Subbiahpatturajan மனிதரின் வாழ்வியல் முறை, சக மனிதருடன் நமக்குள்ள தொடர்பு, அவர்களின் முக்கியத்துவம், இதைப் பற்றிய புரிதல் பற்றிய நம் குழந்தைகளுக்கு ஏற்படும் தாக்கம் என்ன? தினமும் தன் இரு சக்கர வாகனத்தில் தன் மகளை பள்ளிக்கு அழைத்துச் செல்லும் ஒருவர் ஒரு வித்தியாசமான விசயத்தை தொடர்ந்து செய்து வந்தார். மகளுடன் சாலையில் செல்லும்போது ஏதாவது ஒரு கடையின் பெயர் பலகையை அவளை படிக்கச் சொல்வார். பின்னர் அந்தக் கடையைப் பற்றிய விவரங்களை அவளுக்கு விளக்குவார். அந்தக் கடையில் நடக்கும் வேலைகள், அதற்கான பொருள்கள், தயாரிக்கும் முறை என்று மகளுக்கு சொல்லிக்கொண்டே போவார். உதாரணமாக ஒரு டீ கடை என்றால்... "எனக்குத் தெரிஞ்சவர் இந்த கடைக்காரர். இங்கே 10 வருஷமாக டீ கடை வெச்சிருக்கார். தினமும் காலையில் 5 மணிக்கே கடையை திறந்து விடுவார். அதுக்காக, 4 மணிக்கே எழுந்து விடுவார். ராத்திரி 10 மணி வரைக்கும் கடை இருக்கும். ஒரு நாளில் 17 மணி நேரம் வேலை செய்கிறார். அதில் முக்கால்வாசி நேரம் நின்றபடியேத்தான் இருப்பார். நீ கிளாஸ்ல உட்கார்ந்து பாடம் படிப்பாய். நானும் ஆபீஸ்ல உட்கார்ந்து வேலை செய்வேன். ஆனால், இவர் உ...
We will create a better society by sharing good information.