Subbiahpatturajan *ஒரு இந்திய இராணுவ வீரனின் பார்வையில் நாம் தமிழர் கட்சி* என் பேர் முக்கியமில்லை. என் பதவி முக்கியமில்லை. நான் இந்திய ராணுவத்தில் பணியாற்றும் ஒரு தமிழன். எல்லையில நின்னு நாட்டை காக்கும்போது, மனசுக்குள்ள ஒரே பாரமாக இருக்கும் கேள்வி தான் இது தான் — "நான் பாதுகாக்குற நாட்டுக்குள்ள என் மக்கள் பாதுகாப்பாக இருக்காங்களா? என் மண் வளமா இருக்கா? என் மொழி வாழுதா?"என் மக்கள் நிம்மதியாக வாழ்கின்றனரா என்ற கேள்வியை எனக்குள்ளே நான் கேட்ட பொழுது ஒரு இரவு அல்ல பல இரவுகள் பல பகல்கள் தூக்கம் வராமல் ஒரே சிந்தனையாக இருந்தது அந்த கேள்விக்கு பதில் தேடும்போது தான் நான் நாம் தமிழர் கட்சியோட கொள்கையும், அண்ணன் சீமானோட பேச்சும் என் காதுல விழுந்தது. *எனக்கு புரிஞ்சது என்ன?* ராணுவத்துல எங்களுக்கு சொல்லிக் கொடுப்பாங்க — "முதல்ல உன் தாய்நாடு, அப்புறம் உன் தாய்மண், அப்புறம் உன் மக்கள்." நாம் தமிழர் சொல்றதும் அதே தான். ஆனா அதை தமிழனுக்கான அரசியலா மாத்திருக்காங்க. 1. மண், நீர், காற்று — இது தான் பாதுகாப்பு எல்லையில எதிரியோட சண்டை போடுறோம். ஆனா ஊருக்குள்ள விவசாயி தண்ணி இல்லாம சாகுற...
We will create a better society by sharing good information.