முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

தமிழர்கள் வரலாறு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

Used by Indian princesses Herbs and dosages needed to grow hair naturally, methods to use them

Subbiahpatturajan இயற்கையாக முடி வளர்ச்சி அதிகரிக்க இந்த மூலிகைகளை சரியான முறையில் தயாரித்து பயன்படுத்தலாம்.  தேவையான பொருட்கள் & அளவு: செம்பருத்தி பூ, இலை – 5-6 பூக்கள் + 10 இலைகள் கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி (15-20 இலைகள்) பொன்னாங்கண்ணி – ஒரு கைப்பிடி மருதாணி இலை – 7-8 இலைகள் வெந்தயம் – 1 டீஸ்பூன் (ஒரு இரவு ஊறவைக்கவும்) லெமன் (எலுமிச்சை) – 1/2 பழம் (சாற்று மட்டும்) ரோஜா இதழ்கள் – 5-6 இதழ்கள் நெல்லிக்காய் – 2-3 (அரைத்து பேஸ்ட் செய்யலாம் அல்லது பொடி வடிவத்தில் 1 டீஸ்பூன்) தேங்காய் எண்ணெய் – 200 ml பொடுதலை (False Daisy) – 10-12 இலைகள் கத்தாழை (Aloe Vera) – 2 ஸ்பூன் ஜெல் (பிரிப்பது சிறந்தது) தயாரிக்கும் முறை: 1. வெந்தயத்தை ஒரு இரவு நீரில் ஊறவைத்து, மைய அரைத்துக் கொள்ளவும். 2. மற்ற எல்லா மூலிகைகளையும் நன்றாக கழுவி, சிறிதளவு நீர் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். 3. தேங்காய் எண்ணெயை ஒரு கடாயில் அடுப்பில் வைத்து, இந்த அரைத்த பேஸ்டை சேர்த்து மிதமான தீயில் 10-15 நிமிடம் சூடாக்கவும். 4. எண்ணெயின் நிறம் மாறி, மூலிகைகளின் சாரம் இறங்கும்போது அடுப்பை அணைத்து, எண்ணெயை வடிகட்டவும். 5. ஆறிய பிறகு, ...

காதலித்து திருமணம் செய்தவர்களுக்கு அவர்களின் குலதெய்வம் எது என்று தெரியவில்லையா? கவலை வேண்டாம்!?

Subbiahpatturajan *குலதெய்வங்கள் என்றால் என்ன?* *விஞ்ஞானத்தோடு எப்படி ஒத்துபோகின்றது?* *அவர்களின் பெருமை என்ன?* *அனைவரும் தெரிந்து கொள்வோம்.!* நமது குலதெய்வம் : குலத்தினை காக்கும் தெய்வம் குலதெய்வம் ஆகும். தெய்வங்களில் மிகவும் வலிமையான தெய்வம் குலதெய்வம் ஆகும்.  குலதெய்வமே நமக்கு எளிதில் அருளினை தரும். மேலும் மற்ற தெய்வ வழிபாடுகளின் பலன்களையும் பெற்று தரும். குலதெய்வம் பெரும்பாலும் சிறு தெய்வமாகவே காணப்படும்.  சிறு தெய்வம் என்று அலட்சியப் படுத்தக்கூடாது. அதன் சக்தியை அளவிடமுடியாது. எமன் கூட ஒருவரின் குலதெய்வத்தின் அனுமதி பெற்று தான் உயிரை எடுக்கமுடியும். குலதெய்வம் என்பது நமது முன்னோர்களில் தெய்வமாக மாறிவிட்ட புண்ணிய ஆத்மாக்கள் ஆகும்.  அந்த புனித ஆத்மாக்கள் தங்களின் குலத்தினை சார்ந்தவர்களை கண்ணும் கருத்துமாக பேணிக் காக்கும் வல்லமை படைத்தவை. எனவே தான் அந்த தெய்வங்கள் *குலதெய்வங்கள்* என்று சிறப்புடன் அழைக்கப்படுகின்றன. குலதெய்வங்கள் கர்மவினைகளை நீக்க வல்லவை. இன்று நம் வாழ்க்கைப்போக்கு, அதிகபட்சம் இரு பாட்டன், பாட்டி பேருக்கு மேல் தெரியாமல் அல்லவா உள்ளது?  நம் முன்னோர்க...

வாணி ஜெயராமின் உண்மையான பெயர் மற்றும் சில சுவாரஸ்யமான தகவல்கள்

Subbiahpatturajan பின்னணிப் பாடகி வாணி ஜெயராம் வேலூர் நாகம்மை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படித்தார். அந்தப் பள்ளியில் சமீபத்தில் நடந்த தன்னம்பிக்கை நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக பழைய மாணவியான வாணி ஜெயராமை அழைத்திருந்தார்கள்.  சத்துவாச்சாரி லைன்ஸ் கிளப் பிரமுகர்மான மணிமேகலை இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்   வாணி ஜெயராம் அவர்கள் சொன்ன தகவல் சில... இந்தப் பள்ளியில் நான் நான்காம் வகுப்பு வரை 1949 முதல் 1953 வரை படித்தேன். என்னுடைய உண்மையான பெயர் கலைவாணி அதிலும் நான் தமிழ் மீடியத்தில்தான் படித்தேன். அதன் பிறகு என்னுடைய அம்மா எங்களுக்கு சங்கீதம் கற்றுக் கொடுப்பதற்காக சென்னைக்கு அழைத்து சென்று விட்டார் அங்கு சென்று இன்னும் சில குருமார்களிடம் நான் சங்கீதம் கற்றுக் கொண்டேன் . நான் வேலூரில் படித்தது ரொம்ப சின்ன வயதில் என்பதால் தோழிகள் பெயர் சரியாக ஞாபகம் இல்லை.  மேரி பொன்னையா, வதனா என்று இரண்டு டீச்சர் பெயர் மட்டும் ஞாபகம் இருக்கிறது என்றவர்... கல்லூரி நாட்களில்  சென்னையில் தன்னுடன் படித்த சில விஐபி தோழர்களை பற்றியும் குறிப்பிட்டுள்ளார் நான் ராணி மேரி கல்லூ...

ஜல்லிக்கட்டு விளையாட்டின் புதிய விதிமுறைகள் என்ன?

Subbiahpatturajan ஜல்லிக்கட்டு விளையாட்டின் விதிமுறைகள் என்ன? ஜல்லிக்கட்டு, காளைகளை அடக்கும் ஒரு பாரம்பரிய விளையாட்டாகும், இது முதன்மையாக இந்திய மாநிலமான தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ளது, காளைகள் மற்றும் பங்கேற்பாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய சில விதிகள் மற்றும் விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன.   விளையாட்டின் சில முக்கிய விதிகள் இங்கே: விளையாட்டில் பயன்படுத்தப்படும் காளைகள் ஒரு குறிப்பிட்ட வயது மற்றும் எடையுடன் இருக்க வேண்டும், மேலும் ஆரோக்கியம் மற்றும் உடற்தகுதிக்காக கால்நடை மருத்துவரால் வழங்கப்பட வேண்டும். காளைகளை மனிதாபிமானத்துடன் நடத்த வேண்டும், கொடுமை அல்லது துஷ்பிரயோகம் செய்யக்கூடாது. பங்கேற்பாளர்கள் 18 வயதுக்கு மேல் இருக்க வேண்டும் மற்றும் நல்ல உடல் நிலையில் இருக்க வேண்டும். காளை ஒரு மூடப்பட்ட அரங்கில் விடுவிக்கப்பட வேண்டும் . நிகழ்வின் போது பங்கேற்பாளர்கள் ஆயுதங்கள் அல்லது கூர்மையான பொருட்களை பயன்படுத்த அனுமதிக்கப்படுவதில்லை. பங்கேற்பாளர்கள் காளையை எந்த விதத்திலும் காயப்படுத்த அனுமதிக்கப்படுவதில்லை. பங்கேற்பாளர்கள் காளையின் வாலைப் பிடிக்க அனுமதிக்கப்படுவதில்லை நிகழ்வு ஒரு ...

நமக்கெதுக்கு ஊர் வம்பு என்று தூங்குவது போல நடிக்கும் தமிழர்களே நடித்தது போதும்!

Subbiahpatturajan கோவிலில் நீங்கள் செலுத்தும் நகை பணம் எங்கே செல்கிறது?! 500 டன் கோயில் தங்கமும் , விடியா ஆட்சியின் திராவிடியாப் பயல்களும்!  சமீபத்தில், கோயில் நகைகளை உருக்கி, அதை வங்கியில் வைக்கப் போவதாகத் தமிழக அரசு கூறியது!* அதை, எதிர்த்து நீதி மன்றத்தில், வழக்கு தொடுத்த போது,* *இது புதிய வழக்கமல்ல என்றும், 1977 ல் இருந்தே  திராவிட அரசுகள் இதைத்தான் செய்கிறது என்றும்,* *அதன் மூலம், இதுவரை 500 டன் தங்கம் ஏற்கனவே உருக்கப்பட்டு, அது வங்கியில் வைக்கப் பட்டுள்ளது என்றும்,* *அதன் மூலம், அரசுக்கு 11 கோடி ரூபாய் வட்டியாக வந்துள்ளது என்றும்,* *அரசு நீதி மன்றத்தில் சொல்லியது!* *அதாவது, ஒரு கிலோ தங்கத்தின் இன்றைய மதிப்பு  ₹45,00,000 என்றால்,* *500 டன் நகையின் மதிப்பு என்ன? கிட்டத்தட்ட 2.3 லட்சம் கோடி!* *இந்தத் தங்கத்தை, மத்திய ரிசர்வ் வங்கியில் அடகு வைத்தால்,* *அதற்கு இணையான 2 லட்சம் கோடி ரூபாய் நோட்டுக்களை அரசு அச்சடிக்கலாம் !* *அப்படி வைக்கும் போது, குறைந்த பட்ச வட்டியாக 5% வட்டியை,  ரிசர்வ் வங்கி கொடுத்தால்,* *வருடத்திற்கு ₹8000 கோடி வட்டியாக நம் கோயில்களுக்கு வரும். அப்...

1990 களில் கோனார் தமிழ்உரையில் படித்து தேர்ச்சிபெற்ற மாணவர்களுக்கு அதைஎழுதியவர் யார் என்பதுதெரியுமா?

Subbiahpatturajan தமிழர்களால் தவிர்க்க முடியாதது கோனார் தமிழ் உரை கோனார் தமிழ் உரை என்பது எத்தனை முக்கியமான நினைவு என்பது நம் தலைமுறையினருக்குத் தெரியும். தமிழ்ஆசிரியர்களே கோனார் தமிழ் உரையை நம்பி இருந்த காலம் அது. அந்தக் கோனார் எந்த ஊரைச் சேர்ந்தவர் அவரின் பெயர் என்ன என்பது எத்தனை பேருக்குத் தெரியும். சமீபத்தில் தான் எனக்குத் தெரிய வந்தது. முதன்முதலில் கோனார் தமிழ் உரையை எழுதியவர் ஐயம் பெருமாள் கோனார். இவர் திருச்சியில் செயின்ட் ஜோசப் உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராய் இருந்தார். பின்னர் செயின்ட் ஜோசப் கல்லூரியில் பேராசிரியராய் ஆனார். இவரிடம் படித்தவர்கள் எழுத்தாளர் சுஜாதா, நடிகர் அசோகன். கோனார் தமிழ் உரையை வெளியிட்ட பின் பழநியப்பா பதிப்பகம் பெரும் நிறுவனமானது. கோனார் அவர்களுக்கு பழநியப்பா பதிப்பகம் கொடுத்த ஊதியத்தில் அவர் கட்டிய வீட்டிற்கு  ‘ பழநியப்பா இல்லம்’  என்று பெயர் சூட்டினார். பழநியப்பா பதிப்பகம் பெரும் நிறுவனமான பின் சென்னையில் கட்டிய அலுவலகத்திற்கு ‘ கோனார் மாளிகை’ என்று பெயர் சூட்டியது. அலுவலகத்திற்குள்ளும் கோனாரின் பெரிய புகைப்படம் வைக்கபட்டிருக்கும். அதை வணங்கி...

ஒரு நாள் தமிழர்கள் இல்லாமல் இந்த உலகம் இயங்காது என்கிற நிலை வரும்

Subbiahpatturajan ஆம் நாங்கள் தமிழர்கள்  உலக நாடுகள் எல்லாம் தமிழர்களை கிள்ளுக் கிடையாக நினைத்து அவனுடைய உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் துட்சமாக வழிநடத்துகின்றனர்.ஒரு நாள் தமிழர்கள் இல்லாமல் இந்த உலகம் இயங்காது என்கிற நிலை வரும்போது நாங்கள் விழித்தெழுவோம்

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

தமிழ் சமுதாயம் இன்றும் நிலைத்து இருப்பதற்கு காரணம் பெண்களைக் கொண்டாடியதால் தான்.

Subbiahpatturajan  ராமாயணம் *இராமன் தன் மனைவியை சந்தேகித்து தீயில் இறங்க பணிக்கிறான். | இறங்கி தான் பத்தினி என்பதை சொல்கிறாள். அதற்கு பிறகு கூட ஊராரின் சந்தேகத்தை காரணங் காட்டி கர்ப்பிணியான தன் மனைவியை வனத்தில் தள்ளுகிறார் கணவன்.*  அங்கேயே குழந்தைகள் பெற்று வனத்திலேயே வாழ்கிறாள், இரண்டு குழந்தைகள் வளர்ந்து ஊர் திரும்பியதும் மடிகிறாள். - நளாயினி கதை ஓர் அழகிய இளம் மங்கை.  அவளுக்கு முதிர்ந்த கணவன்.  மனமுவந்து வாழ்கிறாள்.  ஒரு கட்டத்தில் கணவன் குஷ்டரோகியாகிறான்.  அதன் பிறகும் அவளுக்கு வெறுப்பு ஏற்பட வில்லை. பண்ணாத குசும்பெல்லாம் அக் கிழவன் செய்தும் அவனை ஆராதிக்கிறாள்.  ஒரு கட்டத்தில் ஒரு தாசியை பார்த்து "நான் இவளோடு கூட வேண்டுமென்கிறான். அதற்கும் அவள் இசைகிறாள்.   தாசிக்கு கூலியாக தாசியின் வீட்டை துப்புரவு செய்வது உள்ளிட்ட பணிகளை செய்கிறாள். தன் கணவனை தோளில் தூக்கிச் சென்று தாசியின் வீட்டுக்குச் செல்கிறாள். சிலப்பதிகாரம் *இது அனைத்தும் வட மொழிஇலக்கியங்கள்*... தன் கணவனை செய்யாத குற்றத்திற்காக கொலை செய்து விட்டது அரசு.  தன் கோப தீயால் ஒரு நகரத்தைய...

அன்று காட்டிக் கொடுத்த அந்த வடநாட்டு இளைஞன் இந்தியாவின் பிரதமர்...!!!

Subbiahpatturajan அன்று காட்டிக் கொடுத்த அந்த வடநாட்டு இளைஞன் இந்தியாவின் பிரதமர்... 1940களில் ஒரு வடமாநில இளைஞன் ஆங்கிலேய நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகிறான். சுதந்திரம் கேட்டுப் போராடினாயா "நீதிபதி கேட்கிறார்." இல்லை,... நான் போராட வில்லை என்னை விட்டுவிடுங்கள் என்று சொன்னவன் அத்தோடு நிற்கவில்லை, இவர்கள்தான் போராடினார்கள் என்று போராளிகளையும் காட்டிக்கொடுக்கிறார்! அதே காலகட்டத்தில் தெற்கே தமிழகத்தில் விடுதலைப் போரில் பங்கேற்ற ஒரு இளைஞனை காவல்துறை கைது செய்கிறது! சிறையில் வைத்து சித்ரவதை செய்கிறார்கள். எத்தனையோ கொடுமைகளுக்குப் பிறகும் அவனிடமிருந்து எதையும் பெற முடியவில்லை. போராளிகள் ஒருவரைக்கூட அவன் காட்டிக்கொடுக்கவில்லை! கோபத்தின் உச்சத்தில் அதிகாரி ஒருவன் அந்த இளைஞனின் மீசையை தன் கையிலிருந்த சிகெரெட்டால் சுட்டுக் கருக்குகிறான். அந்த இளைஞனின் நெஞ்சுறுதியை குலைக்க முடியவில்லை.  தண்டனை வாங்கிக் கொண்டு, விடுதலை கனல் நெஞ்சில் எறிய சிறை புகுகிறான் அந்த இளைஞன்! நாடு விடுதலை அடைகிறது...! 50 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தமண்ணில் தேர்தல் நடக்கிறது. அன்று காட்டிக் கொடுத்த அந்த வடநாட்டு இளைஞன...

டிகிரி டிப்ளமோ முடிக்காமல் அனுபவ அறிவைக் கொண்டு வாழ்ந்து காட்டியவர்கள் நம் முன்னோர்கள்..!!!

Subbiahpatturajan அப்போது எங்கிருந்து வந்தது இந்த அறிவியல்? மறந்த பாட்டி வைத்தியங்கள் மீண்டும் மெல்ல துளிர் விடுகிறது. Corona என்ற திக்கு தெரியா இருட்டில் நம்பிக்கை என்ற தீபம்.. Medicine ஏண்டா சளி பிடிச்சிருக்கா? சரியாத் தூங்கலையா? குரல் கம்முது! என்று கேட்டுப் பதறும் நம் அம்மாக்கள், எந்தப் பல்கலைக்கழகத்திலும் எம்.பி.பி.எஸ் பட்டம் பெற்றிருக்கவில்லை Meteorology வானம் வடக்கே கருக்கலா இருக்கு, மழை வருமாட்டு இருக்கு, மாடில காயிற வத்தலை எடுத்துட்டு வா’ என்று சொன்ன பாட்டி வானிலை அறிவியல் படித்தது இல்லை. College of Agriculture ஆடிப் பட்டம் தேடி விதை என இன்றைக்கும் சொல்லும் வரப்புக் குடியானவன் விவசாயக் கல்லூரிக்குள் மழைக்குக்கூட ஒதுங்கியது இல்லை Microbiology முந்தா நாள் சமைத்த கறி அமுதெனினும் அருந்தோம்* எனப் பாடிய தேரன் சித்தர் மைக்ரோபயாலஜி தேர்வுகளில் தேறியது இல்லை. Veterinary Doctor செந்தட்டிக்கும் ஓடைத் திருப்பிக்கும் கொஞ்சம் உடம்புக்கு ஆகலை. எங்கேயோ நின்னுட்டு இருக்குங்க புடிச்சிட்டு வாரேன் எனச் சொல்லி மேய்ச்சல் நிலத்துக்கு ஓடும் சடையனுக்கு 60 ஆடுகளில் இரண்டை மட்டும் காணவில்லை என்பதைக் கண்...

WhatsApp தமிழ் தத்துவங்கள்...

Subbiahpatturajan WhatsApp தமிழ் தத்துவங்கள் 1. தங்கச் செருப்பானாலும் தலைக்கு ஏறாது. 2. தீயில் இட்ட நெய் திரும்ப வராது. 3. நாடு கடந்தாலும் நாய்க்குணம் போகாது. 4. தேரோடு போச்சுது திருநாள். தாயோடு போச்சுது பிறந்தகம். 5. தெய்வம் காட்டுமே தவிர ஊட்டாது. 6. செத்த பிணத்திற்கு அருகே இனி சாகும் பிணம் அழுகிறது. 7. தீயில் இட்ட நெய் திரும்ப வராது. 8. கடலைத் தாண்ட ஆசையுண்டு, கால்வாயைத் தாண்ட கால் இல்லை. 9. கரும்பு கசப்பது வாய்க்குற்றம். 10. கடன் வாங்கிக் கடன் கொடுத்தவனும் கெட்டான். மரம் ஏறிக் கை விட்டவனும் கெட்டான். 11. காட்டிலே செத்தாலும் வீட்டிலே தான் தீட்டு. 12. கூப்பாட்டால் சாப்பாடாகுமா? 13. எரிகிற வீட்டை அவிக்க கிணறு வெட்ட நாள் பார்த்தது போல, கும்பிட்ட கோயில் தலை மேல் இடிந்து விழுந்தது போல, சில்லரைக் கடன் சீரழிக்கும். 14. சொப்பனங்கண்ட அரிசி சோற்றுக்கு ஆகுமா? 15. உறவு போகாமல் கெட்டது, கடன் கேளாமல் கெட்டது. ( எத்தனை பெரிய உண்மை. போய் வந்து கொண்டிருந்தால் தான் உறவு நிலைக்கும். கொடுத்த கடனைக் கேட்டுக் கொண்டே இருந்தால் தான் திரும்பக் கிடைக்கும்) . 16. அடி நாக்கில் நஞ்சும், நுனி நாக்கில் அமிர்தமுமா?...

தமிழ்நாட்டில் கோயில்கள் எதற்காக கட்டப்பட்டது?

Subbiahpatturajan தமிழ்நாட்டில் கோயில்கள் எதற்காக கட்டப்பட்டது? தமிழ்நாட்டில் சமுகங்கள் வளர்ந்த கதை... (ஜாதிகள் இல்லை) எந்த ஒரு அரசும் பட்ஜட் போடும் பொழுது வரி வசூல் என்ன, அதில் அரசு நடத்த அதிகாரிகளுக்கு ஆகும் செலவு, மக்கள் நல திட்டங்களுக்கு ஆகும் செலவு ன்னு வரவு செலவை வைத்து தன்னிறைவு திட்டத்தை அடையத்தான் நிதிநிலை அறிக்கை போடுவார்கள். இதையேதான் தமிழக கோயில்கள் செய்தன. *கோயில் இல்லா ஊரில் குடி இருக்க வேண்டாம் ன்னு அதைத்தான் சொல்லி வெச்சாங்க.*ஏன் உண்மையான காரணம்... என்ன.,. ஆசாரிகள்,தச்சர்கள்,கொல்லர் மன்னன் கோயில் கட்ட ஆரம்பித்தவுடன், கட்டுமான பணிக்கு அந்த ஊரை சுற்றி உள்ள கட்டுமான கலைஞர்கள், சிற்ப கலைஞர்கள், கல் தச்சர்கள், கட்டுமான பொருட்களான செங்கல், சுண்ணாம்பு போன்றவற்றை உற்பத்தி செய்வோர், அதை ஓரிடத்தில் இருந்து கோயில் கட்டும் இடத்திற்கு கொண்டு செல்லும் போக்குவரத்து, வர்ணம் அடிக்க, ஓவிய கலைஞர்கள், இப்படி அனைவருக்கும் வேலை வாய்ப்பு, அதுவும் அரசரால் கொடுக்கப்படும், அரசு வேலை. மூப்பனார், செட்டியார்,முதலியார்கள் *கோவிலுக்கு மானியமாக கொடுக்கப்படும் நிலங்கள், குத்தகை மூலமாக விவசாயிகளுக்கு வி...

கணவன் மனைவி போல குடும்பம் நடத்துபவர்கள் தான் ஆரியர்களும் திராவிடர்களும்..

Subbiahpatturajan கணவன் மனைவி போல அடித்துக்கொண்டே ஒன்றாக குடும்பம் நடத்துபவர்கள்தான் ஆரியர்களும்,  திராவிடர்களும். வைகை நாகரிகம், பொருணை நாகரிகம் எனும் பெயர் சூட்டல்களும் உள்ளடி ஆரிய - திராவிட சூழ்ச்சிகளும் ! தென்குமரி தொடங்கி வடவேங்கடம் வரை பரவியிருந்த தமிழ்நாடு - என்கிறது தமிழர் சங்ககால ஆவணங்கள். இந்தியா முழுதும் தமிழர்கள் பரவி வாழ்ந்தார்கள் என்கிறார் டாக்டர் அம்பேத்கர். தஞ்சாவூர், கங்கை கொண்ட சோழபுரத்தை மையமாகக்கொண்டு கிழக்கு ஆசியா முழுவதும் ஆட்சி ஆண்டிருக்கிறார்கள் ராஜராஜ சோழனும் ராஜேந்திர சோழனும் என்கிறது வரலாற்று ஆவணங்கள். எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்பதை,  உண்மையில் தொல்லியல் இடங்களில் கிடைக்கின்ற ஆவணங்கள் தொடர்ந்து நிரூபித்து வருகின்றன. தென்னிந்தியா முழுவதும் தமிழ் கல்வெட்டுகள் ஏராளமாய் உள்ளன. இந்திய நிலப்பரப்பில் கிடைக்கிற 100 விழுக்காடு கல்வெட்டுகளில் 60 விழுக்காட்டிற்கும்  அதிகமான கல்வெட்டுகள் தமிழர்கள் கல்வெட்டுகளே. தெலுங்கு மொழி செம்மொழி அந்தஸ்தைப் பெற்றது தமிழ்க் கல்வெட்டை ஆதாரமாகக் கொண்டே.  தமிழ் மொழியில்தான் அதிக எண்ணிக்கையிலான ஓலைச்சுவடிகள் உள்ளன. ...

CPCL History தமிழ்நாட்டில் பெட்ரோலிய துறை வர யார் காரணம்...?

Subbiahpatturajan CPCL History தமிழ்நாட்டில் பெட்ரோலிய துறை வர யார் காரணம்...? சென்னை மணலியில் அமைந்துள்ள ,, தமிழகத்தின் பெட்ரோலியத் துறையின் ஆணிவேரான   MRL-சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை (CPCL) பிறந்த கதை தெரியுமா.... தென் இந்தியாவில்   எண்ணெய் நிறுவனம் ஒன்று அமைக்க மத்திய அரசு முடிவெடுத்தது.  அப்போது அந்த நிறுவனம் எந்த மாநிலத்தில் அமைத்தால் நல்லது என அப்பொழுது தமிழகத்தின் முதல்வராக இருந்த பெருந்தலைவர்  காமராஜரிடம் மத்திய அரசு கேட்டது....  அனைத்து நிறுவனங்களையும்  தமிழகத்திலேயே அமைத்து தமிழகத்தை ஒரு உயர் இடத்திற்கு  கொண்டுவர கனவு கண்டு அதை நடைமுறைப் படுத்தவும் செய்து கொண்டிருந்த பெருந்தலைவர் விடுவாரா இந்த பொன்னான வாய்ப்பை !  உடனே தமிழகத்தின் தலைநகரம் சென்னையில் கடலோரப் பகுதியில் இடம் தேட ஆரம்பித்து விட்டார். சென்னை நகரின் வடக்கு எல்லை மணலியில்  தகுந்த இடத்தைக் கண்டுகொண்டார். அந்த இடம் எண்ணெய் நிறுவனம் அமைக்கச் சரியான இடம் எனவும் அதை ஆய்வு செய்த அதிகாரிகள் ரிப்போர்ட்டும் கொடுத்து விட்டார்கள்.  ஆனால் அந்த இடம் அரசாங்க இடம் அல்...