முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

செப்டம்பர், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இந்த ஊர்ல எல்லோரும் என்னை பிச்சைகாரனுக்கு பிறந்த பய அப்படின்னு சொல்றாங்க. இதுக்கு நீங்க என்ன சொல்றிங்க.?

Subbiahpatturajan ஒரு சின்ன கதை தான் படிங்க புரியும்... ஒரு ராஜா இருந்தார் அவருக்கு ஒரு மந்திரி. இவங்க ரெண்டு பேரும் ஒரு நாள் மாலை நேரம்  நடைபயிற்சி  போனாங்க.  ஒரு ஆத்தங்கரை ஒரமா போயிட்டு இருந்தாங்க. அப்போ அங்கே  ஒரு கொடியில வெள்ளரிக்காய் காய்ச்சு தொங்குவதை  பார்த்த ராஜா...  "மந்திரி அந்த வெள்ளரிக்காய பறிச்சுட்டு வா சாப்பிடலாம்"ன்னு சொன்னார். *மந்திரி பறிக்க போனார்.  அங்கே உக்கார்ந்து இருந்த ஓரு குருடன் சொன்னான்.  ஐயா அது வெள்ளரிக்காய் இல்ல. அது குமட்டி காய். அது தின்னா வாந்தி தான் வரும்.*  *ராஜா சொன்னார்.  யோவ் மந்திரி.!!  அத பறிச்சு சாப்பிடு. வாந்தி வருதான்னு  பாக்கலாம்.*  *வேற வழி இல்லாம மந்திரி சாப்பிட்டார். உடனே மந்திரிக்கு குமட்டிக்கிட்டு ஒரே வாந்தி.* *ராஜா கேட்டார்.  யோவ்.!! கபோதி..!! இதுக்கு என்ன தீர்வு.? ன்னு.* *அந்த குருடன் சொன்னான். அது  பக்கத்துல ஒரு கை மாதிரி பச்சை இலை இருக்கும். அத கையில கசக்கி மந்திரி வாயில விட்டா வாந்தி நிற்கும்ன்னு.* *ராஜாவும்  அப்படியே பண்ண...  மந்திரிக்கு வாந்தி நின்னு போச்சு. மந்திரிக்கு போன உசுரு திரும்பி வந்தது.* *ராஜா குருடனை  பார்த்து

1990 களில் கோனார் தமிழ்உரையில் படித்து தேர்ச்சிபெற்ற மாணவர்களுக்கு அதைஎழுதியவர் யார் என்பதுதெரியுமா?

Subbiahpatturajan தமிழர்களால் தவிர்க்க முடியாதது கோனார் தமிழ் உரை கோனார் தமிழ் உரை என்பது எத்தனை முக்கியமான நினைவு என்பது நம் தலைமுறையினருக்குத் தெரியும். தமிழ்ஆசிரியர்களே கோனார் தமிழ் உரையை நம்பி இருந்த காலம் அது. அந்தக் கோனார் எந்த ஊரைச் சேர்ந்தவர் அவரின் பெயர் என்ன என்பது எத்தனை பேருக்குத் தெரியும். சமீபத்தில் தான் எனக்குத் தெரிய வந்தது. முதன்முதலில் கோனார் தமிழ் உரையை எழுதியவர் ஐயம் பெருமாள் கோனார். இவர் திருச்சியில் செயின்ட் ஜோசப் உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராய் இருந்தார். பின்னர் செயின்ட் ஜோசப் கல்லூரியில் பேராசிரியராய் ஆனார். இவரிடம் படித்தவர்கள் எழுத்தாளர் சுஜாதா, நடிகர் அசோகன். கோனார் தமிழ் உரையை வெளியிட்ட பின் பழநியப்பா பதிப்பகம் பெரும் நிறுவனமானது. கோனார் அவர்களுக்கு பழநியப்பா பதிப்பகம் கொடுத்த ஊதியத்தில் அவர் கட்டிய வீட்டிற்கு  ‘ பழநியப்பா இல்லம்’  என்று பெயர் சூட்டினார். பழநியப்பா பதிப்பகம் பெரும் நிறுவனமான பின் சென்னையில் கட்டிய அலுவலகத்திற்கு ‘ கோனார் மாளிகை’ என்று பெயர் சூட்டியது. அலுவலகத்திற்குள்ளும் கோனாரின் பெரிய புகைப்படம் வைக்கபட்டிருக்கும். அதை வணங்கிய பிறகே உ

இந்தியாவில் 40 வருஷம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஒரே தலைவர் தெரியுமா உங்களுக்கு?

Subbiahpatturajan தமிழர்களை தமிழக விடுதலை போராட்டவீரர்களையும் தொடர்ந்து புறக்கணிக்கும் மத்திய அரசு ஏன்? உலகிலேயே 40 வருஷம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஒரே இந்தியத் தலைவர் வ.உ.சிதம்பரம்..! வ.உ.சிதம்பரம் பிள்ளை அதிலும் கோவை சிறைதான், வஉசிக்குள் பெருமளவில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது..! அந்த ஜெயிலர் பெயர் மிஞ்ஜேல்... ரொம்ப மோசமானவன்.. கொடூரக்காரன்..! ஜெயிலுக்குள் கொண்டு செல்லும்போதே,  கை, கால்களை கட்டி தெருவெல்லாம் இழுத்து சென்றுள்ளனர்..! வஉசியின் சிறை வாழ்க்கை   வஉசிக்கு சிறைக்குள் தனி ரூம்.. ஆனால் அதில் காற்று வசதி இல்லை.. சுத்தமும் சுகாதாரமும் இல்லை.. கால்களில் விலங்கு பூட்டப்பட்டுதான் வஉசியை அடைத்துவைத்தனர்..! ஜெயிலுக்குள் சென்றதுமே தலையை மொட்டை அடித்திருக்கிறார்கள்..  ஒரே ஒரு டிரஸ் தந்திருக்கிறார்கள்.. அதுகூட சாக்குப் பையால் தைத்தது. ஒருநாளைக்கு ஆயிரம் பேருக்கு சாப்பாடு போட்டவருக்கு, ஜெயிலில் கூழ் தந்தார்கள்.. அதுவும் புளித்து போயிருந்தது.. சில சமயம் அந்த கூழில் புழுக்கள் மிதக்குமாம்..! உடல்நிலை மோசமானதால், ஒருநாள் மட்டும் அரசி சோறு கேட்டாராம் வஉசி.. அதற்காக 3 நாளைக்கு, அந்த கூழை

இன்று ஆன்லைன் கேம்ஸ் என மாட்டிக் கொள்பவர்களின் கதி ரொம்பப் பரிதாபமானது

Subbiahpatturajan பிரான்டி வுல்ஃப் மூன்று வயதான அழகான பெண் குழந்தை. அவளுடைய தாய் இருபத்தெட்டு வயதான ரெபேக்கா காலீன் கிறிஸ்டி, விவாகரத்து ஆனவள். தாயுடைய பொழுது போக்கு இணையத்தில் கேம்ஸ் விளையாடுவது. சாதாரணமாக விளையாடத் துவங்கிய அவளை கொஞ்சம் கொஞ்சமாய் விளையாட்டு உள்ளிழுத்துக் கொண்டது. சாப்பாடு, தூக்கம் எல்லாவற்றையும் மறந்து விளையாடத் தொடங்கினாள். அவள் மறப்பதோடு நின்று விடாமல் குழந்தைக்கும் சாப்பாடு போட மறந்து விடுவாள் என்பது தான் துயரம். தாய் விளையாடிக் கொண்டிருப்பாள், குழந்தை எதுவுமே இல்லாமல் பட்டினியில் வாடி வதங்கும். தண்ணீரோ, சாப்பாடோ எதுவும் இல்லாமல் கையில் என்ன கிடைக்கிறதோ அதை குழந்தை சாப்பிடும், நாய் உணவு உட்பட! குழந்தை மெலிந்து மெலிந்து எடை குறைந்து எலும்பும் தோலுமாகி விட்டது. ஒருநாள் விளையாட்டின் மும்முரத்தில் இருந்தாள் தாய். மதியம் ஆரம்பித்த விளையாட்டு மாலை, இரவு என தொடர்ந்தது. இடைவெளியில்லாமல் அதிகாலை மூன்று மணி வரைக்கும் விளையாடினாள். விளையாடிவிட்டு விருப்பமேயில்லாமல் எழுந்து வந்தவள் குழந்தை மயங்கிக் கிடப்பதைப் பார்த்து அதிர்ந்து போனாள்! பசியினால் வாடி வதங்கிய அந்த மூன்று வயது