முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

நல்ல சிந்தனைகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

What are the Top 5 Love Languages 2025?

Subbiahpatturajan The 5 Love Languages!  This concept, developed by Gary Chapman, is a powerful tool for understanding how people express and receive love in relationships. It's essential to learn about the love languages to nurture and strengthen your connections with others. So, let's dive in and explore each language in detail. What are the 5 Love Languages? _ The 5 Love Languages are: 1. Words of Affirmation_:  This language uses verbal expressions of love and appreciation, such as compliments, words of encouragement, and thanks. People who prefer this language feel loved when they receive positive and uplifting words from their partner. 2. _Quality Time_:  This language is about spending quality time together, giving each other undivided attention, and engaging in activities together. Those who prefer this language feel loved when they spend quality time with their partner and engage in meaningful interactions. 3. _Receiving Gifts_:  This language uses tangible ...

Inheritance never changes.Their destiny is to do what they came to do. 

Subbiahpatturajan தியானம் *இதை படிக்கும் முன் உங்கள் மனதை ஒரு நிலைப்படுத்திய பின்னர் படியுங்கள். அப்போது* *தான் ஒரு* *தெளிவு உங்களுக்குள் பிறக்கலாம்* ... உன்னை வாழ்த்த மனம் இல்லாதவர்கள் இருப்பார்கள். அவர்களைப் பற்றி நீங்கள் கவலைப்படாதீர்கள்  நீங்கள்  எதை செய்தாலும் அதில் ஒரு குறையை கண்டுபிடிக்கக்கூடிய மனிதர்களும் இருந்து கொண்டுதான் இருப்பார்கள்.       அதையும் பெரிது பண்ணாதே...... உன் லட்சியம் எதுவோ அதை நோக்கி பயணம் போ.....   ஒன்றை மட்டும் தெரிந்து கொள்   ஒவ்வொரு மனிதனும்   தனித்தனி ஜென்மங்கள்.  தனித்தனி பிறவிகள் தனித்தனி ஆன்மாக்கள்..... அவர்களுக்கென்று தனித்தனி ஆசாபாசங்கள் இருக்கும். குணங்களும் இருக்கும். அதன் வழியில் தான் அவர்களின் பயணமும் இருக்கும். அவர்களை ஒழுங்கு படுத்துகிறேன் என்று வேதனைகளை சுமந்து கொள்ளாதே. அவர்கள் போகும் வரை போகட்டும். போய் ஒரு அனுபவத்தை பெற்றபின் திரும்பி வருவார்கள்..... அதுவரை நீ பொறுமையாக இருக்க வேண்டும். அவர்கள் போன பாதை நல்லதா? கெட்டதா? என்பதை அவர்களாக உணர்ந்தால்தான் அவர்களுக்கு ஒரு உண்மை தெரியும். அந்த உண்...

நம்மை வாழ வைக்கும் இறைவனின் இருப்பிடத்தை நாம் வளர்த்து பாதுகாத்தால், நம் சந்ததிகள் நலமாக வாழும்

Subbiahpatturajan உழவாரப் பணியின் 10 முக்கிய வேலைகள் இதைவிடச் சிறந்த புண்ணியம் வேறில்லை. உழவாரப்பணி செய்தே சிவனருள் பெற்றவர்* *திருநாவுக்கரசர்*. பழங்காலத்தில் கோயிலில் கிடைத்த நைவேத்யம், சிறுவருமானத்தை பெற்றுக் கொண்ட சிலர் தெய்வத் தொண்டாக கோயிலை துாய்மைப்படுத்தினர். இதற்காக சில கோயில்களில் மானிய நிலம் கூட இருந்தன*   *நம்மை வாழவைக்கும் தெய்வத்தின் இருப்பிடத்தை உழவாரப்பணி செய்து பாதுகாத்தால் நம் சந்ததிகள் நலமுடன் வாழ்வர்* *கோயிலில் புதர் மண்டிப் போகாமல் சுத்தப்படுத்துவது உழவாரப்பணி. இதைச் செய்ய தோசைக் கரண்டியின் வடிவில் பெரியதாக உள்ள கருவிக்கு ’உழவாரப் படை’ என்று பெயர். இதைக் கையில் ஏந்தியபடி இருப்பவர் திருநாவுக்கரசர்*  *எப்போதும் உழவாரப்பணி மூலம் கோயிலை தூய்மை செய்தபடி பாடுவது இவரின் பணி. சிவன் கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்துவதை விட மேலான புண்ணியத்தை உழவாரப்பணி தரும்* உழவாரப் பணி என்றால் என்ன? *சிவ ஆலயத்திற்குள் சென்றவுடன் இறைவன் நமக்கு தரும் அல்லது உணர்த்தும் பணியே உழவாரப்பணி எனப்படும்* உழவாரப்பணி *1. பக்தர்கள் கோயிலில் போடும் குப்பைகளை எடுத்து குப்பை கூடங்களில் போடுவது* ...

As your habits are, there will be people who behave with you in the same way.

Subbiahpatturajan நல்ல பழக்கவழக்கங்களே ஒருவருடைய நடத்தையை நிர்ணயம் செய்யும்..* _ உலகின் மிகச் சிறந்த வைரம் நம்மிடம் தோன்றும் எண்ணங்களே..  எங்கு பார்த்தாலும் மனித மனங்களில் ஏதேதோ எண்ணங்கள்.. பார்க்கும் மனித முகங்கள் எல்லாம் சிந்தனை வயப்பட்டதாகவே தோன்றுகிறது._  _*இறுக்கமான மனிதர்களாகவும், எந்திரகதியான மனிதர்களாகவுமே தென்படுகின்றனர். எண்ணக் குவியல்களின் கலவைகளையும், சிந்தனை ரேகைகளையும் கொண்ட மக்கள் கூட்டத்தைக் காணும் திசை எல்லாம் பார்க்க முடிகிறது.*_ _சகமனிதனைக் கண்டு மகிழும் உள்ளமோ, இன்ப துன்பங்களைப் பகிர்ந்து கொள்ளுதலோ இல்லாமல் தனியொரு உலகில் சிந்தனைகளோடு பயணிக்கும் உலகமாக மாறி விட்டது._  _*இதற்கெல்லாம் அடிப்படை என்ன என்று சிந்தித்தால் அவரவருக்கான தனிப்பட்ட எண்ணங்களே ஆகும்.*_ _எண்ண ஓட்டங்கள் தவறாக இருக்கும் போது அங்கே வாழ்வியல் நெறிகளில் மாற்றம் ஏற்படுகிறது. மனித நடத்தை மாறுபாடுகளை மாற்றி அமைக்கும் வல்லமை எண்ணங்களுக்கே உண்டு என்பதை மறுப்பதற்கில்லை_ _ *நமது செயல்கள் அனைத்தும் நம் எண்ணத்தின் பிரதிபலிப்பே ஆகும். ஒருவரின் எண்ணம் நல்லவிதமாக இருந்தால் செயலும் நல்லவிதமாக இருக்கு...

உனக்கு நியாயமாக கிடைக்க வேண்டியவைகள் அநியாயமாக பறிக்கப்படுகிறதே என நீங்கள் வருந்தப்பட்டால்

Subbiahpatturajan *_கடுமையான_* *_கஞ்சத்தனம்,_* *_தகுதியற்ற தற்பெருமை,_* *_எல்லையற்ற பேராசை_* *_ஆகிய மூன்றும்_* *_மனிதனை_* *_வீணாக்கி விடும்..!_* *_ஏன் இது இப்படி இருக்கிறது என்பதற்கும் இது இப்படித் தான் என்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது_* *_தேவைக்காக மட்டும் பழகும் உறவுகளை நீங்களும் தேடாமல் விட்டு விடுங்கள்  *_உனக்கு நியாயமாக கிடைக்க_* *_வேண்டியவைகள்_*  *_அநியாயமாக_* *_பறிக்கப்படுகிறதே என எண்ணி_* *_வருந்தாதே_* *_அது உனக்கு உரியது என்று_* *_இறைவன் முடிவு செய்துவிட்டால்_* *_எவ்வழியிலாவது நிச்சயம் உன்னை வந்தடையும்  *_தோற்றங்கள் மாறினாலும்.._* *_தோற்றுவிட கூடாது இறுதிவரை.._* *_அதுவே_*  *_உறுதியான உண்மையான அன்பு! *_"உண்மையை மறைக்க முனைவது விதையை பூமிக்குள் மறைப்பது போலத் தான்...!_*  *இரண்டும் ஒரு நாள் வெளிவந்தே தீரும் "

வாரிசு ,துணிவு குரூப்புக்கு தெரியாது நிலம் எவ்ளோ முக்கியம்னு இன்னும் முப்பது வருசம் கழிச்சு தெரியும் ...

Subbiahpatturajan துணிவு, வாரிசுக்கு அடிச்சிக்கிட்டு கெடக்கும் நம்ம பசங்க கவனிக்க! பெங்களூர் நகரில் அபார்ட்மெண்டில் ஐநூறுக்கும் மேல கார் இருக்கு ...அதை க்ளீன் பண்ண அஞ்சு வட இந்திய இளைஞர்கள் இருக்கிறார்கள். ...ஒரு காருக்கு மாசம் 300 ரூபாய்க்கு மேல வாங்குறான் ..ஒருத்தன் நூறு காரு க்ளீன் பண்ணுறான் அஞ்சு பேருக்கு ஐநூறு கார் ...அதாவது ஒவ்வொருத்தனும் மாசம் முப்பதாயிரம் சம்பாரிக்கிறான் ,முதலீடு ஒரு பக்கெட் ஒரு துணி ! அதுவும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் துடைச்சா போதும் , அந்த ஒரு நாள் இன்னொரு அபார்ட்மெண்ட்ல போயி துடைக்கிறாங்க ...ஆக குறைஞ்சது ஐம்பதாயிரம் மாசத்துக்கு ...சொந்த ஊர்ல வீடுகட்டிட்டு ,பெங்களூர்ல இடம் வாங்கி இருக்கானுக ...யாரையும் ஏமாத்தாமல் உழைச்சு தான் எல்லாமும் பண்ணிருக்கானுக ... இதே நிலைமை சென்னையிலும்  ... நிலம் எவ்ளோ முக்கியம்னு இப்போ இருக்க வாரிசு ,துணிவு குரூப்புக்கு தெரியாது ,இன்னும் முப்பது வருசம் கழிச்சு தான்உனக்கு தெரியும் ... நிலத்தை உனதாக்கிக்கொண்டால் தான் அதிகாரம் உனதாக இருக்கும் ... ஒரு பெரும் கூட்டத்தை மதுவுக்கு அடிமையாக்கி ,எல்லாத்தையும் இலவசமாக குடுத்து உழைக்க தயங்க...

பெரும்பாலான குழந்தைகளை ஆச்சர்யப்படுத்திய விஷயம் என்னவென்றால் நான் முகத்தில் எப்படி மேக்கப் போடுவது.?

Subbiahpatturajan   *கேரள மாநிலம், மலப்புரம் மாவட்ட ஆட்சியர் _ஸ்ரீமதி. ராணி சோயாமோய்_* கல்லூரி மாணவர்களுடன் உரையாடிய சில வார்த்தைகள். கைக்கடிகாரத்தைத் தவிர வேறு எந்த நகையும் அணியவில்லை. பெரும்பாலான குழந்தைகளை ஆச்சர்யப்படுத்திய விஷயம் என்னவென்றால், *அவர் முகத்தில் பவுடர் கூட பயன் படுத்தவில்லை...!* பேச்சு ஆங்கிலத்தில் இருந்தது. அவர் ஓரிரு நிமிடங்கள் மட்டுமே பேசினார் ஆனால் அவருடைய வார்த்தைகள் உறுதியுடன் இருந்தன.  மாணவிகள் கலெக்டரிடம் கேட்ட சில கேள்விகள் கேள்வி : உங்கள் பெயர் என்ன? பதில் : என் பெயர் ராணி. சோயாமோய் என்பது எனது குடும்பப் பெயர்.   நான் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவள். வேறு ஏதாவது கேட்க வேண்டுமா? ஒரு ஒல்லியான பெண் எழுந்து நின்றாள்.  கலெக்ட்டர் சொல்லுமா என்றார் "மேடம் ஏன் உங்கள் முகத்துக்கு மேக்கப் போடவில்லை...?" கலெக்டரின் முகம் சட்டென்று வெளிறியது. நெற்றியில் வியர்வை வழிந்தது.  அவர் முகத்தில் புன்னகை மறைந்தது. பார்வையாளர்கள் திடீரென அமைதியானார்கள். மேஜை மேல் இருந்த தண்ணீர் பாட்டிலை திறந்து கொஞ்சம் குடித்தார்.   பிறகு மாணவியைக் பார்த...

உன் மனைவி அழகான பெண்ணாக இருந்தாலும் இல்லையென்றாலும் உன் மனைவியை தவிர வேறு எந்த பெண்ணும் வேண்டாம் என்ற மனம் வந்துவிடும்

Subbiahpatturajan ஒரு ஞானியை அணுகிய சீடன், காதலிக்கும் மனைவிக்கும் உள்ள வித்தியாசம் என்னவெனக் கேட்டான். அதற்கு அந்த ஞானி, “அது இருக்கட்டும். முதலில் நீ ரோஜாத் தோட்டத்துக்குப் போ. அங்கே உனக்கு எது உயரமான ரோஜாச் செடி என்று தோன்றுகிறதோ, அதை எடுத்துக் கொண்டு வா. ஆனால் ஒரு நிபந்தனை . நீ எக்காரணம் கொண்டும் போன வழியே திரும்பி வரக் கூடாது .” என்றார். கிளம்பிய சீடன் சிறிது நேரம் கழித்து வெறும் கையுடன் வந்தான். ஞானி, “எங்கே உன்னைக் கவர்ந்த உயரமான செடி? ” என்று கேட்டார். சீடன் சொன்னான், “குருவே, வயலில் இறங்கி நடந்த போது முதலில் உயரமான ஒரு செடி என்னைக் கவர்ந்தது. அதை விட உயரமான செடி இருக்கக் கூடும் என்று தொடர்ந்து நடந்தேன். இன்னும் உயரமான ரோஜாச் செடிகள் தென்பட்டன. அவற்றை விட உயரமான செடிகள் இருக்கக் கூடுமென மேலும் நடந்தேன். அதன் பிறகு தென்பட்டதெல்லாம் குட்டையான ரோஜாச் செடிகளே. வந்த வழியே திரும்ப வரக்கூடாது என்பதால் முன்னர் பார்த்த உயரமான செடியையும் கொண்டு வர முடியாமல் போய் விட்டது.” புன்முறுவலோடு ஞானி சொன்னார், “இது தான் காதலி !” உனக்கு ஒரு அழகிய பெண் காதலியாக கிடைத்தாலும் இவளை விட அந்த பெண் அழகாக...

எனக்கு வாழ்க்கையையே பிச்சை போட்ட தெய்வமே… நான் உனக்கு என்னென்னைக்கும் நன்றிக் கடன்பட்டிருக்கேன்”

Subbiahpatturajan இறைவன் நமக்கு பிச்சை போட்டது இந்த வாழ்க்கையை. ஒவ்வொரு நொடியை. நாம் விடும் ஒவ்வொரு மூச்சை. ஒரு பிச்சைக்காரனைப் பார்த்து ஒரு செல்வந்தர் கேட்டார்: உழைத்து சாப்பிடாமல், ஏன் பிச்சை எடுக்கிறாய்? அதற்கு அந்த பிச்சைகாரன்: சார்… எனக்கு திடீர் என்று வேலை போய்விட்டது. கடந்த ஒரு வருடமாக நான் வேறு வேலைக்கு முயற்சித்துக்கொண்டிருக்கிறேன். எதுவும் கிடைக்கவில்லை. உங்களைப் பார்த்தால் பெரிய மனிதர் போல இருக்கிறீர்கள். எனக்கு நீங்கள் ஒரு வேலை வாங்கிக்கொடுத்தால் பிச்சையெடுப்பதை விட்டுவிடுகிறேன். “உனக்கு நிச்சயம் உதவவேண்டும் என்று தோன்றுகிறது. ஆனால், வேலை வாங்கி தரும் எண்ணம் எனக்கில்லை. வேறு ஒன்றை மனதில் வைத்திருக்கிறேன்.” “வேறு ஒண்ணா…? எதுவா இருந்தாலும் சரி, என் பிரச்சினை தீர்ந்தா போதும்” என்றான் பிச்சைக்காரன். “உன்னை என்னுடைய பிசினஸ் பார்ட்னர் ஆக்கப்போகிறேன்.” “என்னது பிசினஸ் பார்ட்னரா...?" ஆமாம்… எனக்கு சொந்தமாக பலநூறு ஏக்கரில் விவசாய நிலம் இருக்கிறது. அதில் விளையும் தானியங்களை நீ சந்தையில் விற்கலாம். உனக்கு கடை வைக்க இடம், தானியம் உட்பட அனைத்தையும் தருகிறேன். நீ செய்யவேண்டியதெல்லாம...

ஒரு நாள் நான் சொல்வேன் வாழ்ந்ததுபோதும் என்று முதுமையின் வாசலில் - நான் !?

Subbiahpatturajan  ஓர் தாய் முதுமையில் மகனிடம் சொல்லும் கண்ணீர் கவிதை. இது போன்ற கவிதைகளை பதிவு இடுவதில் பெருமைப் படுகின்றேன், ஒரு தாயின் புலம்பல் கவிதை, எனதருமை மகனே !எனதருமை மகனே ! நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்.. முதுமையின் வாசலில் - நான் முதலடி வைக்கையில் தள்ளாட்டம் என்மீது வெள்ளோட்டம் பார்க்கும்... கொஞ்சம் பொறுமை கொள்க ! அதிகம் புரிந்து கொள்க ! என்முதுமை பார்த்து முகம் சுளிக்காதே ! நான் சாப்பிடுகையில் கைநடுங்கி சாதம் சிந்தி விட்டேனா? சத்தம் போடாதே..... உனக்கு நான் நிலாச்சோறு ஊட்டிய நாட்களை நினைவு கூர்க ! ஆடை மாற்றுகையில் அவதிப் படுகின்றேனா? அசுத்தம் செய்து விட்டேனா? ஆத்திரப்படாதே..... படுக்கை முழுதும் நீ பண்ணிய ஈரங்களின் ஈர நினைவுகளை இதயம் கொள்க ! ஒரே பேச்சை, தேய்ந்த ஒலிநாடா போல் ஓயாமல் சொல்கிறேனா? சலித்துக் கொள்ளாதே.... ஒரே மாயாவி கதையை ஒரு நூறு முறை எனை படிக்கச் சொல்லி நீ உறங்கிய இரவுகளை ஞாபகம் கொள்க  நான் குளிக்க மறுக்கிறேனா? சோம்பேறித்தனம் என்று சுடுசொல் வீசாதே....ஒரு நாள் நான் சொல்வேன் வாழ்ந்ததுபோதும் என்று முதுமையின் வாசலில் - நான் !? உன்னை குளிக்க வைக்க நான் செய்...

உண்மையான தேசப்பற்று உள்ள மாவீரர்களிடம் மட்டுமே இத்தகைய தெய்விக குணம் இருக்கும்

Subbiahpatturajan எங்கள் நாட்டிலிருந்து வெளியேறுங்கள் ...ரஷ்ய ராணுவத்திடம் ஆவேசத்தோடு பாயும் உக்ரைன் நாட்டு சிறுமி... சிறுமியின் ஆதங்கத்தை புரிந்து பதில் சொல்லாமல் பின்வாங்கி நிற்கும் ரஷ்ய ராணுவ வீரன்... ரெண்டு பேருக்குமே பிக் கிளாப் கொடுக்கணும்.. உண்மையான வீரர்களிடம் தான் தனி ஒரு பெண்  அல்ல, தனி ஒரு சிறுமி கூட துணிச்சலாக வாதிட, தங்கள் கருத்துகளை கோபத்துடன் வெளிப்படுத்த முடியும். இது முட்டாள்தனமான எதிர்ப்பாக இருந்தாலும் அதனை பொறுமையுடன் ஏற்று கொள்ளும் மனிதாபிமானம், அவர்களை பாதுகாப்பாக செல்ல அனுமதிக்கும் பக்குவம் உண்மையான தேசப்பற்று உள்ள மாவீரர்களிடம் மட்டுமே இத்தகைய தெய்விக குணம்  இருக்கும். அந்த வீரத்தை நாம் அரபு மண்ணில் பார்த்ததே இல்லை. அடிமை படுத்தி சீரழித்து விடும் மிருக குணமுடையோர் முன் எப்படி இப்படி எதிர்ப்பை தெரிவிக்க வாய்ப்பே இல்லை. சிறுமியிடம் கற்றுக் கொள்ள வேண்டியது  தேசப்பற்று என்றால் என்ன என்பதை...உலகில் எந்த நாட்டில் பிறந்தவன் ஆனாலும் தனக்கு சோறு போட்ட சொந்த தேசத்தின் மீது ஒரு பற்று இருக்கத்தான் செய்யும்....தேசத்திற்கு ஒரு பிரச்னை என்றால் ஜாதி மதம் மொழியை கடந...

உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொண்டு எதையும் சாதிக்க போவது இல்லை

Subbiahpatturajan நல்லா போயிண்டுருந்த லைப்ல ஹெல்த் பத்தி சொல்லறேன்னு எல்லாரும் ஆரம்பிச்சாங்க பாருங்க அய்யய்யோ ... காலையில் எழுந்தவுடனே வெறும் வயத்திலே முதல்ல ஒரு டம்பளர் தண்ணீர் குடிக்கணும்னு சொன்னா. அப்புறம் இல்லே ரெண்டு டம்பளர் வெந்நீர் தான் குடிக்கணும்னா. அப்புறம் இல்லை வெறும் வெந்நீர் இல்லை அதிலே எலுமிச்சம்பழம் பிழிஞ்சு, ரெண்டு சொட்டு தேன் விட்டு குடிக்கணும்னா. அப்புறம் அதிலே கொஞ்சம் இஞ்சி தட்டி போட்டு குடிச்சா ரொம்ப நல்லதுன்னா. ஆக இப்போ காத்தாலே நான் தண்ணீர் குடிக்கறதையே நிறுத்திட்டேன்.   வாக்கிங் சோதனைகள்  - அடுத்தது வாக்கிங் போகலாம்னு பார்த்தா, முதலேயே வேகமா நடக்கப்படாது மெதுவா நடந்து அப்புறம் வேகத்தை கூட்டி மறுபடியும் முடிக்கறச்சே மொள்ள நடக்கணும்னா வெறும் வாக்கிங் போறாது. எட்டு போட்டு நடக்க சொன்னா. அதனாலே பலன் பல மடங்கு பெருகும்ன்னு சொல்லி ஒழுங்கா நடந்துண்டு இருந்தவனை கெடுத்து எட்டு போட்டு தலை சுத்த வெச்சு. வாக்கிங் க்கு ஒரு ஃபுல் ஸ்டாப் வெச்சாச்சு. அடுத்த ஆப்பு சாப்பாட்டுல அந்த கதையாவது பரவாயில்லை - காபி, டீ தொடப்படாதாம். பால் நிறைய சேர்த்துக்க கூடாதாம். நாம ஆரோக்கியம...

இதுதான் இன்றைய வாழ்வின் நிஜமாக இருக்கிறது.சங்கடப்படாதீர்கள், மனம் உடைந்து போகாதீர்கள்,

Subbiahpatturajan இதுதான் இன்றைய வாழ்வின் நிஜமாக இருக்கிறது. இராமகிருஷ்ண மடத்தைச் சேர்ந்த ஒரு துறவியிடம் நியூயார்க் பத்திரிக்கையாளர் ஒருவா் பேட்டி எடுப்பதாக இருந்தது. திட்டமிட்டபடி பத்திரிக்கை நிருபர் பேட்டியை ஆரம்பித்தார். *நிருபர்* : ஐயா உங்களுடைய முந்தய சொற்பொழிவில் "தொடர்பு" மற்றும் "இணைப்பு" என்பது பற்றி பேசினீர்கள், அது உண்மையிலேயே மிகவும் குழப்பமாக இருந்தது. சற்று விளக்கி சொல்ல முடியுமா? என்றார். துறவி புன்முறுவலோடு நிருபர் கேட்ட கேள்வியிலிருந்து விஷயத்தை  திசைதிருப்புகின்ற விதமாக, அந்த நிருபரிடம் கேள்வி கேட்டார்?, நீங்கள் நியூயார்கில்தான் வசிக்கிறீர்களா? *நிருபர்* : ஆம். *துறவி* : வீட்டில் யாரெல்லாம் இருக்கிறார்கள்? இந்த துறவி  என் சொந்த வாழ்வைப் பற்றியும், தேவையற்ற கேள்விகளையும் கேட்டு தன்னுடைய கேள்விக்கு பதில் தருவதை தவிர்க்க முயற்சிக்கிறார், என்று நிரூபா் நினைத்தார், இருந்தாலும் துறவியின் கேள்விக்கு "என் தாயார் இறந்து விட்டார், தந்தையார் இருக்கிறார், மூன்று சகோதரா்கள் மற்றும் ஒரு சகோதரி இருக்கிறார், அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது என்று பதிலளித்தார்...

எல்லா சூழ்நிலைகளிலும் எதிர்மறையாக சிந்தித்தால் அவர்களை இறைவனாலும் கூட காப்பாற்ற முடியாது...

Subbiahpatturajan எல்லா சூழ்நிலைகளிலும் எதிர்மறையாக சிந்தித்தால் அவர்களை இறைவனாலும் கூட காப்பாற்ற முடியாது... சிலருக்கு நினைத்தது எல்லாம் நடக்கிறது.... காரணம் என்ன? எண்ணங்கள். நேர்மறையான சிந்தனைகள்...  விடாமுயற்சி நடக்கும் என்ற நம்பிக்கை... இறைவன் அருள் இவைகள் தான்.. உங்கள் ஆழ் மனம் நீங்கள் சொல்வதை அப்படியே கேட்கும்... முழுமையாக நம்பும்.. நடத்தியும் காட்டும்... உண்மையில் சொல்லப்போனால் இந்த பிரபஞ்சத்தில் இவருக்கு இது கிடைக்காது என்று எதுவும் இல்லை . யாருடைய நிலை வேண்டுமானாலும் எந்த நொடியில் வேண்டுமானாலும் மாறலாம். தெளிவான எண்ணம் ஒருவர் ஒரு குறிப்பிட்ட எண்ணத்தை ஆழமாக அழுத்தமாக நம்பும் பொழுது அது அவருக்கு உண்மையாக நடக்கும். முதலில் நம்புங்கள். நம்பிக்கை மட்டுமே உங்களை உங்கள் வாழ்வின் அடுத்தடுத்த நிலைக்கு இழுத்துச் செல்லும்... நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். எந்த அளவுக்கு நீங்கள் நேர்மறையாக இருக்கிறீர்களோ அந்த அளவுக்கு உங்களைத் தேடி நேர்மறையான செய்திகள் மட்டுமே வரும்... வெளி உலகில் நடக்கும் செயல்களையும் வெளி உலகில் உள்ள பொருட்களையும் வைத்து எதிர்மறையாக சிந்திக்காதீர்கள்...  அவையெல...

உங்கள் மகன் மகளிடம் நீங்கள் காட்டும் வித்தியாசத்தை நீங்கள் மட்டுமே சரிசெய்ய முடியும்

Subbiahpatturajan ஒவ்வொரு வீட்டிலும், மகள்களை வளர்ப்பதில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது, ஆனால் அதே வளர்ப்பு மற்றும் பொறுப்பு மகன்களுக்கும் அவசியம்.  எல்லாவற்றிற்கும் மேலாக, அவர்கள் இருவரும் எதிர்காலத்தில் சடங்குகள் மற்றும் ஒழுக்கத்தின் இணைப்புகளை இணைத்து ஒரு சிறந்த சமூகத்தின் இயல்பை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். நீங்கள் நினைத்தால் மட்டுமே அந்த வேற்றுமைக் கோட்டை அழித்தொழிக்க முடியும். நடத்தையில் வேறுபாடுகள் : நம் மகளுக்கும் மகனுக்கும் எந்த வித்தியாசமும் புரியவில்லை என்று குடும்பங்களில் அடிக்கடி கேட்கப்படுகிறது. மேலோட்டமாகப் பார்த்தால் அது உண்மையாகத் தோன்றலாம், ஆனால் உண்மையான பிரச்சினைகளுக்கு வரும்போது, ​​இந்தக் கூற்றின் உண்மையும் அம்பலமாகிறது. வளர்ப்பில் வேறுபாடு, சில நேரங்களில் நடத்தையில் வேறுபாடு, மகள்-மகனுக்கு வெவ்வேறு விதிகள், பின்னர் வெவ்வேறு மதிப்புகள் - நடத்தை கற்றல், இருவரின் பொறுப்புகள் மற்றும் உரிமைகளில் வேறுபாடு. இந்த வேறுபாடுகள் பொதுவாக புரிந்து கொள்ளப்படவில்லை, ஆனால் நீங்கள் நெருக்கமாகப் பார்த்தால், தெளிவான கோடு தெரியும். மகளைப் போலவே, மகனையும் எதிர்காலத்திற்கு சமூக...

இந்த 5 மோசமான பழக்கம் உங்களிடம் இருந்தால் திருத்திக்கொள்ளுங்கள்.

Subbiahpatturajan மனிதர்களில் பலவிதம் இருக்கிறார்கள் ஆனால் இதில் சில பேர் சில வித்தியாசமான பழக்க வழக்கங்களை கொண்டிருக்கிறார்கள். அவற்றுள் சில தேவையில்லாத பழக்கவழக்கங்களை நாம் மாற்றிக் கொள்ள முடியும் என்று நம்புகிறேன். 1. முகத்திற்கு பக்கத்தில் போய் பேசுவது... சிலபேர் நம்மைப் பற்றி மற்றவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று zoom face விளம்பர தோணியில் முந்திக் கொண்டு பேசுவது சிலருடைய உடம்பை அடிக்கடி மேலும் கீழும் பார்த்துக் கொண்டே பேசும் பழக்கம் இருந்தால் உங்களை நீங்கள் திருத்திக் கொள்ளலாம். 2. தொட்டுத் தொட்டு பேசுவது... நாம் அவர்களுடன் உரையாடும் போதோ இல்லையென்றால் அவர்களுக்கு அறிவுரை கூறும் போது அவர்களை தொட்டு தொட்டு பேசும் பழக்கம் தோள் மீது கை வைத்து பேசும் பழக்கம் இந்த பழக்கம் எல்லோருக்கும் பிடிக்குமா என்று தெரியாது ஆனால் நாம்  நம்மை மாற்றிக் கொள்ளலாம். 3. அடிக்கடி கை கட்டிக்கொண்டு நிற்கும் பழக்கம்... நாம் எப்பொழுது பார்த்தாலும் சில நேரங்களில் பேருந்து நிலையங்களில் ரயில் நிலையங்களில் டிக்கெட் கவுண்டர்களில் நேரம் கடந்து கொண்டிருந்தால் அடிக்கடி கை கட்டிக்கொண்டு நிற்கும் பழக்கம் சில ப...