முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சாப்பிட அமரும்போது, அந்த உணவை உற்பத்தி செய்த விவசாயிகளான எங்களை ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள்

Subbiahpatturajan

அரசாங்கத்துக்கும் விவசாயிகளுக்கும் அப்படி என்னதான் பிரச்சினைகள் என்று ஒரு நிமிடம்-ஒரே ஒரு நிமிடம் யோசித்திருப்பீர்களா?

சாப்பிட அமரும்போது, அந்த உணவை உற்பத்தி செய்த விவசாயிகளான எங்களை ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள்
தயவு செய்து முழுவதும் படியுங்கள்...
தாங்கள் எந்த கட்சியில் வேண்டுமானாலும் இருங்கள் வாக்களியுங்கள் தவறில்லை அது உங்கள் விருப்பம்
ஆனால் மத்திய அரசாங்கம் கொண்டுவந்துள்ள வேளாண் சட்ட மசோதா பற்றி முழுமையாக  தெரியாமல் பதிவு செய்யாதீர்கள்

டெல்லியில் நமக்காக போராடும் போராட்டகார்களை கொச்சைப்படுத்தாதீர்கள்

போராடியவர்கள் பின்னால் காங்கிரஸ், திமுக கூட இருக்கலாம் தவறில்லை...
ஆனால் போராடியவர்களின்  நோக்கத்தை பாருங்கள்...
மீண்டும் சொல்கிறேன் நீங்கள் எந்த கட்சியிலும் இருங்கள், வாக்களியுங்கள் தவறில்லை...
ஆனால் வேளாண் சட்ட மசோதாவை மட்டும் எக்காரணத்தைக் கொண்டும்   ஆதரிக்காதீர்கள்...
அது முழுக்க முழுக்க விவசாயத்திற்கும்,  விவசாயிகளுக்கும்  எதிரானது...
ஆறு சுற்று பேச்சுவார்த்தை நடந்தும் அரசாங்கத்துக்கும் விவசாயிகளுக்கும் அப்படி என்னதான் பிரச்சினைகள் என்று ஒரு நிமிடம்-ஒரே ஒரு நிமிடம் யோசித்திருப்பீர்களா?
வேளாண் சட்டத்தை திரும்பப் பெறாதவரை எங்கள் சடலங்கள் கூட வீடு திரும்பாது என்று விவசாயிகள் உறுதியாக இருக்கும் அதே நேரத்தில் போட்ட சட்டத்தை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை எனும் அரசாங்கம் போராடும் விவசாய சங்கத்தை உடைக்கப் பார்க்கிறது
இரண்டு தரப்பும் இப்படி விடாப்பிடியாக முரண்டு பிடிக்க காரணம் என்ன?
Contract Farm சட்டத்தை ஆதரிக்கின்றவர்கள் சொல்கிற இரண்டு விசயங்கள்...

1.கஷ்டப்பட்டு விளைய வைத்த பொருளை இனி நஷ்டத்துக்கு இடைத்தரகர்களிடம் அள்ளிக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை

சாப்பிட அமரும்போது, அந்த உணவை உற்பத்தி செய்த விவசாயிகளான எங்களை ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள்
2.ஏதோ ஒரு கம்பெனியுடன்
Contract Farm சட்டப்படி ஒப்பந்தம் போட்டுக்கொண்டால் விதை, உரம் மற்றும் விவசாய செலவுக்கான பணம் மட்டுமல்ல விளைந்த பொருளை கம்பெனியே எடுத்துக்கொண்டு காசை கொடுத்துவிடும்
இதைக் கேட்பதற்கு என்னவோ திகட்டிபபோன தேனும் பாகும் கடைவாயில் வழிகிற மாதிரித்தான் இருக்கும் ஆனால்... அதற்குள்ளிருக்கும் விஷம்?
ஆளை மயக்கும் விளம்பரத்துக்கு அடியில் Coditions apply என்ற சுருக்குகயிறு வைத்த மாதிரி...
முதலில் நிலம்

1). விவசாயத்திற்கு முன் பணம் கொடுப்பார்கள் என்பது உண்மைதான். எவ்வளவு தெரியுமா?

வெறும் பத்து சதவிகிதம் மட்டும்தான்.
உதாரணமாக ஒரு போகம் விளைச்சலுக்கு ஒரு இலட்ச ரூபாய் செலவாகுமென்றால் பத்தாயிரம் ரூபாய் மட்டும் முன்பணமாக  தருவார்கள். பாக்கி 90 ஆயிரம் ரூபாயை விவசாயி தன் பாக்கெட்டிலிருந்துதான் போடணும்.
ஒரு தடவை விளையவில்லை என்றால் அடுத்த தடவையும் விவசாய செலவுக்கு பணம் கொடுப்பார்கள் ஆனால் முன்பணமாக பெற்ற அந்த ரூ.10,000 பணம் அப்படியே நிலுவையாக  தொடரும்.
தொடர்ந்து பத்து நிலுவைத்தொகை பாக்கி நிற்குமானால் ஒப்பந்தம் செய்து கொண்ட நிலம் ஒப்பந்த கம்பெனிக்கு சொந்தமாகிவிடும்
அந்த விவசாயி அந்த ரூ.1,00,000 பணத்தை வேறுவழியில் தயார் செய்து கொடுத்தாலும் அந்த Contract Company அந்த பணத்தை பெற்றுக்கொண்டு நிலத்தை விவசாயிக்கு தரவேண்டியது அந்த  Contract Company விருப்பத்தைப் பொருத்தது

அடுத்தது விதை

சாப்பிட அமரும்போது, அந்த உணவை உற்பத்தி செய்த விவசாயிகளான எங்களை ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள்

2. விதை எப்படிப்பட்ட விதை தெரியுமா?

ஒரு முறைக்கு மேல் மறு முறை கருத்தரிக்காத மலட்டு விதைகாரணம்?
எந்த விவசாயியிடமும் எந்த விதையும் தங்கி விடக்கூடாது எப்போதும் தன்னை (Contract Company) சார்ந்தே இருக்க வேண்டுமென்ற சூழ்ச்சி
கான்ட்ராக்ட் விவசாய ஒப்பந்த சட்டப்படி கம்பெனி என்ன விதைபொருள் கொடுக்கிறதோ அதை மட்டுந்தான் விளைவிக்க முடியும்
ஒரு உதாரணத்திற்கு ஐம்பது அரளிக்கொட்டையும் குண்டுமணியும் விதைத்து விடு என்று Contract Company சொன்னாலும் விதைத்துத்தான் ஆக வேண்டும்
Because You are signed agreement With The Corporate Company

அடுத்தது உரம்

3).நம் வயலில் என்ன விதைக்க வேண்டும் என்பதை மட்டுமல்ல எந்த வகையான உரம் தெளிக்க வேண்டும் என்பதையும் ஒப்பந்தம் செய்து கொண்ட Contract Company தான் முடிவெடுக்கும்
அந்த உரம் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதுதான் அதிர்ச்சியும் ஆபத்துமாக இருக்கிறது
குறிப்பாக காலங்காலமாக நெல் பயிருடும் மண்ணில் அந்த மண்ணுக்கு எதிர்மறையான உரங்களை உபயோகப்படுத்தச் சொல்லி கட்டாயப்படுத்துவதால் நாளடைவில் மண் மலட்டுத்தன்மை அடைந்து விடும்
காசும் விதையும் உரமும் கொடுத்து ஒப்பந்தம் போடும் Contract Companyக்கு மகசூல் முக்கியமல்ல
மண்ணை மலட்டுத்தன்மையாக்கி அதன்மூலம் மகசூலை குறைத்து நாளடைவில் விவசாயியை கடனாளியாக்குவதுதான்
4). இடைத்தரகர் இல்லாமல் ஒப்பந்தம் போட்ட கம்பெனியே விளைபொருளை விலை கொடுத்து வாங்கிக்கொள்ளும்
அதுவும் உண்மைதான். Contract Farm Actடின்படி வெளியில் தெரியாத Conditions Apply
ஒப்பந்த கம்பெனி விவசாயியிடமிருந்து எடுத்துச்சொல்லும் பொருளுக்கு தரமும் விலையும் நிர்ணயிக்கும் கால அவகாசம் 90 நாட்கள்
உதாரணமாக குப்புசாமி என்ற விவசாயியிடமிருந்து 50 மூட்டை நெல்லை Contract Company எடுத்துக்கொண்டு போகிறானென்றால் 90 நாட்கள் கழித்து நெல் காய்ந்து போனதால் Quantityயும், தரம் கருக்காயாக இருப்பதால் Qualityயும் குறைந்து விட்டது என்று கூறி 25 மூட்டை நெல்லுக்கு மட்டும் காசை கொடுத்தால்
எங்காவது கோயில் குளத்துல போயி மண்ணை வாரி தூத்தலாமே தவிர ஏன் என்று கேள்வி கேட்க முடியாது
Because You signed the agreement With The  Contract Company 
ஏதோ புதிய வேளாண் சட்டத்தால் கார்பரேட் கம்பெனிகள் அருவா கம்போடு வந்து நாளையே விவசாயிகளை அடித்து அவர்களின் நிலங்களை பறித்துக்கொள்ளும் என்று அர்த்தமல்ல
விவசாயியே வேண்டாம்டா சாமின்னு கார்பரேட் கம்பெனிக்காரன்கிட்டேயே நிலத்தை கொடுத்துட்டு கும்பிட்டு விழுந்துட்டுப் போகின்ற நிலை வரும் என்பதை உலகெங்கும் பரவிக்கிடக்கும் பஞ்சாபிகள் அந்தந்த நாடுகளில் இந்த Contract Farm Act சட்டங்களின் மூலம் Contract Companyகள் எப்படியெல்லாம் நிலங்களை பறித்துக்கொண்டு விவசாயிகளை நடுத்தெருவில் விட்டது என்பதை பஞ்சாப் விவசாயிகளுக்கு விரிவாக எடுத்துச் சொன்னதால் விழிப்படைந்த பஞ்சாப் மற்றும் ஹரியானா விவசாயிகள்... இழப்பதற்கு இனி எதுவுமில்லையென்று வீதிக்கு வந்து விட்டார்கள்..!
இதை எல்லாம் விலாவாரியாக எடுத்துச்சொல்லி விவசாயிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய தமிழக ஊடகங்கள் வாய்திறக்கவில்லை.
சாப்பிட அமரும்போது, அந்த உணவை உற்பத்தி செய்த விவசாயிகளான எங்களை ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள்
நாங்கள் சேற்றில் கால் வைத்தால்தான்
நீங்கள் சோற்றில் கை வைக்க முடியும்
நாங்கள் ஒருவேளை உணவு உண்டால் தான்
நீங்கள் மூன்று வேளையும்  உணவு உண்ண முடியும்
நாங்கள் பழைய சோறாவது உண்டால் தான்
நீங்கள் அறுசுவை உணவை உண்ண முடியும்
விளைநிலம் இல்லையேல் 
விவசாயம் இல்லை
விவசாயம் இல்லையேல்
விவசாயி இல்லை
விவசாயி இல்லையேல் 
உணவு இல்லை
உணவு இல்லையேல் 
உலகமே இல்லை
இப்படிக்கு
ஊருக்கே சோறு போடும் ஏழை விவசாயி 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற...

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் க...