Subbiahpatturajan
Doctors' scams within the web of corporate companies .. !!!
70 கீழ போனா Low B.P 140க்கு மேல போன High B.P ன்னு.. நினைச்சோம் ... அதுக்கு மருந்து மாத்திரை வாங்கி சாப்டாங்க ....
இதன் மூலம் பல லட்சம் கோடி ரூபாய் மருந்து மாத்திரை வியாபாரம் உலகம் பூரா நடக்குது....
ஆனா அந்த பல லட்சம் கோடி போதாதுன்னு இப்ப இந்த B.P அளவை மாத்தி அமைச்சி இருக்காங்க 😣😣😣...
அதாவது இனிமே 130க்கு மேல High B.P.. 80க்கு கீழ இருந்த Low B.P... 😳😳
இதை அமெரிக்க ஆய்வு நிறுவனம் வரையரை செய்து இருக்கு ..
இதன் மூலம் மேலும் 3 கோடி பேர் அமெரிக்காவில் மட்டும் கூடுதலா மருந்து மாத்திரை வாங்கி சாப்பிட்டாகணும்...
அனைத்துக்கும் அமெரிக்காவை உதாரணம் காண்பிக்கும் நம்ம ஊர் டாக்டர்கள் இதை அப்படியே உங்கள் கிட்ட சொல்லி உங்களை B.P. பேசண்டா மாத்துவாங்க ...
பின்ன எப்படிங்க மருந்து கம்பெனிகள் கிட்ட இருந்து கமிஷன் வரும்...
உண்மையை சொல்லனும்னா நானும் மருந்து கம்பெனியில் sales man ஆ இருந்த அனுபவத்தை வைத்து இந்த கட்டுரையை எழுதி முடிக்கிறேன். நான் சேல்ஸ்மேன் ஆ இருந்தபோது எனக்கு டாஸ்க் கொடுக்கப்படும் என்னவென்றால் இந்த மருந்தை இவ்வளவு விற்று கொடுத்தால் அதில் டாக்டர்களுக்கு கமிஷன் போக சுற்றுலா செல்ல டாக்டர்களுக்கு கம்பெனிகளே ஏற்பாடு செய்து கொடுக்கும்.
எல்லா டாக்டரையும் நாம் குறை சொல்ல வரவில்லை. ஒரு சில டாக்டர்கள் என்ன செய்வார்கள் என்றால் உங்களுக்கு வேண்டுமென்றே ஸ்கேன் எடுத்துப் பார்க்கணும்... எக்ஸ்ரே எடுத்து பார்க்கணும்... இந்த டானிக்கை குடிங்க... என்று உங்களிடம் சேல்ஸ்மேன் வேலை பார்ப்பார்கள்.
நீங்களும் டாக்டர் நம் மீது எவ்வளவு அக்கறை எடுத்துக் கொள்கிறார் என்று அக்கறையோடு அந்த மருந்து மாத்திரைகளை வாங்கி ஸ்டாக் வைத்துக் கொள்கிறீர்கள்.
டாக்டர்கள் கடவுளுக்கு சமமானவர்கள் தான் ஆனால்... இப்போதைய கார்ப்பரேட் உலகத்தில்
தவிர்க்க முடியாத ஆசைகளால் ஒரு டாக்டரை பார்த்து இன்னொரு டாக்டர் இவ்வளவு சம்பாதிக்கிறார் என்று யோசிக்க தொடங்கும் போதுதான் இதுபோன்ற செயல்களில் ஈடுபட எண்ணம் தூண்டுகிறது.
முடிவுரை:
அப்போ .. உணவே மருந்துன்னு சொன்ன நாம இப்போ மாத்திரை மருந்து வாங்கி சாப்பிட்டு அடிமையா கிடக்கிறோம்.... எப்ப நிமிர போறோம்... ???
கருத்துகள்