முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மே, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பாமர மனிதனை விட படிப்பறிவுள்ளவன் விரைவில் இறப்பது ஏன்?

Subbiahpatturajan மனிதனை_கொல்வது நோயா? பயமா? 1. பாமர மனிதனை விட படிப்பறிவுள்ளவன் விரைவில் இறப்பது ஏன்? 2.அடுப்பு புகையை பல மடங்கு சுவாசித்த கிழவிகளைவிட சிகரட் புகைத்தவன் பலருக்கு புற்றுநோய் வருவது ஏன்? 3.கள்ள சாராயம் குடித்த கிழவனைவிட கலர் சாராயம் குடிக்கும் குமாரர்கள் பலருக்கு கல்லீரல் பாதிப்பு ஏன்? 4.தேள் கொட்டினால் வெறும் வெங்காயத்தை தேய்த்துவிட்டு வேலையை தொடர்பவன் எங்கே? எரும்பு கடிக்கு மருத்துவமனைக்கு விரைபவன் எங்கே? 5.நெல் அறுவடை செய்யும்போது விரலை அரிவால் வெட்டிவிட்டால் கையில் களிமண்ணை அப்பிக்கொண்டு  வேலை பார்ப்பவன் எங்கே? பிளேடு கிழிக்கு ஆன்டிபயோடிக் இட்டு கட்டு போடுபவன் எங்கே? 6.அழுக்கு மணலில் விழுந்து பிரண்டு விளையாடிய குழந்தையைவிட மணலையே தொட்டிராத குழந்தைக்கு நோய் எதிர்ப்புசக்தி குறைபாடு ஏன்? 7.உண்ட கையோடு ஓடிவந்து பிரசவம் பார்த்து ஆரோக்கிய குழந்தையை அள்ளி கொடுத்த கிழவிகளின் கையைவிட ஆயிரம் முன்னெச்சரிக்கையோடு அறுவை சிகிச்சை செய்த குழந்தை ஐசியூவில் இருப்பது ஏன்? ஏன்? ஏன்? ஏன்? காரணம் மிக சிறிது.   இயற்கைக்கும் நமக்குமான தொடர்பு இல்லாமல் போனது ஒன்று. நோயைப் பற்றிய அத

பல வருடங்களாக தமிழ்நாட்டில் வசித்து வரும் எங்களை சில வருடங்களாக இவ்வாறு கையாள்வது மிகவும் மன வேதனையை

Subbiahpatturajan தமிழ்நாட்டில் ஈழத் தமிழர்கள் தமிழ ்ந ாட ்ட ில ்ஈழத ்தம ிழர ்ந ில ை திருச்சி சிறப்பு முகாம் என்னும் வதை முகாமில் உள்ள ஈழத் தமிழர்களின் குமுறல்...      தமிழகத்தில் மற்றுமோர் முள்வேலி..... இங்கு அடைக்கப்பட்டுள்ள ஈழத்துப் பறவைகள் பறந்து அவர் அவர் உறவுகளோடு இன்னைந்து பயணிக்க உலகத் தமிழர்கள் ஆதரவுக்கரம் நீட்டி நிற்கின்றோம்...     ஈழத்தில் சிங்கள இனவாத அரசால் நிகழ்த்தப்பட்ட உள்நாட்டுப் போரில் உறவுகள் உடமைகள் இழந்து போரின் அழியா நினைவுகளோடு வாழவே வழி தெரியாது எங்கள் உயிரை காப்பாற்றி வாழ்வாதாரத்தை உருவாக்கிக்கொள்ள எங்கள் உறவுகளிடம் தமிழ்நாட்டில் அகதிகளாக தஞ்சமடைந்து மூன்று தலைமுறைகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். எங்களுக்கான மறுக்கப்பட்டு உரிமைகளும் சுதந்திரங்களும் மறுபடியும்  சிறப்பு முகாம் என்ற பெயரில் அமைக்கப்பட்டுள்ள முள்வேலி வதைமுகாமில் எங்களை அடைத்து வைத்து மன உளைச்சலுக்கு ஆளாக்குபவர்கள் யார் என்று கூட தெரியாது எமக்கு பொறுப்பானவர்கள் யார் என்றும் இனங்காண முடியாது தவித்து வருகிறோம். இந்த COVID-19 காலத்தில் முறையான சுகாதார வசதிகளும் மருத்துவ வசதிகளும் ஏதும் இல்லாது 60க்கும

வாலுப்பசங்க பார்த்துக் கொண்டே இருக்கலாம்...

New bikes வாங்குவோர் கவனத்திற்கு...!!?

Subbiahpatturajan கவனம் நண்பர்களே,,,                  சமீபத்தில் எனது உறவினர் புதிதாக இரு சக்கர வாகனத்தை மதுரையில் உள்ள ஒரு ஷோரூமில் வாங்கியிருந்தார்,  நானும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து விட்டு அதன் விலை பற்றி பேசிக்கொண்டிருந்தோம். அப்போது அவர் ஆன் ரோடு விலை Rs.58500/- ஆகி விட்டது என கூறி பையில் இருந்த invoice யை காட்டினார்... அதில் வண்டியின் அடக்க விலை வரி உட்பட ரூ 41000/- என போட்டு இருந்தது.. மீதம் ரூ 17500/ க்கு கணக்கு கேட்டேன்...அவர் 8700/ ரூபாய் இன்சூரன்ஸ் எனவும், சாலை வரி 6800/- எனவும் மீதம் extra fitting க்காக எனவும் சொன்னார்.... நான் உடனடியாக RTO அலுவலகம் அழைத்து புதிய வாகன பதிவு பற்றி விசாரித்தேன்,  அவர்கள் சொன்னது அதிர்ச்சியாக இருந்தது...அதாவது நாமே நேரடியாக வாகனத்தை பதிவு செய்து கொள்ளலாம்  அதற்கான சாலை வரி மற்றும் பதிவு தொகையை ஆன்லைனில் செலுத்த முடியும்  மேலும் அந்த தொகை வாகனத்தின் இன்வோய்ஸ் தொகையில் வெறும் 8 சதம்வீதம் செலுத்தினால் போதும்.  மேலும் பதிவு தொகை வெறும் 300 ரூபாய் மட்டும் தான் என்பதை அறிந்தோம்... அடுத்த படியாக இன்சூரன்ஸ் பற்றி நண்பர்களிடம் விசாரித்தோம் அவர்கள

இப்படியொரு காட்சியை எங்கள் ஊர் முன்னோர்கள் யாரும் கண்டு இருக்க வாய்ப்பே இல்லை..

Subbiahpatturajan https://www.cinartamilan.com/2021/05/blog-post_19.html #வற்றாதஜீவநாடி  # Thamirabarani இந்த புகைப்படங்களை பார்த்ததில் இருந்து என் நெஞ்சில்  ஏதோ ஒரு இனம்புரியாத வலி உண்டாகி கொண்டு இருக்கிறது... முதலில் இந்த புகைப்படம் எந்த ஊர் எந்த இடம் என்று தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள். ஆம் இது நெல்லை மாவட்டம்  பாபநாசத்தில் பொதிகைதாயினால் எங்களுக்கு கொடுக்கப்பட்ட அமுதசுரபி போன்ற எந்தகாலத்திலும் வற்றாத தாமிரபரணிதாயின் செல்லப்பிள்ளையான அகத்தியர் அருவிதான் இது. ‌ இப்படியொரு காட்சியை எங்கள் ஊர் முன்னோர்கள் யாரும் கண்டு இருக்க வாய்ப்பே இல்லை.. ஆனால்  இப்படியொரு கொடூரசெயலை வனத்துறையினர் அரங்கேற்றி தலைமுறையினரை பார்க்கவைத்து இருக்கிறார்கள்.  ஒவ்வொரு ஊரில் நீர் வற்றிபோய் ஆறுகுளங்கள் சிதிலமடைந்து வரண்டுபோய் தான் அநேகர் பார்த்து இருப்பார்கள். ‌ஆனால் இங்கே வற்றாத ஜீவநதியாம் தாமிரபரணியில் வருடம்முழுவதும் தண்ணீர்கொட்டும் அகத்தியர் அருவியின் ‌ நீர்வழித்தடத்தை மணல் மூட்டைகள் கொண்டு அடைத்து இயற்க்கைத் தாய் கொடுத்த கொடையை,  பொங்கி பாய்ந்து ஓடியஅகத்தியர் அருவியை வரண்டு போகவைத்திருக்கிறா

இது செய்தி அல்ல... நிஜம்... இதை செய்தியாக்கித் தருவதால்...?

Subbiahpatturajan 🙏ஊடகங்களுக்கு தாழ்மையான வேண்டுகோள்!   நோயாளிகள், பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்கள், உதவியற்ற குடும்பங்கள் தன் குடும்பத்தினரின் நோய் தீர வேண்டி சுற்றித் திரிகின்றனர். பசியால் அவதிப்படுகின்றனர்!  மருந்திற்காக வரிசையில் நாள் கணக்காக நிற்கின்றனர்...  இறக்கும் மக்களின் உடல்களை பொது இடங்களில் எரிக்கின்றனர் - 🙏இதைத்தானே நாள் முழுவதும் நீங்கள் ஒளிபரப்புகிறீர்கள்🙏 இது செய்தி அல்ல... நிஜம்... இதை செய்தியாக்கித் தருவதால் எங்களுக்கு எந்த நன்மையும் செய்யாது அல்லது எங்களுக்கு எந்த புதிய தகவலையும் கொடுக்காது 🙏 பீதியைப் பரப்புவதன் மூலம் நீங்கள் என்ன நிரூபிக்க விரும்புகிறீர்கள்? ஒரு ஆரோக்கியமான நபர் கூட நோய்வாய்ப்படும் அளவுக்கு அச்சத்தை உருவாக்குகிறீர்கள்! 🙏ஒரு தொற்றுநோய் நடக்கிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம். நிலைமைக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை என்பதையும், சரியான முடிவு என்னவென்று யாருக்கும் தெரியாது என்பதையும் நாங்கள் அறிவோம் !! எங்கள் மன உறுதியை நீங்கள் அதிகரிக்க முடியாவிட்டாலும், தயவுசெய்து அதை உடைக்காதீர்கள் !!!🙏 பிரச்சினைகளை தீர்க்க உதவுங்கள்.🙏 நோயிலிருந்து மீண்ட,

யார் இந்த குஞ்சரம்மாள்...?! #குஞ்சரம்மாள்

Subbiahpatturajan ஒரு மாத லாக்டவுனுக்கே விழி பிதுங்கி நிற்கிறோமே, தாது வருடப் பஞ்சம் என்ற பெயரையாவது  கேள்விப்பட்டதுண்டா? 1875 தொடங்கி 1880 வரை தமிழகத்தைப் புரட்டிப் போட்ட பெரும் பஞ்சம். வயல் வரப்புகளில் எறும்புகள் சேர்த்து வைத்திருந்த புற்று அரிசியைகூட தோண்டி எடுத்து திண்று தீர்த்தபின்னும் தீராத பஞ்சம், முருங்கை கீரையை மட்டுமே மூன்று வேளையும் அவித்து தின்று உயிர் பிழைத்துக்கிடந்த கொடிய பஞ்சமது. கண் முன்னே கணவனும், மனைவியும் ஒட்டிய வயிருடன், யார் முதலில் சாகப்போகிறோம் என்று தெரியாமல் ஒருவரை ஒருவர் வெற்றுப் பார்வை பார்த்தபடி படுத்துக் கிடந்த வேதனை மிகுந்த காலம் அது . பஞ்சம் தந்த பாடங்கள் ஒரு பக்கம் இன்றும் பேசப்பட்டு வருகிறது. அதில் நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய கதை குஞ்சரம் அம்மாவினுடையது.  குஞ்சரம் தாசி குலத்துப் பெண்மணி. மதுரையில் கொடிகட்டிப் பறந்த அழகே வடிவான  தாசி. பெரும் செல்வச் செழிப்புடன் வாழ்ந்து வந்தவள். மதுரை நகரைச் சுற்றி இருந்த செல்வந்தர்கள் எல்லாம் குஞ்சரத்தின் அழகில் மயங்கிக் கிடந்த காலம் அது. வடக்கு ஆவணி மூல வீதியில் உள்ள சந்தில் இருந்த இரண்டு பெரும் வீடுகளும் அவளு

யூதர்கள் கூட தமிழகத் தெலுங்கர்களிடம் பிச்சை எடுக்க வேண்டும்.

Subbiahpatturajan *தெலுங்கு வந்தேறிகளை பாராட்டித்தான் ஆகவேண்டும்*  கன்னடரிடம் போரில் தோற்ற தமிழர்களின் தாய்நிலத்தில்,  கன்னடரை காக்கா பிடித்து அவர்களின் பிரதிநிதியாக..  ஆதிக்க நோக்கத்துடன் கன்னடத்தில்  குடியேறி ,  கன்னடர் வீழ்ந்த பிறகு 350ஆண்டுகள் ஆண்டு அனுபவித்து  அதன்பிறகும்  350ஆண்டுகளாக *(தொடர்ச்சியாக 700 ஆண்டுகள்)* *தாம் கைப்பற்றிய அதிகாரத்தையும் சொத்துக்களையும் நிலவுடைமையையும்*  *வழிவழியாக கைமாற்றி தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் ஆதிக்க சக்தியாகவே இருக்கிறார்கள் தெலுங்கர்கள்...*  எனக்குத் தெரிந்து வரலாற்றில் வேறு எந்த இனமும் இன்னொரு இனத்தை இப்படி மிக மிகத் தந்திரமாக சுரண்டி கொழுத்து அதுவும் இத்தனை காலம் நீடிக்கவில்லை.  எந்த ஒரு இனமும் தமிழினம் போல போரில் ஏற்பட்ட தோல்விக்கு இத்தனை பெரிய விலையைக் கொடுக்கவுமில்லை..  இன்றுவரை தமிழகத்தில் அவர்களின் மக்கட்தொகையும் சரி, சொத்துபத்துக்களும் சரி, அரசியல் ஆதிக்கமும் சரி, வணிக ஆதிக்கமும் சரி தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில்தான் செல்கிறது.  யூதர்களைக் கூட இவர்களுடன் ஒப்பிட முடியாது, ஏனென்றால் யூதர்கள் ஒரே இனம் கிடையாது. எல்லா இனத்திலும் யூத மதத்தை