முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

சொந்த வீடு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வீட்டுக் கடனை அடைக்க 3 சிறந்த டிப்ஸ் ..!!! 3 best tips to pay off home loan .. !!!

Subbiahpatturajan வீட்டுக் கடன் லட்ச லட்சமாக வாங்கிவிட்டு கடனை விட இரண்டு மடங்காக வட்டிகட்டி ஆயுள் முழுக்க EMI ல்  தத்தளிப்பவர்களுக்கு ... சுலபமாக திரும்பச் செலுத்த 3 வழிகள்! லட்சக்கணக்கான தொகையை மொத்தமாக புரட்டி வீடு வாங்க முடியாது என்பதாலும், திரும்பக்கட்டும் மாதத் தவணைக்கு வட்டி மற்றும் அசலில் வரிச் சலுகை கிடைக்கிறது என்பதாலும் பலர் வீட்டுக் கடன் வாங்கி இருக்கிறார்கள். இந்த வீட்டுக் கடனை விரைவாக கட்டி முடிக்கவே பலரும் விரும்புகிறார்கள். இந்தியாவில் 15, ஆண்டுகள், 20 ஆண்டுகளுக்கு என வீட்டுக் கடன் வாங்கி இருந்தாலும் அதனை சராசரியாக எட்டு ஆண்டுகளில் கட்டி முடித்துவிடுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. வீட்டுக் கடனை தேர்ந்தெடுத்த காலம் வரை கட்டினால், கட்டும் வட்டி அதிகமாக இருக்கும். இதனை ஓர் உதாரணம் மூலம் பார்க்கலாம். * கடன் தொகை ரூ. 25 லட்சம் * திரும்பக் கட்டும் காலம் 30 ஆண்டுகள் (360 மாதங்கள்) * வட்டி: 10% * மாதத் தவணை ரூ. 21,939 இங்கே வாங்கும் கடனோ ரூ.25 லட்சம் தான். ஆனால், அதற்கு கட்டும் வட்டியோ ஏறக்குறைய ரூ.54 லட்சம். (பார்க்க: அட்டவணை 1) இப்படி கடைசி வரைக்கும் கடனைக் கட்டுவதற்...

மூலப்பத்திரம் என்றால் என்ன மூலப்பத்திரம் அத்தனை முக்கியத்துவம் வாய்ந்ததா?"

` `எங்களுடைய பரம்பரைச் சொத்துக்கு பட்டா மட்டுமே உள்ளது. அதற்குப் பத்திரம் பதிவுசெய்வது எப்படி?" ``பரம்பரைச் சொத்துக்குப் பட்டா மட்டுமே இருந்தால் கவலையில்லை. ஏதாவது பத்திரம் வேண்டுமென்றால், குடும்பத்துக்குள்ளேயே ஒருவருக்கு அடமானம், குத்தகை போன்ற ஆவணம் எழுதி, பதிவு செய்தால், உங்களின் பெயருக்கு வில்லங்கம் மாறிவிடும். சில நாள்கள் கழித்து, பதிவான அடமானம் அல்லது குத்தகையை ரத்து செய்து பத்திரம் பதிவு செய்தால், வில்லங்கச் சான்றில் மீண்டும் உங்கள் பெயர் பதிவு இடம்பெறும்.'' பத்திரம் ``பத்திரப் பதிவில் மூலப்பத்திரம் அத்தனை முக்கியத்துவம் வாய்ந்ததா?" ``ஆம். ஒருவருக்கு தாய் எவ்வளவு முக்கியமோ, அவ்வளவுக்கு தாய்ப்பத்திரம் சொத்துக்கு முக்கியம். தாய்ப்பத்திரம் இல்லாத சொத்து அநாதைதான். தாய்ப்பத்திரம் இல்லாவிட்டால், சொத்தின் மீது ஒரு நடவடிக்கை (மனைவி அல்லது மகள் அல்லது மகள் மீது தானப் பத்திரம்போல) எடுத்து ஒரு பத்திரம் பதிவு செய்தால், அதுவே தாய்ப்பத்திரமாக மாறிவிடும்." ``தாம்பரம் வரதராஜபுரத்தில் பெரும் நிலப்பரப்பு விற்கப்பட்டது. 3,600 சதுர அடி நிலத்தை நான் 1980-ல் வாங்க...

கிரைய பத்திரம் பதியும் போது கவனிக்க வேண்டிய 16 விஷயங்கள்!

கிரைய பத்திரம் பதியும் போது கவனிக்க வேண்டிய 16 விஷயங்கள்! ********************************************************************** 1. ஒரு நிலத்தை ஒரு நபரிடமிருந்து விலை கொடுத்து வாங்கி உங்கள் பெயருக்கு மாற்றி கொள்வதற்கு போடப்படும் ஆவணம் தான் கிரயப் பத்திரம் ஆகும். 2. மேற்படி கிரயப்பத்திரம் முத்திரை தாள்களில் எழுதப்பட்டு சார்பதிவகத்தில் சாட்சிகள் முன்னிலையில் பதியப்படுவது தான் கிரயப் பத்திர பதிவு ஆகும். 3. எழுதி கொடுப்பவரின் பெயரும் & இன்சியலும், அவரின் அடையாள அட்டை, பட்டா . மின் இணைப்பு, முன் பத்திரம் மற்றும் இதர ஆவணங்களில் உள்ளது போலவே பத்திரத்தில் எழுதப்பட்டுள்ளதா என பார்க்க வேண்டும். 4. எழுதி கொடுப்பவர், ஏற்கனவே முன் வாங்கிய கிரயப்பத்திரத்தில் உள்ள அவரின் முகவரியும், தற்போது இருக்கும் முகவரியும் ஒன்றா என்று பார்க்க வேண்டும். இரண்டும் வேறு வேறு முகவரி என்றால் இரண்டு முகவரியும் இப்போது எழுதுகிற கிரைய பத்திரத்தில் காட்ட வேண்டும் . 5. கிரயம் எழுதி வாங்குபவரும் தன்னுடைய பெயர் , இன்சியல், முகவரி ஆகியவை அடையாள அட்டையுடன் பொருந்தும்படி பிழையில்லாமல் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். 6....

சொந்த வீடு கட்டுபவர்களுக்கு நீங்கள் கவனிக்க வேண்டிய 50 டிப்ஸ்கள்.....!!

Subbiahpatturajan சொந்த வீடு கட்டுவோர்க்கு 50 டிப்ஸ்கள்.....!! 1. பத்திரப்படுத்தி வச்சுக்கோங்க.. 2. வீடு கட்டும்போது தண்ணீர், அஸ்திவாரம், சிமெண்ட், செங்கல், ஃப்ளோர், பெயிண்ட் என வீட்டின் ஒவ்வொரு கட்டுமான அம்சத்திலும் நம் ஆலோசனை மற்றும் கண்காணிப்பு இருக்குமாறு பார்த்துக் கொள்வது, வீட்டின் குவாலிட்டியைக் கூட்டும். தண்ணீர் : 3.. தண்ணீரின் தரம் மிக முக்கியம். அதிக உப்பு உள்ள தண்ணீரில் வீடு கட்டினால், கட்டுமானம் மெள்ள மெள்ள அரி மானத்துக்கு உள்ளாகும். அதற்காக குடிநீரில் வீடு கட்ட வேண்டும் என்றில்லை. அதிகம் உப்பில்லாமல் இருப்பது அவசியம். 4. தண்ணீர் தேவைகளுக்காக ஆழ்துளைக் கிணறு அமைத்து, நீர்மூழ்கி மோட்டார்களைத் தேர்ந்தெடுக்கும்போது சில விக்ஷயங்களில் உஷாராக இருக்க வேண்டும். தண்ணீர் கொஞ்சம் கூட உட்புக வாய்ப்பில்லாத மோட்டார் பம்புகளையே தேர்ந்தெடுக்க வேண்டும். அப்போதுதான் மின்கசிவால் பிரச்சனை இருக்காது. 5. இப்போதெல்லாம் அதிகபடியான வெப்பத்தைத் தாக்குப் பிடிக்கும் மோட்டார்கள் மார்க்கெட்டில் உள்ளன. வெப்பம் அதிகமாகிவிட்டது என்பதை உணர்த்தும் அலாரம் பொருத்தப்பட்ட மோட்டார்களைப் பொருத்திவிட்டால் அடிக்கடி ...