முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

நவம்பர், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இதே நிலை எனக்கும் ஒரு நாள் வரும்.....!!!?

Subbiahpatturajan இதே நிலை எனக்கும் ஒரு நாள் வரும்.....!!!? இதுதான் வாழ்க்கை! தனது குடும்பம் என்ற ஒரு பத்து பேர், தனது நண்பனும் பகைவனும் என்ற பத்து பேர், தனது தொழிலில் ஒரு பத்து பேர், தனது வீதியில் ஒரு பத்து பேர், தனது மதத்தில், ஜாதியில் ஒரு  நூறு பேர்..! இந்த 140 பேரின் நடுவில் தன்னை உயர்த்திக் காட்டிக் கொள்வதும், பாசமாக, நட்பாக, அன்பாக, வீரனாக, நல்லவனாக காட்டிக் கொள்வதுமே மனித வாழ்வின் குறிக்கோள் என்று இந்த சமுதாயம் மனிதர்களுக்கு போதிக்கிறது. எல்லாவற்றையும் அவர்களோடு ஒப்பிட்டுப் பார்த்து அதைவிட ஒரு படியேனும் அதிகமாக இருக்க வேண்டும். அப்போதுதான் மதிப்பு என்று போலியான வாழ்க்கைவாழ கட்டாயப் படுத்துகிறது. அவன் அப்படி, இவன் இப்படி என்று பிறரை விமர்சனம் செய்யச் சொல்கிறது. பொருளாதார ரீதியாக தன்னிறைவு அடைந்ததும் பிறரை ஏளனமாக, கேவலமாக நினைக்கச் சொல்கிறது. இந்த 140 பேரின் நடுவில் ஏற்படும் அவமானமும், கோபமும், கௌரவமும் மட்டுமே ஒருவனைப் பாதிக்கின்றன. இதற்காக தன்னுடைய அத்தனை ஆசாபாசங்களையும் அடக்கி வைத்து, மனித ஜடமாக வாழும் பலருக்கு இந்த பூமிப்பந்து எழுநூறு கோடி மக்களால் ஆனத

தொலைந்து போனவை நம் நாட்கள் மட்டுமல்ல.,நம் சுகங்களும்தான்..,

Subbiahpatturajan தொலைந்து போனவை நம் நாட்கள் மட்டுமல்ல.,நம் சுகங்களும்தான்.., அந்த காலம் . ஊசி போடாத *Doctor* .. சில்லறை கேட்காத *Conductor* .. சிரிக்கும் *police* ... முறைக்கும் *காதலி* .. உப்பு தொட்ட *மாங்கா* .. மொட்டமாடி *தூக்கம்* .. திருப்தியான ஏப்பம்... Notebookன் *கடைசிப்பக்கம்* ... தூங்க *தோள் கொடுத்த* சக பயணி .... பார்த்த நொடியில் உரிமை எடுத்துகொள்ளும் பால்ய *நண்பன்* .. இப்பவும் டேய் என அழைக்கும் *தோழி* .. இரவு 2 மணிக்கு கதவை திறந்துவிடும் *அம்மா* ... கோபம் மறந்த *அப்பா* .. சட்டையை ஆட்டய போடும் *தம்பி* .. அக்கறை காட்டும் *அண்ணன்* .. அதட்டும் *அக்கா* ... மாட்டி விடாத *தங்கை* .. சமையல் பழகும் *மனைவி* ... சேலைக்கு fleets எடுத்துவிடும் *கணவன்* .. வழிவிடும் *ஆட்டோ* காரர்... *High beam* போடாத லாரி ஓட்டுனர்.. அரை மூடி *தேங்கா* .. 12மணி *குல்பி* .. sunday *சாலை* ... மரத்தடி *அரட்டை* ... தூங்க விடாத *குறட்டை* ... புது நோட் *வாசம்* .. மார்கழி *மாசம்* .. ஜன்னல் *இருக்கை* .. கோவில் *தெப்பகுளம்* .. Exhibition *அப்பளம்* .. முறைப்பெண்ணின் *சீராட்டு* ... எதிர

கற்றபின்... *விற்க அதற்குத் தக*

Subbiahpatturajan 💐💐💐💐💐💐💐💐💐 கற்றபின்... *விற்க அதற்குத் தக* என்று மாற்றி விட்டோமே... சினார்தமிழன் *செக்குமாடு*  சில வாரங்களுக்கு முன்பு நண்பருடைய மகள் திருமணத்திற்காக கடலூர் அருகில் உள்ள கிராமத்திற்கு சென்றிருந்தேன்...  காலை திருமணம் முடிந்ததும் கிராமத்தைச் சுற்றி வரலாம் என்று கிளம்பினேன்,..  ஊர் ஓரமாக செக்குமாடு ஒன்று சுற்றிக் கொண்டிருப்பதை கவனித்து ஆச்சரியமாக அதன் அருகில் சென்றேன்...  நமது பகுதியில் எந்திரம் வைத்து செய்வதைப் பார்த்த நமக்கு செக்குமாடு வைத்து எண்ணெய் ஆட்டுவதை பார்க்கும் பொழுது மகிழ்ச்சியாகவும், வித்தியாசமானதாகவும் இருந்தது.…. யாருடைய மேற்பார்வையும் இன்றி மாடு தானாக சுற்றிக் கொண்டிருந்தது...  அருகில் யாரும் இல்லை.. பக்கத்தில் ஒரு குடிசை இருந்தது.. அங்கே சென்று பார்த்தால் பெரியவர் ஒருவர் பழைய கூழ் குடித்துக் கொண்டிருந்தார்.... சினார்தமிழன்  அவரிடம் ஐயா செக்குமாடு உங்களுடையதா? என்று கேட்டேன்..  ஆமாம் தம்பி என்றார்... வியாபாரம் நன்றாக போகிறதா? என்று கேட்டேன்..…. இப்போது பரவாயில்லை தம்பி என்றார்...  இப்படித்தான் முதலில் எண்ணெய் ஆட்டி பயன்படு

இதுக்கு மேல உயிரோடு இருந்தால் ஊருக்கு வந்து....

Subbiahpatturajan அவ்வளவு எளிதல்ல வெளிநாட்டில் வேலை செய்பவன் நாடு திரும்புவது…!!😢 போறோம் ரெண்டு வருஷம் சம்பாதிச்சு கடனை அடைச்சிட்டு திரும்ப சொந்த நாட்டுக்கே வறோம் அப்படீன்னு வெளிநாட்டு வாழ்க்கை ஆரம்பிக்கும்.. வயசு 22 தம்பி படிக்கிறான்,அக்காவுக்கு கல்யாணம் பண்ணனும் எப்படியும் ஒரு 3 அல்லது 4 வருஷம் சம்பாதித்தே ஆகனும் வயசு 24 அக்கா கல்யாணத்துக்கு வாங்கின கடன அடைக்கனும்,அடுத்து தங்கச்சி கல்யாணம் இருக்கு,தம்பி படிப்பு முடிய ரெண்டு வருஷம் இருக்கு அதனால இன்னும் ஒரு 3 வருஷம் வயசு 26 தம்பி படிப்பு முடிஞ்சி ஒரு வேலைக்கு போகனும் ஒரு தொழிலுக்கு என்னமும் பண்ணிக் கொடுக்கணும் அதனால இன்னும் ஒரு 2 வருஷம் – வயசு 28 அப்பா அம்மா எனக்கு பொண்ணு பார்க்கறாங்க கல்யாணம் பண்ணனும் அதுக்கு பணம் சேர்க்கனும் அதுக்கு ஒரு 1 வருடம் – வயசு 30 கல்யாணத்துக்கு வாங்கின கடன் பட்ட கடன் எல்லாத்தையும் முடிச்சி ஊரு போகனும் அதுக்கு ஒரு 2 வருஷம் – வயசு 32 தனக்குன்னு சின்னதா ஒரு குடும்பம் பிள்ளைய ஸ்கூல் சேர்க்கனும், அதுக்கு கொஞ்சம் பணம் சேர்த்து வைக்கனும் அதுக்கு 2 வருஷம் – வயசு 34 ஒரு வீட்ட கட்டி முடிச்சிடனும் இத்தனை வருஷம் இருந்

“இந்தக் காலத்துப் பசங்க நாகரீகம் இல்லாதவங்க...” எனும் குற்றச்சாட்டுகள்....

Subbiahpatturajan “இந்தக் காலத்துப் பசங்க நாகரீகம் இல்லாதவங்க...” எனும் குற்றச்சாட்டுகள்.... இந்தத் தடைகளைத் தாண்டுங்கள்! நதியைக் கவனித்திருக்கிறீர்களா? சமதளத்தில் மென்மையாக ஓடிக் கொண்டிருக்கும். பாறைகளின் இடையே ஓடும் போது சலசலவென தாவி ஓடும். அருவியில் வருகையில் உடைந்து வீழும். ஆனால் விழுந்த இடத்திலேயே காலொடிந்து கிடப்பதில்லை. ஆக்ரோஷம் கூட்டி இன்னும் அதிக வேகமாய் ஓடும்! தடைகள் இல்லாத பயணமே கிடையாது. தடைகளைத் தாண்டி ஓட வேண்டும். ஐயையோ தடை வந்துவிட்டதே என உடைந்து போய் உட்கார்ந்தால் வெற்றி கிடைக்காது! தடைகள் வரும்போது, வேகம் குறையலாம், அல்லது தாமதம் நேரலாம். ஆனால் முறியடித்து முன்னேறுவதில் தான் சாதனைகள் அடங்கியிருக்கின்றன! இன்றைய இளைஞர்களின் முன்னே நிற்கும் முக்கியமான சிக்கல்களாக இவற்றைச் சொல்லலாம். போதை! இன்று, நேற்றல்ல, எப்போதுமே ஒரு இளைஞனின் வெற்றியை வெட்டிப் போட போதைப் பழக்கம் மட்டுமே போதும். நிகோடினை நுரையீரலுக்கு நேரடியாய் இறக்கி வைக்கும் புகை அதில் முக்கியமான ஒன்று! பள்ளிக்கூடப் படி தாண்டும் முன்பே பலருக்கும் புகை பழகிவிடுகிறது! உலகில் எங்கே என்ன தடை செய்யப்பட்டாலும் அது ந