Subbiahpatturajan "என் இனிய பொன் நிலாவே". ஹைகோர்ட்டின் முக்கியமான தீர்ப்பு என்ன சொல்கிறது? தமிழ் சினிமாவின் இசைஞானி என போற்றப்படும் இளையராஜா... இசையமைத்த, பலரது மனதில் இன்னும் ஒலிக்கின்ற பாடல்களில் ஒன்று "என் இனிய பொன் நிலாவே". ஆனால், சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம் (Madras High Court) இந்த பாடலின் காப்புரிமை தொடர்பாக ஒரு முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது. 🔍 இந்த வழக்கின் பின்னணி என்ன? “என் இனிய பொன் நிலாவே” பாடல் 1981ஆம் ஆண்டு வெளியான Moodupani திரைப்படத்தில் இடம்பெற்றது. இப்படத்தை தயாரித்தது "Sujatha Cine Arts". பாடலின் வரிகள் வாலி எழுதியது; இசை இளையராஜா. இந்த பாடலுக்கான மூல உரிமை (Copyright Ownership) யாருக்கென்கிற கேள்வியில், இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் இடையே பல ஆண்டுகளாக கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. ⚖️ ஹைகோர்ட் என்ன தீர்ப்பு கூறியது? 2024ஆம் ஆண்டு, சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் கூறப்பட்டது: > "திரைப்படங்களுக்காக உருவாக்கப்படும் பாடல்களின் முழுமையான காப்புரிமை, திரைப்பட தயாரிப்பாளருக்கே சொந்தமா...
Subbiahpatturajan1) முறையாக வரி செலுத்தும், சலுகைக்காக பொய் பேசாத மக்கள்.
பாவம் இவர்கள் பரம ஏழைகள்..!?
எனக்கு விபரம் தெரிந்த நாளில் இருந்து அரசியலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறேன்..
அதேசமயம் Mr.பொதுஜனத்தையும் தொடர்ந்து பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன்.
1.நூற்றைம்பது சவரன் போட்டு மகளுக்கு திருமணம் முடித்தவன் வீட்டில் கலைஞர் TV ஓடுகிறது.
2.ஊருக்குள் 30 வீடுகள் வாடகைக்கு விட்டவன் #பசுமை வீடு மானியத்தில் வீடு கட்டிக்கொண்டான்.
3.இரண்டு மகன்கள் அமெரிக்காவில் சம்பாதிக்கிறார்கள். ஆனால் அனாதைப் பணம் 1000 பெறுகிறார்கள்.
4.காரில் சென்று இலவச சேலை பெறுகிறார் ஒரு பெண்.
5.IT கம்பெனியில் லட்சத்தில் சம்பளம், ஆனால் ஜாதி படி ரேஷன்கார்டு படி தாலிக்கு தங்கம் பெறுகிறார் இன்னொருவர்.
6. 5000 சதுர அடியில் நீச்சல் குளத்துடன் வீடு. ஆனால் வீட்டுவரி ரூ350. அதாவது 20 வருடத்திற்கு முன்இருந்த பழையவீட்டின் வரியே தொடர்கிறது.
7. இது போக ரேசன் பொருளை வசதியானவர்கள் வாங்கி, ஏழைகளுக்கு விற்பது.
மானிய சிலின்டர்களை கார் பார்ட்டிகளுக்கு விற்பது.
8.பைனான்ஸ்+சீட்கள் நடத்தி கோடியில் விளையாடும் ஒருவர் Income Tax என்றால் என்ன? என்கிறார்.
9.சென்சஸ் எடுக்கப்போனால்
மாதவருமானம் 4000,5000 என்றுதான் அத்தனை குடும்பமும் கூசாமல் பொய் சொல்கிறது.
அப்பத்தான் அரசின் சலுகைகள் அனைத்தும் கிடைக்குமாம்.
10.இதெல்லாமே என் தெருவில் நடக்கும் உதாரணங்கள்.
கடைசியாக 4 கட்சியிடமும் பணம் வாங்கிக் கொண்டு ஓட்டுப் போடுகிறார் Mr.பொதுஜனம்.
1) முறையாக வரி செலுத்தும், சலுகைக்காக பொய் பேசாத மக்கள்.
2) ஊழல் இல்லாமல் மக்களுக்கு சேவை செய்யும் அரசியல் வாதி.
3) லஞ்சம் வாங்காது கடமையை செவ்வனே செய்யும் அரசு ஊழியன்.
நாடு உருப்பட இந்த மூவரும் வேண்டும்.
யார் முதலில் திருந்துவது.
எப்படி திருத்துவது..?
சட்டத்தின் வழியா??சர்வாதிகாரமா?? கல்வியா??
ஆன்மீகமா??எதைக்கொண்டு எதைத் திருத்துவது????
நீங்களே விடை சொல்லுங்கள்.
நாடும் மக்களும் நல்லா இருக்கட்டும்..🙏🌹
கருத்துகள்