முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

அக்டோபர், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

"நீங்கள் பார்க்க Smartடாக, Cuteடாக இருக்கீங்க"

Subbiahpatturajan *Self Discipline* 1. தொடர்ச்சியாக இரண்டு முறை யாரையும் Phoneல் அழைக்காதீர்கள். அவர்கள் முக்கிய வேலையாக இருக்கலாம், அல்லது பேச முடியாத சூழ்நிலையில் இருக்கலாம். 2. திருப்பித் தருகிறேன் என்று உங்களிடம் பணம் கடனாக கேட்பவரிடம் மனப்பூர்வமாக கேட்டுக்கொடுங்கள். இது திரும்ப வருமா, வராதா என. இது உங்கள் Character ரை அவர் உணரச் செய்யும். இதே போல், இரவல் கொடுக்கும் பேனா, புத்தகம், Lunch box, குடை போன்றவைக்கும். 3. Hotelல் சாப்பிடலாம் என நண்பர் உட்பட யார் அழைத்தாலும், Menu cardல் costly யாக உள்ள எதையும் Order செய்யாதீர்கள். அழைத்தவரையே உங்கள் விருப்பப்படி Order சொல்லுங்கள் என வேண்டலாம். 4. தர்மசங்கடமான இது போன்ற கேள்விகளை தவிர்க்கலாம். "இன்னும் கல்யாணம் ஆகலயா?" "குழந்தைகள் இல்லையா?" "இன்னும் சொந்தவீடு வாங்கவில்லையா?" "ஏன் இன்னும் Car வாங்கவில்லை?" இது நமது பிரச்சினை இல்லைதானே!" 5. தானியங்கி கதவை திறக்க நேர்ந்தால் பின்னால் வருபவர் ஆணோ, பெண்ணோ, சிறியவரோ, பெரியவரோ அவர்கள் வரும்வரை மூடாமல் பிடித்திருப்பது அவர்களை சமூகத்தில் பொறுப்புள்ளவர்களா

உங்க பொழுதுபோக்கு என்ன அதாவது ஆங்கிலத்தில் ஹாபிஸ்...

Subbiahpatturajan பொழுதுபோக்கு என்றால் என்ன? அதாவது ஆங்கிலத்தில் ஹாபி.... பொழுதுபோக்கும், பொழுதை ஆக்கும்! எப்படா ஸ்கூல் மணி அடிக்கும் ஓடியாடி விளையாடலாம் என மணி மேல் விழிவைத்துக் காத்துக் கிடந்த பால்ய காலம் ஞாபகம் இருக்கிறதா? அதன் பின் படிப்பு வேலை என வாழ்க்கையின் அடுத்தடுத்த கட்டங்களுக்கு தாவியபோது நழுவிப் போன ஒரு விஷயம் தான் பொழுது போக்கு. ஆங்கிலத்தில் சொன்னால் ஹாபி! பொழுது போக்கு என்றால் இயல்பாகவே ஒரு சின்ன உற்சாகம் மனதுக்குள் ஓட வேண்டும். சிலரோ, “அதுக்கெல்லாம் ஏதுங்க நேரம்... வேலையைப் பாக்கவே டைம் இல்லை” என சலித்துக் கொள்வார்கள். ஒருவேளை நீங்களே கூட அப்படி புலம்பும் பார்ட்டியாய் இருக்கலாம். ஹாபி என்றாலே ஏதோ மிச்ச மீதி இருக்கும் நேரத்தைச் செலவிடும் வெட்டி விஷயம் என்று தான் பலரும் நினைக்கிறார்கள். அப்படியல்ல. அதுவும் நமது வாழ்வின் ஒரு பாகமே. நமது அலுவலக வேலை நமது பொருளாதாரத் தேவைக்கான ஓட்டம். பொழுது போக்கு, நாம் இழந்த விருப்பங்களுக்கான ஓட்டம்.! “இதுல என்னய்யா இருக்கு..” என சலிப்படைபவர்கள் ஒரு தனி ரகம். அவர்கள் வாழ்க்கையில் எல்லாவற்றையுமே பொருளாதார ஸ்கேல் கொண்டு அளப்பவர்கள். வா

வீரப்பனும் - விலகாத மர்மங்களும்....

Subbiahpatturajan வீரப்பனும் - விலகாத மர்மங்களும்:        மனிதன் பொய் சொல்லுவான், ஏமாற்றுவான், பழிவாங்குவான், நேர்மையற்ற செயலை செய்வான், யானைகளை பிடித்து சர்க்கசிற்கு விற்பான், யானையைக் கொடுமைப்படுத்தி பணம் காண்பான். மனிதனைப்போல கொடுமைக்காரர்கள் யாரும் இல்லை. இதைக் கூறியவர் வேறு யாருமல்ல, யானைகளைக்கொன்று தந்தங்களைக் கடத்துகிறார் என்று குற்றம்சாட்டப்பட்ட கூசு முனிசாமி என்ற வீரப்பன் தான். மேட்டூர், சத்தியமங்கலம் மலைகளையும், காடுகளையும் கட்டிக்காத்த காவல்காரன், விலங்குகளுடனும், பறவைகளுடனும், பாம்புகளுடனும் காட்டிற்குள்ளேயே சேர்ந்து வாழ்ந்து மேற்குத் தொடர்ச்சி மலையை தனது ராஜாங்கமாக்கி, எந்த சந்தர்ப்பத்திலும் அசராத வீரம் கொண்டு, தமிழ்நாடு,கர்நாடகா, என இரண்டு மாநில காவல்துறைக்கும், மத்திய ரிசர்வ் படைக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கி 34 வருடங்களுக்கு மேல் சத்தியமங்கலம் காட்டை ஆண்டு வந்த "காட்டுச்சிங்கம்"...! இன்று வரை பெரும் சவலாக இருந்து வரும் "காவேரி பிரச்சனையைக்" கூட ஒற்றை ஆளாய் இருந்து சமாளித்து , "வந்து பார்" என்றவர்..! யானை தந்தங்களை கடத்தியதாகவும், சந்த

“யோவ் வெளிநாடு போறது இருக்கட்டும் நான் முதல்ல கக்கா போகணும்.

Subbiahpatturajan “யோவ் வெளிநாடு போறது இருக்கட்டும் நான் முதல்ல கக்கா போகணும். அடேங்கப்பா.. என்னம்மா அனுபவித்து எழுதியிருக்கார் இந்த பதிவாளர். பிரமாதம். சிரித்து சிரித்து வயிறே புண்ணாகிவிட்டது..! ___ நம்மைப் போலவே கார்ப்பரேட் விளம்பரத்தால் கடுப்பான யாரோ ஒருவர் தான் இதை எழுதியிருக்க வேண்டும். சிரிச்சு சிரிச்சு வாயே வலிக்குது.. உள்ளங்கையிலிருந்து உள்ளாடைகள் வரை கிருமிகள் மனிதர்களை வேட்டையாடிக் கொண்டிருப்பதை போன்ற விளம்பரங்கள் நிஜம்தானா? காலையில் எழுந்து பல்துலக்க போனால் விளம்பரத்திலிருந்து வெள்ளைக்கோட்டு அணிந்து குறுந்தாடி வைத்த செட் அப் மருத்துவர் “உங்கள் பல்லிடுக்கில் பதுங்கி இருக்கும் கிருமிகளை உங்கள் பற்பசை கொல்லுமா? எங்கள் பற்பசை உபயோகித்தால் பனிரெண்டு மணிநேரம் கிருமிகளிடமிருந்து உங்கள் பல்லுக்கும் வாய்க்கும் பாதுகாப்பு” என்று பாடம் நடத்துகிறார். விட்டால் வீடுவீடாக வந்து காலங்காத்தாலே பல் துலக்கி விட்டு ஹோம்டெலிவரி என்று சர்வீஸ் சார்ஜும் போட்டு பில்லை தலையில் கட்டுவார்கள் போல இருக்கு. ரெண்டுக்கு போகலாம் என்று கக்கூசுக்கு போனால் உட்காராதீங்க உட்காராதீங்க என்று அங்கே ஒரு மாஜி

என் மகன் கான்வென்ட் ஸ்கூல்ல படிக்கிறான்.....இதோட அர்த்தம் தெரியுமா.........???!!!

சினார்தமிழன்  Subbiahpatturajan என் மகன் கான்வென்ட் ஸ்கூல்ல படிக்கிறான்.....இதோட அர்த்தம் தெரியுமா.........???!!! கான்வென்ட் என்ற வார்த்தையை நினைத்து பெருமை படாதீர்கள்... ! உண்மையை புரிந்து கொள்ளுங்கள்..! 'கான்வென்ட்'முதலில் இந்த வார்த்தை எங்கிருந்து வந்தது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் எனவே விளக்கு ஏற்றுவோம்..! பிரிட்டனில் ஒரு ஆண் மற்றும் பெண்ணுடன் திருமண உறவில்லாமல் ′′ உறவில் வாழலாம் ′′ என்ற சட்டம் இருந்தது.. அந்த முறைப்படி குழந்தைகள் பிறந்தனர், அதனால் பிறந்த அந்த குழந்தைகள் ஒரு தேவாலயத்தில் விடப்பட்டனர்...! இந்த குழந்தைகளை என்ன செய்வது என்று இங்கிலாந்து அரசாங்கத்திற்கு தீவிர பிரச்சனை வந்தது.! பின்னர் அரசாங்கம் கான்வென்ட் என்ற மையத்தை திறந்து விட்டது. அது அனாதை குழந்தைகள் மற்றும் இழிபிறவிகளின் வாழுமிடம்..! அனாதைகள் மற்றும் கைவிடப்பட்ட குழந்தைகள் தங்கள் உறவுகளை உணரச் செய்ய, அவர்கள் அனாதைகளில் ஒரு தந்தை, ஒரு தாய், ஒரு சகோதரியை நியமித்தார்கள்..! ஏனெனில் அந்த குழந்தைகளுக்கு ஒரு நியாயமான தந்தை அல்லது தாய் இல்லை. எனவே கான்வென்ட் இழி குழந்தைகளுக்காக இந்த ஏற்பாட்டு முறை செ

அரசு ஊழியர்கள் மாணவ மாணவிகள் கவனத்திற்கு...

Subbiahpatturajan அரசு ஊழியர்கள் மாணவ மாணவிகள் கவனத்திற்கு... *important modified govt G.o. s* தமிழக அரசு ஊழியர்களின் முக்கிய அரசாணைகள் (1)- பெண் அரசு ஊழியர்களை அலுவலக நேரத்திற்கு முன்னும், பின்னும் அவசியமிருந்தாலொழிய நிறுத்தி வைத்து வேலை வாங்கக்கூடாது (RG. 1984.P.278) (2)- கலப்பு திருமணம் செய்து கொள்பவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு பெற்றோரின் விருப்பப்படி எவரேனும் ஒருவரின் ஜாதி அடிப்படையில் ஜாதி சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம். (அரசாணை எண். 477/ சமூக நலத்துறை, நாள் - 27.6.1975 ) (3)- அரசு ஊழியர்களின் மனைவி, கணவர், மக்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பெயரில் அவர்களுடைய சொந்த வருமானத்தை கொண்டு (அரசு ஊழியரின் வருமானம் இன்றி) சொத்து வாங்க அனுமதி தேவையில்லை. பணிப்பதிவேட்டில் குறிக்கப்பட்ட வேண்டியதுமில்லை. (அரசாணை எண். 3158/பொதுப்பணியாளர்கள் /துறை. நாள்- 27.9.1974 ) (4)- அரசு பணியாளர்கள் நடத்தை விதிகள்படி அரசு ஊழியர்கள் அசையாச் சொத்து, அசையும் சொத்து ஆகியவற்றை கடனாக மற்றும் பரிசுப் பொருட்களாக வாங்கும்போது மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்த ஆணைகள் (பதுத ஆணை எண். 45679/A2/1996, ந

ஒரு சிறிய உதாரணம்...

Subbiahpatturajan M.No.393 அரசாங்க ஊழியர்கள் தங்கள் உரிமைகளை  மட்டுமே பேசுகிறார்கள். கடமையும் உண்டு என்பதை மறந்து விடுகிறார்கள். இதை விளக்குவதுதான் இந்த சிறுகதை. ஒரு ஊரில் திரிஷா நகர், காஜல் நகர் என இரு ஏரியா.  திரிஷா நகரில் திருநெல்வேலி பகுதியை சேர்ந்த ஒருவர் கடை ஆரம்பித்தார். காலை 6.00 மணிக்கு மனைவி கடையை திறந்து விடுவார். பால் பாக்கெட் வியபாரம் நடக்கும். அதற்குள் மார்கெட் சென்று கணவன் காய்கறி வாங்கி வந்து விற்க்க ஆரம்பிக்க மனைவி சமைத்து வர போவார். மனைவி பின் மதியம் கடையை பார்க்க சிறிது ஓய்வுக்கு பின் கணவன் வர மனைவி ஓய்விற்கு செல்ல....மாலை கணவன் மனைவி இருவரும் இணைந்து வியாபாரத்தை கவனிக்க...சுறுசுறுப்பும் நேர்மையும் பணிவும் வியாபாரத்தில் வெற்றியை தந்தது. பிழைக்க வந்த ஊரிலே நாலு வீடு வாங்கினர். இருப்பினும் தொழில் அதே போலவே..... இது கற்பனை கதை அல்ல. உங்கள் வாழ்வில் நீங்கள் பார்த்த கதை தான். பார்த்த நபர்கள் தான். சரி காஜல் நகருக்கு வருவோம். அங்கே மளிகை கடை கிடையாது. மக்களுக்கு சேவை செய்ய அரசு மளிகை கடை ஆரம்பித்தது. இரு பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். யூனியன் சொன்னது. ஒரு நாளைக்கு எட்டு மண

முடிந்தவரை நேர்மையாக வாழப்பழகிக் கொள்ளுங்கள்....!?

முடிந்தவரை நேர்மையாக வாழ பழகிக் கொள்ளுங்கள்....!? நேர்மை பழகு “எப்போதும் உண்மையைப் பேசுபவர்கள் பேசிய எதையும் ஞாபகம் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை” நூற்றாண்டுக்கு முன்னால் சாம் ரேபன் சொன்ன வார்த்தையின் அடத்தி அதிகமானது. எது முக்கியமானதோ அதைப்பற்றி நாம் அதிகம் பேசுவதில்லை. அந்த முக்கியமான பட்டியலிலுள்ள அதி முக்கியமான விஷயம் இந்த நேர்மை. நாம் பொருளாதாரம், இலட்சியம், புகழ் எனும் விஷயங்களுக்காய் நெட்டோட்டம் ஓடுகிறோம். ஆனால் நேர்மையைக் குறித்துப் பேசுவதற்கு மறந்து போய்விடுகிறோம். அதிகபட்சம் நமது குழந்தைகள் நேர்மையை அறிவது ஆரம்பப்பாடசாலை புத்தகங்களில் மட்டுமே என்று கூடச் சொல்லலாம். சின்ன வயதில் குழந்தைகளுக்கு நேர்மையையும், உண்மையையும் பற்றிப் பேசிவிட்டு நாமே அதை நிறைவேற்றாமல் இருக்கிறோம். அப்போது நமது அறிவுரைகளும் குழந்தைகளின் மனதுக்குள் சென்று தங்குவதில்லை. நாட்டில் இன்று நேர்மைக்குப் பஞ்சம். நேர்மை இயல்பாகவே மனிதர்களிடம் இருக்க வேண்டியது. ஆனால் இன்றைய உலகில் நேர்மையாளர்கள் அருகி வரும் இனத்தைச் சேர்ந்தவர்கள் ஆகிவிட்டார்கள். அதனால் தான் தவற விட்ட பையைத் திருப்பித் தரும் ஆட்டோக்காரர்

உட்கார்ந்து பார்க்கிற மாதிரி வேலை ஏதாவது....!!!

இன்று சீட்டை விட்டு எழுந்திருக்காமலே வேலை செய்தேன் என பெருமையாகச் சொல்லிக் கொள்கிறீர்கள் என்றால் உங்களைதான் ஆபத்து நெருங்குகிறது. அதிக நேரம் அமர்ந்தே வேலை செய்து பணியில் சிறந்தவராகத் இருந்தாலும் உங்கள் உடல் விஷயத்தில் ஆரோக்கியமற்றவர்களாகவே இருப்பீர்கள். எவ்வாறு என்பதைக் கீழே காணலாம். இதயக் கோளாறுகள் ஏற்படும்: அதிக நேரம் அமர்வதால் ஏற்படும் பேராபத்துகளில் முதலில் பாதிக்கப்படுவது இதயம் தான். ஏனெனில் நாம் அதிக நேரம் அமர்ந்திருக்கும் போது கெட்டக் கொழுப்புகள் கரைவது குறைந்துவிடும். அந்த கெட்டக் கொழுப்புகள் ரத்தக் குழாய்களில் தேங்கி நின்றுவிடும். அதன் விளைவு இதயத்தின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டு இதய நோய்கள் வரும். உடல் வலி அதிகரிக்கும்: கழுத்து வலி, தோல்பட்டை வலி, இடுப்பு வலி, முது வலி என நாள்பட்ட நோய்களால் தினமும் அவதிப்படுகிறீர்கள் என்றால் அதற்கும் நீங்கள் அதிக நேரம் அமர்ந்திருப்பதேக் காரணம். உடல் தோற்றம் சீரற்று போகும் : ஒரே மாதிரியான நிலையில் நேராக அப்படியே அமர்ந்திருப்பதால் முதுகுத் தண்டு பாதிப்படையக் கூடும். இதனால் உடல் தோற்றம் சீரற்ற நிலையை அடைந்துவிடும். உங்கள் உடல் தோற்றம் நீங்களே

பிச்சை போடுவது கூட சுயநலமே...,

Subbiahpatturajan பிச்சை போடுவது கூட சுயநலமே..., வியந்து போன வரிகள் "" "" "" "" "" "" "" "" "" " 👌👌👌👌👌👌👌 நோய் வரும் வரை உண்பவன், உடல் நலமாகும் வரை உண்ணாதிருக்க வேண்டி வரும்! 👌👌👌👌👌👌👌👌 பணம் சம்பாதிப்பது குண்டூசியால் பள்ளம் தோண்டுவது போல... ஆனால், செலவழிப்பது குண்டூசியால் பலூனை உடைப்பது போல..! 👌👌👌👌👌👌👌👌 பணத்தின் மதிப்பு தெரியவேண்டுமா? செலவு செய்யுங்க.....! உங்களின் மதிப்பு தெரியவேண்டுமா?.. கடன் கேளுங்க.! 👌👌👌👌👌👌👌👌 பிச்சை போடுவது கூட சுயநலமே..., புண்ணியம் கிடைக்கும் என்று நினைத்தால்... 👌👌👌👌👌👌👌👌 அனுபவத்தால் உணரவேண்டிய ஒன்றை..., ஆயிரம் தத்துவ ஞானிகளாலும் உணரவைக்க முடியாது. 👌👌👌👌👌👌👌👌 வாழ்க்கையை கற்றுக்கொள்வதில் குழந்தை போல் இரு..., அதற்கு அவமானம் தெரியாது விழுந்தவுடன் அழுது முடித்து திரும்பவும் எழுந்து நடக்கும்..!! 👌👌👌👌👌👌👌👌 வெட்டாதீர்கள் - மழை தருவேன் என்கிறது "மரம்". வெட்டுங்கள் - மழை நீரைசேமிப்பேன் என்கிறது "

தலைவர் பிரபாகரன்- மதிவதனி அவர்களின் காதல் கதை 💕

Subbiahpatturajan தலைவர் பிரபாகரன்- மதிவதனி அவர்களின் காதல் கதை 💕 பிரபாகரன் வீட்டைவிட்டு வெளியில் வந்து தமிழீழ சுதந்திரத்திற்கான போராட்டத்தை தொடங்கிய பிறகு, 1983ஆம் ஆண்டு கருப்பு ஜூலை இனப்படுகொலை சிங்கள அரசினால் திட்டமிட்டு நிறைவேற்றப்பட்டது. தென் இலங்கையில் இருந்து பெரும்பாலான மக்கள் வடக்கில் குடியேறினர். மேலும் யாழ்ப்பாண பல்கலையில் படித்த தமிழ் மாணவர்களையும் வெளியேற்றும் முயற்சிகளில் இறங்கியது அரசு . அந்த நிலையில் 9/1/1984 அன்று 5 மாணவர்கள் மற்றும் 4 மாணவிகள் காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கினர். மக்கள் ஆதரவு மாணவர்களின் உண்ணாவிரதத்திற்கு பெருகியது. ஆனால் இலங்கை அரசு இந்த உண்ணாவிரதத்தை கண்டு கொள்ளவில்லை. 15ம் தேதி உண்ணாவிரதம் ஆரம்பித்த ஆறாம் நாள் மாலை மாணவர்களை பரிசோதித்த மருத்துவர் ஒரு மாணவி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறார் என்று அறிவித்தார். அன்று இரவு விடுதலைப் புலிகள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் மாணவர்களை உண்ணாவிரதப் பந்தலில் இருந்து கடத்திச் சென்றனர். புலிகள் அமைப்பினர் இந்த மாணவர்கள் சாவதை நாங்கள் அனுமதிக்க இயலாது என்று மக்களிடம் துண்டறிக்கை மூலம் தகவல் தெரிவித்தனர். உண்

தமிழினி-ஒரு பெண் போராளியின் சுயசரிதை...

Subbiahpatturajan தமிழினி – ஒரு கூர்வாளின் நிழலில் இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பரந்தனில் தாய் சின்னம்மா தந்தை சுப்பிரமணியம் தம்பதிகளுக்கு மூத்த மகளாகப் பிறந்தவர் தமிழினி (சிவகாமி ஜெயக்குமரன்). 1991 இல் இந்துமகா வித்தியாலயத்தில் படித்துக் கொண்டிருந்த பொழுது தமீழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து போராளியானார். இளம் வயதிலேயே பல போர்க்களங்களில் சமராடிய அனுபவங்களோடு, பின்னாளில் விடுதலைப் புலிகளின் அரசியல் துறை மகளிர் பிரிவுப் பொறுப்பாளராகச் செயல்பட்டவர். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், அன்ரன் பாலசிங்கம், அடேல் பாலசிங்கம் உட்படப் புலிகள் இயக்கத்தின் உயர்மட்டத் தலைவர்களிடத்திலும், மக்களிடத்திலும் அபிமானம்பெற்ற தலைவராக விளங்கியவர்.  அந்தக் காலகட்டத்தில் நடைபெற்ற பல்வேறு உயர்மட்;டச் சந்திப்புகளிலும் இயக்க அரசியல் நிகழ்வுகளிலும் பங்கேற்றவர். சர்வதேச மற்றும் உள்நாட்டுத் தலைவர்களிடமும் பிரதிநிதிகளிடமும் நன்கு பரிச்சயமானவர். புலிகளின் வீழ்ச்சியை அடுத்துப் பல்லாயிரக்கணக்கான போராளிகளுடன் இலங்கை அரசின் சிறைச்சாலைகளிலும் புனர்வாழ்வு முகாமிலும் நான்காண்டுகள் சிறையிலடைக்கப்பட