முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

The success and ingenuity of the yogi UP Sarkar

Subbiahpatturajan

*கடைந்தெடுத்த அயோக்கிய தனம்..*

The success and ingenuity of the yogi UP Sarkar


Thanks for ndtv news
தேர்தலுக்கு மத்த நாட்களில் எல்லாம் மக்களை முட்டாளாக நினைக்காதீர்கள் னு வசனம் பேச வேண்டியது. 

தேர்தல்ல நமக்கு சாதகமான ரிசல்ட் வரலைனா மக்கள முட்டா பயலுங்கனு சொல்ல வேண்டியது..

தேர்தல் களம்ங்கறது arithmetic தான். UP ல பாஜக ஓட்டு சதவீதம் என்ன??.. 
அவன் அங்க பலமா இருக்கான்னா 
எதிர் அணி எப்படி கூட்டணி அமைத்து 
அவனுக்கு எதிரான ஓட்டு வங்கிய ஒருங்கிணைக்கிறான்ங்கறது சிம்பிள் கணக்கு. 

*எதிர் அணியா இருக்கற சமாஜ்வாதி,* 
*பகுஜன் சமாஜ், காங்கிரஸ் இவனுக மூணு பேரும்*
 *மூணு திசைல இருந்தா*
*மக்கள் எப்படி மதிப்பான்??.* 

அப்ப என்னாகி இருக்குன்னா நகர்புறங்கள்ல பாஜக மேல அதிருப்தி ல இருக்கற எவனும்
 எதிர்அணி பலமா இல்லாததால
 மறுபடியும் பாஜக தான் இதுக்கு எதுக்கு ஓட்டு போடணும்னு அப்செட் ஆகி வீட்டுல உக்காந்துட்டான்.

 *பாஜக ஓட்டுகள் கொத்தா விழுந்துருக்கு. எதிர் ஓட்டுகள் மூணு திசைல டிராவல் பண்ணியிருக்கு.*

North Indians அதீத மதசார்பு உள்ளவங்க  தான்..

. ஆனா எல்லாரையும் தீவிர மதவெறியர்களா சித்தரிக்கற போக்கு எனக்கு என்றுமே ஏற்புடையதல்ல. 

அப்படி ஒரு narrative setting பாஜக வுக்கு சாதகமாகவே முடியும். 

North Indian எல்லாராமே தீவிர மதவெறியனுங்கன்னா
 பாஜக ஒரு 80%-100% ஓட்டுகளையும் அல்லவா ஒவ்வொரு முறையும் பெற வேண்டும். 

இத்தனை வருடங்களாக வாட்சப், சமூக வலைதளங்களை பயன்படுத்தி
  வெறுப்பு பிரச்சாரத்தை முன்னெடுத்தும் 
அது சாத்தியமாகி இருக்கிறதா???..

 *பாஜக வின் அதிக பட்ச ஓட்டு சதவீதம் 30-35% குள் தானே இருக்கிறது.* 

*அப்போது மீதி 60-70% அவர்களுக்கு எதிராக தானே இருக்கிறார்கள்.* 
*அந்த ஓட்டு சதவீதத்தை ஒருங்கிணைக்காதது யார் தவறு??..* 

தமிழ்நாட்டில் உள்ள மக்களை போல் ,
 தெற்கில் உள்ளவர்களை போல் வடக்கன்ஸ் இல்லை. 
உண்மைதான்.
 அவன் மெதுவாக தான் மாறுவான்

இன்னும் கல்வி பரவலாக்க படவேண்டியது உள்ளது. 
ஆனால் இப்போது இருப்பவர்களை ஒருங்கிணைக்க தவறியது யார் குற்றம்???.. 

*UP சமூக நிலையே வேறு. அதை புரிந்து கொள்ளாமல் மக்களை குறை கூறுவது முட்டாள்தனம்..*

*தென்னாட்டில் போல் அங்கு சூழல் கிடையாது..* 

*உயர்சாதியினர் தலித்களையும் மிக பிற்படுத்தபட்டவர்களையும்*
 *நம் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு*
 *மிக மோசமான வன்முறையையும்* *அடக்குமுறையையும் அவர்கள் மேல் கட்டவிழ்த்து விடும் போக்கு அங்கு இன்றும் நிலவுகிறது..* 


*நில உடமை முழுக்க உயர்சாதியினரின் கைகளில் இருப்பதால்,* 
*எந்தவகை அதிகார பொருளாதார பலமும் இன்றி* 
*அம்மக்கள் மாநிலம் முழுவதும் சிதறி கிடக்கிறார்கள்.* 

இங்கு போல் அங்கு எந்த ஒருங்கிணைப்பும் இல்லை..
தலித்களை கொலை செய்வதற்கென்றே உருவாக்கபட்ட
 ரன்வீர் சேனா" என்ற உயர்சாதி தீவிரவாத  அமைப்பு
(சற்றேறக்குறைய 90களிலேயே உயர்சாதி நிலச்சுவான்களை எதிர்த்து
 சொற்ப கூலி உயர்வு கேட்டதற்காக 
400 தலித்களை கொடூரமாக சுட்டு கொன்ற கும்பல் இது)

 *இன்னும் அங்கு ஆயுதங்களோடு இயங்குகிறது என்றால் அங்கு என்னவிதமான சூழல் நிலவுகிறது என்று புரிந்து கொள்ளலாம்.*

*இப்படிபட்ட ஒரு சமூக சூழலில்,* 
பாஜகவுக்கு எதிரான சக்திகள் பிளவு பட்டு இருக்கும் போது 
தலித் மக்கள் யாரை நம்பி பாஜகவுக்கு எதிராக வாக்களிப்பார்கள்??.* 

உனாவோ வில் பாலியல் வன்புணர்வு செய்து கொல்லபட்ட தலித் பெண்ணின் வீட்டிற்கு சென்று 
மீடியாக்கள் முன்னிலையிலேயே நேரடியாக மிரட்டியது பாஜக உயர்சாதி கும்பல்..

 இன்னொரு தாக்கூர் சாதிசங்க தலைவன் நேரடியாக சென்று மிரட்டினான்..

*இப்படி மிருகங்களை விட கொடூரமான சாதி இந்து கூட்டத்தின் மத்தியில் தான் ஒடுக்கபட்ட மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்..*

நாளை தனக்கு ஓட்டு போடவில்லை 
அல்லது எதிராக ஓட்டு போட்டிருக்கிறார்கள் என்பது தெரிந்தால்
 எத்தகைய கொலைவெறியாட்டத்தை தங்கள் மேல் நிகழ்த்துவார்கள் என்பதை நன்கு அறிவார்கள்.
அதனாலேயே அவர்கள் வலுவான கூட்டணியையே எதிர்பார்க்கிறார்கள். 

இதே உபியில் தானே பகுஜன் சமாஜும் சமாஜ்வாதியும் மாறி மாறி ஆட்சி செய்தன. 

இப்பொது என்ன மாறி விட்டது??.. 

பாஜக ஆர்எஸ்எஸ் தன் மதவெறி பிரச்சாரத்தின் மூலமாக,
 உயர்சாதியினருக்கு ஆதரவான அரசியல் மூலமாக
 உயர்சாதியினர் ஓட்டுக்களை மொத்தமாக சிந்தாமல் சிதறாமல் ஒருங்கிணைத்து விட்டனர்
.அதற்கு முன்பு அவை சிதறி இருந்தன. 

இங்கு போல் அல்லாமல் 
அங்கு பார்ப்பனர்-தாக்கூர்- ராஜ்புட் 
உள்ளடக்கிய  உயர்சாதிகளின் ஓட்டு சதவீதம் கணிசமாக அதிகம். 

அதை பெற்றுவிட்டாலே பாஜகவுக்கு பாதி வெற்றி கிடைத்து விடுகிறது.

 அப்போது அவர்கள் செய்ய வேண்டியது
 உயர்சாதியினர் அல்லாத பகுஜன் (obc/sc/st)   ஓட்டுக்களை உடைப்பது மட்டும் தான். 

அந்த வேலையை சமாஜ்வாதி பகுஜன் சமாஜுமே பார்த்து கொள்கின்றன. 

போதா குறைக்கு காங்கிரஸும்..
முஸ்லீம் ஓட்டுகளை ஒவைசி போன்ற குடி கெடுக்கிகளை வைத்து சிதற வைக்கிறார்கள். 

ஆக, மக்கள் பாஜகவை வீழ்த்தும் ஆயுதத்தை தேர்ந்தேடுக்க தயாராகவே உள்ளார்கள்.
 அந்த ஆயுதம் பலமாக இல்லாத பட்சத்தாலேயே 
அவர்கள் சோர்ந்து போகிறார்கள். 

அந்த ஆயுதத்தை பலமாக்க வேண்டியது
 சமாஜ்வாதி-பகுஜன் சமாஜ்-காங்கிரஸ் போன்ற கட்சிகளின், 
அதன் தலைவர்களின் பொறுப்பு. 

பாஜகவை நிச்சயமாக வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கையையும் 
அதற்கான கூட்டணியையும் ஏற்படுத்தி விட்டால்
 மக்கள் மேஜிக் நிகழ்த்தி காட்டுவார்கள். 
அதை செய்யாமல் பிரிந்து நின்று கொண்டு 
ஒருவர் காலை ஒருவர் வாரிக்கொண்டு 
மக்கள் மேல் பழியை தூக்கி போடுவது.. 

*கடைந்தெடுத்த அயோக்கிய தனம்..*

கருத்துகள்

S.m.kumar இவ்வாறு கூறியுள்ளார்…
தமிழ் நாட்டில் இதை விட கேவலமாக உள்ளது காசு பணம் மற்றும் இலவச விரும்பிகள்
Subbiah Patturajan இவ்வாறு கூறியுள்ளார்…
இலவசமாக அரசனே கொடுக்கும் போது மக்களின் மனநிலையை என்னவென்று சொல்வது

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற...

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் க...