முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

பெண்களுக்காக.... லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

B.A (Defence) படிப்பின் மூலம் நீங்கள் என்னென்ன வேலைவாய்ப்புகளை பெறமுடியும்?

Subbiahpatturajan பி.ஏ (B.A Defence):  இந்தியாவின் முக்கிய வேலைவாய்ப்புகள் மற்றும் வெற்றிகரமான எதிர்காலத்திற்கான திறவுகோல் பி.ஏ (டிபென்ஸ் படிப்புகள்) என்பது ஒரே நேரத்தில் பாதுகாப்புத் துறையையும் அரசியல், சர்வதேச உறவுகளையும் ஆராயும் தனித்துவமான பாடப்பிரிவு ஆகும். இது பாதுகாப்பு துறை மட்டுமல்லாது அரசுத் துறைகளிலும் வேலைவாய்ப்புகளைப் பெற உதவுகின்றது. இந்த படிப்பு மூலம், Sub-Registrar, RTO, DSP, மற்றும் நகராட்சி கமிஷனர் போன்ற அரசு துறைகளில் உயர்ந்த பதவிகளை அடைய முடியும். இந்த கட்டுரையில், பி.ஏ டிபென்ஸ் படிப்பின் மூலம் நீங்கள் பெறக்கூடிய சிறந்த வேலை வாய்ப்புகள் பற்றியும், அது உங்கள் எதிர்காலத்தை எப்படி செம்மைப்படுத்தும் என்பதைப் பற்றி விளக்கமாக பார்ப்போம். பி.ஏ (டிபென்ஸ்) படிப்பின் சிறப்பு: இந்த படிப்பு இந்தியாவின் பாதுகாப்பு, அரசியல் மற்றும் சட்டமுறைக் கொள்கைகளை புரிந்துகொள்ள உதவும். இது மட்டுமல்லாது, யு.பி.எஸ்.சி (UPSC) மற்றும் டிஎஸ்சி (TNPSC) போன்ற போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு சிறந்த அடிப்படை அறிவை வழங்குகிறது. அமைப்புகள் அடிப்படையில் கற்றுக்கொள்ளப்படும் பாடங்கள்:...

சீக்கிரம் வந்தால் பிஜேபி சின்னம்...லேட்டா வந்தா...

Subbiahpatturajan *கட்டின மனைவிய* *என்னன்னு* *நினைச்சீங்க..??????* கணவன்: நான் கொஞ்சம் பேங்க் வரைக்கும் போயிட்டு வந்துடறேன் மனைவி: ம்ம்ம்! சரி! (ஒரு முக்கால் மணி நேரம் கழித்து) மனைவி: ஏங்க! எங்க இருக்கீங்க? பேங்க் வேலை முடிஞ்சுதா? கணவன்: இப்பதான் வேலை முடிஞ்சு வெளில வரேன். மனைவி: அப்ப சரி! வரும்போது எனக்கு ப்ரஷர் மாத்திரை ஒரு 1மாசத்துக்கானது வாங்கிட்டு வந்துடுங்க! (15 நிமிடம் கழித்து) மனைவி: ஏங்க! எங்க இருக்கீங்க? மருந்து வாங்கிட்டீங்களா? கணவன்: இப்பதான் வாங்கிட்டு வெளில வரேன். மனைவி: அப்ப சரி! வரும்போது 1 லிட்டர் பால் வாங்கிட்டு வந்துடுங்க! சொல்ல மறந்துட்டேன்! (கணவன் பாலையும் வாங்கிய பின் ஒரு இடத்தில் ஹாயாக அமர்ந்து வடை, டீ இவற்றை ருசித்துக் கொண்டிருக்க, மறுபடியும்) மனைவி: ஏங்க! பால் வாங்கிட்டீங்களா? இப்ப எங்க இருக்கீங்க? கணவன்: எல்லா வேலையும் முடிஞ்சுது. ஆவின் பாலகத்துல ஒரு டீ குடிச்சுக்கிட்டிருக்கேன்! மனைவி: அதானே பாத்தேன்! கரண்டு கம்பத்த பாத்த ஏதோ மாதிரி உங்க வண்டி கடையப் பாத்ததுமே தன்னால நின்னுடுமே! கணவன்: (சற்றே எரிச்சலுடன்) சரி, இப்ப என்ன பண்ணனுங்கிற? மனைவி: அங்க உளுந்துவடையும்,...

உங்கள் திருமணமான புதிதில் இருந்த அதே வசந்தம் மீட்டெடுக்கப்படும்…

Subbiahpatturajan #சினார்தமிழன் #lifeworkshop #reallifestyle #Lifeworkshop தயவு_செய்து திருமணமான_பெண்கள் மட்டும்_படியுங்கள்…!!! கல்யாணம் ஆன புதுசுல உங்க கணவர் சமயம் கிடைக்கும்போதெல்லாம் உங்களை கட்டி அணைத்திருப்பார்… முத்தம் கொடுத்திருப்பப்பார்… சமையலறைக்கு அடிக்கடி ஓடி வந்திருப்பப்பார்…. உங்கள் பிறந்தநாளுக்கு சிறப்பு பரிசுகள் கொடுத்திருப்பப்பார்…. நள்ளிரவில் வாழ்த்தி இருப்பார்….. திருமணநாளுக்கு புடவையோ நகையோ பரிசளித்திருப்பார்…. ஆனால்.. வருடங்கள் கூட கூட இதெல்லாம் குறைந்திருக்கும்…. உங்களை கட்டி அணைப்பதுவும், முத்தம் கொடுப்பதுவும் வெகுவாக குறைந்து போயிருக்கும்.. சமயங்களில் அறவே நின்றுகூட போயிருக்கும்…. சமையலறை பக்கம் எட்டி கூட பார்க்க மாட்டார்… பிறந்தநாளை மறந்துகூட போயிருப்பார்… எல்லா நாளையும் போல திருமண நாளையும் ஒரு சாதாரண நாளாக கடந்துகொண்டிருப்பார்.. இதுதான்_எதார்த்தம்….. ஆரம்பத்தில் ஓடி வந்து ஓடி வந்து கட்டிப்பிடித்தீர்களே… இப்போது நானாக அருகில் வந்தால் கூட கசகசன்னு இருக்குன்னு புரண்டு படுக்கிறீங்களே…. என்னோட பிறந்தநாள் எப்போன்னு கூட தெரியலையே…. என்பது போன்ற பல ஆரம்பகால விஷயங்கள...

ஆணின் ஆட்டம் 25 வயது வரைதான்... பாவம் ஆண் வர்க்கம். The awfulness of men

Subbiahpatturajan #ஆண்வர்க்கம் #Theawfulnesofmen #ஆண்வர்க்கம்  இந்தப்பதிவு அனைத்து ஆண்வர்கத்திற்க்கும் சமர்ப்பணம்....!!! ஆண் மகனின் வாழ்வியல் !!! ஆணின் ஆட்டம் பதினாறு வரைதான்... பிறந்த போது மட்டுமே கொண்டாடப் பட்டு, வாழ்நாள் முழுவதும் திண்டாட்டத்தை சந்திக்கும் பிறவிதான் ஆண்மகன். பத்து வயது வரை பறந்து திரியும் பறவைபோல இருப்பவன்... பள்ளிக்கல்வியில் மேலே படிக்கத் தொடங்கும் போது தொடங்குகிறது... சோதனை " டேய் இப்போருந்தே ஒழுங்கா படி. இல்லேன்னா 10 க்கு அப்புறம் காலேஜெல்லாம் கெடையாது ஐடிஐ தான்.... தெரிதா?" ப்ளஸ்1 போகும்போது.... "ரெண்டே ரெண்டு வருஷம் உயிரை விட்டு படிச்சேன்னா... இன்ஜினீயரிங். இல்லேன்னா ஏதாவது ஒர்க்‌ஷாப்பு தான்.." உயிரைவிட்டு படித்து ஒரு என்ஜினியரிங் காலேஜில் சேர்ந்தபின்... " ஒங்க பாட்டன் பூட்டன் எவனும் சொத்து சேத்து வச்சிட்டுப் போகல.. 2 லட்சம் பேங்கு லோன்லதான் படிக்கிறங்கற நெனப்பு இருக்கட்டும்... சும்மா மைனர்களின் வேஷம் போட்டீன்னா குடும்பம் நடுத்தெருவுலதான்.." நான்கு வருஷம் படிப்பு படிப்பு என உயிரை விட்டால்... ஏழாவது செம்மில் 'கிலி' பிடிக்கும...

menstrual problems how to solve

Subbiahpatturajan # Menstruation #Solution * Nature * * Biology *  🖊️🖊️🖊️🖊️🖊️  * Women's well-being is the strength of the family *  * For women, changes need to be made in their upbringing.  Adolescents are given intrauterine and essential oils.  It has been customary to put car rice pudding and oleoresin in it.  Laying down was also the case at the time.  Women will get good health by applying the above mentioned foods with veggies, sandalwood, asparagus etc.  It has always been part of Tamil culture. *  🖊️🖊️🖊️🖊️🖊️  * Cactus legumes are given as special dishes.  Giving aloe vera to postmenopausal women can help control menstrual cramps.  This will fix the metabolism.  With diabetes, uterine cysts can be prevented. *  🖊️🖊️🖊️🖊️🖊️  * Adolescent women today have less red blood cells.  Defects such as excessive bleeding during menstruation, menstruation at intervals of 15 days, and prolonged abs...

யார் இந்த குஞ்சரம்மாள்...?! #குஞ்சரம்மாள்

Subbiahpatturajan ஒரு மாத லாக்டவுனுக்கே விழி பிதுங்கி நிற்கிறோமே, தாது வருடப் பஞ்சம் என்ற பெயரையாவது  கேள்விப்பட்டதுண்டா? 1875 தொடங்கி 1880 வரை தமிழகத்தைப் புரட்டிப் போட்ட பெரும் பஞ்சம். வயல் வரப்புகளில் எறும்புகள் சேர்த்து வைத்திருந்த புற்று அரிசியைகூட தோண்டி எடுத்து திண்று தீர்த்தபின்னும் தீராத பஞ்சம், முருங்கை கீரையை மட்டுமே மூன்று வேளையும் அவித்து தின்று உயிர் பிழைத்துக்கிடந்த கொடிய பஞ்சமது. கண் முன்னே கணவனும், மனைவியும் ஒட்டிய வயிருடன், யார் முதலில் சாகப்போகிறோம் என்று தெரியாமல் ஒருவரை ஒருவர் வெற்றுப் பார்வை பார்த்தபடி படுத்துக் கிடந்த வேதனை மிகுந்த காலம் அது . பஞ்சம் தந்த பாடங்கள் ஒரு பக்கம் இன்றும் பேசப்பட்டு வருகிறது. அதில் நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய கதை குஞ்சரம் அம்மாவினுடையது.  குஞ்சரம் தாசி குலத்துப் பெண்மணி. மதுரையில் கொடிகட்டிப் பறந்த அழகே வடிவான  தாசி. பெரும் செல்வச் செழிப்புடன் வாழ்ந்து வந்தவள். மதுரை நகரைச் சுற்றி இருந்த செல்வந்தர்கள் எல்லாம் குஞ்சரத்தின் அழகில் மயங்கிக் கிடந்த காலம் அது. வடக்கு ஆவணி மூல வீதியில் உள்ள சந்தில் இருந்த இரண்டு பெரும் ...

👧🏻 *பெண்கள் அணியும் ஆபரணங்களின் பயன்கள்..! தெரிந்து கொள்ளுங்கள்..!

Subbiahpatturajan 👧🏻 *பெண்கள் அணியும் ஆபரணங்களின் பயன்கள்..! தெரிந்து கொள்ளுங்கள்..! முன்னோர்களின் அறிவுரை. *தோடு :* மூளையின் செயல் திறன் அதிகரிக்கும். கண்பார்வை 👁திறன் கூடும் . *நெற்றிச்சுட்டி :* நெற்றிச்சுட்டி அணியும் போது தலைவலி ,சைனஸ் பிரச்சனையை சரி செய்கிறது. *செயின் , நெக்லஸ் :* கழுத்தில் செயின் அணியும் போது உடலுக்கும் தலைக்கும் இடையே உள்ள சக்தி ஓட்டம் சீராகும் . *லம்பாடி(நாடோடி பெண்கள்)* பெண்களுக்கு மார்பக புற்று நோய் வருவது இல்லை. காரணம் மணிக்கட்டில் இருந்து முழங்கைக்கு மேல்வரை நெருக்கமாக வளையல்களை அணிவதால்.... மார்பு பகுதியின் ரத்த ஓடம் சீராக வைத்திருக்க உதவுகிறது.. *வளையல் :* வளையல்கள் அந்த பகுதியின் புள்ளிகளை அழுத்துவதன் மூலம் வெள்ளையணு உற்பத்தி உடலில் அதிகரிக்கிறது. முக்கியமான ஹார்மோன்கள் சுரப்பும் ரெகுலேட் செய்யபடுகிறது. இதன் மூலம் தாய்க்கும் சேய்க்கும் நோய் எதிர்ப்பாற்றல் கூடும். *ஒட்டியாணம் :* ஒட்டியாணம் அணியும்போது இடுப்பு பகுதியின் சக்தி ஓட்டம் நன்றாக தூண்டப்பட்டு ஆரோக்கியம் கூடும். வயிற்று பகுதிகள் வலுவடையும். *மூக்குத்தி :* மூக்கில் இருக்கும் சி...

நீங்கள் உடுத்தும் #சேலை, ஓர் உடையே இல்லை!!!

Subbiahpatturajan நீங்கள் உடுத்தும் #சேலை,  ஓர் உடையே இல்லை!!! மேலே உள்ள தலைப்பைப் பார்த்துப் பயப்பட வேண்டாம். இப்படிக் கூறியது  ஒரு ஜெர்மானியர்... "#This_is_not_a_dress... #This_is_a_song". "நீங்கள் உடுத்துவது ஓர் உடையல்ல...  #அது_ஒரு_கவிதை"... ஆம் காஞ்சிபுரத்தைச் சுற்றிப் பார்க்க வந்த ஒரு ஜெர்மனி நாட்டு அறிஞர் #ஆரல்பக்பீயும்_அவரது_மனைவியும் பார்த்தது - ஒரு தமிழ்ப் பெண் குடத்தை ஏந்தி நடந்து போனாள், குடத்தைப் படியில் வைத்துவிட்டுக் குளத்தில் இறங்கினாள். அவள் உடுத்தியிருந்த சேலையைப் பார்த்த அந்த அறிஞர் "இந்தப் பெண் அணிந்துள்ள தமிழ்நாட்டுக் 'கவுன்' எவ்வளவு அழகாக இருக்கிறது" என்று தன் மனைவியிடம் சொன்னார். மனைவி சொன்னார் "இந்தத் தமிழ்நாட்டுத் தையல்காரன் கெட்டிக்காரன் மடிப்பு மடிப்பாக எத்தனை தட்டுகள் வைத்து இந்தக் 'கவுனைத்' தைத்து இருக்கிறான்". சிறுது நேரம் கழித்து அந்தப் பெண் படிகாட்டில் அமர்ந்து நாகரிகமாகத் தன் சேலையைத் தண்ணீரின் மேல்பரப்பில் ஓடவிட்டாள். பிறகு தான் அந்தத் தம்பதிகள் அது கவுன் அல்ல அது #சேலை என்று கண்டு எவ்வளவு கலை நுண...

பெற்றோரை எதிர்த்து காதலித்து திருமணம் செய்துகொள்ளும் மகளுக்கு...

பெற்றோரை எதிர்த்து காதலித்து திருமணம் செய்துகொள்ளும் மகளுக்கு... சினார் தமிழன் . குடும்பப் பெண்ணாக இருப்பவர்கள் காலை எழுந்தவுடன் நீராடி நல்ல உடையை அணிய வேண்டும்.ஆள் பாதி ஆடை பாதி என்று கூறுவர்.நாம் அணியும் உடையே நமது பொறுப்புகளை நமக்கு எடுத்துரைக்கும். குடும்பத் தலைவிகள் எப்பொழுதும் நல்ல வார்த்தைகளையே பயன்படுத்த வேண்டும்.குடும்பத்திலுள்ளவர்களை அவச் சொல் சொல்லி பேசி விடக்கூடாது.ஏனெனில் ஒரு பெண்ணின் வார்த்தை அப்படியே பலிக்க கூடிய சக்தி மிகுந்தவை ஆகும். குடும்ப பெண்கள் காலை மாலை என இரண்டு வேளையும் தீபமேற்றி இறை வழிபாடு செய்ய வேண்டும்.தீபமேற்றினால் பெண்ணிற்கு மன அமைதி ஏற்பட்டு குடும்பத்திலும் மன அமைதி நிலவும். பெண்கள் எப்பொழுதும் சிரித்த முகத்துடன் இருக்க பழகிக்கொள்ள வேண்டும்.சிரித்த முகத்தோடு இருக்கும் பெண்களின் குடும்பத்தில் மகாலட்சுமி தானாகவே குடிபுகுந்து விடுவாள். பெண்கள் எப்பொழுதும் அமைதியான மனநிலையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.குடும்பத்தின் ஆணிவேராக திகழும் பெண்ணானவள் அனைத்துப் பிரச்சனைகளையும் தீர்க்கக் கூடிய சக்தி பெற்றவள் ஆவாள்.எனவே குடும்பப் பெண்கள் நேர்மையோடும் அமைதியாகவும் பே...

திருமணத்திற்க்கு முன் பெண்கள் ஆரோக்கியத்தை அறிய உதவும் அவசியமான ஸ்கேன்கள்

திருமணத்திற்க்கு முன் பெண்கள் ஆரோக்கியத்தை அறிய உதவும் அவசியமான ஸ்கேன்கள் .  பெண்கள் ஆரோக்கியத்தை அறிய உதவும் அவசியமான ஸ்கேன் பரிசோதனைகள்..!* திருமணத்துக்கு முன்...*  அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மூலம் பெண்களின் சினைப்பை நல்ல நிலையில் உள்ளதா எனத் தெரிந்து கொள்ளலாம். * 20 முதல் 30 வயதில் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மூலம் மார்பகங்களில் புற்றுநோயல்லாத கட்டிகள் ஏதேனும் உள்ளனவா எனத் தெரிந்து கொள்ளலாம். கர்ப்ப காலத்தில் பெண்கள்   ...* முதல் ஸ்கேன் (35 முதல் 50 நாட்களில்) கர்ப்பத்தை உறுதி செய்யவும், கருவிலுள்ள குழந்தையின் இதயத் துடிப்பைத் தெரிந்து கொள்ளவும்... ஒருவேளை இதயத் துடிப்பு இல்லை என்றால் 15 நாட்கள் கழித்து மறுபடிஇன்னொரு முறை ஸ்கேன் எடுத்துப் பார்க்கலாம்.  அப்போதும் இதயத் துடிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டால், அந்தக் கரு கலைக்கப்படும்.* 2வது ஸ்கேன் (11 முதல் 14 வாரங்களில்) கருவின் வளர்ச்சி இயல்பாக இருப்பதை அறிந்து கொள்ளவும், குழந்தைக்கு டவுன் சிண்ட்ரோம் பாதிப்பிருக்கிறதா எனத் தெரிந்து கொள்ளவும்...குழந்தையின் கழுத்துப் பகுதி அடர்த்தியை Nuchal translucency சோதனையின் மூலம் ப...

உடல் சூடு அதிகமாக இருப்பதே கருத்தரிக்காமைக் கான முதல் காரணம்.

உடல் சூடு அதிகமாக இருப்பதே கருத்தரிக்காமைக் கான முதல் காரணம். பெண் உடலில் காரத்தன்மை குறைந்து, அமிலத்தன்மை அதிகமானால், ஆணிடமிருந்து பெற்ற உயிரணு, அந்த அமில உடலில் வாழ முடியாமல் போகிறது. அதாவது அதிகமான அமிலத்தன்மையால் கர்ப்பப்பையானது கொதிகலனாக மாறுகிறது. கொதிக்கிற தண்ணீரில் ஓர் உயிர் எப்படி வாழும்? உடலைக் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளத்தான் அந்தக் காலத்தில் எண்ணெய் குளியல் பின்பற்றப்பட்டது. இன்றோ... அதெல்லாம் பட்டிக்காட்டுத்தனம்! நாகரிக மோகத்தில் நாம் கைவிட்ட நல்ல விஷயங்களில் இதுவும் ஒன்று. எண்ணெய் குளியல் என்றால் அதற்கென ஒரு முறை உண்டு. 1 குழிக்கரண்டி நல்லெண்ணெயில் 1 டீஸ்பூன் சீரகம், கால் டீஸ்பூன் புழுங்கலரிசி, 2 பல் பூண்டு சேர்த்துக் காய்ச்சி, வடிகட்டவும். அதைத் தலை, தொப்புள், அடி வயிறு, கால் கட்டை விரல் என உச்சி முதல் பாதம் வரை தடவி, அரை மணி நேரம் ஊறவும். பிறகு ஷாம்பு குளியல் எல்லாம் வேலைக்கு ஆகாது. பஞ்சகற்பம் (கடுக்காய் தோல், நெல்லி வற்றல், வேப்பம் விதை, வெள்ளை மிளகு, கஸ்தூரி மஞ்சள் ஆகிய ஐந்தும் சேர்த்தரைத்த பொடி) சிறிது எடுத்து, பசும்பால் விட்டுக் கலந்து, தலைக்குத் தேய்த்துக் குளி...