முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொண்டு எதையும் சாதிக்க போவது இல்லை

Subbiahpatturajan
நல்லா போயிண்டுருந்த லைப்ல ஹெல்த் பத்தி சொல்லறேன்னு எல்லாரும் ஆரம்பிச்சாங்க பாருங்க
உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொண்டு எதையும் சாதிக்க போவது இல்லை

அய்யய்யோ...

காலையில் எழுந்தவுடனே வெறும் வயத்திலே முதல்ல ஒரு டம்பளர் தண்ணீர் குடிக்கணும்னு சொன்னா. அப்புறம் இல்லே ரெண்டு டம்பளர் வெந்நீர் தான் குடிக்கணும்னா. அப்புறம் இல்லை வெறும் வெந்நீர் இல்லை அதிலே எலுமிச்சம்பழம் பிழிஞ்சு, ரெண்டு சொட்டு தேன் விட்டு குடிக்கணும்னா. அப்புறம் அதிலே கொஞ்சம் இஞ்சி தட்டி போட்டு குடிச்சா ரொம்ப நல்லதுன்னா. ஆக இப்போ காத்தாலே நான் தண்ணீர் குடிக்கறதையே நிறுத்திட்டேன்.

 வாக்கிங் சோதனைகள்

வாக்கிங் சோதனைகள்
 - அடுத்தது வாக்கிங் போகலாம்னு பார்த்தா, முதலேயே வேகமா நடக்கப்படாது மெதுவா நடந்து அப்புறம் வேகத்தை கூட்டி மறுபடியும் முடிக்கறச்சே மொள்ள நடக்கணும்னா வெறும் வாக்கிங் போறாது. எட்டு போட்டு நடக்க சொன்னா. அதனாலே பலன் பல மடங்கு பெருகும்ன்னு சொல்லி ஒழுங்கா நடந்துண்டு இருந்தவனை கெடுத்து எட்டு போட்டு தலை சுத்த வெச்சு. வாக்கிங் க்கு ஒரு ஃபுல் ஸ்டாப் வெச்சாச்சு.

அடுத்த ஆப்பு சாப்பாட்டுல

அடுத்த ஆப்பு சாப்பாட்டுல
அந்த கதையாவது பரவாயில்லை - காபி, டீ தொடப்படாதாம். பால் நிறைய சேர்த்துக்க கூடாதாம். நாம ஆரோக்கியமா இருக்கணும்னா கண்ராவி கசப்பா பிளாக் காபியோ, க்ரீன் டீயோ குடிக்கலாமாம்...., அதுக்கு நான் சும்மாவே இருந்துடுவேன்.
அப்புறம் பிரேக் பாஸ்ட் இட்லி தோசை கூடாது. பிரட் தான் பெஸ்ட். பொங்கல் மாதிரி ஹெவியா சாப்பிடப்படாது. பூரி கூடாது. இன்னும் ஏதேதோ சொல்லி அதுவும் நிறுத்தப்பட்டது.
இப்போ மத்தியானம் நிறைய சாதம் சாப்பிடாதைக்கு வேக வெச்ச கறிகாய் இல்லேன்னா மைல்டு பொரித்த கூட்டு, அதிகமா மசாலா சேர்க்காமல் நிறைய சூப் சேர்த்துக்கலாம்னு சொன்னா. உருளைக்கிழங்கு , வாழைக்காய் சாப்பிடக்கூடாதாம்.  தயிர் அதுவும் கெட்டியா கூடவே கூடாதாம். ஐஸ் வாட்டர் கூடவேகூடாது.
சரி சாயங்காலம் ஏதாவது ஸ்னாக்ஸ் சாப்பிடலாம்னா நமக்கு பிடிச்ச கேசரி, பஜ்ஜி போண்டா அதெல்லாம் கூடாதாம். வித விதமான பழங்களை அழகா நறுக்கி ஒரு பெரிய பௌல்ல வெச்சுண்டு ரசிச்சு ருசிச்சு சாப்பிடணுமாம்.
ராத்திரி ரொம்ப பசித்தால் மட்டுமே டின்னர் சாப்பிடணுமாம். அதுவும் ரெண்டு சுக்கா ரொட்டி தால்(பருப்பு) தொட்டு சாப்பிடலாமாம். அப்புறம் ராத்திரி பால் சாப்பிடாதே,  வேணும்னா ஒரு டம்ளர் வெந்நீர் குடி.

தூக்கத்தில் துக்கம்

அதுக்கப்புறம் தூங்கறதுக்கும் தடா. இடது பக்கம் படுக்கணும். அப்போதான் இதயம் இயல்பா இருக்கும்னு சொன்னா அப்புறம் வலது பக்கம் படுத்தால்தான் கொழுப்பு ஜீரணமாகும்னு சொன்னா.. மல்லாக்கா படு அப்போதான் பார்கின்சன், அல்சைமர் எல்லாம் வராதுன்னா. இல்லேயில்லே குப்புற படுத்தால் நல்லது. தொப்பை வராது. ஒபிசிட்டி வராதுன்னு சொன்னீங்க ஏன்டா நான் magazine படிச்சது தப்பா இல்ல நீங்க சொல்லித் தந்தது பொய்யா? எங்களோட முன்னோர்கள் கூட இந்த அளவுக்கு கஷ்டப்பட்டு வாழ்ந்திருக்க வாய்ப்பில்லை....அய்யோ...🙆🙏

கடைசியா ஒன்னு சொல்றேன்

அடேய்ய்...! அடங்குங்கடா எல்லாரும்... 
இப்படி எதுவுமே சாப்பிடாம ஆரோக்கியமா இருந்து ஒண்ணும் கிழிக்க வேண்டாம். எனக்கு பிடிச்சதை சாப்டுட்டு, சந்தோஷமா எப்போதும் போல 'ஜாலிலோ ஜிம்கானா'ன்னு பாடிண்டு போயிண்டே இருக்கேன்..! என்னிக்கு இருந்தாலும் ஒரு நாள் நான் மேலே போய்த்தானே ஆக வேண்டும், இப்படி எல்லாரும் பட்டினியா(டயட்டில்) இருந்து யாராவது இங்கேயே தங்கி இருந்தார்கள் என்று சொல்ல முடியுமா? ம்ம் இத உங்களுக்கு சொல்லி புரிய வைக்க ஏதோ முயற்சி பண்ணி இருக்கேன்.

ஏன் கோவில் கட்டி வச்சாங்கன்னா...

ஏன் கோவில் கட்டி வச்சாங்கன்னா...
மக்கா நம்ம முன்னோர்கள் ஏன் இவ்வளவு பெரிய உயரத்தில் போய் ஏன் கோவில் கட்டி வச்சாங்கன்னா...நாம எல்லாரும் ஆரோக்கியமாக இருக்கனும்னு தாம்ல... நான் திருநெல்வேலிகாரங்க ஏதோ மண்டயில உரச்சத சொல்லிபுட்டேங்க நல்லா சாப்பிடுங்க மக்கா ஆனா வாரத்துல ரெண்டு தடவ மலை கோவிலுக்கு போகனும் .
மக்கா ... சாமிகிட்ட ஆரோக்கியம் கேட்க தேவை இல்ல அது தண்ணால வரும்ல என்ன நான் சொல்றது....

கருத்துகள்

S.m.kumar இவ்வாறு கூறியுள்ளார்…
சபாஷ் சரியான போட்டி நாவிற்கு எது பிடிக்கும் அதை சாப்பிட வேண்டும் கட்டாயம் அவ்வளவு தான்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழர்கள் வரலாறு இந்திர விழா

Subbiahpatturajan #சினார்தமிழன் #தமிழர்கள் #இந்திரவிழா #இந்திரவிழா #bestarticalstamil2021 #cinartamilan தென்னாட்டிலே கடல்கொண்ட வணிக நகரம் காவிரிப்பூம் பட்டினம். 12ம் திருமுறை யிலே, இயற்பகை நாயனார் புராணத்தின் 1 வது பாடல் அத்திருநகரத்தின் வளத் தைப் பாடுகிறது. சென்னி வெண்குடை நீட நபாயன் திருக்கு லம்புகழ் பெருக்கிய சிறப்பின் மன்னு தொல்புகழ் மருதநீர் நாட்டு வயல்வ ளந்தர இயல்பினில் அளித்துப் பொன்னி நன்னதி மிக்கநீர் பாய்ந்து புணரி தன்னையும் புனிதமாக்  குவதோர் நன்னெ டும்பெருந் தீர்த்தமுன் னுடைய நவஞ்சிறந்தது வளம்புகார் நகரம் என்கிறது அந்தப் பாடல். அதாவது சோழ மரபிலே தோன்றிய வெண்கொற்றக் குடையையுடையவன் அநபாயச் சோழன். அவனது அரசியல் அருளுடைய மரபினரின் புகழை உலகறியச் செய்தது சோழவள நாடு. அத்தகைய பெருமை மிக்க மருதவளம் நிறைந்த சோழவள நாட்டை ஊடறுத்துப் பாய்கிறது காவிரியாறு. தைப்பொங்கல் திருநாள்  அந்த வயல் வளத்துக்கும் காவிரியாறே காரணமாகிறது. காவிரி, காலந்தவறாது காவிவரும் வெள்ளநீர் கடலையும் தூய்மை செய்வதாகக் குறிப்பிடப்படுகிறது. இத்துணை நீர்வளம் மிக்க நலம் பெருக்கும் நகரம் காவிரிப்பூம் பட்டினம...

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

வாழ்க்கை ஒரேயொரு முறை தான்... நல்லா தான்...வாழ்ந்து பார்க்கலாமே...

Subbiahpatturajan இதுதான் வாழ்க்கை! தனது குடும்பம் என்ற ஒரு பத்து பேர், தனது நண்பனும் பகைவனும்  என்ற பத்து பேர், தனது தொழிலில் ஒரு பத்து பேர், தனது வீதியில் ஒரு பத்து பேர், தனது மதத்தில், ஜாதியில்  ஒரு  நூறு பேர்..! இந்த 140 பேரின் நடுவில்  தன்னை உயர்த்திக் காட்டிக் கொள்வதும், பாசமாக, நட்பாக, அன்பாக, வீரனாக, நல்லவனாக காட்டிக் கொள்வதுமே மனித வாழ்வின் குறிக்கோள் என்று இந்த சமுதாயம் மனிதர்களுக்கு போதிக்கிறது. எல்லாவற்றையும் அவர்களோடு ஒப்பிட்டுப் பார்த்து  அதைவிட ஒரு படியேனும் அதிகமாக இருக்க வேண்டும். அப்போதுதான் மதிப்பு என்று போலியான வாழ்க்கைவாழ கட்டாயப்படுத்துகிறது. அவன் அப்படி, இவன் இப்படி என்று பிறரை விமர்சனம் செய்யச் சொல்கிறது. பொருளாதார ரீதியாக  தன்னிறைவு அடைந்ததும்  பிறரை ஏளனமாக, கேவலமாக நினைக்கச் சொல்கிறது. இந்த 140 பேரின் நடுவில் ஏற்படும் அவமானமும், கோபமும், கௌரவமும் மட்டுமே ஒருவனைப் பாதிக்கின்றன. இதற்காக தன்னுடைய  அத்தனை ஆசாபாசங்களையும் அடக்கி வைத்து,    மனித ஜடமாக வாழும் பலருக்கு  இந்த பூமிப்பந்து  எழுநூறு கோடி மக்களால் ...