Subbiahpatturajan கணவன் மனைவி புரிதலுடன் வாழ திருமணம் ஆன கணவன் மனைவிகளுக்கு நினைவில் வைக்க வேண்டிய விஷயம் ஒன்றே ஒன்று ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி அன்பும் பரிசும் தாம்பத்யத்துக்கு உறுதி ஆம் இன்று காதலிலும் திருமண பந்தத்திலும் தொடக்கத்தில் இருக்கும் அன்பும் பரிசு பரிமாற்றமும் நாளாக நாளாக குறைந்து மறைந்து இல்லாமலே போய்விடுகிறது அங்கு தான் தம்பதிகளுக்குள் பிரிவும் தொடங்கி விடுகிறது தாம்பத்யம் என்று சொன்னவுடன் பலருக்கு அச்சமும் அருவறுப்பும் முகத்தில் பிரதிபலிக்கும் அது தேவையே இல்லை தாம்பத்யம் என்பது எளிமையான அன்புப் பகிர்தல் என்று எல்லா ஆண்களும் பெண்களும் புரிந்து கொள்ள வேண்டியது மிக அவசியம் இரண்டு அறை கொண்ட வீட்டில் கூட்டு குடும்பமாக நான்கு தம்பதிகள் வாழ்ந்த காலத்தில் கூட அன்யோன்யமாக இருந்த கணவன் மனைவி உறவு இப்போது தனி குடும்பமாக மூன்று தனி தனி அறைகள் உள்ள வீட்டில் வாழும் போது விலகி போயிருக்கிறது என்றால் இவர்கள் தாம்பத்யம் சிறக்கவில்லை என்றே அர்த்தம் திருமணம் என்ற பந்தத்தில் உரிமை கிடைத்த ஒரே காரணத்தினாலே உடல் உரிமை பெற்று கணவன் மனைவி இணைந்திருப்பது மட்டுமே தாம்பத்யம் அல்ல பாரத...
We will create a better society by sharing good information.