முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan

              வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு
வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.
 வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.

 சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.
 அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் குபேரன் அருள், மகாலட்சுமியின் நித்திய வாசம் அங்கே நிலைக்கும். வலம்புரிச் சங்கில் தீர்த்தம் துளசி இட்டு பூஜை செய்தபின் அதனால் மங்கள ஸ்நானம் செய்தால் அனைத்து தோஷங்களும் நீங்கி விடும்.

 சுவாமிக்கு அபிஷேகம் செய்தாலும் நமக்கு உள்ள தோஷம் நீங்கிவிடும். வாஸ்து தோஷம் உள்ள வீட்டில் துளசி தீர்த்தத்தை சங்கில் இட்டு பிரதி வெள்ளி தோறும் தெளித்து வர தோஷம் விலகி நலம் உண்டாகும். செவ்வாய் தோஷம் உள்ள பெண்கள் செவ்வாய் தோறும் வலம்புரிச்சங்கில் பால் வைத்து அங்காரக பூஜை செய்ய தோஷம் விலகி திருமணம் நடந்துவிடும்.

கடன் சுமையை குறைக்க...

அதிகக் கடன்பட்டவர்கள் பௌர்ணமி தோறும் சங்குக்கு குங்கும அர்ச்சனை செய்துவர உடனே கடன் தீரும். சுத்தமான, உண்மையான வலம்புரிச் சங்கு பூஜிக்கப்படும் வீட்டில் பில்லி சூன்யங்கள், ஏவல்கள் நெருங்காது. ஒரு தெய்வத்துக்கு சங்கால் அபிஷேகம் செய்வதால் 10 பங்கு அபிஷேகம் செய்த பலனைப் பெறமுடியும்.
பூஜை அறையில் ஒரு தட்டில் அரிசி பரப்பி அதில் சங்கை வைத்து பூ, பொட்டிட்டு வணங்கி வந்தால் உணவுப் பஞ்சமே வராது. புதுமனை செல்பவர்கள் சிறப்பாய் வாழ்ந்திட, கண் திருஷ்டி, வியாபார சரிவு, கடன்கள், கல்வியில் கவனமின்மை, தொழில் கூடங்களில் தொய்வு, எதிரிகளால் தொல்லை, திருமணத்தடை போன்ற எண்ணற்ற பிரச்னைகளை தீர்க்க வல்லது வலம்புரிச் சங்கு. வாஸ்து குறைகள் முற்றிலும் நீங்க, நினைத்த காரியம் வெற்றி உண்டாக, ஆவி பிரச்சனைகள் தீர வலம்புரிச் சங்கு வழிபாடு உதவும்.
இதை இல்லத்தில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும். குடும்பம் சுபிட்சம் பெற வலம்புரிச் சங்கை வாங்கி பயன்பெற விரும்புவோர் அவரவர் சக்திக்கேற்ப அளவுகள் கொண்ட வலம்புரிச் சங்கினை தேர்வு செய்து கொள்ளலாம்,
வலம்புரிச் சங்கு இருக்கும் இடத்தில், எந்தத் தீய சக்தியும் நம்மை அணுகாது! பிரபஞ்சமே நாதத்தால் எழுந்ததுதான். ஓம்கார பிரணவ மந்திரத்தால்தான் சகல லோகங்களும் இயங்குகிறது என்பதே வேதத்தின் சாரம். பிரணவ மந்திரத்தின் அடையாளமாகப் புனிதப்பொருளாக வலம்புரிச் சங்கு கருதப்படுகிறது. பாற்கடலைக் கடைந்தபோது திருமகள் வெளியே வந்தபோது கூடவே தோன்றியது இந்தச் சங்கு. இதை எடுத்து தமது கரத்தில் தாங்கிக்கொண்டார் திருமால்.

கடலில் எத்தனை விதமான சங்குகள் கிடைக்கின்றன.

பாஞ்சசன்யம்
சலஞ்சலம்
வலம்புரி சங்கு
இடம்புரி சங்கு
வெண் சங்கு
மணி சங்கு
துவரி சங்கு
பாருத சங்கு
வைபவ சங்கு
பார் சங்கு
துயிலா சங்கு
பூமா சங்கு
திரி சங்கு 
பாஞ்சசன்யம்’ என்னும் அந்தச் சங்கு உயிர்களின் சலனங்களை எடுத்துக்கூறும் சின்னமாக இருந்து வருகிறது. கடலில் தோன்றும் சங்கு கிளிஞ்சலின் பாதுகாப்புக் கவசமாக விளங்குகிறது. சாதாரணமாக இடப்புறமாக வளைந்திருக்கும் சங்குகளே அதிகம் விளையும். ஆயிரம் இடம்புரிச் சங்கில் ஒரே ஒரு வலம்புரிச் சங்குதான் இருக்கும். ஆயிரம் வலம்புரிச் சங்கில் ஒரே ஒரு ‘சலஞ்சலம்’ என்னும் விசேஷ சங்கு தோன்றும். ஆயிரமாயிரம் சலஞ்சலம் சங்குகளுக்கு இடையேதான் ஒரே ஒரு ‘பாஞ்சசன்யம் சங்கு’ தோன்றும் என்பார்கள்.
வலம்புரிச் சங்கு
வலம்புரி சங்கு
கடலில் பிறக்கும் ஒரு சங்கில் சுருண்டிருக்கும் வரிகள் வாய்ப் பகுதியில் ஆரம்பித்து வலதுபுறமாக சுழன்று முடிந்தால், அது வலம்புரிச் சங்கு. காதில் வைத்துக் கேட்டால் அது ‘ஓம்’ என்ற சப்தத்தை எழுப்பும். இதுவே அந்தச் சங்கு வழிபாட்டுக்குரியது என்பதைத் தெரிவித்து விடும். வலம்புரிச் சங்கு, ‘தட்சிணாவர்த்த சங்கம்’ என்றும் இடம்புரிச் சங்கு ‘வாமாவர்த்த சங்கம்’ என்றும் சொல்லப்படுகிறது.
தமக்கு வில்வித்தை கற்றுத்தந்த ‘சாந்தீபனி’ முனிவரின் மகனை மீட்க கடலில் வாழ்ந்த ‘பாஞ்சசன்யன்’ என்ற அசுரனை ஸ்ரீகிருஷ்ணர் கொன்றார். சாகும் தருவாயில் கிருஷ்ணரைப் பணிந்த அந்த அரக்கனின் வேண்டுகோளின்படி, அவனது சாம்பலைத் திரட்டி சங்காக மாற்றி அவனது பெயராலேயே ஏந்திக்கொண்டார் என்று பாகவத புராணம் கூறுகிறது.
பூஜையில் ஒலிக்கவும், போரைத் தொடங்கவும், வெற்றியைப் பறைச்சாற்றவும், நல்லனவற்றின் வருகையை அறிவிக்கவும் ஆதிகாலம் தொட்டே சங்கு முழங்கப்பட்டு வந்துள்ளது. 

பாண்டவர்கள் வைத்திருந்த சங்கின் பெயர்கள் என்னென்ன?

மகாபாரதத்தில் பஞ்ச பாண்டவர்கள் ஐவரும் ஐந்து விதமான சங்குகளைத் தாங்கி இருந்ததாகச் சொல்லப்படுகிறது.
யுதிஷ்டிரர் (தர்மர்) ‘அனந்த விஜயம்’ எனும் ஒளிபொருந்திய சங்கையும், அர்ஜுனன் ‘தேவதத்தம்’ எனும் தேவ சங்கையும், பலவான் பீமன் ‘மகாசங்கம்’ எனும் பெரிய சங்கையும், நகுலன் ‘சுகோஷம்’ எனும் அதிர்ஷ்ட சங்கையும் சகாதேவன் ‘மணிபுஷ்பகம்’ எனும் சூட்சும சங்கையும் தாங்கி இருந்தார்கள் என்று சொல்லப்படுகிறது.திருமால்
சங்கு எப்போதுமே புனிதப்பொருளாக இருந்து வந்துள்ளதைத் தமிழ் இலக்கியங்களும் சொல்லி வந்துள்ளன. இது மகாலக்ஷ்மியின் அம்சமாகவே பார்க்கப்பட்டு வருகிறது. இது இருக்கும் இடத்தில் தோஷங்கள், துஷ்ட சக்திகள் இருக்கவே இருக்காது. கண்திருஷ்டி, பகைவர்களின் நீசச் செயல் எதுவுமே பலனிழந்து போகும். கடன் பிரச்சினை நீங்கும். வாஸ்து தோஷங்கள் யாவும் விலகும்.
சங்கால் அபிஷேகம் செய்வதால் 10 மடங்கு அபிஷேகம் செய்த பலனைப் பெறலாம் என்பது ஐதீகம். இது இருக்கும் இடத்தில் உணவு பஞ்சமே வராது. வலம்புரிச் சங்கு பூஜை செய்பவர்களின் பிரம்மதோஷம் விலகி விடும்.
வளர்பிறை நாளில் வாங்கி வந்த வலம்புரிச் சங்கை, புனித நதி நீர் இருந்தால், அதில் நீராட்டி சுத்தம் செய்யவேண்டும். இல்லாவிட்டால், மஞ்சள் கலந்த தூய நீரில் கழுவலாம். பின்னர் மஞ்சள், சந்தனம், குங்குமம், புஷ்பங்கள் கொண்டு அலங்கரித்து ஒரு பீடத்தின் மீது வைக்க வேண்டும்.
வலம்புரிச் சங்கு
சங்கை உபயோகிக்கும் முறைமைகள்
சங்கை உபயோகிக்கும் முறைமைகள்

வலம்புரிச் சங்கை ஒருபோதும் கீழே வைக்கவே கூடாது. தூப தீபம் காட்டி, நெய் தீபமேற்றி, மந்திரங்கள் கூறி வணங்க வேண்டும். சங்குக்கு வெள்ளியாலான பூண் இடுவது விசேஷமானது. வலம்புரிச் சங்கை வணங்கும் எந்த இடத்திலும் மஹாலக்ஷ்மி வாசம் செய்வாள் என்பது நிச்சயம். தொழில் செய்யும் இடத்தில், பணம் புழங்கும் இடத்தில் இந்த சங்கு இருப்பது இன்னும் விஷேசமானது. சங்கு வைத்து செய்யப்படும் எந்தப் பூஜையும் நிறைவாகிறது. கணபதி, வலம்புரிச் சங்கு, சாளக்கிராமம், ருத்ராட்சம் இந்த நான்கும் இருக்கும் இடம் தெய்வ சந்நிதிக்கு நிகரானது என்பது ஆன்றோர்கள் வாக்கு.
ஓம் பாஞ்சசன்யாய வித்மஹே
பவமானாய தீமஹி
தன்னஸ் சங்க ப்ரஜோதயாத்
என்பது சங்கின் காயத்ரி மந்திரம்.
நாம் தினமும் வழிபடும் பல கடவுளர்களின் கைகளில் ஓம்காரத்தை வெளிப்படுத்தும் சங்கு இருப்பதை நாம் காணலாம்.
பூவுலகம் தோன்றிய நாள் முதல் ஏற்பட்ட ஒலி அலைகளும், ஒளி அலைகளும், பஞ்ச பூதங்களின் மூலமாக தமது அதிர்வுகளை வெளிப்படுத்தியவாறு இருக்கின்றன. சாதாரணமாக நமக்கிருக்கும் கேட்கும் சக்தி மற்றும் பார்க்கும் திறம் ஆகியவற்றால் மட்டுமே அவற்றை அறிவது சிரமமான ஒன்று. இயற்கையில் உள்ள பல பொருட்களில், ஒலி அலைகளின் மூலாதாரமாக இருக்கும் ஓம்கார ஸ்வரூபம் தாமாக வெளிப்படுவதாக பல ஆன்மிக பெரியோர்கள் கண்டறிந்துள்ளார்கள். குறிப்பாக சங்கின் மூலம் ஓம்காரம் வெளிப்படுவதை பலரும் அறிந்துள்ளனர்.
பாற்கடலில் தோன்றியது

தேவர்கள் மற்றும் அசுரர்களால் பாற்கடல் கடையப்பட்டபோது வெளிப்பட்ட, பதினாறு வகையான தெய்வீகப் பொருட்களில் வலம்புரி சங்கும் ஒன்று. அந்த சங்குதான் மகாவிஷ்ணுவின் இடக்கையில் இருக்கிறது. அதுமட்டு மல்லாமல், ஒவ்வொரு தெய்வமும் தங்களுக்கென்று தனித்தனியாக சங்குகளை வைத் திருப்பதாக ஆகமங்களும், புராணங்களும் விளக்குகின்றன. மணி சங்கு, துவரி சங்கு, பாருத சங்கு, வைபவ சங்கு, பார் சங்கு, துயிலா சங்கு, வெண் சங்கு, பூமா சங்கு, திரி சங்கு என்ற எட்டு வகை சங்குகள் கடலில் உற்பத்தி ஆவதாக கூறப்படுகிறது. அதில் வலம்புரி சங்குக்கு மட்டும் விசேஷ சக்தி இருப்பதாக சாஸ்திரங்கள் சொல்கின்றன.
பெருமாளின் கைகளில் என்னென்ன சங்கு உள்ளது.
வைணவ ஆகமங்களில் ஒன்றான வைகானஸ (விகனஸ) ஆகமத்தில், ஒவ்வொரு தெய்வத்துக்கும் உரிய சங்குகள் பற்றி குறிப்புகள் இருக்கின்றன. திருமலை வேங்கடவன் கை களில் மணி சங்கும், ரங்கநாத சுவாமியின் கைகளில் துவரி சங்கும், அனந்த பத்மநாப சுவாமியின் கைகளில் பாருத சங்கும், பார்த்த சாரதி பெருமாளின் கைகளில் வைபவ சங்கும், சுதர்ஸன ஆழ்வாரது கைகளில் பார் சங்கும், சவுரி ராஜ பெருமாள் கையில் துயிலா சங்கும், கலிய பெருமாளின் கரங்களில் வெண் சங்கும், ஸ்ரீநாராயண மூர்த்தியிடம் பூமா சங்கும் இருப்பதாக வைகானஸ ஆகமம் குறிப்பிடுகிறது.
வாஸ்து பரிகாரம்
பொதுவாக வீடுகளில் அமைந்திருக்கும் வாஸ்து குறைகளை நீக்குவதற்கு, மஞ்சள் கலந்த நீரில் துளசியை இட்டு சங்கு தீர்த்தமாக காலை நேரங்களில் தெளித்து விட்டால் அந்த குறைகள் நீங்குவதாக ஐதீகம். பழங்காலத்தில் மக்கள், செல்வ செழிப்போடு இருக்க வீடுகளின் தலை வாசலில் சங்கு பதித்து வைப்பது வழக்கம்.
அதாவது, ஐந்து வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமிக்கு உரிய வசிய பூஜை செய்த வலம்புரி சங்கை, வீட்டின் கதவு நிலைக்கருகில் வாசல் படியில் பதித்து விடுவார்கள். அதன் மூலம் குறைகள் இல்லாத வாழ்க்கை அமைவதாக அவர்கள் நம்பினார்கள்.
கோவில் மணி
பெரும்பாலான கோவில்களில் மணி அடிப்பது மற்றும் சங்கு ஊதுவது போன்ற நடைமுறைகள் இருப்பதை கவனித்திருப்போம். சங்கு ஊதுவது என்பது தற்போதைய சூழலில், அபசகுனம் போன்ற ஒரு பிரமையை ஏற்படுத்தியிருக்கிறது. வேதங்களின் உட்பொருளான ஓம்கார மந்திரத்தை நினைவுபடுத்துவதாகவும், ‘அர்த்தம்’ எனப்படும் பொருள் வளத்தை தருவதாலும் கடவுளுக்கு முன்பு வைத்து வணங்கப் படும் தன்மையை சங்கு பெற்றிருக்கிறது. மேலும், மங்களகரமான பூஜை வேளைகளில் தேவையற்ற பேச்சுகள் காதில் விழுந்து பக்தி மனோபாவத்தை குறைத்து விடாதிருக்க சங்கநாதம் உதவி செய்கிறது. கோவில்களிலும், வீடுகளிலும் பூஜை செய்யும் போது சங்கு ஊதுவது பலகாலமாக நம் நாட்டில் இருந்து வருகிறது. மகாகவி பாரதியும் ‘சங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே..’ என்று வெற்றியை பறை சாற்றும் பொருளான சங்கு பற்றி பாடுகிறார்.
கிருமிகளைக் கொல்லும்
சங்கிற்கு உடலை பாதிக்கும் நுண்கிருமிகளை அழிக்கும் தன்மை உள்ளது என்று நம் முன்னோர் நம்பினார்கள். அதனால்தான் தீர்த்தம் சங்கில் தரப்படுவது விசேஷமாக கருதப்பட்டது. குழந்தைகளுக்கு அக்காலத்தில் மருந்தையும், பாலையும் சங்கில் ஊற்றி தரும் வழக்கம் நம் வீடுகளில் இருந்தது. சங்கநாதம் கேட்கும் இடங் களில் மகாலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம். மேலும் பெண்கள் வளையல்கள் அணிவதை பார்த்திருப்போம். ‘வளை’ என்பது சங்கு என பொருள்படும். ஆரம்ப காலங்களில் சங்கின் மூலமாகத்தான் இது தயாரிக்கப்பட்டது. பின்னர் கண்ணாடி, தங்கம், வெள்ளி என உபயோக முறைகள் மாற்றப்பட்டுவிட்டன. சங்கு ஆபரணமாக பயன்படுத்தப்பட்டதோடு, ஆயுர்வேத வைத்தியத்தில் பஸ்பமாகவும் பயன்படுகிறது.
அட்சய திருதியை
மக்களிடையே பிரபலமாக இருக்கும் அட்சய திருதியை நாளன்று, வலம்புரி சங்குடன் தங்கம் வாங்கி வீட்டிற்கு கொண்டு வந்தால் ஐஸ்வர்ய வளம் நாளும் வளரும் என்பது வட மாநிலங்களில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நம்பிக்கையாகும். வலம்புரி சங்கை வெறுமனே ஒரு தட்டில் வைக்கக்கூடாது என்பதால், அதற்கு பொருத்தமான அளவில் வெள்ளிக் கவசம் செய்து பொருத்திய பின்னர் வீட்டுக்கு கொண்டு வந்து, அதற்கான ‘ஸ்டாண்டில்’ வைப்பது அவசியம். அதற்கு தினமும் பசும்பால் அபிஷேகம் செய்து, பூஜை செய்து வந்தால் மகாலட்சுமி அந்த வீட்டில் நிரந்தரமாக தங்கியிருப்பாள் என்பது உறுதி.

வீட்டில் வைத்து செய்யப்படும் வலம்புரிச்சங்கு பூஜையும், அதனுடைய பலன்களும்..

* வீட்டில் அலங்காரமாக வைக்கப்பட்டிருக்கும் வலம்புரி சங்கானது, குபேரனது அருளை பெற்றுத் தருவதோடு, மகாலட்சுமியின் நித்திய வாசத்தையும் அருளக்கூடியது.
* வலம்புரி சங்கில் தீர்த்தம் துளசி இட்டு பூஜை செய்து மங்கள ஸ்நானம் செய்வது, சகல தோஷ நிவாரணம் ஆகும். வலம்புரி தீர்த்தம் கொண்டு சுவாமிக்கு அபிஷேகம் செய்வித்தாலும் கடும் தோஷங்கள் விலகும்.
* கார்த்திகை சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமையன்று இறைவனுக்கு சங்காபிஷேகம் செய்யப்படும். அப்போது 108 சங்கு அபிஷேக பூஜைக்கு நடுவில் வலம்புரிச்சங்கு உருவத்தில் குபேரன் எழுந்தருளுவதாக ஐதீகம்.

* கண்களுக்கு புலப்படாத வாஸ்து தோஷம் இருக்கும் வீட்டில், துளசி தீர்த்தத்தை சங்கில் இட்டு ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மாலை வேளையில் வீடுகளில் தெளித்து வந்தால் நன்மை உண்டாகும்.

* ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் உள்ள பெண்கள், செவ்வாய் தோறும் வலம்புரி சங்கில் பால் வைத்து அங்காரக பூஜை செய்து வந்தால் திருமண பாக்கியம் கைகூடும்.
* கடன் தொல்லையால் அவதிப்படுபவர்கள் வலம்புரி சங்குக்கு, பவுர்ணமி தோறும் குங்கும அர்ச்சனை செய்வது சிறப்பு. 16 எண்ணிக்கையில் வலம்புரி சங்கு கோலமிட்டு, நடுவில் தீபம் ஏற்றி வைத்து பூஜை செய்வது நல்லது.
* சுத்தமாகவும், கச்சிதமாகவும் பூஜிக்கப்படும் வலம்புரி சங்கு உள்ள வீட்டிற்கு, பில்லி சூனிய பாதிப்புகள் நெருங்காது.
* வீட்டில் உள்ள பூஜை அறையில், சிறு தட்டில் பச்சரிசி, அதில் சங்கை வைத்து, பூ சூட்டி பொட்டு வைத்து வணங்கி வந்தால் உணவு பஞ்சம் இருக்காது.
முச்சங்கு ஒலி
பழங்காலங்களில் ஒரு மனிதருடைய வாழ்வில், மூன்று முறை சங்கநாதம் ஒலிக்கப்பட்டது. அதன் மூலமாக எழக்கூடிய சுப நாதமானது, சம்பந்தப்பட்ட மனிதருக்கு நற்பலன்களை உண்டாக்குவதாக நம்பப்பட்டது. தற்போது நடைமுறையில் அவ்வளவாக இல்லாத அந்த பழக்கத்தில் பல்வேறு உள்ளர்த்தங்கள் இருக்கின்றன. ஒரு மனிதரின் வாழ்வில் ஒலிக்கப்பட்ட மூன்று சங்கநாதங்கள் பற்றிய தகவல்களை இங்கே காணலாம்.
முதல் சங்கு
‘முதற்சங்கம் அமுதூட்டும், நடுச்சங்கம் நல்வழி காட்டும், கடைச்சங்கம் காதவழிபோம்’ என்று நமது முன்னோர்களால் குறிப்பிடப்பட்டது. முதல் சங்கு 
என்பது ஒரு குழந்தை பிறந்தவுடன் ஒலிக்கப்படுவதோடு, முதன்முதலாக சங்கில் பாலூட்டுவதும் மரபாக இருந்து வந்தது. அதிலும் வலம்புரி சங்கு மூலம் பாலூட்டப் படும் ஆண் குழந்தை வீரமும், நன்னெறியும் கொண்டதாக வளருவதாக கருதப்பட்டது.
இரண்டாவது சங்கு
இரண்டாவது சங்கு என்பது ஒருவரது திருமணத்தின்போது ஒலிக்கப்படும். அதாவது இரண்டு உள்ளங்களை ஒருங்கிணைக்கும் சம்பிரதாய நெறிமுறையாக இருந்து வந்தது. காதில் சங்கை வைத்து கேட்டால் மட்டுமே ஓம்கார ஓசை கேட்கும். அதேபோல ஒருவருக்கு ஒருவர் அவரவர்களுடைய கருத்துக்கு மதிப்பு கொடுத்து கேட்பதன் வாயிலாக, பிரச்சினைகளை காதோடு காது வைத்ததுபோல சரி செய்து கொள்ள வேண்டும் என்ற அர்த்தத்தில் சங்கநாதம் ஒலிக்கப்பட்டது.
மூன்றாவது சங்கு
இது ஒருவரது மரணத்தின் பின்பு ஒலிக்கப்படுவதாகும். இறந்தவர், இறைவனுக்கு சமமாக சொல்லப்பட்டது. இனம், மதம், உயர்வு, தாழ்வு, ஜாதி வேற்றுமைகள் ஆகிய அனைத்திற்கும் அப்பாற்பட்டு எல்லோரும் கூடும் இடங்கள் மூன்று உண்டு. அவை ஆலயம், பள்ளிக்கூடம், மயானம் ஆகியவை. ஒருவர் எப்படிப்பட்டவராக இருந்தாலும் இறுதியில் அனைவரும் ஒன்றுகூடும் மயான பூமிக்கு அவர் கொண்டுவரப் படும்போது, புனிதம் பெற்றவராக வரவேண்டும் என்ற கருத்தில் ஒலிக்கப்படுவது மூன்றாவது சங்கநாதம் ஆகும்.

கருத்துகள்

Popular post

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... "யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர் முறைவழிப் படூஉம் என்பது திறவோர்காட்சியின் தெளிந்தனம்... ஆதலின் மாட்சியின் பெயோரை வியத்தலும் இலமே; சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. "யாதும் ஊரே யாவரும் கேளிர்...." எல்லா ஊரும் எனது ஊர்.... எல

மாஞ்சோலை சுற்றுலா செல்ல விருப்பமுள்ளவர்கள் கவனத்திற்கு...

Subbiahpatturajan மாஞ்சோலை சுற்றுலா செல்ல விருப்பமுள்ள பயணிகள் கவனத்திற்கு... இப்போது வனத்துறையினர் சார்பில் மாஞ்சோலை சென்று வர அனுமதி அளித்துள்ளனர் . விருப்பமுள்ளவர்கள் சென்று வரலாம். Manjolai நெல்லை மாவட்டத்தில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையின் மணிமுத்தாறு அணைக் கட்டிற்கு மேலே உள்ள மாஞ்சோலை எனும் சொர்க்க பூமியான கோடை வாஸ்தலம். சிறப்பு திருநெல்வேலி மாவட்டத்தில் குற்றாலம், பாபநாசம், காரையாறு, களக்காடு மற்றும் பாண தீர்த்தம் போன்ற சிறு அருவிகள், அணைக்கட்டுகள், பறவைகள் சரணாலயங்கள் என எத்தனையோ இயற்கை சூழ்ந்த இடங்கள் சுற்றுலா பயணிகளை ஈர்த்து வருகின்றன. இவற்றிற்கெல்லாம் மகுடமாகத் திகழ்வது மாஞ்சோலை. எப்படி போகலாம்? திருநெல்வேலியிலிருந்து 3 மணி நேரப் பயணம். கல்லிடைக்குறிச்சி , மணிமுத்தாறு அணை, Manimutharu அருவி வழியாகப் பல கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்ட, குறுகலான மலைப்பாதையின் வழியாகச் சென்று, 3500 அடி உயரத்தில் உள்ள மாஞ்சோலையை அடையலாம்.  அதற்கு மேல் 1000 அடி உயரத்தில் காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து, குதிரை வெட்டி, கோதையாறு (மேல் அணை) போன்ற இடங்களில் தேயிலைத் தோட்டங்களும், பசுமை மாறாக் காடுகள

கடல் நீர் குளியல் - நல்லதா? கெட்டதா?

Subbiahpatturajan உடல் நலம்.... கடல் நீர் குளியல் - நல்லதா? கெட்டதா? கடல் நீர் குளியல் - நல்லதா? கெட்டதா? கடல் நீர் குளியல் மிக மிக நல்லது. கடல் நீரில் அயோடின், பொட்டாசியம், மக்னீசியம், குரோமியம் ஆகிய பயன்மிக்க பொருள்கள் பெருமளவில் கலந்துள்ளது. எனவே, கடல் நீரில் குளித்தால் பல நோய்கள் நீங்குகிறது. 1. நரம்பு மண்டலம் அமைதி அடைகிறது. 2. உடலில் வெப்ப நிலைக்கு சரியான வெப்பம் உள்ள கடல் நீரில் குளிப்பதால், கை, கால்களில் ரத்த ஓட்டம் சீராகிறது. 3. உடல் தசைகள் உரிய அளவில்  சுருங்கி விரிகிறது. 4. அயோடின் நிறைந்த கடல் நீரில் குளிப்பதால் பெண்களின் மலட்டுத் தன்மை நீங்குகிறது, மகப்பேறு கிடைக்கும், சுகப்பிரசவத்திற்கு துணைபுரியும். 5. பொட்டாசியம் சிறுநீரை நன்கு வெளியேற்றும். 6. மக்னீசியம் தோல்நோய் மற்றும் ஆஸ்துமாவுக்கு மருந்தாக செயல்படுகிறது. 7. புரோமின் நரம்பு மண்டலத்தின் தளர்ச்சியை நீக்கி நல்ல ஓய்வு கொடுக்கும். 8  கால்சியம் உடலில் அனைத்து  வீக்கத்தை சரி செய்கிறது. 9. கடல்நீர் அனைத்துவகை அலர்ஜிகளையும் சரிசெய்கிறது. 10. கடல்நீர் எதிர்மறை சிந்தனை ( Negative ) உள்ளவர்களை நேர்மறை ( Positive ) சிந்தனை உள்ளவ

செம்பருத்தி என்றால் என்ன அதன் மருத்துவ குணங்கள் எவ்வாறு பயன்படுத்துவது?

Subbiahpatturajan   அழகுக்கு மட்டுமல்ல; மருத்துவக் குணத்துக்கும் செம்பருத்தி சொந்தக்காரி!  தமிழ் இலக்கியத்தில் செம்பரத்தை இலக்கியங்களில் உருவகப்படுத்தப்படும் நீண்ட, கருமையான கூந்தலுக்கான அடிப்படைக் காரணங்களுள் செம்பருத்தியும் ஒன்று. செம்பருத்தி என்று ஏன் அழைக்கிறோம்   சப்பாத்துச் செடி , ஜபம் போன்ற பெயர்களால் அழைக்கப்படுகிறது.  செம்மை நிறத்தில் மலர்கள் காணப்படுவதால், ‘செம்’பரத்தை என்று பெயர்.  ‘செம்பருத்தி’ என்பதற்குப் பருத்திச் செடியின் வகை என்பதை நினைவில் கொள்க செம்பருத்தி அடையாளம்:  பசுமை குன்றாத புதர்ச்செடி அல்லது சிறுமர வகையைச் சேர்ந்தது.  செம்பருத்திப் பூவின் தோற்றம் இதய வடிவத்தில் நீண்டிருக்கும் இலைகளின் விளிம்பில் காணப்படும் வெட்டுப்பற்கள் இலைகளுக்கு அழகு.  செம்பருத்தியின் ஆங்கில பெயர் செம்பரத்தையின் தாவரவியல்  பெயர் ‘ஹைபிஸ்கஸ் ரோஸா சைனென்ஸிஸ்’ (Hibiscus rosa-sinensis). ‘மால்வேசியே’ (Malvaceae) குடும்பத்திற்குள் அடங்கும்.  குவர்செடின் (Quercetin), ஃபிளேவனாய்ட்ஸ் (Flavonoids), கேம்பெரால் -3- சைலோசைல் குளுக்கோசைட் (Kaemperol – 3 – xylosyl glucoside), ஸ்டெர்கூலிக் அமிலம் (Sterculic

இந்தியாவில் தங்கம் விலை எவ்வாறு நிர்ணயிக்கப்படுகிறது?

Subbiahpatturajan இந்தியாவில் தங்கவிலை எவ்வாறு நிர்ணயிக்கப்படுகிறது? தங்கம் அனேகமாக வெளிநாடுகளில் இருந்தே அனுமதிக்கப்பட்ட வங்கிகள் மூலம் இறக்குமதி செய்யப்படுகிறது. இறக்குமதி செய்யப்பட்ட தங்கம் அந்த அனுமதிக்கப்பட்ட வங்கிகள் மூலமாகவே புல்லியன் டீலர்ஸ் அல்லது புல்லியன் டிரேடர்ஸுக்கு விற்கப்படுகிறதுஇது அன்றன்றே நிர்ணயம் செய்யப்பட்டு விற்கப்படுகிறது. தங்கம் விலை வெளிநாட்டில் உள்ள டாலர் அல்லது பவுண்ட் மதிப்பை வைத்து இதர செலவுகளையும் வைத்துக் கணக்கிடப்படுகிறது.பல பேர் சேர்ந்து வாங்கும் திறனுக்கேற்ப, அன்றைய தேவைக்கேற்ப தங்க விலை நிர்ணயிக்கப்படுகிறது. தங்கம் எந்தநாட்டிலிருந்து வாங்கப்படுகிறதோ, அந்த நாட்டின் விலை, கஸ்டம்ஸ் டியூட்டி, மற்ற பிற செலவுகள் சேர்த்து இந்தியன் புல்லியன் ஜுவல்லர்ஸ் அசோசியேஷன் (IBJA) எனப்படுகிற இந்திய தங்க வியாபாரிகள் அமைப்புக்கு விற்கப்படுகிறது. அது மும்பையை சேர்ந்த ஓர் அமைப்பு.அன்று பல பேர் சேர்ந்து வாங்கும் திறனுக்கும் வாங்கும் அளவுக்கும் அன்றைய தேவைக்கும் ஏற்பவே விலை நிர்ணயிக்கப்படுகிறது. இவை 6 கூட்டுத் தேவைகளுக்கு ஏற்பவே நிர்ணயம் செய்யப்படுகின்றன. அவை...அன்றைய சர்வதேச

தானாக வந்து கடிக்காது.உடலில் ஏறினால் கடித்து விடும்...!!?

தானாக வந்து கடிக்காது.உடலில் ஏறினால் கடித்து விடும்...!!? அனைத்து பூச்சி மற்றும் பிற விஷ உயிரினங்கள் கடிகளுக்கான எளிய இயற்கை மருத்துவம்...!! மிக முக்கிய குறிப்பு குறிப்பெடுத்து பாதுகாத்து கொள்ளுங்கள்.....!! எந்த விஷ கடிக்கும் உடனே அலோபதி மருத்துவத்தை நாடும் சூழலில் நம் முன்னோர்கள் பயன்படுத்திய எளிய அனுபவ மருத்துவ குறிப்புகளை தொகுத்துள்ளேன்.. பயன்படுத்தி பலன் பெறுங்கள்...எளிதில் கிடைக்காத சில மூலிகை செடிகள் இருந்தால் அவற்றை வீட்டில் வளர்ப்பது நல்லது. ■ தேனீ,குளவிகொட்டியதற்கு.. தேய்க்க கூடாது விஷம் இறங்கி வலி அதிகமாகும்.முள்ளை எடுத்துவிட்டு கொடுக்கு இருந்தாலும் எடுத்துவிட்டு மண்ணெண்ணெய் கடித்த இடத்தில் தேய்க்கவும்... ■ பூரான்கடிக்கு... பூராண் கடித்து விட்டால் விஷம் பரவி தடிப்பு ஏற்படும் அரிப்பு எடுக்கும்....சுண்ணாம்பு மஞ்சள், உப்பு  3 ஐயும் சம அளவு எடுத்து அரைத்து கடித்த இடத்தில் தேய்த்து கொண்டே இருந்தால் விஷம் இறங்கும்... ■ பூனை கடித்துவிட்டால்.. பூனை கடித்து விட்டால் மஞ்சள் சுண்ணாம்பு இவைகளை சம அளவு எடுத்து அரைத்து கடித்த இடத்தில் பூச குணமாகும்...

பிச்சை போடுவது கூட சுயநலமே...,

Subbiahpatturajan பிச்சை போடுவது கூட சுயநலமே..., வியந்து போன வரிகள் "" "" "" "" "" "" "" "" "" " 👌👌👌👌👌👌👌 நோய் வரும் வரை உண்பவன், உடல் நலமாகும் வரை உண்ணாதிருக்க வேண்டி வரும்! 👌👌👌👌👌👌👌👌 பணம் சம்பாதிப்பது குண்டூசியால் பள்ளம் தோண்டுவது போல... ஆனால், செலவழிப்பது குண்டூசியால் பலூனை உடைப்பது போல..! 👌👌👌👌👌👌👌👌 பணத்தின் மதிப்பு தெரியவேண்டுமா? செலவு செய்யுங்க.....! உங்களின் மதிப்பு தெரியவேண்டுமா?.. கடன் கேளுங்க.! 👌👌👌👌👌👌👌👌 பிச்சை போடுவது கூட சுயநலமே..., புண்ணியம் கிடைக்கும் என்று நினைத்தால்... 👌👌👌👌👌👌👌👌 அனுபவத்தால் உணரவேண்டிய ஒன்றை..., ஆயிரம் தத்துவ ஞானிகளாலும் உணரவைக்க முடியாது. 👌👌👌👌👌👌👌👌 வாழ்க்கையை கற்றுக்கொள்வதில் குழந்தை போல் இரு..., அதற்கு அவமானம் தெரியாது விழுந்தவுடன் அழுது முடித்து திரும்பவும் எழுந்து நடக்கும்..!! 👌👌👌👌👌👌👌👌 வெட்டாதீர்கள் - மழை தருவேன் என்கிறது "மரம்". வெட்டுங்கள் - மழை நீரைசேமிப்பேன் என்கிறது "

வெள்ளை படுதல் பால்வினை நோய் உள்ளவர்களுக்கு எளிய முறையில் வீட்டு வைத்தியம்...!!!

Subbiahpatturajan✍🏻  சங்குப்பூ,.. சங்கு புஷ்பம், மாமூலி, கன்னிக் கொடி, காக்கணம், காக்கரட்டான் போன்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. *சங்குப்பூ இலைகள் துவர்ப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டவை, சிறுநீர் பெருக்கும்; குடல் புழுக்களைக் கொல்லும்; உடல் வெப்பத்தைத் தணிக்கும்; வாந்தி உண்டாக்கும்; பேதியைத் தூண்டும்; தலை நோய், கண் நோய்கள், மந்தம் ஆகியவற்றையும் கட்டுப்படுத்தும்.  சங்குப்பூ மலர்ச்சாறு, கல்லீரலை பலப்படுத்தும். தேமல் மற்றும் கரும்புள்ளிகளைக் குணமாக்கும். சங்குப்பூ வேர், சிறுநீர்ப்பை நோய்கள், மேகரணம், மாந்தம், காய்ச்சலைக் கட்டுப்படுத்தும். எப்படி கண்டுபிடிக்க  சங்குப்பூ விதை புளிப்பாகவும், மணமுள்ளதாகவும் இருக்கும். உடலுக்கு வலிமை தரும் சர்பத், பான வகைகளில் சங்குப்பூ சேர்க்கப்படுகின்றது. சங்குப்பூ ஏறு கொடி வகையைச் சார்ந்தது. பச்சையானகூட்டிலைகளையும், பளிச்சிடும் நீல நிறமான மலர்களையும்  உடையது* நிறங்கள் *சங்குப்பூ வெள்ளை நிறமான மலர்கள், நீல நிறமான மலர்கள் என இரண்டு வகைகள் பொதுவாக காணப்படும். மேலும் நீல நிறமான அடுக்கிதழ்களால் ஆன மலர்களைக் கொண்ட தாவரங்களும் உண்டு. வெள்ளை பூ பூக்கும்

நம்மை வாழ வைக்கும் இறைவனின் இருப்பிடத்தை நாம் வளர்த்து பாதுகாத்தால், நம் சந்ததிகள் நலமாக வாழும்

Subbiahpatturajan உழவாரப் பணியின் 10 முக்கிய வேலைகள் இதைவிடச் சிறந்த புண்ணியம் வேறில்லை. உழவாரப்பணி செய்தே சிவனருள் பெற்றவர்* *திருநாவுக்கரசர்*. பழங்காலத்தில் கோயிலில் கிடைத்த நைவேத்யம், சிறுவருமானத்தை பெற்றுக் கொண்ட சிலர் தெய்வத் தொண்டாக கோயிலை துாய்மைப்படுத்தினர். இதற்காக சில கோயில்களில் மானிய நிலம் கூட இருந்தன*   *நம்மை வாழவைக்கும் தெய்வத்தின் இருப்பிடத்தை உழவாரப்பணி செய்து பாதுகாத்தால் நம் சந்ததிகள் நலமுடன் வாழ்வர்* *கோயிலில் புதர் மண்டிப் போகாமல் சுத்தப்படுத்துவது உழவாரப்பணி. இதைச் செய்ய தோசைக் கரண்டியின் வடிவில் பெரியதாக உள்ள கருவிக்கு ’உழவாரப் படை’ என்று பெயர். இதைக் கையில் ஏந்தியபடி இருப்பவர் திருநாவுக்கரசர்*  *எப்போதும் உழவாரப்பணி மூலம் கோயிலை தூய்மை செய்தபடி பாடுவது இவரின் பணி. சிவன் கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்துவதை விட மேலான புண்ணியத்தை உழவாரப்பணி தரும்* உழவாரப் பணி என்றால் என்ன? *சிவ ஆலயத்திற்குள் சென்றவுடன் இறைவன் நமக்கு தரும் அல்லது உணர்த்தும் பணியே உழவாரப்பணி எனப்படும்* உழவாரப்பணி *1. பக்தர்கள் கோயிலில் போடும் குப்பைகளை எடுத்து குப்பை கூடங்களில் போடுவது* *2. பக்தர