முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஆகஸ்ட், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

♨உங்கள் மீடியா எப்போதாவது இதை🏃🏻 உங்களுக்கு தெரிவித்துள்ளதா♻

Subbiahpatturajan ♨உங்கள் மீடியா எப்போதாவது இதை🏃🏻 உங்களுக்கு தெரிவித்துள்ளதா♻ ♨NESTLE கம்பெனி எருதிலிருந்து தயாரிக்கும் ஜூஸ் ஐ🏃🏻 kitkat சாக்லேட் இல் சேர்ப்பதாக ஒத்து கொண்டுள்ளார்கள்♻ *FAIR & LOVELY* கம்பெனி அது தயாரிக்கும் கிரீம் இல், பன்றி கொழுப்பிலுள்ள ஆயில் ஐ கலப்பதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கில் ஒத்து கொண்டுள்ளது. ♨உங்கள் மீடியா எப்போதாவது இதை🏃🏻 உங்களுக்கு தெரிவித்துள்ளதா♻ *VICKS* பல ஐரோப்பிய நாடுகளில், அது விஷம் என்று தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், நமது நாட்டில், அது நாள் முழுவதும் தொலைக்காட்சியில் விளம்பரபடுத்தபட்டு வருகிறது. ♨உங்கள் மீடியா எப்போதாவது இதை🏃🏻 உங்களுக்கு தெரிவித்துள்ளதா♻ LIFE BOUY குளிக்கும் சோப்பு அல்ல, மேலும், கழிவறை சோப்பும் அல்ல. ஆனால், அது ஒரு cabolic சோப்பு, மிருகங்களை குளிப்பாட்ட பயன்படுவது. ஐரோப்பாவில், அது நாய்களை குளிப்பாட்ட பயன்படுகிறது, ஆனால், நம் நாட்டில் ? மாப்ளே, நீ எந்த சோப்பு போட்ற? ♨உங்கள் மீடியா எப்போதாவது இதை🏃🏻 உங்களுக்கு தெரிவித்துள்ளதா♻ *COKE மற்றும் PEPSI* ஆகியவை, உண்மையில், கழிவறையை சுத்தம் செய்பவ

கடந்த 6 ஆண்டுகளில் நீங்கள் என்ன செய்தீர்கள்...?

Subbiahpatturajan கடந்த 6 ஆண்டுகளில் நீங்கள் என்ன செய்தீர்கள் ...??? #மோடிக்கு_காவல்துறை  உயர் அதிகாரியின் பதில்... கடந்த 60 வருடங்களாக காங்கிரஸ் என்ன செய்தது ?  என்ற பிரதமர் திரு.மோடி அவர்களின் குற்றச்சாட்டுக்கு... #திரு. #ஜூலியஸ்ரெபைரோ,  ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி அவர்களின் பதில்... Mr. JULIUS  REBERIO I.P.S., Ex Director General of Police - Maharashtra Ex Police Commissioner - Mumbai Ex Director General of Police - Gujarat Ex Director General of Police - Punjab ஒரு சாதாரண இந்திய பிரஜையாகிய  நான் சொல்லிய இவைகள் அவர்களுக்கு போய் சேர வேண்டும்... மோடிஜி, இப்படி சொல்லுவதை நிறுத்திவிட்டு, 60 வருடங்களில் என்ன சாதித்தோம் என்பதை பாருங்கள்... இந்திய பிரஜைகள் எல்லாரும் முட்டாள்கள் இல்லை என்பதை முதலில் உணருங்கள்... நீங்கள் பிரதம மந்திரியாக இருக்கும் நம் இந்தியாவை 200 வருடங்களுக்கு மேலாக ஆங்கிலேயன் ஆட்சி செய்தார்கள். இந்தியர்கள் அனைவரும் அவனுக்கு அடிமைகளாகத்தான் இருந்தார்கள். 1947 இல் காங்கிரஸ் அரசாங்கம் ஆட்சி ஆரம்பித்தபோது ஆங்கிலேயன் துடைத்து வைத்துவிட்டுப்போன பூஜ்யமான பொருளாதாரம்... ஆங்கிலே

உங்கள் மனத்தை சந்தோஷமாக வைத்துக் கொள்ள...!!! மனகுழப்பத்திற்கு தீர்வு

Subbiahpatturajan உங் கள் மனத்தை சந்தோஷமாக வைத்துக் கொள்ள...!!! மனகுழப்பத்திற்கு தீர்வு சில சமயம் நீங்களே உணர்ந்திருக்கலாம். எதைப் பார்த்தாலும் வெறுப்பாக இருக்கும். "யாரைப்" பார்த்தாலும் எரிச்சல் வரும். மனதுக்குள் தோற்றுவிட்டதுபோல் ஒரு "வெறுமை" உண்டாகும். அப்படியானால், மனச்சோர்வு என்ற எதிரியை உள்ளே அனுமதித்துவிட்டீர்கள் என்று அர்த்தம்! மனச்சோர்வு எதனால் வருகிறது… அடிப்படையில் உங்களுக்கு என்ன நிகழ்கிறது? நீங்கள் விரும்பியபடி யாரோ நடக்கவில்லை. எதிர்பார்த்தபடி எதுவோ நிகழவில்லை. ஆசைப்பட்டபடி வாழ்க்கை அமையவில்லை. சுருக்கமாகச் சொன்னால், உங்களுக்கு என்ன கிடைத்திருக்கிறதோ, அதை ஏற்றுக் கொள்ள முடியாமல், நீங்கள் தவிக்கிறீர்கள். அதை எதிர்க்கிறீர்கள். நீங்கள் மனச்சோர்வுடன் இருக்கும்போது எல்லாம், மற்றவர்கள் உங்களைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்கள். உங்களுடன் உட்கார்ந்து மற்றவர்களும் அழ வேண்டும் என்று விரும்புகிறீர்கள். இரக்கத்தை யாசிக்கிறீர்கள். என்ன பைத்தியக்காரத்தனம் இது? உங்கள் விருப்பப்படி எல்லாம் உலகம் ஏன் நடக்க வேண்டும்? நீங்கள் விரும்பி

🍋🍋🍋🍋🍋🍋 *நார்த்தங்காயின் நன்மைகள்:*

Subbiahpatturajan ✍  🍋🍋🍋🍋🍋🍋 *நார்த்தங்காயின்  நன்மைகள்:* 🍋🍋🍋🍋🍋🍋 *உடல்சூடு தணிக்கும் நார்த்தம்பழம். நார்த்தம் பழம் எலுமிச்சை வகையைச் சார்ந்தது. இதன் பழங்கள் பெரிதாக அளவில் காணப்படும். காய்கள் நன்கு பச்சையாக இருக்கும். நார்த்தம் பழத்தின் மணத்திற்கு மற்ற மணங்களைக் கட்டுப்படுத்தும் குணமுண்டு. நார்த்தம் பழத்தில் நன்கு கனிந்த பழமே சாப்பிட உகந்தது. இந்தப் பழம் எல்லாக் காலங்களிலும் கிடைக்கும். நன்கு பழத்த பழம் மஞ்சள், பச்சை கலந்து காணப்படும். பழத்தின் தோல்பகுதி கனமானதாக இருக்கும். இவற்றில் நீர் நிரம்பியிருக்கும். புளிப்பு சுவை மிகுதியாக இருப்பதால் இந்தப் பழத்தை சிலர் விரும்பி சாப்பிடுவதில்லை. ஆனால் நன்கு கனிந்த பழம் நல்ல சுவையுடன் இருக்கும்கிராம மக்களின் சாத்துகுடியாக நார்த்தம்பழமே விளங்குகிறது.* *நார்த்தை மரங்கள் நூறு ஆண்டுகளுக்கு மேல் வாழக்கூடியவை. நார்த்தையில் வேர்,மலர்,கனிகள் பயன்கொண்டவை*🍋🍋🍋🍋🍋🍋 *செயல்திறன் மிக்க *வேதிப்பொருட்கள்:* *கனிகளில்* *அமினோ அமிலங்கள், வைட்டமின்கள்,கொழுப்பு அமிலங்கள்* *உள்ளன. அஸ்கார்பிக் அமிலம், அலனைன்,நியசின்,வைட்டமின் பி, அஸ்பார்டிக் அமிலம்,* *இன

மூலப்பத்திரம் என்றால் என்ன மூலப்பத்திரம் அத்தனை முக்கியத்துவம் வாய்ந்ததா?"

` `எங்களுடைய பரம்பரைச் சொத்துக்கு பட்டா மட்டுமே உள்ளது. அதற்குப் பத்திரம் பதிவுசெய்வது எப்படி?" ``பரம்பரைச் சொத்துக்குப் பட்டா மட்டுமே இருந்தால் கவலையில்லை. ஏதாவது பத்திரம் வேண்டுமென்றால், குடும்பத்துக்குள்ளேயே ஒருவருக்கு அடமானம், குத்தகை போன்ற ஆவணம் எழுதி, பதிவு செய்தால், உங்களின் பெயருக்கு வில்லங்கம் மாறிவிடும். சில நாள்கள் கழித்து, பதிவான அடமானம் அல்லது குத்தகையை ரத்து செய்து பத்திரம் பதிவு செய்தால், வில்லங்கச் சான்றில் மீண்டும் உங்கள் பெயர் பதிவு இடம்பெறும்.'' பத்திரம் ``பத்திரப் பதிவில் மூலப்பத்திரம் அத்தனை முக்கியத்துவம் வாய்ந்ததா?" ``ஆம். ஒருவருக்கு தாய் எவ்வளவு முக்கியமோ, அவ்வளவுக்கு தாய்ப்பத்திரம் சொத்துக்கு முக்கியம். தாய்ப்பத்திரம் இல்லாத சொத்து அநாதைதான். தாய்ப்பத்திரம் இல்லாவிட்டால், சொத்தின் மீது ஒரு நடவடிக்கை (மனைவி அல்லது மகள் அல்லது மகள் மீது தானப் பத்திரம்போல) எடுத்து ஒரு பத்திரம் பதிவு செய்தால், அதுவே தாய்ப்பத்திரமாக மாறிவிடும்." ``தாம்பரம் வரதராஜபுரத்தில் பெரும் நிலப்பரப்பு விற்கப்பட்டது. 3,600 சதுர அடி நிலத்தை நான் 1980-ல் வாங்க

“ செம ஃபாஸ்டா ஓடிடுச்சு”, “நேரம் போகவே மாட்டேங்குது”

Subbiahpatturajan உங்கள் கடிகாரத்தைக் கொஞ்ச நேரம் உற்றுப் பாருங்கள்.  நேரம் தவறாமை உயர்வு தரும் கடலின் அலையும், நகரும் நேரமும் யாருக்காகவும் காத்திருப்பதில்லை என்பார்கள். யாரிடமும் வாங்கவும் முடியாத, யாருக்கும் கொடுக்கவும் முடியாத ஒரு உன்னத பொருள் நேரம் தான். உங்கள் கடிகாரத்தைக் கொஞ்ச நேரம் உற்றுப் பாருங்கள். எவ்வளவு நேர்த்தியாக வினாடிகள், நிமிடங்கள், மணிகள் என ஓடிக் கொண்டே இருக்கிறது. காலையில் வேகமாகவும், மதியம் சோர்வாகவும், மாலையில் தூங்கியபடியும் அது ஓடுவதில்லை. ஆனால் நாமோ நம்முடைய மனநிலைக்கு ஏற்ப, “ செம ஃபாஸ்டா ஓடிடுச்சு”, “நேரம் போகவே மாட்டேங்குது” என காலத்தைக் குறை சொல்கிறோம். ஒன்பது மணிக்கு துவங்கும் அலுவலகத்தில் எத்தனை பேர் சரியான நேரத்தில் வருகிறார்கள். ஒன்பது மணிக்கு நடைபெறும் மீட்டிங்கிற்கு எத்தனை பேர் தாமதமின்றி வந்து சேர்கிறார்கள்? பத்து நிமிடம் லேட்டா போனா ஒண்ணும் ஆவாது என்பது தானே பலருடைய மனநிலை? “மூன்று மணி நேரம் சீக்கிரமாகச் செல்வது, ஒரு நிமிடம் தாமதமாகப் போவதை விட மிகச் சிறந்தது” என்கிறார் சேக்ஸ்பியர். நேரம் தவறாமையை அவர் எந்த அளவுக்கு மதித்தார் என்பதற்கு இந்த ஒரு வ

கடல் நீர் குளியல் - நல்லதா? கெட்டதா?

Subbiahpatturajan உடல் நலம்.... கடல் நீர் குளியல் - நல்லதா? கெட்டதா? கடல் நீர் குளியல் - நல்லதா? கெட்டதா? கடல் நீர் குளியல் மிக மிக நல்லது. கடல் நீரில் அயோடின், பொட்டாசியம், மக்னீசியம், குரோமியம் ஆகிய பயன்மிக்க பொருள்கள் பெருமளவில் கலந்துள்ளது. எனவே, கடல் நீரில் குளித்தால் பல நோய்கள் நீங்குகிறது. 1. நரம்பு மண்டலம் அமைதி அடைகிறது. 2. உடலில் வெப்ப நிலைக்கு சரியான வெப்பம் உள்ள கடல் நீரில் குளிப்பதால், கை, கால்களில் ரத்த ஓட்டம் சீராகிறது. 3. உடல் தசைகள் உரிய அளவில்  சுருங்கி விரிகிறது. 4. அயோடின் நிறைந்த கடல் நீரில் குளிப்பதால் பெண்களின் மலட்டுத் தன்மை நீங்குகிறது, மகப்பேறு கிடைக்கும், சுகப்பிரசவத்திற்கு துணைபுரியும். 5. பொட்டாசியம் சிறுநீரை நன்கு வெளியேற்றும். 6. மக்னீசியம் தோல்நோய் மற்றும் ஆஸ்துமாவுக்கு மருந்தாக செயல்படுகிறது. 7. புரோமின் நரம்பு மண்டலத்தின் தளர்ச்சியை நீக்கி நல்ல ஓய்வு கொடுக்கும். 8  கால்சியம் உடலில் அனைத்து  வீக்கத்தை சரி செய்கிறது. 9. கடல்நீர் அனைத்துவகை அலர்ஜிகளையும் சரிசெய்கிறது. 10. கடல்நீர் எதிர்மறை சிந்தனை ( Negative ) உள்ளவர்களை நேர்மறை ( Positive ) சிந்தனை உள்ளவ

உங்களுடைய நெருங்கிய நண்பர்களில் நான்குபேரை நினையுங்கள்.

Subbiahpatturajan உங்களுடைய நெருங்கிய நண்பர்களில் நான்குபேரை நினையுங்கள்.  கூடா நட்பு கூடாது! நட்பு என்பது இரண்டு உடல்களில் உலவும் ஒற்றை ஆன்மா - என்கிறார் தத்துவ மேதை அரிஸ்டாட்டில். நட்பின் பிணைப்பையும், இணக்கத்தையும் சொல்லும் ஒரு அசத்தலான வாசகமாய் இதைக் கொள்ளலாம். நட்பு இல்லாத மனிதன் இருக்க முடியாது. எல்லோருக்கும் நண்பர்கள் கிடைக்கிறார்கள். சில நண்பர்கள் ஆரம்ப கால அரை டவுசர் வாழ்க்கையோடு விடை பெறுகிறார்கள். சிலர் கல்லூரி கால வாழ்க்கையுடன் நின்று போய் விடுகிறார்கள். சிலர் அலுவலக வட்டத்துக்குள்ளேயே ஓடி ஓடி ஓய்ந்து விடுகிறார்கள். வெகு சில நண்பர்களே இந்த எல்லைகளையெல்லாம் தாண்டி நமது இதயத்தின் மேடையில் கூடாரமடித்துக் குடியிருக்கிறார்கள். நமது வாழ்க்கையின் பாதையில் நண்பர்களின் பங்களிப்பு மிக மிக முக்கியமானது. இளம் வயதில் நண்பர்களுடன் அதிக நேரம் செலவிடுவதால் நண்பர்களின் குணாதிசயங்கள் நம்மையும் தொற்றிக் கொண்டு விடுகிறது. ஒரு மனிதனுடைய வெற்றிக்கும், தோல்விக்கும் பெரும்பாலான நேரங்களில் நண்பர்களே காரணமாய் இருக்கிறார்கள். அதனால் தான் நமக்கு அமையும் நண்பர்கள் நல்லவர்களாக இருக்க வேண்டியது அவ

“நீங்கள் செய்தது தவறு. ஆனாலும் உங்களை நான் மன்னிக்கிறேன்”.

Subbiahpatturajan “செய்தது தவறு வருந்துகிறேன்...“

தமிழ்நாடு ஏன் மத்திய அரசை எதிர்க்கிறது...?🤔

Subbiahpatturajan கல்வி கற்பது எப்படி என்ற அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் சொல்லக்கூடாது, ... இந்தியாவின் எல்லா மாநிலங்களும் அமைதியாக இருக்க தமிழ்நாடு மட்டும் ஏன் மத்தியரசை இவ்வளவு கடுமையாக எதிர்க்கிறது? அதுக்கு இரண்டு காரணம், 1) ஒன்னு இங்கிருக்கும் Inclusive Growth 2) இரண்டு மத்தியரசின் கொள்கைகள் எவ்வகையிலும் தமிழ்நாட்டின் தற்போதைய நிலைமைக்கு தொடர்பில்லாமல் இருப்பது சமீபத்திய உதாரணம் புதிய கல்வி கொள்கை, 2019. மத்திய அரசு நடத்திய உயர்கல்வி நிலையங்களுக்கான கணக்கெடுப்பு - AISHE 2018-19 அறிக்கை கீழே இருக்கு. இதன் படி. . . தமிழகத்தில் உயர்கல்வி ஆசிரியர் எண்ணிக்கை கிட்டத்தட்ட 2 இலட்சம்! வேற எந்த மாநிலமும் அந்த எண்ணிக்கைக்கு பக்கத்துல கூட இல்ல!! நம்மை விட 3 மடங்கு மக்கள் தொகை கொண்ட உத்திர பிரதேசத்தில் 1.4 இலட்சம் இந்தியாவின் பொருளாதார தலைநகரமாக கருதப்படும் மகாராஷ்டிராவில் 1.6 இலட்சம் போலி போட்டோஷாப்புகள் மூலம் வளர்ந்த மாநிலமாக காட்டப்படும் குஜராத்தில் வெறும் 57 ஆயிரம்! ~~~ இப்போ நான் சொன்ன Inclusive Growth என்பதற்கு வருவோம். மொத்தம் ஆசிரியர் எண்ணிக்கையில் பெண்கள் மட்டும். . .

*ஏன் நமக்கு கல்வி மறுக்கப்பட்டது*...

Subbiahpatturajan *கல்வி மறுக்கப்பட்ட நமக்கு அந்த கல்வி கிடைத்தது எப்படி*   சினார்தமிழன்

ஒரு தேசிய இனத்தை முற்றிலுமாக அழிப்பது எப்படி...?

Subbiahpatturajan ஒ ரு தேசிய இனத்தை முற்றிலுமாக அழிப்பது எப்படி...? ரொம்ப ஈஸி. .! ஒரு தேசிய இனத்துக்கு 4  அடையாளங்கள் இருக்கும். முதலாவது #நிலம் அந்த இனத்தவர்கள் குடியிருக்கும்  நிலப்பகுதியில் அந்நிய குடியேற்றங்களை ஊக்குவிக்க வேண்டும். பாலஸ்தீனத்தில் இஸ்ரேலிய குடியேற்றங்களைப் போல. திபேத்தில், சீன அரசு, சீனர்களைக் குவித்து திபேத் மக்களை சொந்த மண்ணில் சிறுபான்மையினராக ஆக்கியதைப்போல ஆக்க வேண்டும். இன்னும் எடுத்துக்காட்டு வேண்டுபவர்கள் இலங்கையைப் பார்த்துக் கற்றுக் கொள்ளலாம். அடுத்த அடையாளம் #மொழி அந்த மொழியைக் காலி பண்ண வேண்டும். " உன் நீஷபாஷை தோன்றியதே என்மொழியில் இருந்துதான். உன் மொழிக்கு இலக்கணம் வகுத்ததே நான்தான். எழுத்துச் சீர்திருத்தம் கொண்டுவந்தது நான்தான்" என்றெல்லாம் சொல்வது மிகவும் உத்தமம். ‘ திபேத்திய மொழியை வைத்து ஒரு ஆணியும் புடுங்க முடியாது. புத்தரை மட்டும் கும்பிடலாம்’ என்று சீனர்கள் கூறியது போல கூறி, அந்த தேசிய இனத்தின் மொழியைச் சிதைக்க முயல வேண்டும். மூன்றாவதாக, #பண்பாடு இந்தப் பண்பாடும், கலைகளும் இருக்கும் வரைக்கும் ஒரு தேசிய இனம், போர்க்கொடியைத் தூக்

*மூன்று மாமனிதர்களின் பெற்றோர்கள்!*

Subbiahpatturajan *மூன்று மாமனிதர்களின் பெற்றோர்கள்!* *முதல் மாமனிதர் :*  150 ஆண்டுகளுக்கு முன்பு குதிரை வண்டி தான் போக்குவரத்துக்கு பயன்பட்டது. அப்படியொரு குதிரை வண்டியில் ஒரு சிறுவன் பள்ளிக்கு செல்வது வழக்கம். *ஒரு முறை வகுப்பில் ஆசிரியர் மாணவர்களிடம் நீங்கள் பெரியவனானதும் என்னவாக ஆசைப்படுகிறீர்கள் என்று கேட்டார்.* அதற்கு ஒவ்வொரு மாணவர்களும் வக்கீல், ஆசிரியர், மருத்துவர் என சொல்லி கொண்டே வந்தனர், அப்போது *ஒரு மாணவன் கூறினான் “நான் குதிரை வண்டிக்காரனாவேன் ”.* சுற்றியிருந்த மாணவர்கள் எல்லாம் சிரித்தனர், ஆசிரியரும் அவனை கேலி செய்து உட்கார சொன்னார். அந்த சிறுவன் வீட்டிற்கு சோகமாக வந்ததை பார்த்து தாய் என்னவென்று கேட்க, நடந்ததை கூறினான் அந்த சிறுவன். அதை கேட்ட அந்த தாய் மகன் மீது கோபம் கொள்ள வில்லை, அந்த தாய் கேட்டார் *“ நீ ஏன் குதிரை வண்டிக்காரனாக ஆசைப்படுகிறாய், அதற்கு என்ன காரணம்”.* அந்த சிறுவன் கூறினான் “தினமும் பள்ளிக்கு செல்லும் போது குதிரை வண்டிக்காரன் குதிரை ஓட்டுவதை பார்ப்பேன், அவர் குதிரை ஓட்டுவது அழகாக இருக்கும். *எனக்கும் அதுபோல் குதிரை வண்டி ஓட்ட வேண்டும் என்று ஆசை, அதனால்

கேட்கக் கேட்க குலை நடுங்குகிறது…

Subbiahpatturajan முதலில் நம்ப மறுத்தேன்! ஆனால், மீண்டும்,மீண்டும் நாலா பக்கங்களிலுமிருந்து இந்த செய்திகள் வந்த வண்ணம் உள்ளன! கேட்கக் கேட்க குலை நடுங்குகிறது… ஆள் தூக்கும் அரசியல் மாபாதகங்கள், சதிச் செயல்கள்…போன்றவற்றை பயங்கரவாத இயக்கங்கள் அல்லது பாசிஸ அரசுகள் செய்வதை கேள்விப்பட்டுள்ளோம்! ஆனால்,ஜனநாயகத்திற்கு பேர் போன இந்தியா போன்ற அதுவும் அமைதி பூங்கா என்று வர்ணிக்கப்படும் தமிழ் நாட்டிலா? கொரோனாவைக் காரணம் காட்டி வீடுவீடாக வந்து அதட்டி,உருட்டி டெஸ்டுக்கு வா என்று நிர்பந்தித்து அழைத்துச் செல்லும் செய்திகளை முதலில் வடசென்னையில் பத்திரிகையாளர் நா.பா.சேதுராமன் கூறினார்! இதையடுத்து தமிழகத்தின் பல பகுதிகளிலுமிருந்து இது போன்ற செய்திகள் கடந்த ஒரு மாதமாக வந்தவண்ணம் உள்ளன! முதலில் தனியார் மருத்துவமனைகள் தான் டெஸ்ட்டுக்கு யாராவது வந்தாலே போதும் அவர்களுக்கு பாசிட்டிவ் என்று படுக்க வைத்து ’லம்ப்’பாக பணம் பார்த்தார்கள்! இதையடுத்து தான் அரசு மருத்துவமனைகளுக்காக ஆள்பிடிக்கும் அதிகேவலமான, அநீதியான அராஜகங்கள் நடந்து கொண்டுள்ளன!  கொரானாவே இல்லாதவர்கள் கூட இவர்கள் செய்யும் அலப்பறையிலும் ஆஸ்பிட்டல் சூழல்

உணவே மருந்து மருந்தே உணவு..!

Subbiahpatturajan உணவே மருந்து மருந்தே உணவு..! * பசுநெய், தயிர் கலந்து சாப்பிட்டு வந்தால் நரைமுடி கருமையாக மாறும். * விளாம்பழம் கிடைக்கும் காலங்களில் தினசரி ஒன்று சாப்பிட்டால் பித்தத்தைக் குறைக்கலாம். * சுக்கு, பால், மிளகு, திப்பிலி வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட்டால் தொண்டை கரகரப்பு குணமாகும். * உப்பு நீரை வாயில் வைத்து தொண்டை வரை படும்படி வாய் கொப்பளித்து வந்தால் தொண்டை வலி குணமாகும். * முற்றிய வெண்டைக்காயை சூப் செய்து குடித்து வந்தால், இருமல் உடனே நிற்கும். * கோதுமை கஞ்சியை மாதவிடாய் இருக்கும் காலங்களில் சாப்பிட்டு வந்தால், உடற்சோர்வு நீங்கி பலம்பெறும். * தேங்காய் பால் அடிக்கடி சாப்பிட்டு வர ஆண்மை பெருகும், தாது விருத்தியாகும். * பூண்டு, வெங்காயம் அதிகம் உணவில் சேர்த்து வந்தால் தேவையற்ற கொழுப்பு குறையும். * கரும்பு தோகையை எரித்து சாம்பலாக்கி வெண்ணெயுடன் கலந்து உதட்டு வெடிப்புக்குப் போட்டால் உடனே குணமாகும். * அல்லி இதழ்களை சந்தனத்துடன் சேர்த்து அரைத்து இரவில் முகத்தில் பூசி காலையில் குளித்து வர முகப்பருக்கள் ஒழியும். * எலுமிச்சம்பழத்தின் சாறை ஓரிரு துளிகள் காதில

கள் தடை நீங்க வேண்டும், தற்சார்பு பெருக வேண்டும்...

Subbiahpatturajan Cinartamilan கள் தடை....  இது தமிழ்நாட்டில் நடந்தேறிய ஒரு திட்டமிட்ட சதி நடவடிக்கை....!?

"காடுகள் நமக்குக் கோவில் எனில் அதில் வாழும் கடவுள் புலிகள்"...!!!

Subbiahpatturajan #tigersday "காடுகள் நமக்குக் கோவில் எனில் அதில் வாழும் கடவுள் புலிகள்"...!!! மேற்குத் தொடர்ச்சி மலையில் ஒரு புலி இறந்தால் தஞ்சை டெல்டாவில் பத்தாயிரம் ஏக்கர் நிலம் தரிசாகப் போய் விடும் எப்படி? இதென்ன கயாஸ் தியரி? அறியாதவர்கள் கவனமாகப் படித்து உயிர்ச் சங்கிலியின் சாராம்சத்தை மனசுலே ஏத்திக்கோங்க. மனிதன் வேட்டைச் சமூகமாக இருந்த காலத்தில் பிற உயிரினங்களைப் போலவே அவனது நீர்த்தேவையும் குறைவாகவே இருந்தது. குடிக்க, சமைக்க அரிதாகக் குளிக்க! அவன் வேளாண் சமூகமாக மாறிய பிறகு தான்,பிற உயிரினங்களுக்கான நீரையும் அபகரிக்கும் அளவு அவனது நீர்த்தேவை அதிகமாக உயர்ந்தது. தமிழகத்துக்கான மொத்த நீர்த்தேவையில் 70% நீரைத் தருவது தென்மேற்குப் பருவக் காற்று கொண்டு வந்து சேர்க்கும் மழை மேகங்கள் தாம். அந்த மேகங்களைத் தடுத்து நிறுத்தி, குளிர்வித்து மழையாகப் பெற்று, அதைத் தன்னுள் சேமித்து ஊற்றாக மாறி ஆறாக நமக்கு அனுப்பி வைப்பது மேற்குமலைத்தொடர் மலையும்,காடும். பிரபஞ்சவெடிப்பில் உருவான மலைத்தொடர்கள் உடல் எனில் அதிலுள்ள காடுகள் அதன் உயிர். நித்தமும் ஒவ்வொரு நொடியும் அவை தன்னைப் புதிதாக

இந்தி கற்றிருந்தால் நமது மாநிலம் இன்னும் முன்னேறியிருக்கும் என்று சொல்லும் அப்பாவிகளுக்கு

Subbiahpatturajan இந்தி கற்றிருந்தால் நமது மாநிலம் இன்னும் முன்னேறியிருக்கும் என்று சொல்லும் அப்பாவிகளுக்கு?! இந்தி கற்கவிடாமல் நம் மாநிலத்தை பின்தங்கவைத்துவிட்டார்கள் என்கிற நண்பர்களே...! #இந்தியாவிலேயே முதன்முதலாக இந்தியை ஆட்சி மொழியாக அறிவித்த பீஹாரின் #நிலையை பாருங்களேன் பீஹாரின் தாய்மொழி போஜ்புரி மற்றும் மைத்திலி. # இந்தியை ஆட்சி மொழியாக அறிவித்த ஒரு மாநிலம்தான் அதன் முன்னேற்றத்தையும் நண்பர்கள் ஆய்வு செய்துகொள்ளுங்கள் வடமேற்கு உ.பியின் தாய்மொழி பிரஜ் பாஷா, தென்மேற்கு உ.பியின் தாய்மொழி புந்தேல்கண்டி வடகிழக்கு உ.பி யின் #தாய்மொழி போஜ்புரி,பிரதாப்கர்  போன்ற மத்திய உ.பி யில் பேசப்படுவது ஆவ்தி,பிறகு கன்னோஜி என்கிற மொழியும் பேசப்படுகிறது அடுத்ததாக # உத்தராகண்ட் மாநிலத்தின் ஆட்சிமொழியும் ஹிந்திதான் போதாதற்கு சமஸ்கிருதம் additional அலுவலக மொழி. ஆனால் உத்ராகண்டின் உண்மையான தாய்மொழி கடுவாலி மற்றும் குமோனி அடுத்து ஹரியானா மாநிலத்தின் அலுவலக மொழியும் இந்திதான் ஆனால்  தாய்மொழி ஹரியாணி # ராஜஸ்தானில் ஆட்சி மொழி ஹிந்தி ஆனால் தாய்மொழி கள் ராஜஸ்தானி,மார்வாரி,மேவாரி, # மத்தியப்பிரதேசத்த