முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan
பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது.....
முழு பாடலும்... அதன் பொருளும்
   பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.
   
'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .
    
சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது.
'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின்
எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது.....
முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner
"யாதும் ஊரே; யாவரும் கேளிர்;
தீதும் நன்றும் பிறர்தர வாரா;
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;.....
சாதலும் புதுவது அன்றே;...
வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே;
முனிவின் இன்னாது என்றலும் இலமே;
மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது
கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறைவழிப் படூஉம் என்பது திறவோர்காட்சியின் தெளிந்தனம்...
ஆதலின் மாட்சியின்
பெயோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.
"யாதும் ஊரே யாவரும் கேளிர்...."
எல்லா ஊரும் எனது ஊர்.... எல்லா மக்களும் எனக்கு உறவினர் என்று நினைத்து,
அன்பே வாழ்வின் அடிப்படை, ஆதாரம் என்று வாழ்ந்தால் , இந்த வாழ்வு நமக்கு எவ்வளவு இனிமையானது சுகமானது.
"தீதும் நன்றும் பிறர் தர வாரா...."
தீமையும், நன்மையும் அடுத்தவரால் வருவதில்லை எனும் உண்மையை உணர்ந்தால்,
சக மனிதர்களிடம், விருப்பு வெறுப்பு இல்லா ஒரு சம நிலை, சார்ந்த வாழ்வு கிட்டும்.
"நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன...."
துன்பமும் ஆறுதலும்கூட மற்றவர் தருவதில்லை, மனம் பக்குவப்பட்டால், அமைதி அங்கேயே கிட்டும்...
"சாதலும் புதுவது அன்றே"
பிறந்த நாள் ஒன்று உண்டெனில், இறக்கும் நாளும் ஒன்று உண்டு....
இறப்பு புதியதல்ல, அது இயற்கையானது எல்லோருக்கும் பொதுவானது....
இந்த உண்மையை உணர்ந்தும், உள் வாங்கியும் வாழ்ந்தால் எதற்கும் அஞ்சாமல், வாழ்க்கையை, வாழும் வரை ரசிக்கலாம்.
"வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே
முனிவின் இன்னாது என்றலும் இலமே."
இந்த வாழ்க்கையில் எது, எவர்க்கு, எப்போது, என்னாகும் என்று எவர்க்கும் தெரியாது. இந்த வாழ்க்கை மிகவும் நிலை அற்றது. அதனால், இன்பம் வந்தால் மிக்க மகிழ்வதும் வேண்டாம்...
துன்பம் வந்தால் வாழ்க்கையை வெறுக்கவும் வேண்டாம். வாழ்க்கையின் இயல்பை உணர்ந்து இயல்பாய் வாழ்வோம். 
"மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர் முறைவழிப் படூஉம் என்பது திறவோர் காட்சியின் தெளிந்தனம் ....." Website Banner
இந்த வானம் நெருப்பாய், மின்னலையும் தருகிறது. நாம் வாழ மழையையும் தருகிறது. இயற்கை வழியில் அது, அது அதன் பணியை செய்கிறது. ஆற்று வெள்ளத்தில், கற்களோடு, அடித்து முட்டி செல்லும் படகு போல, வாழ்க்கையும், சங்கடங்களில் அவர், அவர் ஊழ்படி அதன் வழியில் அடிபட்டு போய்கொண்டு இருக்கும். இது இயல்பு என மனத்தெளிவு கொள்ளல் வேண்டும்...
"ஆதலின் மாட்சியின் பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே."
இந்த தெளிவு பெற்றால், பெரிய நிலையில் உள்ள பெரியவர்களைப் பாத்து மிகவும் வியர்ந்து பாராட்டவும் வேண்டாம். சிறிய நிலையில் உள்ள சிறியவர்களைப் பார்த்து ஏளனம் செய்து இகழ்வதும் வேண்டாம். அவரவர் வாழ்வு அவரவர்க்கு. அவற்றில் அவர், அவர்கள் பெரியவர்கள்...
இதை விட வேறு எவர்
வாழ்க்கைப் பாடத்தை
சொல்லித் தர முடியும்
வாழ்க்கை இனிதானது  
சிந்தித்து செயலாற்றுங்கள்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழர்கள் வரலாறு இந்திர விழா

Subbiahpatturajan #சினார்தமிழன் #தமிழர்கள் #இந்திரவிழா #இந்திரவிழா #bestarticalstamil2021 #cinartamilan தென்னாட்டிலே கடல்கொண்ட வணிக நகரம் காவிரிப்பூம் பட்டினம். 12ம் திருமுறை யிலே, இயற்பகை நாயனார் புராணத்தின் 1 வது பாடல் அத்திருநகரத்தின் வளத் தைப் பாடுகிறது. சென்னி வெண்குடை நீட நபாயன் திருக்கு லம்புகழ் பெருக்கிய சிறப்பின் மன்னு தொல்புகழ் மருதநீர் நாட்டு வயல்வ ளந்தர இயல்பினில் அளித்துப் பொன்னி நன்னதி மிக்கநீர் பாய்ந்து புணரி தன்னையும் புனிதமாக்  குவதோர் நன்னெ டும்பெருந் தீர்த்தமுன் னுடைய நவஞ்சிறந்தது வளம்புகார் நகரம் என்கிறது அந்தப் பாடல். அதாவது சோழ மரபிலே தோன்றிய வெண்கொற்றக் குடையையுடையவன் அநபாயச் சோழன். அவனது அரசியல் அருளுடைய மரபினரின் புகழை உலகறியச் செய்தது சோழவள நாடு. அத்தகைய பெருமை மிக்க மருதவளம் நிறைந்த சோழவள நாட்டை ஊடறுத்துப் பாய்கிறது காவிரியாறு. தைப்பொங்கல் திருநாள்  அந்த வயல் வளத்துக்கும் காவிரியாறே காரணமாகிறது. காவிரி, காலந்தவறாது காவிவரும் வெள்ளநீர் கடலையும் தூய்மை செய்வதாகக் குறிப்பிடப்படுகிறது. இத்துணை நீர்வளம் மிக்க நலம் பெருக்கும் நகரம் காவிரிப்பூம் பட்டினம...

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற...