் மொழிக்கு ஒரு சவால் சமஸ்கிருதத்திற்கும் தைரியம் இருந்தால் இந்த CHALLENGE-ல் கலந்துகொள்ளலாம்! 😉 துணிந்து முயற்சிக்கும் மொழிகளுக்கு, வெற்றி பெறாவிட்டாலும், ஆறுதல் பரிசு வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம்! 😄 Just read the words below and know why Tamil is a classical language. Rivers & Waters நீர்நிலைகள் ஓடும் நீருக்கும் தேங்கும் நீருக்கும் தனித்தனிப் பெயர்கள். River ஆறு Delta கழிமுகம் / வடிநிலம் Lake ஏரி Pond பொய்கை Waterfall அருவி Stream ஓடை Canal கால்வாய் Spring ஊற்று Geyser ஊற்று Hot Spring சுடுநீர் ஊற்று Seas & Coasts கடலும் கரையும் மாக்கடல் முதல் முனை வரை, கடல் சார்...

வாணி ஜெயராமின் உண்மையான பெயர் மற்றும் சில சுவாரஸ்யமான தகவல்கள்

Subbiahpatturajan பின்னணிப் பாடகி வாணி ஜெயராம் வேலூர் நாகம்மை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படித்தார். அந்தப் பள்ளியில் சமீபத்தில் நடந்த தன்னம்பிக்கை நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக பழைய மாணவியான வாணி ஜெயராமை அழைத்திருந்தார்கள்.  சத்துவாச்சாரி லைன்ஸ் கிளப் பிரமுகர்மான மணிமேகலை இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்   வாணி ஜெயராம் அவர்கள் சொன்ன தகவல் சில... இந்தப் பள்ளியில் நான் நான்காம் வகுப்பு வரை 1949 முதல் 1953 வரை படித்தேன். என்னுடைய உண்மையான பெயர் கலைவாணி அதிலும் நான் தமிழ் மீடியத்தில்தான் படித்தேன். அதன் பிறகு என்னுடைய அம்மா எங்களுக்கு சங்கீதம் கற்றுக் கொடுப்பதற்காக சென்னைக்கு அழைத்து சென்று விட்டார் அங்கு சென்று இன்னும் சில குருமார்களிடம் நான் சங்கீதம் கற்றுக் கொண்டேன் . நான் வேலூரில் படித்தது ரொம்ப சின்ன வயதில் என்பதால் தோழிகள் பெயர் சரியாக ஞாபகம் இல்லை.  மேரி பொன்னையா, வதனா என்று இரண்டு டீச்சர் பெயர் மட்டும் ஞாபகம் இருக்கிறது என்றவர்... கல்லூரி நாட்களில்  சென்னையில் தன்னுடன் படித்த சில விஐபி தோழர்களை பற்றியும் குறிப்பிட்டுள்ளார் நான் ராணி மேரி கல்லூ...

1990 களில் கோனார் தமிழ்உரையில் படித்து தேர்ச்சிபெற்ற மாணவர்களுக்கு அதைஎழுதியவர் யார் என்பதுதெரியுமா?

Subbiahpatturajan தமிழர்களால் தவிர்க்க முடியாதது கோனார் தமிழ் உரை கோனார் தமிழ் உரை என்பது எத்தனை முக்கியமான நினைவு என்பது நம் தலைமுறையினருக்குத் தெரியும். தமிழ்ஆசிரியர்களே கோனார் தமிழ் உரையை நம்பி இருந்த காலம் அது. அந்தக் கோனார் எந்த ஊரைச் சேர்ந்தவர் அவரின் பெயர் என்ன என்பது எத்தனை பேருக்குத் தெரியும். சமீபத்தில் தான் எனக்குத் தெரிய வந்தது. முதன்முதலில் கோனார் தமிழ் உரையை எழுதியவர் ஐயம் பெருமாள் கோனார். இவர் திருச்சியில் செயின்ட் ஜோசப் உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராய் இருந்தார். பின்னர் செயின்ட் ஜோசப் கல்லூரியில் பேராசிரியராய் ஆனார். இவரிடம் படித்தவர்கள் எழுத்தாளர் சுஜாதா, நடிகர் அசோகன். கோனார் தமிழ் உரையை வெளியிட்ட பின் பழநியப்பா பதிப்பகம் பெரும் நிறுவனமானது. கோனார் அவர்களுக்கு பழநியப்பா பதிப்பகம் கொடுத்த ஊதியத்தில் அவர் கட்டிய வீட்டிற்கு  ‘ பழநியப்பா இல்லம்’  என்று பெயர் சூட்டினார். பழநியப்பா பதிப்பகம் பெரும் நிறுவனமான பின் சென்னையில் கட்டிய அலுவலகத்திற்கு ‘ கோனார் மாளிகை’ என்று பெயர் சூட்டியது. அலுவலகத்திற்குள்ளும் கோனாரின் பெரிய புகைப்படம் வைக்கபட்டிருக்கும். அதை வணங்கி...

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் க...

ஒரு நாள் நான் சொல்வேன் வாழ்ந்ததுபோதும் என்று முதுமையின் வாசலில் - நான் !?

Subbiahpatturajan  ஓர் தாய் முதுமையில் மகனிடம் சொல்லும் கண்ணீர் கவிதை. இது போன்ற கவிதைகளை பதிவு இடுவதில் பெருமைப் படுகின்றேன், ஒரு தாயின் புலம்பல் கவிதை, எனதருமை மகனே !எனதருமை மகனே ! நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்.. முதுமையின் வாசலில் - நான் முதலடி வைக்கையில் தள்ளாட்டம் என்மீது வெள்ளோட்டம் பார்க்கும்... கொஞ்சம் பொறுமை கொள்க ! அதிகம் புரிந்து கொள்க ! என்முதுமை பார்த்து முகம் சுளிக்காதே ! நான் சாப்பிடுகையில் கைநடுங்கி சாதம் சிந்தி விட்டேனா? சத்தம் போடாதே..... உனக்கு நான் நிலாச்சோறு ஊட்டிய நாட்களை நினைவு கூர்க ! ஆடை மாற்றுகையில் அவதிப் படுகின்றேனா? அசுத்தம் செய்து விட்டேனா? ஆத்திரப்படாதே..... படுக்கை முழுதும் நீ பண்ணிய ஈரங்களின் ஈர நினைவுகளை இதயம் கொள்க ! ஒரே பேச்சை, தேய்ந்த ஒலிநாடா போல் ஓயாமல் சொல்கிறேனா? சலித்துக் கொள்ளாதே.... ஒரே மாயாவி கதையை ஒரு நூறு முறை எனை படிக்கச் சொல்லி நீ உறங்கிய இரவுகளை ஞாபகம் கொள்க  நான் குளிக்க மறுக்கிறேனா? சோம்பேறித்தனம் என்று சுடுசொல் வீசாதே....ஒரு நாள் நான் சொல்வேன் வாழ்ந்ததுபோதும் என்று முதுமையின் வாசலில் - நான் !? உன்னை குளிக்க வைக்க நான் செய்...

நீங்கள் தேடி கண்டுபிடிக்கும் யாரும் உங்கள் குரு அல்ல.!?

Subbiahpatturajan *உருவாய் அருவாய், உளதாய் இலதாய் மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க் கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க் குருவாய் வருவாய், அருள்வாய் குகனே*  *இந்தப் பாடலை சிறுவயது முதல் பலமுறை படித்து இருக்கலாம்  பல முறை கேட்டும் இருக்கலாம் . அடடா என்னமா எழுதி இருக்கிறார், ஒவ்வொரு சொல்லும் "வாய்" என்று முடியும்படி என்று வியந்தும் இருக்கலாம்*.. *இத்தனை வருடம் ஆகியும்  அதன் உள்ளே பொதிந்து  பொருளை  உணர்ந்து கொள்ள இயலவில்லையா....*  *முதலில் அருஞ்சொற் பொருளை பார்த்து விடுவோம்.* *அப்புறம் அர்த்தத்துக்குப் போவோம்* * பொருள் / கருத்து .* * உருவாய் = உருவத்துடன்* *அருவாய் = உருவம் இல்லாமல்* *உளதாய் = இருக்கக் கூடியதாய்* *இலதாய் = இல்லாததாய்* *மருவாய்  = மலரின் வாசமாக* *மலராய் = மலராக* *மணியாய் = மணியாக* *ஒளியாய்க் = மணியில் இருந்து வரும் ஒளியாக* *கருவாய்  = கருவாக* *உயிராய்க்  =உயிராக* *கதியாய் =  வழியாக* *விதியாய் = விதியாக* *குருவாய் = குரு வடிவில்* *வருவாய் = வருவாய்* *அருள்வாய் = அருள் செய்வாய்* *குகனே. = முருகா* *கடினமான சொல் ஒன்றும் இல்லை.*...

How many type of rain in Tamil language..?

Subbiahpatturajan How many type of rain in Tamil language..? தமிழில், 14 வகையான மழை உண்டு! 1. மழை 2. மாரி 3. தூறல் 4. சாரல் 5. ஆலி 6. சோனை 7. பெயல் 8. புயல் 9. அடை (மழை) 10. கன (மழை) 11. ஆலங்கட்டி 12. ஆழிமழை 13. துளிமழை 14. வருள்மழை வெறுமனே, மழைக்குப் பல பெயர்கள் அல்ல இவை! ஒவ்வொன்றுக்கும் வேறுபாடு உண்டு! இயற்கை நுனித்த தமிழ்! ஏன் அடைமழை என்கிறோம்? அடைமழை = வினைத்தொகை! ☆ அடைத்த மழை ☆ அடைக்கின்ற மழை ☆ அடைக்கும் மழை விடாமல் பெய்வதால், ஊரையே 'அடை'த்து விடும் மழை = அடை மழை! அடைத்துக் கொண்டு பெய்வதாலும் அடைமழை! கனமழை வேறு! அடைமழை வேறு! மழ = தமிழில் உரிச்சொல்! ☆ மழ களிறு= இளமையான களிறு ☆ மழவர் = இளைஞர்கள் அந்த உரிச்சொல் புறத்துப் பிறப்பதே.. மழை எனும் சொல்! மழ + ஐ இளமையின் அலட்டல் போல், காற்றில் அலைந்து அலைந்து பெய்வதால், புதுநீர் உகுப்பதால் மழை எ. காரணப் பெயர்! மழை வேறு/ மாரி வேறு!  அறிக தமிழ் நுட்பம்! இயற்கை! மழை/மாரி ஒன்றா? ☆ மழை= இள மென்மையாக அலைந்து பெய்வது, காற்றாடி போல! ☆ மாரி = சீராகப் பெய்வது, தாய்ப்பால் போல! மார்+இ= மாரி! தாய் மார்பிலொழுகு பால் போல், அலையாது சீராகப் பெயல்! அத...

நீங்களும் தமிழ்தேன் அள்ளிப் பருகலாமே...!!!

Subbiahpatturajan #தமிழ ்த ேன ் *தமிழுக்கு இனிமை என்றொரு பெயர் உண்டு காரணம் ஏன் தெரியுமா*..  தேன்  கொண்டு வந்தவனை பார்த்து நேற்று ஏன்...  தேன்  கொண்டுவரவில்லை என்று ஒருவர் கேட்கிறார் அதற்கு அவன் கூறிய இனிமை பொருந்திய பதில்..      ஐயா நீங்கள்  கூரியதை நினைத்தேன் ... கொல்லிமலைக்கு  நடந் தேன்! பல இடங்களில் அலைந் தேன்!                 ஓரிடத்தில் பார்த் தேன்...! உயரத்தில் பாறைத் தேன்! எப்படி எடுப்பதென்று மலைத் தேன்  கொம்பொன்று ஒடித் தேன்! ... ஒருகொடியை பிடித் தேன் ! ஏறிச்சென்று கலைத் தேன்!   பாத்திரத்தில் பிழிந் தேன்! வீட்டுக்கு வந்  தேன்!  கொண்டு வந்ததை வடித் தேன்! கண்டுநான் மகிழ்ந் தேன்! ஆசையால் சிறிது குடித் தேன் ! மீண்டும் சுவைத் தேன் ! உள்ளம் களித் தேன்!  உடல் களைத் தேன் ! உடனே படுத் தேன்! கண் அயர்ந் தேன்! அதனால் மறந் தேன் !! காலையில் கண்விழித் தேன்! அப்படியே எழுந் தேன் ! உங்களை நினைத் தேன்!  தேனை எடுத்தேன்! அங்கிருந்து விரைந் தேன் ! வேகமாக நடந் தேன்!  இ...